சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Asylum seekers in Berlin on hunger strike

பேர்லினில் தஞ்சம் கோருவோர் பட்டினிப் போராட்டம்

By Berndt Reinhardt and Stefan Steinberg 
16 October 2013

Use this version to printSend feedback

கடந்த வாரம் ஜேர்மனிய செய்தி ஊடகமும், அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளில் உள்ள அரசியல்வாதிகளும் இத்தாலிய கடலோரப் பகுதியில் நூற்றுக்கணக்கான அகதிகளின் சோகம் ததும்பிய இறப்புக்கள் குறித்து முதலைக்கண்ணீர் வடித்தனர்.

உண்மையில், ஐரோப்பாவின் வெளி எல்லைகளைக் கடந்து ஜேர்மனியை அடையும் அகதிகள் அரசியல் கட்சிகளிடம் இருந்து பொருட்படுத்தாத்தன்மை மற்றும் அதிகாரிகளிடம் இருந்து விரோதப்போக்கைத்தான் எதிர்கொள்கின்றனர். பல டஜன் தஞ்சம் கோருவோர் பேர்லினில் கடந்த புதன் அன்று காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை ஜேர்மனியின் மனிதத்தன்மையற்ற தஞ்சக் கொள்கையை எதிர்த்து தொடங்கினர். ஜேர்மனிய அரசாங்கம் முகங்கொடுக்கவில்லை என்றால் தங்கள் உயிர்களை தியாகம் செய்யத் தயார் என்றும் அவர்கள் அறிவித்துள்ளனர். அவர்கள் முதலில் இந்த எதிர்ப்பு அணிவகுப்பு, உண்ணாவிரதப் போராட்டங்களை இக்கோடையில் பவேரியா மாநிலத்தில் தொடங்கினர்.

இதை முகங்கொடுத்த பவேரிய மாநில அரசு, எதிர்ப்பாளர்களை மிரட்டும் வகையில் மாபெரும் பொலிஸ் பிரசன்னத்தின் மூலம் பதிலளித்தது. பல தஞ்சம் கோருவோர் மூனிச்சில் உள்ள ஜேர்மனிய தொழிற்சங்கங்களின் தலைமையகத்தில் (DGB) தஞ்சம் நாடினர். தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர் அவர்களுக்கு வரவேற்பு இல்லை என்பதை தெளிவுபடுத்தினர்; பவேரிய DGB  இன் தலைவர் மத்தியாஸ் ஜெனா அவர்களை கட்டிட வளாகத்தைவிட்டு வெளியேறுமாறு கூறினார்.

இதன் பின் தஞ்சம் கோருவோர் பேர்லினுக்குச் சென்றனர். பிராண்டன்பேர்க் கேட்டின் முன்னதாக அமைக்கப்பட்ட முகாமும், பட்டினிப் போராட்டமும் பொலிசால் கட்டாயமாக அகற்றப்பட்டிருந்தன. மற்றும் ஒரு 200 அகதிகளைக் கொண்ட கூடார முகாம், பேர்லின் புறநகர் பகுதியான Kreuzberg இல், லம்பேடுசா மூலம் ஐரோப்பாவிற்கு வந்த பல ஆபிரிக்க அகதிகளால் நிறுவப்பட்டது. அவர்கள் சட்டவிரோதமானவர்கள் எனக் கருதப்பட்டு நாடு கடத்தல் அச்சுறுத்தலை முகங்கொடுக்கின்றனர். முகாமில் குளிப்பதற்கு வசதிகளோ, சமையலறைகளோ கிடையாது, உணவு எப்பொழுதும் தட்டுப்பாடுதான்.

Kreuzberg புறநகர், பசுமைக் கட்சி தலைமையில் உள்ள நிர்வாகத்தால் ஆளப்படுகிறது. Kreuzberg இன் பசுமைக் கட்சி மேயர் இனி முகாம்கள் பொறுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்றும், அகதிகள் புறநகரில் இருக்கும் வேறு கட்டிடம் அல்லது இராணுவ மையத்திற்கு அகற்றப்பட வேண்டும் என்றும் கூறினார். பசுமைக் கட்சி மேயரின் நிலைப்பாடு, அதி சிடுமூஞ்சித்தனமானதாகும். ஜேர்மனியின் தலைநகர் பல புதிதாகக் கட்டப்பட்ட கட்டிட வளங்களை நிறையக் கொண்டிருக்கிறது, பல காலியாக உள்ளன, இதற்காகப் பயன்படுத்தப்படலாம் என்றாலும்கூட உள்ளூர் கவுன்சில் மாற்று வீட்டிடம் இல்லை என்று கூறியுள்ளது.



சிப்டைன்
மற்றும்
ஹமெத்

உலக சோசலிச வலைத் தள நிருபர்கள், ஈரானில் இருந்து வந்துள்ள ஆர். ஹமெத் மற்றும் பாக்கிஸ்தானில் இருந்து வந்துள்ள சிப்டைன் ஆகியோருடன் பேசினர். இவர்கள் 30 புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் அடங்கிய குழுவின் உறுப்பினர்கள் ஆவர், இக்குழுவில் இரண்டு மகளிரும் உண்டு; அவர்கள் ஜேர்மனியின் வரலாற்றுப் புகழ் படைத்த பிராண்டன்பேர்க் கேட்டில் கடந்த புதன் அன்று உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். குழு உறுப்பினர்கள், பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், காங்கோ, எத்தியோப்பியா மற்றும் சீயேரா லியோன் என பல நாடுகளில் இருந்து வந்திருக்கின்றனர்.

சிப்டைனும் ஹமெத்தும் தங்கள் ஜேர்மனிய அதிகாரிகளுடன் ஓராண்டிற்கு முன் ஜேர்மனியில் பயணித்தபோது ஏற்பட்ட அனுபவங்களைக் கூறினர்.

32 வயதான சிப்டைன் தான் பாக்கிஸ்தானில் இருந்து மூனிச்சிற்கு ஓராண்டிற்கு முன் பயணித்து வந்ததைக் கூறினார். அவர் பாக்கிஸ்தானில் அரசியல் துன்புறுத்தலை எதிர்கொண்டார், மூனிச்சில் இறங்கியவுடன் ஜேர்மனிய அதிகாரிகளிடம் அரசியல் தஞ்சத்திற்கு விண்ணப்பித்தார்.

ஜேர்மனியில் அவர் இருந்த முதல் இரண்டு மாதங்களுக்கு சிப்டைன் ஆரம்பத்தில் மூனிச்சில் ஒரு முகாமில் மற்றும் ஒரு 100 அகதிகளுடன் அடைக்கப்பட்டார். ஜேர்மனிய குடியேற்றச் சட்டத்தின்படி, சிப்டைன் போன்ற தஞ்சம் நாடுவோர் வேலை செய்வதற்கு அனுமதி கிடையாது. அவர்கள் எல்லா நேரத்திலும் அடைக்கப்பட்ட இடத்தில் இருந்து 20 கி.மீ. தொலைவிற்குள் இருக்க வேண்டும். அவர்கள் உயிர் பிழைப்பதற்கான ஒரே வழி உணவு வாங்கும் சீட்டுக்கள் அல்லது உணவுப் பொதிகள்தான்; இவ் உணவு உறுதிச் சீட்டுக்கள்தான் (food vouchers) அகதிகள் என்ன வாங்கலாம், என்ன உட்கொள்ளலாம் என்பதை தீர்மானிக்கின்றது.

மூனிச்சில் இரண்டு மாதங்கள் இருந்த பின், தஞ்ச விண்ணப்பம் குறித்து எதையும் கேள்விப்படாத நிலையில், சிப்டைன் பவேரியாவில் ஒரு சிறிய கிராமத்தில் இருக்கும் மற்றொரு முகாமிற்கு மாற்றப்பட்டார்; அங்கு அவர் எட்டு மாதங்கள் வைக்கப்பட்டிருந்தார்.

கிராமத்தில் எதுவும் செய்வதற்கு இல்லை. உடனடிப்பகுதியில் பல்பொருள் அங்காடி ஏதும் கிடையாது; இதன் பொருள் எங்கள் உணவுச்சீட்டில் இருப்பதை வாங்குவதற்கு நாங்கள் வெகு தூரம் செல்லவேண்டும். இது குழந்தைகள் இருக்கும் குடும்பத்திற்கும் பொருந்தும். கற்பதற்கோ, எங்களை முன்னேற்றுவிப்பதற்கோ அங்கு வாய்ப்பு ஏதும் இல்லை. மருத்துவ வசதிக்கு எந்த ஏற்பாடும் கிடையாதுஒரு டாக்டரை நாங்கள் அணுகமுடியாது. அரசாங்க அலுவலகத்திற்கு நான் என் தஞ்சம் குறித்த விண்ணப்பம் பற்றிய தகவலைக் கேட்டபோது, எனக்கு எந்தப் பதிலும் கொடுக்கப்படவில்லை. அதிகாரிகளுக்கு எங்களைப் பற்றிய கவலை இல்லை, எங்கள் நிலைமை பற்றி பொருட்படுத்துதல் இல்லை என்பது தெளிவு.என்றார் அவர்.



பேர்லினில்
உண்ணாவிரத போராட்டம்

நாங்கள் நடத்தப்படுவது குறித்து எதிர்ப்புத் தெரிவிக்கவும், எங்களுக்கு தகவல் ஏதும் கொடுக்காததை ஒட்டியும், மூனிச்சில் நான் மற்ற அகதிகளுடன் சேர்ந்து, கடந்த ஜூன் மாதம் 9 நாட்கள் நீடித்த பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தினோம். Würzburg மற்றும் Bayreuth இல் இருந்து மூனிச்சிற்கு 300 கி.மீ. நடந்து எதிர்ப்பு அணிவகுப்புக்களை நடத்தினோம்.

இங்கு எனது அனுபவம், ஜேர்மனிய அதிகாரிகளுக்கு அகதிகளுடைய உரிமைகள் பற்றி சிறிதும் பரிவுணர்வு கிடையாது என்பதை தெளிவுபடுத்துகிறது. அகதிகள் பற்றிய ஐரோப்பிய ஒன்றிய (டப்ளின் II) உடன்பாடு, மத்திய ஐரோப்பாவிற்கு அகதிகள் செல்ல தடையைத் தோற்றுவித்திருப்பது, இத்தாலி மற்றும் கிரேக்கத்தில் இருந்து கடல் மூலம் செல்வதை அபாயகரமான பயணமாக ஆக்கியுள்ளது. இந்த நாடுகள் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் உள்ளன. எங்களை வரவேற்று வேலை செய்ய அனுமதிப்பதற்கு பதிலாக அவர்கள் எம்மை நாட்டை விட்டு வெளியேற்ற விரும்புகின்றனர். என்னால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை

அகதிகளில் பலரும் சிரியா, லிபியா, ஈரான், ஆப்கானிஸ்தான் மற்றும் என்னுடைய சொந்த நாடு ஆகியவற்றில் இருந்து வருகின்றனர். இவை நேட்டோ மற்றும் மேற்கத்தைய நாடுகளின் ஆக்கிரமிப்பால் உள்நாட்டுப்போர் விளிம்பில் உள்ளன. ஜேர்மனி போன்ற நாடுகள் இந்நாடுகளுக்கு ஆயுதங்களை விற்கத் தயாராக உள்ளன, ஆனால் போர், துன்புறுத்தலின் விளைவுகளை பொறுத்தவரை அவர்கள் தங்கள் கைகளை கழுவிவிடுகின்றனர். ஜேர்மனிய அரசாங்கம் பதில்தரும் வரை நான் இங்கு தங்கி உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்வேன். தேவையானால் எங்கள் கோரிக்கைகளை சாதிக்க என் உயிரையும் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன்…”

மோதல்களை தூண்டுவது குறித்த மேற்கத்தைய தேசங்களின் பங்கு தொடர்பான சிப்டைன் உடைய கருத்துக்கள், ஹமெத்தாலும் ஆதாரப்படுத்தப்படுகின்றன; ஹமெத்தும் உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கு பெறுகிறார், முந்தைய மூனிச் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்குபற்றியுள்ளார்.

23 வயதான ஹமெத், பல்கலைக்கழகத்தில் ஓராண்டு படித்தபின், ஈரான் அரசியல் அடக்குமுறை பயந்து தப்பி ஓட வேண்டிய கட்டாயத்தில் இருந்தார்.நான் ஜேர்மனிக்கு 2012 ஆரம்பத்தில் வந்தேன். ஒருசிறந்த வாழ்வுதேவை என்பதற்காக நான் இங்கு வரவில்லை, ஈரானில் என் வாழ்விற்கு ஆபத்து என்பதால் இங்கு வந்திருந்தேன். இங்குள்ள மற்றெல்லா அகதிகளைப்போலவே நானும் பிறருடைய தர்மத்தில் வாழ விரும்பவில்லை. எனக்கு வேலையும், படிப்பும் தேவை. இங்கே உள்ள மக்களில் சிலர் அதிகம் படித்தவர்கள், சிலர் சற்றே குறைவாகப் படித்தவர்கள். இவர்கள் அனைவரும் ஜேர்மனிய சமூகத்திற்கு பங்களிப்பு செய்யமுடியும். ஆனால் அதிகாரிகளிடம் இருந்து எங்களுக்கு கிடைப்பது அலட்சியமும், அறியாமையும்தான்.

மேற்கும் அமெரிக்காவும் அடக்குமுறை ஆட்சிகளுக்கு ஆயுதங்களை விற்கத்தயாராக உள்ளன, ஆனால் விளைவுகளுக்கு பொறுப்பேற்க மறுக்கின்றன. ஈரானில் பொலிசார் ஜேர்மனிய ஆயுதங்களைக் கொண்டுள்ளனர் என்பதை அனைவரும் அறிவர்மிளகு நீர்தூவி, ஆயுதங்கள், பொலிஸ் வாகனங்கள் அனைத்துமே ஜேர்மனிய வர்த்தக முத்திரைப் பெயர்களை கொண்டுள்ளன.

ஈரானிய அரசால் துன்புறுத்தலை அனுபவித்த சக மாணவர்களைப் பற்றி எனக்குத் தெரியும். அராசங்கம் கண்காணிப்புக் கருவிகளை ஜேர்மனிய நிறுவங்களான சீமன்ஸ் போன்றவற்றிடம் இருந்து விலைக்கு வாங்கி அவர்களை ஒற்று பார்த்தது.

ஒரு வகையில் நான் என் நாட்டை விட்டு நீங்க கட்டாயப்படுத்தப்பட்டதற்கு ஜேர்மனியும் பங்கை கொண்டுள்ளது, ஆனால் இப்பொழுது நான் இங்கிருக்கும்போது, அது எனக்கு எதையும் செய்ய விரும்பவில்லை.