World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Middle East wars drive refugee flows, Mediterranean migrant deaths

மத்திய கிழக்கு போர்கள், அகதிகள் வெளியேற்றத்திற்கும் , மத்தியதரைக்கடலில் புலம் பெயர்வோர் இறப்புக்களுக்கும்  உந்துதல் கொடுக்கிறது

By Robert Stevens 
15 October 2013

Back to screen version

அக்டோபர் 3ம் திகதி லம்பேடுசா (Lampedusa) கப்பல் மூழ்கியதில் இறந்த புலம்பெயர்ந்தவர்களின் உடல்களை தேடும் தங்கள் முயற்சியை மீட்பு பணியில் ஈடுபட்ட்டோர் முடித்துவிட்டனர். மத்தியதரைக்கடலில் மூழ்கிய இக் கப்பலில் இருந்த  எரித்தியர்கள், சோமாலியர்கள் மற்றும் சிரியர்கள் உட்பட 545 பேரில் 155 பேர்தான் இப் பெரும் துன்பியலில் இருந்து தப்பிப் பிழைத்தனர். 359 உடல்கள்தான் மீட்கப்பட்டுள்ளன.

இந்த இறப்புக்களை தொடர்ந்து மற்றொரு படகு மால்ட்சே நீர்நிலையில், லம்பேடுசா தீவிற்குத் தெற்கே அக்டோபர் 11ல் மூழ்கியது. 200 சிரியர்கள் மற்றும் பாலஸ்தீனிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என படகில் இருந்தவர்களில் குறைந்தப்பட்சம் 34 பேர் மடிந்தனர். படகு, ஒரு லிபியக் கொடி பறந்திருந்த இராணுவக் கப்பல் ஒன்றினால் சுடப்பட்டிருக்க வேண்டும்.

சானல் 4 நியூஸ் தொலைக்காட்சியிடம் பேசிய தப்பித்துப்பிழைத்தவர் ஒருவர் கூறினார்: “அவர்கள் எங்களை ஒரு மணி நேரம் பின் தொடர்ந்தனர். அதன்பின் எங்கள் கப்பல் காப்டனை நிறுத்துமாறு கேட்டுப்பின் வானில் சுட ஆரம்பித்தனர். படகை தலைகீழாகக் கவிழ்க்க முயன்றர். பின் படகின் இயந்திரத்தின் மீது சுடத் தொடங்கினர்.”

.நா. அகதிகள் நிறுவனத்தைச் சேர்ந்த Maurizio Molina  கூறினார்: “சுட்டதினால் ஏற்பட்ட ஓட்டையினால், படகிற்குள் நீர் நுழைய ஆரம்பித்தது, படகில் இருந்த சிரியர்களிடையே பெரும் அழுத்தத்தை தோற்றுவித்தது. ஒரு கட்டத்தில் கீழே இருந்த 100 பேர் மேலே வரவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது, இது சமச்சீர்நிலையை கவிழ்த்து பின் இறுதியில் படகு கவிழும் நிலையையும் ஏற்படுத்தியது.

தனித்தனி சம்பவங்களில்  குறைந்தபட்சம் இன்னும் 500 புலம்பெயர்ந்தவர்கள் இத்தாலிய தீவான சிசிலிக்கு அருகே மீட்கப்பட்டனர். வெள்ளியன்று மற்றொரு நிகழ்வில் 12 புலம் பெயர்ந்தவர்கள் அலெக்சாந்திரியாவின் கடலோரப் பகுதியில் கப்பல் விபத்தில் மூழ்கினர். எகிப்திய அரசாங்க செய்தி ஊடகம் 116 பேர் மூழ்கலில் இருந்து தப்பியதாகத் தெரிவித்தது.

அக்டோபர் 3 முதல், மத்தியதரைக்கடல் பகுதியில் இறப்புக்கள் எண்ணிக்கை, கடந்த இரு தசாப்தங்களில் “ஐரோப்பியக் கோட்டைக்குள்” நுழையும் முயற்சியில் இறந்துள்ள 25,000 என்னும் அதிர்ச்சியளிக்கும் எண்ணுடன் சேர்க்கப்படும்.

அக்டோபர் தொடக்கத்தை ஒட்டி, இந்த ஆண்டு மட்டும் கிட்டத்தட்ட 30,000 பேர் மத்தியதரைக் கடலை கடந்து இத்தாலிக்குள் நுழைய முயன்றனர். இவர்களில் பலர், துனிசியா, லிபியா, எகிப்து, சிரியா நாடுகளில் இருந்து போர் மற்றும் துன்புறுத்தல்களில் இருந்து தப்பிக்க வெளியேறுபவர்களாவர்.

அகிதிகளில் பெரும்பாலானவர்கள், 95%க்கும் மேலானவர்கள், ஐரோப்பாவில் எங்கும் வாழமுடியவில்லை. உத்தியோகபூர்வமாக 1.6 மில்லியன் சிரியர்கள் இப்பொழுது அகதிகள் ஆவர்; .நா. இந்த எண்ணிக்கை 2013 நடுப்பகுதிக்குள் ஒரு மில்லியனை விட அதிகம் ஆகும் என்று கணக்கிட்டுள்ளது.

டிசம்பர் 2012 ஐக்கிய நாடுகள் சபையின் சிரியா பிராந்திய பிரதிசெயல் திட்டம், 515,061 சிரிய அகதிகள், சுற்றியுள்ள ஜோர்டான், லெபனான், ஈராக், துருக்கி மற்றும் எகிப்திற்கு வந்துள்ளனர் என கணக்கிட்டுள்ளது. அகதிகள் நெருக்கடி இந்த ஆண்டு அதிகரித்துவிட்டது, .நா. ஜூன் மாதம் இன்னும் ஒரு மில்லியன் அகதிகள் இந்நாடுகளுக்கு வந்துள்ளனர் என்று உறுதி செய்துள்ளது.

ஜனவரி மாதம் நாள் ஒன்றிற்கு 5,000 பேர் சிரியாவில் இருந்து தப்பி வெளியேறியுள்ளனர், மார்ச் மாதத்தை ஒட்டி இந்த எண்ணிக்கை சராசரி 10,000 என ஆயிற்று. .நா.வின் அகிதகளுக்கான ஆணையர் கூறினார்: “இந்த ஆண்டின் வருகைப் போக்குகளைத் தளம் கொண்டு பார்த்தால், பிராந்தியம் முழுவதும் உதவி என கோரும் சிரிய அகதிகளின் எண்ணிக்கை 2013 முடிவை ஒட்டி 3.45 மில்லியன் என ஆகலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது; இவர்கள் பெரும்பாலும் உள்ளூர் சமூகங்களில் இருக்கும் முகாம்களில் உள்ளனர்.”

சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இன்னும் ஐந்து மில்லியன் மக்கள் சிரியாவிற்குள்ளேயே இடம் பெயர நேர்ந்துள்ளது. மொத்தம் ஏழு மில்லியன் சிரியர்கள் தங்கள் வீடுகளில் இருந்து இடம் பெயர்ந்துள்ளனர்—இது நாட்டின் 22 மில்லியன் மக்கள் தொகையில் கிட்ட மூன்றில் ஒரு பகுதியாகும். இந்த எண்ணிக்கை குறுகிய காலத்தில் 50% என ஆகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

.நாவின் அகதிகளுக்கான பொறுப்பிற்கான உயர் ஆணையரான Antonio Guterres கூறினார்: “சிரியா இந்நூற்றாண்டின் மிகப் பெரிய துன்பியலாகி விட்டதுஇழிந்த மனிதாபிமானமற்ற கொடூரம், இடர்கள், இடர் பெயர்தல் என சமீப வரலாற்றில் இணைத்துப் பார்க்க முடியாத செயல்கள் அங்கு நடைபெறுகின்றன.”

Guterres ஒப்புக் கொள்ள முடியாததுஒப்புக் கொள்ளவும் மாட்டார்— என்பது மில்லியன் கணக்கான சிரியர்கள் மீது விழுந்துள்ள பெரும் துன்பியலானது, அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்டு, துருக்கி மற்றும் வளைகுடா முடியாட்சிகளின் உதவி மற்றும் நிதியுடன் நடத்தப்படுவது என்பதைத்தான்.

சிரியாவில் ஏகாதிபத்திய பினாமிப் போர் வெடிப்பதற்கு முன்பே, நாட்டிற்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பேரழிவு தரும் பாதிப்பை ஏற்படுத்தின. 1979லேயே அமெரிக்கா சிரியாவை “பயங்கரவாத அச்சுறுத்தலை அளிக்கும் நாடு” என்று அழைத்து, தொடர்ந்த பல பொருளாதாரத் தடைகளை சுமத்தியது. ஆகஸ்ட் 2011ல் ஒபாமா நிர்வாகம் கூடுதலான பொருளாதாரத் தடைகளை சிரியாவின் எரிசக்தி துறையில் சுமத்தி, அமெரிக்காவில் இருக்கும் அனைத்து சிரிய அரசாங்கச் சொத்துக்களையும் முடக்கிவிட்டது.

கடந்த மாதம் பிரித்தானியாவின் Independent,  பொருளாதாரத் தடைகள் சிரியாவின்,ஒரு காலத்திய ஐந்து வயதிற்குக்கு குறைந்தவர்களின் தடுப்பூசித் திட்டத்தை தாக்கி MDG (.நா.வின் மில்லியனியன் வளர்ச்சி இலக்குகளை) ஐ தாய்மார் மற்றும் குழந்தைகள் இறப்பு எண்ணிக்கையில்  தாக்கத்தையும், நாடு கிட்டத்தட்ட தன்னிறைவு அடையும் நேரத்தில் இவை சரிந்து, அடிப்படைத் தேவையான மருந்துகள் உற்பத்தி நின்று போயிற்று. புற்றுநோய், நீரிழிவு ஆகியவற்றிற்கான சிகிச்சைக்கான மருந்துகள், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படாதவை அண்டை நாடுகளில் இருந்து மிகப் பெரிய விலை கொடுத்தால்தான் கிடைக்கும். அடிப்படை உணவு, சமைத்தல், எண்ணெய் சூடு இவற்றிற்கான செலவுகள் பல மடங்கு அதிகரித்துவிட்டன; இதையொட்டி அவை பெரும்பாலான மக்களுடைய சக்திக்கு அப்பால் சென்றுவிட்டன. அதேவேளை குண்டர்கள் தலைமையிலான கடத்தல்தான் ஆதாயம் பெறுகின்றன. இவை அனைத்துடன் போரின் கொடூரமும் தொடர்கிறது.”

சிரிய மக்கள் இப்பொழுது அகதிகள் முகாமில் வைக்கப்பட்டுள்ளனர், அடிப்படை சுதந்திரங்கள் மறுக்கப்படுகின்றன, குடியுரிமையும் கொடுக்கப்படுவதில்லை. கிட்டத்தட்ட 520,000 சிரிய மக்கள் இப்பொழுது ஜோர்டானில் உள்ளனர், அந்நாட்டு மக்கட்தொகையை இரண்டு ஆண்டுகளில் 8 சதவிகிதம் அதிகம் ஆக்கிவிட்டனர். ஜாடரி முகாமில் 130,000 மக்கள் இழிந்த நிலையில் நெரிசலில் வாழ்கின்றனர். ஜூலை 2012ல் அது நிறுவப்பட்டபோது அதில் 100 குடும்பங்கள்தான் இருந்தன. அது நாள் ஒன்றிற்கு 2,000 பேர் அதிகம் என இப்பொழுது வளர்ந்து கொண்டிருக்கிறது. மற்றொரு முகாம் அஜ்ரக் கட்டுமானத்தில் உள்ளது, கிட்டத்தட்ட 130,000 பேர் வரை வசிக்கலாம்.

அகதிகள் முகாம்களில் இடம் இருந்தால்தான், துருக்கி சிரிய அகதிகளை நாட்டில் அனுமதிக்கிறது.

லெபனிய அரசாங்கம், சிரியர்களுக்குசுற்றுலா” விசாவில்தான் நாட்டுக்குள் நுளைய அனுமதிக்கிறது, அகதிகளாக அங்கீகரிக்கவில்லை. கிட்டத்தட்ட 1.3 மில்லியன் சிரியர்கள் இப்பொழுது லெபனானில் உள்ளனர். .நா.வால் பதிவு செய்யப்பட்ட அகதிகள் 780,000 பேர் ஆவர்.

இன்னும் பல்லாயிரக்கணக்கான மக்கள் சிரிய ஜோர்டன் எல்லையில் ஆபத்தான சூழலில் எல்லையைத் தாண்டி நுழைவதற்குக் காத்திருக்கின்றனர்.

லாம்பெசுடா வழியாக ஐரோப்பாவை அடைய முயலும் அகதிகளைக் கொண்ட பல கப்பல்கள் லிபிய துறைமுகங்கள் வழியாக ஆபத்தான பயணத்தை தொடக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளன. மற்றொரு “மனிதாபிமான” உள்நாட்டுப் போர் ஏகாதிபத்தியத்தால் உந்துதல் பெற்று, 2011ல் முயம்மர் கடாபியின் ஆட்சி அகற்றப்பட்டபின், லிபியா ஆட்சிமாற்றத்திற்கும் ஜனநாயகத்திற்கும் ஒரு முன்மாதிரி எனப் பாராட்டப்பட்டது; சிரியர்களும் அப்படி எதிர்பார்க்கலாம் என்று கூறப்பட்டது. ஆனால் லிபியாவில் வெளிப்பட்டதோ ஒரு குற்றம் நிறைந்த ஆட்சி, போட்டி ஆயுதப் போராளிகளின் கொடுமை –இதில் ஆயிரக்கணக்கானவர்கள் சிறைப்பட்டுள்ளனர், குற்றச்சாட்டுக்கள் ஏதும் இன்றி முறையான சித்திரவதையுயம் அனுபவிக்கின்றனர்.

ஐரோப்பிய ஒன்றியம் இத்தகைய நுழைதலை தடுக்கும் வகையில், லிபிய ஆட்சியுடன் 30 மில்லியன் யூரோக்கள் ஆண்டிற்கு என்னும் உடன்பாட்டுச் செயலைக் கொண்டுள்ளது; இதற்கு யூபம் லிபியா (Eubam Libya) என்று பெயர். இதன் மையத்தில் “எல்லை நிர்வாக மூலோபாயம்”, “சட்டபூர்வ, மற்றும் நிறுவன வடிவமைப்பு எல்லை நிர்வாகத்திற்கு” இருக்கும்.

இத்தாலி ஏப்ரல் 2012ல் இரகசிய ஒப்பந்தத்தை அப்பொழுது இருந்த லிபிய தேசிய மாற்றுக்காலக் குழுவுடன் கையெழுத்திட்டு “புலம்பெயர்வோர் நுழைவதை நிறுத்த” முயன்றது என கடந்த ஆண்டு சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்தது. ஒப்பந்தத்தை பற்றி கருத்து தெரிவித்த சர்வதேச மன்னிப்பு சபையின் நிக்கோலோஸ் பேகர் கூறினார்: “ஐரோப்பிய ஒன்றியத்தை பொறுத்தவரை ஐரோப்பாவில் எல்லைகளை பலப்படுத்துவதுதான் உயிர்களை காப்பாற்ற முக்கியம் என்று கருதுகிறது.”

அக்டோபர் 11ல் ஒரு லிபியக் கப்பல் சுட்டதால் இறந்த 34 அகதிகள்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் உடந்தையினால் இறப்பவர்களில் கடைசியாக இருக்கப்போவதில்லை.