தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி The German Left Party after the elections தேர்தல்களுக்குப் பின் ஜேர்மன் இடது கட்சி
By Johannes Stern Use this version to print| Send feedback ஜேர்மன் மத்திய தேர்தலின் முடிவுகளுக்கு இடது கட்சி சமூக ஜனநாயகக் கட்சி-இடது கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம் (சிவப்பு-சிவப்பு-பசுமைக் கூட்டணி) தேவை என்னும் அதன் அழைப்பை தீவிரப்படுத்தியுள்ளதன் மூலம் தனது பிரதிபலிப்பை காட்டியுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள சமூக வெட்டுக்கள் இன்னும் கூடுதலான ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கைக்கும் SPD, பசுமைவாதிகளுடன் கூட்டணி அரசாங்கத்தினூடாக அல்லது ஜேர்மன் பாராளுமன்றத்தில் விசுவாசமான எதிர்க் கட்சியாக இருப்பதன் மூலம் ஜேர்மன் ஆளும் உயரடுக்கிற்கு தன் ஆதரவை காட்டியுள்ளது. சமீபத்திய நாட்களில் இடது கட்சியின் முக்கிய பிரதிநிதிகள் பல நேர்காணல்களில் தங்கள் கட்சியின் தேர்தல் பிரச்சாரத்தில் சமூக சீர்திருத்த மற்றும் அமைதிவாத கோஷங்கள் வாக்குகளை பெற்றுக்கொள்வதற்கான வெறும் வார்த்தைகள்தான் என்பதை தெளிவுபடுத்தியுள்ளனர். உண்மையில் கட்சி, வலதுசாரி, தொழிலாளர் எதிர்ப்புக் கொள்கைகளைத்தான் முன்வைக்கிறது. திங்களன்று இடது கட்சியின் துணைத் தலைவர் ஸாரா வாகென்கிநெக்ட் Zeit Online இற்கான ஒரு நேர்காணலில் SPD மற்றும் பசுமைவாதிகள் பழைமைவாத கட்சிகளுடன் (கிறிஸ்துவ ஜனநாயக ஒன்றியம் CDU- கிறிஸ்துவ சமூக ஒன்றியம் CSU) உடன் புதிய அரசாங்கத்தினை அமைப்பதற்கான பேச்சுவார்த்தைளை நடத்துகிறது, இடது கட்சியுடன் அல்ல என்று புலம்பினார். “இது அனைத்தும் வருந்தத்தக்கது. தங்கள் சொந்த பிரசாரத்தை SPD சிறிது தீவிரமாக எடுத்துக்கொண்டால், பாராளுமன்றம் அமைக்கப்பட்டவுடன் அவர்கள் எங்களுடன் தங்கள் கோரிக்கைகளை தொடர்ந்து நடைமுறைப்படுத்தியிருக்க முடியும்” என்றார் அவர். SPD உடைய மற்றும் அதன் சான்ஸ்லர் வேட்பாளர் பீர் ஸ்ரைன்புரூக் உடைய தேர்தல் பிரச்சாரத்தை சற்றே நினைவு கூர்வது அந்த அறிக்கையின் பிற்போக்குத்தன தன்மையைக் காட்டுகிறது. தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தில் SPD பலமுறையும் வெளியேறும் அங்கேலா மேர்க்கெலின் பழைமைவாத அரசாங்கத்தை வலதுபக்கம் இருந்து தாக்கியது. உள்நாட்டில் சான்ஸ்லர் ஜேர்மனிய மக்கள் மீது கிரேக்கம் அல்லது மற்ற தெற்கு ஐரோப்பிய நாடுகளில் அவர் கோரிய சிக்கனங்களை செயல்படுத்தும் தைரியத்தை போதுமான அளவு கொண்டிருக்கவில்லை என்றும் வெளியுறவுக் கொள்கையை பொறுத்தவரை, SPD மேர்க்கெல் அரசாங்கத்தை சிரியாவிற்கு எதிரான இராணுவத் தாக்குதலுக்கு தயாரிப்பதில் “செயலற்று” இருந்ததற்குக் குறைகூறியுள்ளது. தேர்தல்களுக்கு பின், ஜேர்மனிய ஆளும் வர்க்கம் எதிர்வரவிருக்கும் அரசாங்கத்திடம் தான் எதிர்ப்பார்ப்பது என்ன என்பதை முற்றிலும் தெளிவாக்கியுள்ளது. அது SPD அல்லது பசுமைவாதிகளிடன் கூட்டு என எப்படி இருந்தாலும்; சமூகநல வெட்டுக்கள் தீவிரப்படுத்தப்பட வேண்டும், ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை தேவை எனக்கோருகின்றது. SPD மற்றும் பசுமைவாதிகளிடம் காட்டும் தமது ஆர்வத்தில் இடது கட்சி அத்தகைய போக்கிற்கு தான் தயார் என்பதையே உறுதிப்படுத்தியுள்ளது. Frankfurter Rundschau பத்திரிகைக்கு அக்டோபர் 1 அளித்த நேர்காணலில் பாராளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கை குழுவில் இடது கட்சியின் பிரதிநிதி ஸ்ரெபான் லீபிஷ் பின்வருமாறு அறிவித்தார்: “நாம் சிவப்பு-சிவப்பு-பசுமை கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டும். இது கணக்கீட்டின்படி இயலும் என்பது மட்டும் அல்ல, அதற்கான போதுமான அடித்தளமும் உள்ளது. இந்த இலக்கை ஒட்டி SPD மற்றும் பசுமைவாதிகள் தங்கள் தடைகளை கைவிட வேண்டும். நாம் கணிசமான நிலைப்பாடுகளில் இருந்து உழைக்க வேண்டும்.” இடது கட்சியின் கொள்கைகள் குறித்து அப்பட்டமாகப் பேசுபவர் என அறியப்பட்டுள்ள லீபிஷ் மேலும் கூறியது: “எங்களில் பலருக்கு வெளியுறவுக் கொள்கை கடினமான துறையாகும்; ஏனெனில் ஒவ்வொரு அடியும் ஒரு கதவைத் திறப்பது போல் ஆகும்... நாம் இதை கடந்துபோனால் இராணுவத்தை பயன்படுத்துவதில் SPD, பசுமைவாதிகள் போல் நிலைப்பாடுகள் பலவற்றிற்கு ஒப்புக் கொள்ளவேண்டியிருக்கும் என்ற அச்சத்தை நான் உணர்கிறேன், ஏனெனில் அழுத்தம் பாரியளவிலானது. ஆயினும்கூட, இதற்காக நாம் கதவை அடைத்துவிடக்கூடாது, பேச வேண்டிய பிரச்சினைகளில் மௌனம் சாதிக்கக் கூடாது. அச்சம் என்பது ஒரு மோசமாக ஆலோசகராகும்”. இதன் பிறகு லீபிஷ் தன் கருத்தை வலியுறுத்தும் வகையில், “இரு மோதும் தரப்புகளுக்கிடையே ஐக்கிய நாடுகள் சபை ஒரு போர்நிறுத்தத்தை நடாத்துமென்றால் இரு தரப்பினரும் உடன்பட்டால் அவ்வாறான ஒரு உடன்பாடு சமாதானப் படைகளால் பாதுகாக்கப்பட வேண்டும். ஜேர்மனி எப்பொழுதும் இல்லை எனக் கூறக்கூடாது. ஒவ்வொரு நிலைப்பாடும் விரிவாக ஆராயப்பட வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன். 1994இல் ருவண்டாவில் நடைபெற்ற இனக்கொலை பற்றி நாம் என்ன செய்திருப்போம்? ஒரு மில்லியன் உயிர்களை அது பலியெடுத்தது. பேசாமல் நின்று பார்த்துக்கொண்டிருப்பதா”? “இடது கட்சயில் இன்னும் மாற்றங்கள் தேவையா” எனக் கேட்கப்பட்டதற்கு லீபிஷ் கூறினார்: “வெளியுறவுக் கொள்கைகளுக்கு கூறப்பட்டது அனைத்து துறைகளின் கொள்கைகளுக்கும் பொருந்தும். நம்மிடையே பாராட்டத்தக்க இலக்குகள் உள்ளன. ஆனால் எப்படி அவற்றை சாதிக்கப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்கவேண்டும்”. வேறுவிதமாகக் கூறினால், இடது கட்சி மத்திய ஆட்சி அமைபைப்பதற்கு மற்ற கட்சிகளுடன் இப்பொழுது இருக்கும் அனைத்து வேலைத்திட்ட தடைகளையும் அகற்றும் விருப்பத்தை கொண்டுள்ளது. தேர்தல் வேளையில், இடது கட்சி அது ஜேர்மனிய இராணுவம் வெளிநாடுகளில் பயன்படுத்தப்படுவதை எதிர்ப்பதாகக் கூறியது. சமூகநல விரோத Hartz IV சட்டங்களை எதிர்ப்பதாகவும், அதே நேரத்தில் குறைந்தப்பட்சம் 10 யூரோக்கள் ஊதியத்திற்கும் அழைப்புவிடுத்தது. இப்பொழுது இவை அனைத்தும் தூக்கி எறியப்படும். Zeit Online க்கு செப்டம்பர் இறுதியில் கொடுத்த நேர்காணலில் இடது கட்சியின் தலைவர் கற்யா கிப்பிங் பின்வருமாறு தெளிவாக்கினார்: “எங்கள் நூறு பக்க தேர்தல் அறிக்கை அனைத்து விடயங்களிலும் செயல்படுத்தப்பட முடியாது என்பதை நாம் அறிவோம்.” குறைந்தபட்ச ஊதியம் பற்றி கிப்பிங் கூறினார்: “SPD, பசுமைவாதிகள் போல் நாங்கள் நாடுதழுவிய குறைந்தபட்ச ஊதிய மட்டத்தை நிறுவ விரும்புகிறோம். இது செய்யப்படுதல் முக்கியம் ஆகும். நாம் செல்லும் திசை முக்கியம், எத்தனை தூரம் போகிறோம் என்பது அல்ல... ஊதியத்தை பொறுத்த வரை, நாம் சரியான தொகை பற்றி பேசலாம்.” மற்றொரு நேர்காணலில் அவர் இடது கட்சி ஹார்ட்ஸ் IV சட்டங்கள் அகற்றப்பட வேண்டும் என இனி விரும்பவில்லை என்பதை தெளிவுபடுத்தினார். மாறாக, “ஹார்ட்ஸ் IV முறையில் இருக்கும் தடைகள்” “பிரயோசனமற்றவை” என்றார். இப்போக்கிற்கு கட்சியின் முழு ஆதரவும் உள்ளது. புதன் அன்று கிரிகோர் கீசி கட்சித் தலைவராக ஒரு கட்சி மாநாட்டில் உறுதி செய்யப்பட்டார். தேர்தலுக்கு முன்பு அவர் கடுமையாக தன் கட்சி ஒரு வருங்கால அரசாங்கத்தில் ஈடுபாடு கொண்டிருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். ஆகஸ்ட் முதல் பகுதியில் அவர் சிவப்பு-சிவப்பு-பசுமை கூட்டணி அரசாங்கத்தில் வெளியுறவு மந்திரி பதவியை எடுத்துக் கொள்ளத் தயார் எனக் குறிப்புக் காட்டியிருந்தார். ஹெசி மாநிலத்தில் இடது கட்சி, ஜனீன் விஸ்லெர் தலைமையில் (மாநில அரசு முதலாளித்துவ மார்க்ஸ் 21 குழு உறுப்பினர்) ஒரு SPD பசுமை நிர்வாகத்தைப் பொறுத்துக் கொள்ளத் தயார் அல்லது சிவப்பு-சிவப்பு-பசுமை அரசாங்கத்தில் நுழையத் தயார் என்று கூறியிருந்தார். செவ்வாயன்று ஆராயும் பேச்சுக்களுக்கு முன்பு விஸ்லெர் தான் அரசாங்கத்தின் அரசியலமைப்பு சட்டரீதியான “கடன் தடையை” ஏற்கத்தயார் என்றார். இது வரவுசெலவுத்திட்டத்தில் கடுமையான தடைகளை சுமத்துவதுடன், ஆழ்ந்த சமூகநல வெட்டுக்களை வலியுறுத்துகிறது. Taz ஏட்டிற்குக் வழங்கிய நேர்காணல் ஒன்றில் செப்டம்பர் கடைசியில் அவர் “இதை அரசியலமைப்பில் இருந்து அகற்றுவது கடினம் ஆகும்” என்றார். கீசி போன்ற இடது கட்சி அரசியல்வாதிகள் நீண்டகாலத்திற்கு முன்பே ஜேர்மனிய அரசியல் ஆளும்பிரிவினரிடையே தங்கள் இடத்தைக் கண்டுவிட்டனர். ஆனால் இந்த உடன்பாடு இப்பொழுது போலி இடதுகளான விஸ்லர் போன்றோருக்கும் விரிவாக்கப்படுகின்றது. இடது கட்சி, SPD, பசுமைக் கட்சிகளுக்கு இடையே ஹெஸ்ஸவில் நடக்கும் பேச்சுவார்த்தைகளின்போது, Süddeutsche Zeitung பத்திரிகை விஸ்லர் மற்றும் ஹெஸ்ஸ மாநில இடது கட்சிக்கு பாராட்டுக்களை வெளியிட்டது. “ஒரு முற்றிலும் இயல்பான இடது கட்சி” என்ற தலைப்பில் Süddeutsche Zeitung பின்வருமாறு கூறியது: “ஜனீன் விஸ்லர் போன்ற ஒருவர் ஹெஸ்ஸவில் போட்டியிடுவது குறித்துப் பாராட்டப்பட வேண்டும். தேர்தல் பிரச்சார காலத்தில் ஏனைய கட்சிகள் ஹெஸ்ஸ மாநில இடதின் உயர்மட்ட வேட்பாளரின் வசீகரம். தெளிவு போன்றவற்றிலிருந்து இலாபமடைந்திருக்கலாம். ஏனையோர் மோதலில் ஈடுபட்டிருக்கையில் விஸ்லர் அச்சப்படாது நேர்மையை பிரதிபலித்து, தன்னுடைய விரோதிகளுக்குக்கூட பரிவுணர்வுடைய நபராக இருந்தார்.” Süddeutsche Zeitung ஐ பொறுத்தவரை, SPD-இடது கட்சி-பசுமைக்கட்சி கூட்டணி அரசு ஹெஸ்ஸவியில் “புதிய முன்னோக்குகளைத்” திறக்கும். ஹெஸ்ஸ இடது கட்சி “பரந்த இயல்பானதாகிவிட்டது”. அசாதாரணம் எனப்பட்டது “இதுவரை கட்சி நடத்தப்பட்ட விதத்தில்தான் இருந்தது.” இக்கருத்து இரு விதங்களில் முக்கியமானது. முதலில் இது ஆளும் வர்க்கம் விஸ்லர் போன்ற போலி இடதுகளின் பிரதிநிதிகள் போன்றோரை “இயல்பான” முதலாளித்துவ அரசியல்வாதிகள் என்று. கருத முன்வந்துள்ளதை எடுத்துக்காட்டுகின்றது. இரண்டாவது, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவு புதிய சமூகத் தாக்குதல்களை சுமத்தவும் மற்றும் மக்களுடைய எதிர்ப்பிற்கு எதிராக இன்னும் ஆக்கிரோஷ வெளியுறவு கொள்கையை நடைமுறைப்படுத்த அதிகரித்தளவில் இடது கட்சியின் சேவைகளை சேர்த்துக்கொள்ள விரும்புகின்றது. SPD, பசுமைவாதிகளுடன் மாநில மற்றும் மத்திய அரச மட்டத்தில் இவர்கள் சேர விரும்பும் விழைவு இடது கட்சி ஆளும் உயரடுக்கை கைவிடாது என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது. |
|
|