World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Regional tensions to rise after Obama’s no-show in Asia

ஆசியாவில் ஒபாமா கலந்து கொள்ளமுடியாத நிலைக்குப் பின் பிராந்திய அழுத்தங்கள் உயர்கின்றன

Peter Symonds
12 October 2013

Back to screen version

இந்த வாரம் முக்கிய ஆசிய உச்சிமாநாடுகளில் ஜனாதிபதி பாரக் ஒபாமா வாஷிங்டனில் அரசாங்கம் மூடப்பட்டதையடுத்த கலந்து கொள்ளவில்லை என்பது அமெரிக்கச் சரிவின் நேரடி அடையாளமாகும்; இது பிராந்திய உறுதியற்ற தன்மையை அதிகரிக்கச் செய்யும்.

கடந்த நான்கு ஆண்டுகளாக ஒபாமா சீனாவின் பொருளாதார ஏற்றத்திற்கு விடையிறுக்கும் வகையில் ஆக்கிரோஷ இராஜதந்திர மற்றும் இராணுவ அழுத்தத்தை சீனாவிற்கு எதிராகக் கொண்டு வந்துள்ளார்ஆசியாவில்  “முன்னிலைஅல்லதுமீள்சமநிலைஎன்ற வகையில். பெரும் வெகுஜன எதிர்ப்பின் காரணமாக சிரியா மீது தாக்குதல் ஒத்திப்போடப்பட்டதற்கு அடுத்தாற்போல் வந்துள்ள நிலையில், ஒபாமா வருகையை இரத்து செய்துள்ளது அமெரிக்க நட்பு நாடுகளை நிலைகுலைய வைத்துள்ளது, ஆசிய ஆளும் வட்டங்கள் முழுவதும் வாஷிங்டன் அதனுடைய பொருளாதார, மூலோபாய உத்தரவாதங்களை நிறைவு செய்யும் திறனைப் பற்றிய வினாக்களையும் எழுப்பியுள்ளது.

வாஷிங்டனின் ஆசியாவில்மீள்சமநிலைக்குஅசைக்க முடியாத உறுதிப்பாடு பல முறை வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியால் உத்தரவாதம் அளிக்கப்பட்டபின், ஒபாமாவின் நிலைப்பாடு இந்த வார உச்சிமாநாடுகளில் வெற்றுத்தனமாக ஒலித்தது. வாஷிங்டனில் அரசாங்கம் மூடப்பட்ட நிலையில், பணம் செலுத்துதலில் தோல்வி ஏற்படலாம் என்ற நிலையில், வெளிப்படையான கேள்வி, அமெரிக்காமுன்னிலையில் இருப்பதற்கு பணம் கொடுக்கமுடியுமா?

பைனான்சியல் டைம்ஸ் கட்டுரையாளர் பிலிப் ஸ்டீபன்ஸ் என்பவர் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் வெளிப்படையான சிதைவைக் குறிப்பிடுகிறார்: தற்பொழுது அமெரிக்க ஆற்றல், கௌரவத்திற்கு சிறந்த நேரம் இல்லை. சிரியா பற்றிய ஒபாமாவின் கூப்பாடுகள், ஈரானுடன் பேச அவர் தயாராக இருந்தது ஆகியவை மரபார்ந்த அரபு நட்பு நாடுகளை கொதிக்க வைத்துள்ளன... ஆசியாவிற்கு அவர் வராமல் வாஷிங்டனில் நிலைகொண்டது, நிர்வாகத்தின் அதிகம் பேசப்பட்டஆசியாவில் முன்னிலைஎன்பதற்கு அதிக நம்பிக்கை கொடுக்கப்போவதில்லை. உலகின் இப்பகுதிக்கு வருகை முக்கியமானது, திரு ஒபாமா அரங்கத்தை சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கிற்கு கொடுத்துவிட்டார்.

ஆசியான் (ASEAN) மற்றும் அபெக் (APEC) உச்சிமாநாடுகளுக்கு ஒபாமா வராதது குறித்து தெளிவாகஅப்பட்டமான பைத்தியக்காரத்தனம்என்று Economist  இடம் பேசிய ஒரு மூத்த ஆசிய அரசியல்வாதி கூறியுள்ளார். கட்டுரை கூறுகிறது: இந்த வாரம் ஒரு நிகழ்வைக் காணாமல் இருக்க முடியாது, ஒப்புமையில் ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனா எழுச்சியடைகையில் அமெரிக்கா சரிவைச் சந்திக்கிறது. திரு ஒபாமா வாஷிங்டனில் அகப்பட்டுக் கொண்ட நிலையில்.... ஜி ஜின்பிங் இரு உச்சிமாநாடுகளிலும் இருந்தார் மற்றும் மலேசியா, இந்தோனேசியாவை எடுத்துவிட்டார்.

 ஜியும் சீனப் பிரதமர் லி கெக்கியாங்கும் ஆசியான் மற்றும் அபெக் உச்சிமாநாட்டில் இருந்ததோடு மட்டுமில்லாமல், பொருளாதார நலன்களை அள்ளி வீசினார்கள். இது பிராந்தியம் முழுவதும் குறிப்பான பொருளாதார வளர்ச்சி பின் தங்கியிருக்கையில் அவற்றை அதிர வைத்துள்ளது. ஜி மலேசியா மற்றும் இந்தோனேசியாவிலும் பல பில்லியன் டாலர்கள் மதிப்புடைய பொருளாதார உடன்பாடுகளை அறிவித்தார். ஆசிய உள்கட்டுமான வங்கி அமைக்கப்படுவதை அறிவித்தார், சீன வணிகம் ஆசியான் நாடுகளுடன் 2020 ஒட்டி 1 டிரில்லியன் டாலர்களை அடையும், கிட்டத்தட்ட மும்மடங்காகும் என்றார்.

சீனா மற்றும் அதனுடைய அண்டை நாடுகளை, கடலோரப் பகுதி பூசல்களை தூண்டிவிடும் அமெரிக்க முயற்சிகள் குறித்து அதிக மறைப்பில்லாத குறிப்பில், லி கிழக்கு ஆசிய உச்சிமாநாட்டில் எச்சரித்தார்: சமாதானம், உறுதிப்பாடு இல்லாவிட்டால், எத்தகைய [பொருளாதார] வளர்ச்சிக்கும் இடமில்லை.

இரு உச்சிமாநாடுகளிலும் அமெரிக்க சீன அழுத்தங்கள் வெளிப்படை என்பது, பிராந்தியம் முழுவதும் இருக்கும் அரசாங்கங்கள் முகங்கொடுக்கும் சங்கடத்தை உயர்த்துகிறது; இவை பொருளாதார அளவில் சீனாவை அதிகம் நம்பியுள்ளன; பெரும்பாலானவை அமெரிக்காவை இராணுவ அளவில்தான் நம்பியிருக்கின்றன. எந்த நாடும் வாஷிங்டனுடன் எதிர்த்துக் கொள்ள விரும்பவில்லை, ஏனெனில் ஒபாமா நிர்வாகம் சீனாவுடன் அழுத்தங்களை அதிகரித்துள்ளது, கொரிய தீபகற்பம், தெற்கு சீன, கிழக்கு சீனக் கடல்கள் போன்ற பிராந்திய எரிமுனைகளை எரியூட்டுகிறது.

ஆழமான உலகப் பொருளாதார மந்த நிலை, போட்டியை தீவிரமாகத்தான் செய்துள்ளது. பல குறியீடுகள் ஆசியான் நாடுகளுடன் சீனாவின் ஆற்றல் நிறைந்த வணிகத்தை உயர்த்திக்காட்டுகின்றன; இது கடந்த இரு தசாப்தங்களில் அதிகமாகிவிட்டது, 1991ல் 8 பில்லியன் டாலர்களிலிருந்து 2012ல் 400 பில்லியன் டாலர்கள் என. ஆனால் அமெரிக்க வணிகம் மிக மெதுவாகத்தான் வளர்ந்துள்ளது. இதன் விளைவாக கிழக்கு ஆசிய வணிகத்தில் அமெரிக்காவின் பங்கு கடந்த தசாப்தத்தில் 19.5% என்பதிலிருந்து 9.5% எனச் சரிந்துவிட்டது; ஆனால் சீனாவின் பங்கோ 10ல் இருந்து 20 சதவிகிதம் என உயர்ந்துள்ளது. பசிபிக் கடந்த பங்காளித்துவத்திற்கு (TPP) ஒபாமாவின் ஆக்கிரோஷ முயற்சிகள்சீனாவின் இழப்பில் அமெரிக்க நலன்களை முன்னேற்றுவிக்கும் ஒரு வணிக முகாம் அமைத்தல்இப்போக்கை வன்முறையில் மாற்றும் முயற்சியாகும், அத்தோடு அமெரிக்கப் பொருளாதார மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் முயற்சியாகும்.

ஆனால் ஒபாமா நிர்வாகத்தின் முக்கிய ஆயுதம், ஆசிய முன்னிலையைதொடர்வதில் அமெரிக்க இராணுவ வலிமைதான் உள்ளது. கடந்த இரு தசாப்தங்களில் அமெரிக்க ஏகாதிபத்தியம்,  அதனுடைய ஆசிய, ஐரோப்பிய போட்டி நாடுகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தி அதனுடைய வரலாற்றுத் தன்மை நிறைந்த சரிவை ஈடுகட்ட, ஒன்றன்பின் ஒன்றாக போர்களைத்தான் நடத்தியுள்ளதுகுறிப்பாக எரிசக்தி செழிப்புடைய மத்திய கிழக்கில். ஒபாமா ஆசியாவில் மீள்சமநிலையை கொண்டுவருதல் என்பதில், மகத்தான மறுகட்டமைப்பு மற்றும் அமெரிக்கப் படைகளை கட்டமைத்தல் இந்திய பசிபிக் முழுவதும் இருக்கும்; அதுதான் இதன் இராஜதந்திர தூண்டுதல்களை இராணுவ வலிமை மூலம் சீனாவுடன் போருக்கான தயாரிப்பில் கைகொடுக்கும்.

இந்த வாரம் ஆசிய உச்சிமாநாடுகளில் சீனாவின்வசீகரத் தாக்குதலுக்குகெர்ரியின் விடையிறுப்பு மற்றும் பொருளாதார பங்களிப்புக்கள், மீண்டும் தென் சீனக் கடலில் சீனாவிற்கும் அதன் தென் கிழக்கு ஆசிய அண்டை நாடுகளுக்கும் இடையே பூசல்களை தூண்டுவதுதான். ஒரு அபத்தமான, ஆனால் வெளிப்பாட்டைக் காட்டும் கருத்து ஒரு மூத்த வெளிவிவகார அலுவலக அதிகாரியால் ப்ரூனேயில் ஆசியான் உச்சிமாநாட்டிற்கு செல்லும் போது கூறப்பட்டது, இப்பிரச்சினையில் கெர்ரியின் ஆக்கிரோஷத்தை முன்னிழலிட்டுக் காட்டியது. அமெரிக்காவும் ஆசியானும் இப்பொழுது வன்முறை உடன்பாட்டில் உள்ளன, கடலில் செல்லும் சுதந்திரக் கொள்கைகளுக்கும், நிலப் பகுதி தொடர்பான பூசல்கள் பேச்சுவார்த்தைகள் உடன்பாட்டிலும்என்று அவர் அறிவித்தார்.

வன்முறை உடன்பாடுஎன்னும் சொற்றொடர் பற்றி கேள்வி கேட்கும்பொழுது அதிகாரி மீண்டும் உறுதிப்படுத்தியதற்கு ஒரு அர்த்தம்தான் உண்டு - வாஷிங்டனின் வலிமை அல்லது வலிமைப் பயன்பாடு பற்றிய அச்சுறுத்தலை சீனாவிற்கு எதிரான அதன் கோரிக்கைகளில் வலியுறுத்துதல் என்னும் உறுதிப்பாடு மட்டுமேயாகும். அமெரிக்காவை பொறுத்தவரைகடலில் பயணிக்கும் சுதந்திரம்என்பது அதன் போர்க் கப்பல்களுக்கு முக்கிய மூலோபாய கடல்வழிகள் என்பதாகும். சீன பெருநிலப் பகுதிக்கு உடனடி அருகில் இருக்கும் பகுதியான தென் சீனக் கடலில் அமெரிக்க மேலாதிக்கம் என்பது சீனாவிற்கு எதிரான பென்டகனின் போர் மூலோபாயத்திற்கு முக்கியமானது; அதில் சீனத் தொழிற்துறைகளுக்கு எரிசக்தி மற்றும் மூலப் பொருட்கள் இல்லாமல் செய்ய கடற்படையை தடுத்தலும் அடங்கியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் தென் கொரியாவிலும், கெர்ரியும் ஹேகலும் கடந்த வாரம் ஜப்பானிலும் நடத்திய பேச்சுக்களும் உறைய வைக்கின்றன. இரு கூட்டங்களும் அமெரிக்க, கொரிய, ஜப்பானிய இராணுவப் படைகளை வடகிழக்கு ஆசியாவில்முன்கூட்டிய போர் ஒன்றிற்குதயாரிப்புக்களை மறுகட்டமைத்தன. ஒரு பரந்த கூட்டறிக்கையானது கெர்ரி, ஹேகல் மற்றும் ஜப்பானிய மந்திரியால் வெளியிடப்பட்டதுஜப்பானில் நவீன அமெரிக்க இராணுவத் தளவாடங்களை பெருமளவில் கட்டமைத்தலை கோடிட்டுக் காட்டியது. இதில் தொலைதூர டிரோன்கள், கண்காணிப்பு விமானங்கள், பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை முறைகள், ஸ்டெல்த் போர்முறைகள் ஆகியவை அடங்குகின்றன. பெயரளவிற்கு வட கொரியாவின்அச்சுறுத்தலுக்குஎதிராக இயக்கப்படுகிறது என்று கூறப்பட்டாலும், இந்நிலைகள் சீனாவிற்கு எதிரான அமெரிக்க போர்த் தயாரிப்புக்களின் ஒரு பாகமாகும்.

முன்னரோ, பின்னரோ, அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய கிழக்கு மற்றும் ஆசியாவில் அதன் பின்னடைவுகளுக்கு விடையிறுக்கும் வகையில், தன்னுடைய ஆத்திரமூட்டல், அச்சுறுத்தல் முயற்சிகளை இருமடங்காக்கும், அதன் போட்டியாளர்களை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் பொறுப்பற்ற புதிய இராணுவ தலையீடுகளை தொடங்கும்.