தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : லிபியா Libyan prime minister abducted in retaliation for US raid on Tripoli திரிப்போலியின் மீது அமெரிக்க சோதனைக்கு பதிலடியாக லிபிய பிரதம மந்திரி கடத்தப்படுகிறார்
By Alex Lantier Use this version to print| Send feedback அக்டோபர் 5 அமெரிக்கா, அல் குவேடா செயல்வீரர் என்று கூறப்படும் அபு அனஸ் அல் லிபியை (Abu Anas al-Liby) கடத்த செய்த சோதனை நடவடிக்கைக்கு பதிலடியாக, நேற்று காலை இஸ்லாமிய போராளிகள் திரிப்போலியில் லிபியப் பிரதம மந்திரி அலி சைய்டனை கடத்தினர். சைய்டனை கடத்தியவர்கள் அவரை நண்பகலுக்கு சற்று முன் விடுவித்தனர். இக்கடத்தல் வாஷிங்டன் மற்றும் நேட்டோ நட்பு நாடுகள் 2011 போரை நடத்தி கேர்னல் முயம்மர் கடாபியை அகற்றியபின், நிறுவியுள்ள நவ-காலனித்துவ முறை ஆட்சியின் செயலற்ற தன்மையை உயர்த்திக் காட்டுகிறது. கடாபிக்கு எதிராக நேட்டோ ஆயுதம் அளித்த, போட்டியிடும் வலதுசாரி இஸ்லாமிய போராளிகளை நம்பியிருந்த இது, போரினால் பேரழிவிற்கு உட்பட்டிருக்கும் நாடு கொள்ளையடிக்கப்படுவதைத்தான் மேற்பார்வையிடுகிறது —நாடு பழங்குடியினர், பிரிவினைவாதிகள் மோதலாலும் சிதைந்துள்ளது, எழுச்சி பெறும் மக்கள் எதிர்ப்பினால் பாதிக்கப்பட்டுள்ளது. அக்டோபர் 5 சோதனையின்போது லிபியாவின் தேசிய இறையாண்மையை அப்பட்டமாக அமெரிக்கா மீறியதை அடுத்து பரந்த சீற்றம் உள்ளது. 150 கனரக ஆயுதம் தாங்கியவர்கள் அதிக பாதுகாப்புடைய கோரின்தியா ஓட்டலில் உள்ள அவருடைய வீட்டைச் சூழ்ந்து, நேற்று காலை கிட்டத்தட்ட 5 மணிக்கு சைய்டனை கைப்பற்றினர். சைய்டன் லிபிய அரசாங்கத்தின் பெயரளவுத் தலைவர் என்றாலும், அவர் அமெரிக்க தூதரகம் மற்றும் அமெரிக்க எண்ணெய் பெருநிறுவனங்களின் நபர்களால் நெருக்கமாகக் கண்காணிக்கப்படுகிறார்; இவையும் தங்கள் செயற்பாடுகளை ஓட்டலில் நிறுவியுள்ளன. மோதலோ எதிர்ப்போ இல்லை என்பது குறிப்பிடத்தக்கது; சைய்டனை கைப்பற்றியவர்கள் நேற்று அவருடைய மெய்காவலர்கள் இருவரை தாக்கினர் என்று கூறப்படுகிறது. லிபிய புரட்சியாளர்களின் செயற்பாட்டு அறை, —உள்துறை அமைச்சரகத்துடன் பிணைந்த ஒரு போராளி அமைப்பு, மற்றும் லிபிய ஷீல்ட் பிரிவு என்னும் லிபியாவின் காங்கிரஸ் தலைவர் நூரி அபு சஹாமின்னுடையது— சைய்டனை கைது செய்ததற்கு உரிமை கொண்டாடியது. அதன் பேஸ்புக் பக்கத்தில் அது ஒரு “அரசாங்க வக்கீலிடம்” இருந்து பெற்ற கைது ஆணையின் பேரில் செயல்பட்டதாகவும், அதன் செயல் முற்றிலும் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் கூறியுள்ளது. இக்குழு, சைய்டனின் கைது அக்டோபர் 5 அமெரிக்க சிறப்புப்படைகள் திரிப்போலியில் நடத்திய சோதனைக்கு பதிலடி என்று உறுதிபடுத்தியது. “அவருடய கைது, நடந்த செயல்பாடு குறித்து லிபிய அரசாங்கத்திற்கு தெரியும் என [அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன்] கெர்ரி கூறிய பின்னர்தான் நடந்தது”... என்று குழு உறுப்பினர் ஒருவர் ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார். சைய்டனின் கூற்றான அவருடைய அரசாங்கத்திற்கு சோதனை பற்றித் தெரியாது என்பதை மக்கள் நம்பவில்லை என்பதற்கு நடுவே, லிபியப் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவருடைய அரசாங்கத்திற்கு அமெரிக்கத் திட்டங்கள் பற்றித் தெரியும் என்பது வெளிப்பட்டால், சைய்டனை பதவியில் இருந்து அகற்றுவது என உறுதிமொழி அளித்துள்ளனர். Brigade for the Fight against Crime என்னும் மற்றொரு குழுவும் பின்னர் சைய்டனுக்கு எதிராக உள்ளது, அது AP இடம் அவர் மீது ஊழல் மற்றும் அரசாங்கத்தின் பாதுகாப்பிற்கு தீமை அளிக்கிறார் என்ற குற்றச்சாட்டுக்கள் முனவைக்க இருப்பதாக தெரிவித்துள்ளது. பல லிபிய மந்திரிகள் சைய்டன் கடத்தப்பட்டபின், தாங்களும் அடுத்து கடத்தப்படுவோமோ என்னும் அச்சுறுத்தலில் இராணுவப் பாதுகாப்பின்கீழ் கூடினர். துணைப் பிரதம மந்திரி சாதிக் அப்துல்கரிம் கடத்தலைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். வெளிநாட்டு தூதர்களும் அதிகாரிகளும் லிபியக் குடிமக்கள் போல் பாதுகாப்பு அளிக்கப்படுவர் என்றும் அவருடைய அரசாங்கம், அபு ஸஹ்மெயின் மற்றும் “உள்ளூர், வெளிநாட்டு அமைப்புக்களுடன்” பேச்சுக்களை நடத்துகிறது என்றும் கூறினார். சைய்டன் வெளியே விடப்பட்டது பற்றி மாறுபட்ட தகவல்கள் வந்துள்ளன. அரசாங்க அதிகாரிகள் ஆரம்பத்தில் அவர் பேச்சுக்களின்போது விடுவிக்கப்பட்டார் என்றனர். ஆனால் திரிப்போலியின் மிக்குயர் பாதுகாப்புக்குழுவின் (SSC) கட்டுப்பாட்டு அதிகாரி பிஷர், போர்னஜ் பகுதியில் அவர் அடைத்து வைக்கப்பட்ட வீட்டை வீரர்கள் தாக்கினர் என்று கூறினார். அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி சைய்டன் கடத்தலை கண்டித்தார். “இத்தகைய குண்டர்த்தனத்தைப் பொறுத்துக் கொள்வதற்காக, 2011ல் லிபியர்கள் தங்கள் உயிர்களை பணயம் வைக்கவில்லை” என்றார் கெர்ரி. “இன்றைய நிகழ்வுகள், கூடுதல் திறன், வெற்றி ஆகியவற்றிற்கு ஏற்றம் கொடுக்க, பிரதம மந்திரி சைய்டனுடனும் அனைத்து லிபிய நண்பர்கள் மற்றும் நட்பு அமைப்புக்களும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார் கெர்ரி. சைய்டன் கைப்பாவை அரசாங்கத்தின் படிப்படியான சிதைவு, கெர்ரியின் முயற்சியான லிபியாவில் நடந்த 2011 ஆட்சிமாற்றப் போர், முற்போக்கானது அல்லது புரட்சிகரமானது என்று சித்தரிக்க முயல்வதை மறுதலிக்கிறது. இப்போர் ஒரு புரட்சியோ அல்லது ஜனநாயகத்திற்கான ஒரு போராட்டமோ அல்ல; குருதி கொட்டிய ஏகாதிபத்தியப் போர் ஆகும். இதில் அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள், வலதுசாரி பழங்குடித் தலைவர்கள், குற்றவாளிகள், இஸ்லாமியவாதக் குண்டர்கள் (பலரும் அல்குவேடாவுடன் பிணைந்தவர்கள்) உடன் இணைந்து கொண்டு கடாபி ஆட்சியைக் கவிழ்த்தன. இச்சக்திகளை “புரட்சியாளர்கள்” என்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலகம் மற்றும் அதன் போலி இடது நட்பு அமைப்புக்களான சர்வதேச சோசலிச அமைப்பு அல்லது பிரான்சின் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சிகளால் போற்றப்பட்டபோது, அவை உண்மையில் லிபியாவை கொள்ளையடிப்பதற்கும் அதன் வளங்களை அமெரிக்க, ஐரோப்பிய ஏகாதிபத்தியங்கள் பகிர்ந்து கொள்வதற்குமான பிரச்சார நடவடிக்கையை மேற்கொண்டிருந்தன. லிபியாவில் மற்றும் பிராந்தியத்தில் ஒரு புரட்சி என்பது, வட ஆபிரிக்க தொழிலாள வர்க்கம் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியப்பட்ட போராட்டத்தின் மூலம்தான் அபிவிருத்தியடைய முடியும். சைய்டன் கடத்தல், லிபியாவில் வாஷிங்டனின் பொறுப்பற்ற கொள்கைகளில் உள்ள முரண்பாடுகளில் இருந்து நேரடியாக வந்துள்ளது. லிபியாவின் கடாபிக்குப் பிந்தைய உறுதியற்ற ஆட்சி ஆபத்தான முறையில், சைய்டன் கீழ் இருக்கும் மத்திய அரசாங்கத்துக்கும், பல பழங்குடி இஸ்லாமியவாத போராளிகளுக்கும் இடையே சமபலநிலையை பேண செயல்படுகிறது; இவற்றில் பல அவற்றின் அல்குவேடா தொடர்பிற்காக அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு உட்படலாம் என்ற கவலையில் உள்ளன. இச்சக்திகள் அதிகரித்துவரும் மக்கள் எதிர்ப்புக்கள் மத்தியில் பெருகிய முறையில் ஒன்றையொன்று தாக்குகின்றன மற்றும் பல்வேறு போராளிக்குழுக்கள், இஸ்லாமியப் பிரிவுகள் மத்தியில் பிராந்திய அழுத்தங்களை அதிகரிக்கின்றன. கடந்த ஆண்டில் லிபியா, முக்கிய எண்ணெய்த்துறையில் பல வேலைநிறுத்தங்களின் எழுச்சியைக் கண்டுள்ளது; வேலையின்மை, பொதுத்துறை நிலை, லிபியாவின் பேரழிவிற்கு உட்பட்ட உள்கட்டுமானம் குறித்த எதிர்ப்புக்களும் வந்துள்ளன. லிபியாவின் உள்ளூர் போராளிகள் மற்றும் பழங்குடி உயரடுக்குகளுக்கு இடையே வெடித்துள்ள மோதல்கள் நாட்டை பிளவுபடுத்தும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளன. கடந்த மாதம் லிபியாவின் தெற்கு சகாராப்பகுதியில் உள்ள பழங்குடி ஷேக்குகள் குழு ஒன்று அவர்களுடைய மாநிலம் திரிப்போலியில் இருந்து முறித்துக் கொள்ளும் என அறிவித்தது. கிழக்கே, பெங்காசி நகரத்திலுள்ள போராளிக்குழுக்கள் உள்ளூர்க்குழுவை நிறுவி தன்னாட்சி கோரியுள்ளனர். கிழக்கு எண்ணெய் துறைமுகங்களை கைப்பற்றியுள்ளதாக கூறும் எண்ணெய் பாதுகாப்புப் பிரிவின் முன்னாள் தலைவர் இப்ராஹிம் அலப்-ஜத்ரன்: “அரசாங்கமும் காங்கிரசும் லிபியாவின் செல்வத்தைச் சுரண்டி தங்கள் செயல்பட்டியலுக்கு பயன்படுத்துகின்றன” என குற்றஞ்சாட்டினார். ஆரம்பத்தில் 2011 லிபியப் போரை புகழ்ந்த பெருநிறுவனங்களின் செய்தி ஊடகம், இப்பொழுது பெருகிய முறையில் லிபிய வருங்காலம் பற்றி அவநம்பிக்கையுடன் உள்ளன. அதன் எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றிற்கு 1.5 மில்லியன் பீப்பாய்கள் என்று போருக்கு முந்தைய காலத்தில் இருந்த உற்பத்தியில் பத்தில் ஒரு பங்கைத்தான் இப்பொழுது கொண்டுள்ளது. “இன்று பேரழிவில் உள்ள லிபியா” என்னும் தலைப்பில் ஓர் தலையங்கத்தில் லண்டனின் பைனான்சியல் டைம்ஸ் எழுதியது: “மேற்கு கொடுக்கும் பணத்தில் போரில் ஈடுபடும் போராளிக்குழுக்களை விலைக்கு வாங்கத்தான் பிரதம மந்திரி தயாராக உள்ளாரே ஒழிய, இந்த உதவித்தொகைகளை நெம்புகோலாகப் பயன்படுத்தி அவர்களை அரசாங்க பட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரமுடியவில்லை. அவர் நல்ல பிடியை கொள்ளாவிட்டால், லிபியா தோற்றுவிட்ட நாடுகளின் பட்டியலில் சேர்கிறது எனத்தான் மேற்கு உலகம் பார்க்கும்.” எல்லாவற்றிற்கும் மேலாக அமெரிக்கா மற்றும் நேட்டோ ஏகாதிபத்தியத்திய சக்திகளுக்கு லிபியாவில் எதிர்ப்பு பெருகியுள்ளது. நியூ யோர்க் டைம்ஸ் பெரும்பாலான லிபியர்கள் “வாஷிங்டனையும் மேற்கையும் மேலாதிக்க விழைவுகள் கொண்டவை எனச் சந்தேகிக்கின்றனர். அல்குவேடாவை எதிர்த்து பயங்கரவாதத்தை அவர்கள் கண்டித்தாலும், லிபியர்கள் அரசியல் நிலைப்பாடு கடந்து லிபிய மண்ணில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைக்கு எதிர்ப்புக் காட்டுவதுடன், லிபியக் குடிமக்களை அமெரிக்க நீதிமன்றங்களில் விசாரணைக்கு அனுப்புவதையும் எதிர்க்கின்றனர்.” பல அல்குவேடா பிணைப்புடைய போராளிக்குழுக்களின் தலைவர்கள் 2011 போரில் வாஷிங்டனால் ஆதரிக்கப்பட்டவர்கள் உட்பட லிபியக் குடிமக்கள், அல்-லிபிக்குப் (al-Liby) பின் அமெரிக்க சுற்றிவளைப்புக்கு தாங்கள் அடுத்த இலக்காக இருக்கலாம் என அஞ்சுகின்றனர். அக்டோபர் 5 நடந்த சோதனை ஒரு போராளிக்குழு தலைவரான அஹ்மத் அபு கட்டாலாவைக் கடத்தும் சோதனைக்கு முன்னோடி என்று பரந்த முறையில் வதந்தி உள்ளது; அவரைத்தான் வாஷிங்டன் செப்டம்பர் 11, 2012 அன்று பெங்காசியில் நடந்த அமெரிகத் தூதரக மற்றும் CIA அலுவலகங்கள் மீதான தாக்குதலுக்குப் பொறுப்பு என்று கருதுகின்றனர்; அதில் தூதர் ஜே. கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸும் முன்று மற்ற அமெரிக்கர்களும் கொல்லப்பட்டனர். |
|
|