தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The UAW and “21st Century industrial relations” UAW வும் “21ம் நூற்றாண்டு தொழில்துறை உறவுகளும்”
Jerry White Use this version to print| Send feedback பெருமந்தநிலைக்குப்பின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு ஐந்து ஆண்டுகளுக்குப் பின், அமெரிக்கத் தொழிலாளர்கள், உலகிலுள்ள மற்ற தொழிலாளர்களை போலவே, முன்னொருபோதுமில்லாத சமூகத்துன்பத்தையும் சுரண்டல் நிலைமைகளை முகங்கொடுக்கின்றனர். தொழிலாளருக்கு செல்லும் தேசிய வருமானத்தின் பங்கு இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிகவும் குறைந்த அளவிற்கு சரிந்துள்ளது. உற்பத்தித்திறன் 2000ல் இருந்து 25% உயர்ந்துள்ளபோது உண்மையான ஊதியங்கள் 6% குறைந்துள்ளன. இது 1920களுக்கு பின் தீவிர ஐந்து ஆண்டுகால சரிவாகும். இதற்கிடையில் பெருநிறுவன இலாபங்கள் போருக்குப் பிந்தைய காலத்தில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மிக அதிகமான விகிதத்தை கொண்டுள்ளது. பங்குச் சந்தை மிக உயர்ந்த மட்டத்தை அடைந்துள்ளபோது, செல்வக் கொழிப்புடைய உயர்மட்ட 1%த்தினர் மீட்பு என அழைக்கப்படுவது ஆரம்பித்ததிலிருந்து அனைத்து வருமான ஆதாயங்களிலும் 95% இனை பெற்றுள்ளனர். இவற்றை முகங்கொடுக்கையில் அமெரிக்க தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் AFL-CIO உம் ஏனைய பிற தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களை பாதுகாக்க ஒரு தனி வெகுஜன எதிர்ப்பையோ அல்லது தொழிற்சங்க நடவடிக்கைக்குக்கூட ஒழுங்கு செய்யவில்லை. மாறாக தொழிற்சங்கங்கள் பெருநிறுவன அமெரிக்கா மற்றும் ஒபாமா நிர்வாகத்தின் செலவைக் குறைக்கும் உந்துதலுக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளன. தொழிற்சங்கங்களை நடத்தும் மிக அதிக ஊதியம் பெறும் நிர்வாகிகளின் பார்வை ஐக்கிய கார்த் தொழிலாளர்களின் சங்கத்தின் தலைவர் பொப் கிங் உடைய கருத்துக்களில் சுருக்கமாக வந்துள்ளது; இவை கடந்த வாரம் Detroit News இல் “UAW தலைவர் கிங், தொழிற்சங்கங்களை கார்த்தயாரிப்பாளர்களின் எதிரியாக அல்லாது நட்பு அமைப்புக்களாகத்தான் ஒன்றுபடுத்தப் பார்க்கிறார்” என்ற தலைப்பில் வெளிவந்தது. “உலகப் பொருளாதாரத்தையும் மற்றும் நிறுவனங்கள் மீது போட்டி அழுத்தங்களும் இருப்பதை மக்கள் அறிந்து கொள்வது உண்மையில் முக்கியம்” என்று கிங் செய்தித்தாளிடம் கூறினார். “உலகப் பொருளாதார நிலைமையில் ஒரு மோதல் உறவை வைத்துருப்பது நம் உறுப்பினர்களுக்கு பாதகமானது... நிறுவனங்கள் தங்கள் வணிகங்களில் வளர்வதற்கு உதவ வேண்டும், அவை இன்னும் இலாபம் பெற உதவ வேண்டும்―அவை அனைத்தும் நம் உறுப்பினர்களுக்கு உதவும்.” கிங்கிற்கும் பிற UAW அதிகாரத்துவத்தினருக்கும் நிறுவனங்கள் இலாபம் அடைய உதவியதற்காக பெரும் வெகுமதிகளை உறுதியாக கொடுத்துள்ளன. இவர்கள் ஒரு தொழில்துறை பொலிஸ் படை என்று வரையறுக்கக்கூடிய ஒன்றை நடத்தி வருவதில் நல்ல இலாபம் பெற்றுள்ளனர். அத்தகைய நலன்கள் ஏதும் கார்த்துறைத் தொழிலாளர்களுக்கு கிடைக்கில்லை. அவர்கள் இப்பொழுது பல வகைகளில் போர்ட் முதன்முதலில் இணைப்புவழியை -assembly line- தன் ஆலைகளில் 100 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்திய நிலைகளில்தான் உழன்று கொண்டிருக்கின்றனர். UAW, கார்த்தயாரிப்பாளர்கள் மற்றும் ஒபாமா நிர்வாகத்தினரிடையே செதுக்கப்பட்ட 2009 உடன்பாட்டின்படி, GM, Chrysler ஆகியவற்றை மறு கட்டமைக்க, எட்டுமணி நேர வேலைநாள் அகற்றப்பட்டுவிட்டது, தொழிலாளர்கள் வாடிக்கையாக 10-12 மணி நேரம் கூடுதல் பணிக்கு ஊதியம் இன்றி உழைக்கின்றனர். புதிய தொழிலாளர்களுக்கு 50% ஊதியக் குறைப்பு என்பதையும் ஒப்புக்கொண்ட நிலையில், ஆயிரக்கணக்கான இளம் தொழிலாளர்கள் இப்பொழுது ஐந்து டாலர் ஊதியம் என்ற உண்மை ஊதிய நிலை, அவர்களுடைய முப்பாட்டனார்கள் 1913ல் போர்டின் மாடல் T ஆலையில் வாங்கிய ஊதிய அளவைத்தான் பெற்கின்றனர். வேலைப்பாதுகாப்பு ஏதும் இல்லாததுடன், விற்பனை குறைந்தால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் மீண்டும் தெருக்களில் தள்ளப்படுவர். UAW கையெழுத்திட்டுள்ள அழுகிய ஒப்பந்தங்கள் கூட எந்த நேரமும் தொழிற்சங்க உறுப்பினர்களின் முதுகின் பின்னால் திரும்பபெறமுடியும். நியூசிடம் கிங் கூறியபடி, “இன்றைய உலகில் ஒப்பந்தங்களுக்கு இடையே காத்திருத்தல், என்பது உங்களை இழந்துவிட்ட வாய்ப்புக்களில் தள்ளிவிட்டு”, இன்னும் அதிக செலவுக் குறைப்புக்கள்தான் வரும். டெட்ரோயின் கார்த்தயாரிப்பாளர்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளில் 27% தொழிலாளர் செலவுகளைக் குறைத்த வகையில UAW உயர்மட்ட கார்த்தயாரிப்பு நிறுவன மற்றும் வெள்ளை மாளிகை அதிகாரிகளுடைய புகழ்ச்சியை பெற்றுள்ளனர். நியூஸ், ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிர்வாக அதிகாரி ஆக்கெர்சன் உடைய பாராட்டுக்களை மேற்கோளிட்டுள்ளது. அவர் ஒவ்வொரு மாதமும் கிங்குடன் விருந்து பகிர்ந்து, “பெரிய மற்றும் சிறிய பிரச்சினைகளை விவாதிப்பதுடன்”, அவரை GM உடைய இயக்குனர் குழுவில் பேசுவதற்கு அழைக்கிறார். “எங்கள் உறவு ஆக்கப்பூர்வ ஈடுபாடுள்ளது -- ஒரு வணிக உறவு, சொந்த அளவில் நல்ல நட்பாக வந்துவிட்டது என்பதை அடித்தளத்தில் கொண்டுள்ளது. இது 21ம் நூற்றாண்டில் தொழில்துறை உறவுகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு அச்சுப்பதிவு ஆகும்.” என்றார் ஆக்கெர்சன். இதன் உறுப்பினர் எண்ணிக்கை 1979ல் 1.53 மில்லியன் என்பதில் இருந்து இன்று 400,000 என சரிந்துள்ளதை கண்டுள்ள UAW இப்பொழுது ஜேர்மனிய கார்த்தயாரிப்பு நிறுவனம் Vokswagen இல் தமக்கு புதிதான கட்டணம் செலுத்தும் உறுப்பினர்களை தெற்கு அமெரிக்க மாநிலங்களில் இணைத்துக்கொள்வதற்கு முற்படுகிறது; அங்கு UAW அதன் நீண்டகால காட்டிக் கொடுப்புக்களினால் ஐரோப்பிய, ஆசியர்களுக்கு சொந்தமான ஆலைகளில் தொழிற்சங்க அங்கீகாரத்திற்கு தேவையான ஆதரவை அடைய முடியவில்லை. VW இடம் UAW டெனெசீயில் சட்டநூகா ஆலையில் அதன் “தொழிற்சாலை தொழிலாளர் குழுவை” நிறுவ முறையீடு செய்துள்ளது; இது “இணைந்து தீர்மானித்தல்” திட்டங்கள் என்று IG Metall தொழிற்சங்கம் ஜேர்மனியில் VW ஆலைகளில் செயல்படுத்தியிருக்கும் வழிவகையாகும். இத்தகைய அமைப்புக்கள் நிறுவனங்களின் தொழிற்சங்கங்களாகும் – எனவே சட்டவிரோதமானவை. அமெரிக்க தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமெரிக்க அடித்தளத்தை உடைய தொழிற்சங்கம், பெயரளவில் நிறுவனத்தில் இருந்து சுதந்திரமாக இல்லாவிட்டால் அப்படித்தான் கருதப்படும். UAW அத்தகைய குழுவை VW நிறுவதல் அதற்கு அங்கீகாரம் பெற உதவும் என்று நம்புகிறது. அத்துடன் சட்டநூகா தொழிலாளர்கள் வாக்குரிமை பெறாமலேயே மில்லியன் கணக்கில் சந்தா கட்டணங்களையும் பெற முடியும். UAW, நிர்வாகத்திற்கு ஒரு தொழில்துறை பொலிஸ் படையாக மாறியிருப்பது பல தசாப்தங்களான இழிசரிவின் உச்சக்கட்டமாகும். இது 1940, 1950 களில் UAW அதிகாரத்துவம் நடத்திய கம்யூனிச எதிர்ப்பு வேட்டையில் ஆரம்பித்தது. அப்படியான களையெடுப்புக்கள் 1930களில் UAWஇனை நிறுவுவதற்கு காரணமாக இருந்த வெகுஜனப் போராட்டங்களை நடத்திய சோசலிச முன்னோடிகளை வெளியேற்றியது. முதலாளித்துவத்தையும் பொருளாதார தேசியவாதத்தையும் பாதுகாப்பதன் அடித்தளத்தில் ஜனநாயகக் கட்சியின் ஆதரவழித்தலால் ஒருங்கிணைக்கப்பட்ட நிலையில் UAW மற்றும் பிற தொழிற்சங்கங்கள் அமெரிக்க முதலாளித்துவம் உலக நிலையில் வரலாற்றுத்தன்மை வாய்ந்த சரிவைக் கண்டவுடன், ஆளும் உயரடுக்கு அதன் போருக்குப் பிந்தைய கொள்கையான வர்க்க சமரசத்தைக் கைவிட்டு வர்க்கப் போருக்கு மாறியபின், 1980களில் தீவிரமாக வலதிற்குத் திரும்பின. அமெரிக்க “போட்டித்தன்மை” மற்றும் பெருநிறுவன இலாபங்களை உயர்த்துதல் என்னும் பெயரில் UAW இன்னும் பிற தொழிற்சங்கங்கள் கடந்த மூன்றரை தசாப்த வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு வழிவகையையும் அடக்குவதில்தான் கழித்துள்ளன. இதே வழிவகைதான் உலகில் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெற்றுள்ளது. சமீபத்திய IG Metall தொழிற்சங்கம் GM Opel உடைய ஜேர்மன் போஹும் ஆலை மற்றும் பிற ஐரோப்பியக் கார் ஆலைகள் மூடப்பட்டதற்கு வந்த எதிர்ப்புக்களை அடக்கியதுபோல். சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற பல போலி இடது குழுக்கள் கூறுவதைப்போல் தொழிற்சங்கங்கள் “தொழிலாளர்கள் அமைப்புக்கள்” அல்ல. இவை, தொழிலாள வர்க்கத்தின் மீதான தொழிற்சங்கங்களின் அதிகாரத்திற்கு சவால் ஏதும் அனுமதிக்கப்பட முடியாது என வலியுறுத்துகின்றன. தொழிற்சங்கங்கள் தொழிலாள வர்க்கத்திற்காக பேசவில்லை மாறாக தொழிற்சங்க நிர்வாகிகள் என்னும் வசதி படைத்த அடுக்கிற்குத்தான் பேசுகின்றன. அவர்களுடைய மத்தியதர மேல்மட்ட வருமானங்களும் வாழ்க்கை வசதிகளும் பெருகிய முறையில் அவர்கள் பிரதிநிதித்துவபடுத்துவதாக கூறப்படும் தொழிலாளர்களை அதிகம் சுரண்டுவதின் மூலம்தான் தொடரும். டெட்ரோயிட்டில் தொழிலாளர்களின் மீது நடக்கும் தாக்குதல்களுக்கு நடுவே – ஒரு தேர்ந்தெடுக்கப்படாத நிர்வாகி திவால் நீதிமன்றங்களை பயன்படுத்தி வேலைகள் மற்றும் தொழிலாளர்களின் ஓய்வு ஊதியங்களை அகற்றுகிறார், பின் டெட்ரோயின் கலைக்கூடம் (DIA) உட்பட பொதுச் சொந்த சொத்துக்களை விற்கிறார். கிங்கும் பிற UAW நிர்வாகிகளும் கிறைஸ்லர்-பியட் நிர்வாகத்துடன் பங்குகளில் பில்லியன் கணக்கான டாலர்கள் மதிப்பிற்கு பேரம் பேசுகின்றனர். இவை UAW கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் ஓய்வூதியம் பெறுவோர் சுகாதார பாதுகாப்பு அறக்கட்டளை நிதிக்குச் சொந்தமானது. IPO வில் அடுத்த ஆண்டு பங்குகள் விற்பனை செய்யப்படுவது கிங்கையும் அவரைப் போன்றோரையும் இன்னும் பெரும் செல்வந்தர்களாக ஆக்கும். சோசலிச சமத்துவக் கட்சி, கடந்த வாரம் டெட்ரோயின் திவாலுக்கு தொழிலாள வர்க்க எதிர்ப்பின் முதல் வெளிப்பாடான DIAகலைக்கூடத்தின் கலைப்படைப்புக்கள் விற்கப்படுவதை எதிர்த்து நடத்திய ஆர்ப்பாட்டம் முழுத் தொழிலாள வர்க்கத்திற்கும் முன்னேற்றப்பாதையை சுட்டிக்காட்டுகிறது. உண்மையான தொழிலாளர் இயக்கத்தை கட்டமைப்பதற்கு தொழிலாள வர்க்கம் UAW இற்கும் பிற தொழிலாளர் விரோத அமைப்பிற்கும் எதிராக எழுச்சியுறுவதுடன், ஜனநாயகக் கட்சியுடன் அரசியல்ரீதியாக முறித்துக் கொண்டு அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சக்தி வாய்ந்த சோசலிச மரபுகளைப் புதுப்பிக்க வேண்டும். |
|
|