சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா

China-US rivalry simmers at APEC summit

APEC உச்சிமாநாட்டில் சீன-அமெரிக்கப் போட்டி கொதிக்கிறது

By Peter Symonds 
9 October 2013

Use this version to printSend feedback

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) உச்சிமாநாடு, நேற்று பாலியில் முடிவுற்றது, அதிகம் மறைவில்லாத வகையில் அமெரிக்கா மற்றும் சீனாப் போட்டியின் மேலாதிக்கத்தை கொண்டிருந்ததுடன், அவைகளின் போட்டியிடும் பொருளாதார, வணிக செயற்பட்டியல்களின் மேலாதிக்கத்தையும் கொண்டிருந்தது.

இத்தீவிரப் போட்டியானது மோசமாகும் உலகப் பொருளாதார முறிவினால் உந்துதல் பெற்றுள்ளது. உச்சிமாநாட்டின் கூட்டறிக்கை அறிவிப்பது போல்: “உலக வளர்ச்சி மிகவும் நலிந்துள்ளது, இடர்கள் இன்னும் கீழ்நோக்கித்தான் இழுக்கின்றன, உலக வணிகம் நலிவுற்றுள்ளது, பொருளாதாரக் கண்ணோட்டம் வளர்ச்சி மெதுவாகத்தான் இருக்கும், விரும்புவதைவிட குறைவாக சமநிலையாக்கப்பட்டிருக்கும் என்று தெரிவிக்கிறது.”

உச்சிமாநாட்டை ஒட்டிய அச்சுறுத்தலில் காங்கிரஸ் அராசங்கக் கடன் வரம்பை உயர்த்த தவறினால், அமெரிக்க செயலிழப்பு என்பதும் இருந்தது. இது உலக நிதி மற்றும் வணிகத்திற்கு பேரழிவு உட்குறிப்புக்களைக் கொண்டது. சீன துணை நிதி மந்திரி ஜு குவாங்யாவோ நேற்று அமெரிக்கா நம்பகமான நடவடிக்கைகளை கடன் வரம்பு குறித்த பூசலைத் தீர்க்க உரிய நேரத்தில் எடுக்க வேண்டும், ஒரு செயலிழப்புத் தவறு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று எச்சரித்தார்.

APEC கூட்டறிக்கை, தோல்வியடைந்த டோகா சுற்று ஆபத்தில் இருந்து பன்முக வணிகப் பேச்சுக்களை புதுப்பிக்க ஒரு 11 மணிநேர முயற்சி  செய்யப்பட்டது. ஆனால் உச்சி மாநாட்டுத் தலைவர்களின் குவிப்பு தங்கள் வணிகத்தை இருதரப்பு, பிராந்திய உடன்பாடுகளின் மூலம் உயர்த்துதல், போட்டியாளர்கள் இழப்பில் என்றுதான் இருந்தது.

அமெரிக்க ஜனாதிபதி, காங்கிரசுடன் அரசாங்க மூடல் குறித்த மோதலை ஒட்டி APEC உச்சிமாநாட்டிற்கு வரமுடியாமல்போனது சீனாவுடனான ஆழ்ந்த போட்டியை அடிக்கோடிட்டுக் காட்டியது. ஒபாமா, இக்கூட்டத்தை அமெரிக்க மையமாகக் கொண்ட பசிபிக் கடந்த பங்காளித்தனத்தை (Trans Pacific Partnership -TPP) உறுதிப்படுத்த முற்பட்டது; இது ஒரு வணிக முகாம், சீனாவின் ஆசியா மற்றும் சர்வதேச அளவில் பெருகும் பொருளாதாரச் செல்வாக்கை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கம் கொண்டது.

TPP ஐ வாஷிங்டன், அதனுடைய ஆசிய வணிகச் செயற்பட்டியலை செயல்படுத்தும் வழிவகையாக வளர்க்கிறது. இதில் அறிவுசார் சொத்துரிமைகள், அரசிற்குச் சொந்தமான நிறுவனங்களை வலிமை இழக்கச்செய்தல், அரசாங்க ஒப்பந்தங்களை வெளிநாட்டுப் போட்டிக்குத் திறந்துவிடல் ஆகியவைகள் அடங்கும். இந்த நிபந்தனைகள் அனைத்தும் சீனாவிற்கு எதிரானவை, அது TPP குழுவில் ஒரு பகுதியாக இல்லை.

ஆனால் வாஷிங்டனின் கடுமையான வணிகக் கோரிக்கைகள் மற்ற TPP பங்காளிகளின் எதிர்ப்பையும் தோற்றுவித்துள்ளது. இதில் அமெரிக்காவின் நெருக்கிய நாடான ஜப்பான் போன்றவையும் அடங்கும். அது தன்னுடைய விவசாயம், காப்பீடு, கார்த்துறைகள் போன்றவற்றை வெளிநாட்டுப் போட்டியாளர்களுக்கு திறந்துவிடத் தயக்கம் காட்டுகிறது. ஒபாமா வராத நிலையில், அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியினால் நேற்று நடைபெற்ற TPP பேச்சுக்களில் கணிசமான முன்னேற்றத்தை அடைய முடியவில்லை.

Business Spectator இல் எழுதிய ஆசிய வர்ணனையாளர் பீட்டர் டிரைஸ்டேல் சுட்டிக்காட்டுவதாவது: உண்மையான பிரச்சினை ஆசியாவிற்கு ஒபாமா வரவில்லை என்பது அல்ல; அமெரிக்க ஆட்சியின் நிலைப்பாடு குறித்துத்தான் பேசப்படுகிறது. நடைமுறையில் இருக்கும் அரசாங்கத்தின் அஸ்திவாரங்கள் உள்நாட்டில் சமரசத்திற்கு உட்பட்டுவிட்டன என்றால், இப்பொழுது வெளிப்படையாக இருப்பது போல், உலகெங்கிலும் அதன் உறுதிப்பாடுகளின் நம்பகத்தன்மை இயல்பாகவே வினாவிற்கு உட்படும். வாஷிங்டனில் நடப்பவை TPP ஐ இன்னும் கூடுதலான முறையில் இறந்த பூனைபோல் காட்டுகிறது; காங்கிரசில் எவரும் இதை விரைவில் தீர்க்கவும் விரும்பமாட்டார்கள்.

APEC கூட்டத்தையொட்டி, TPP க்கு அமெரிக்க அழுத்தம் என்பது கூட்டத்தை நடத்தும் நாடான இந்தோனேசியாவிற்கு எரிச்சலைக் கொடுத்துள்ளது; அது குழுவில் பங்கு பெறவில்லை. இந்தோனேசியாவின் வணிகக் குவிப்பு எப்பொழுதும் தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கத்தில்தான் (ASEAN) இருந்தது; அது அதன் தடையற்ற வணிக உடன்பாடுகளை சீனா இன்னும் மற்ற நாடுகளுடன் கொண்டுள்ளது.

நேற்றைய பிற்பகல் TPP கூட்டம் உத்தியோகபூர்வ அரங்கத்திற்கு வெளியே ஒரு ஹொட்டலில் நடந்தது. TPP பற்றித் தகவல் கொடுப்பது APEC ஐப் பின்னுக்குத் தள்ளிவிடுவதை நாங்கள் விரும்பவில்லை என்பது குறைந்தப்பட்சம் பல காரணங்களில் ஒன்றாகும் என இந்தோனேசிய அரசாங்க அதிகாரி AFP இடம் கூறினார்.

சீனாவின் புதிய தலைமை, ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் பிரதம மந்திரி லி கெக்கியாங் கீழ், அதன் தனி இராஜதந்திரத் தாக்குதலை ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில் பெய்ஜிங்கின் மதிப்பைக் குறைக்கும் நடவடிக்கைகளாக கடந்த நான்கு ஆண்டுக் கால ஆக்கிரோஷ முயற்சிகளை எதிர்கொள்ள நடத்துகிறது. APEC கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன், ஜி இந்தோனேசியா மற்றும் மலேசியாவிற்கு அரசாங்க வருகை மேற்கோண்டு, அங்கு பல பொருளாதார உடன்பாடுகளிலும் முதலீட்டு உடன்பாடுகளிலும் கையெழுத்திட்டார். பிராந்தியத்தில் இருக்கும் மற்ற நாடுகளைப் போல், இந்தோனேசியாவும் மலேசியாவும் சீனாவுடனான தங்கள் பொருளாதார நம்பிக்கையையும் அமெரிக்காவுடனான மூலோபாய உறவுகளையும் சமநிலையில் வைக்க முயல்கின்றன.

ஜாகர்த்தா சீனாவுடன் உறவுகளை வளர்த்திருப்பது ஜி இந்தோனேசியப் பாராளுமன்றத்தில் உரையாற்றிய முதல் வெளிநாட்டுத் தலைவர் என்ற உண்மையில் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பெய்ஜிங்கின் திட்டங்களான 50 பில்லியன் டாலர்கள் முதலீட்டு வங்கியை ஆசியாவில் உள்கட்டுமான திட்டங்களுக்கு நிதியளிக்க நிறுவுதலை ஜி அறிவித்தார். ஒரு 20 பில்லியன் டாலர்கள் நாணய மாற்று உடன்பாட்டையும் அவர் இந்தோனேசியாவுடன் பிற திட்டங்களுடன் கையெழுத்திட்டார். கோலாலம்பூரில் ஜி இருதரப்பு வணிகம் 2017 ஐ ஒட்டி 160 பில்லியன் டாலர்கள் என விரிவாக்குவதற்கு இலக்கு வைத்தார். இரு நாடுகளுக்கும் இடையே வணிகம் இந்த ஆண்டு 100 பில்லியன் டாலர்களை அடையும். இது தென்கொரியா, ஜப்பானை அடுத்து மலேசியாவை சீனாவுடன் அதிக வணிகம் நடத்தும் மூன்றாவது நாடாக மாற்றும்.

APEC உச்சிமாநாட்டில், ஜி ஆசியான்-சீன தடையற்ற விரிவாக்கம் செய்யப்பட்ட வணிக உடன்பாட்டிற்கு, கடல்சார்ந்த பட்டுப் பாதையின் ஒரு பகுதியாக அழைப்புவிடுத்தார். சீனா ஆசிய பசிபிக்கிலிருந்து தனித்து வளரமுடியாது, ஆசிய பசிபிக் சீனா இல்லாமல் செழிக்காது என்று அவர் அறிவித்தார். அமெரிக்கத் தலைமையிலான TPP ஐ உட்குறிப்பாக குறைகூறும் வகையில், அவர் APEC வணிக அரங்கில் கூறினார்: சீனா ஒரு பசிபிக் கடந்த பிராந்திய வடிவமைப்பை, அனைத்துத் தரப்பினருக்கும் நலன்களை தருவதை கட்டமைக்க உறுதி கொடுக்கிறது.

ஜியின் உரையை பற்றித் தகவல் கொடுக்கையில் அரசிற்கு சொந்தமான சைனா டெய்லி அப்பட்டமாகக் கூறியது: பசிபிக் கடந்த பங்காளித்துவம், இரகசிய பேச்சுக்கள், மிக உயர்ந்த தடையற்ற வணிகத் தரங்களை வெறும் குறைந்த காப்புவரிகளுக்கு அப்பால் கொண்டது, பரந்த முறையில் அமெரிக்கா ஆசிய பசிபிக் முறையில் மேலாதிக்கம் செலுத்த புதிய நடவடிக்கை எனக் கருதப்படுகிறது.

அதே செய்தித்தாளில் வந்த கருத்து ஒன்றில் வாங் யுஷேங், சீனாவின் முன்னாள் APEC பிரதிநிதி அறிவித்தார்: அமெரிக்காவின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அதன் மதிப்பு மற்றும் சந்தைத் தரங்களை பிற APEC பொருளாதாரங்களின் மீது TTP அரங்கில் நுழைவதற்குச் சுமத்த வேண்டும் என்பதாகும்; இதை தன் நலன்களுக்கு உதவத்தான் அது தோற்றுவித்துள்ளது. இது கொடுமையானது.

தென்கிழக்கு ஆசிய பயணத்தை ஒபாமா இரத்து செய்ததின் பாதிப்பு அமெரிக்காவில் கவலைகளைத் தெளிவாக எழுப்பியுள்ளது. சீனச் செய்தி ஊடகம் ஜியின் முக்கிய செயற்பாட்டை பெரிதும் பாராட்டி பேசுகிறது, அதேபோல் ஒபாமா இல்லாதது குறித்தும் என்ற தலைப்பில் வாஷிங்டன் போஸ்ட் தன்னுடைய நாடு அதன் அண்டை நாடுகளுக்கு வணிகப் பங்காளி என்னும் முறையில் இயங்கும் தன்மைக்கு அழுத்தம் கொடுக்க ஜி ஒரு வாய்ப்பாக கண்டார். சீனச் செய்தி ஊடகம் APEC உச்சிமாநாட்டில் அவர் பங்கு குறித்து பெருமை பேசிக்கொண்டது என்றும் கூறிப்பிட்டுள்ளது.

APEC உச்சிமாநாடு இன்றும் நாளையும் இரு நாட்கள் உயர்மட்டப் பேச்சுக்களுக்குப் பின் ப்ரூனேயில் தொடர்கிறது; அங்கு தலைவர்கள் ஆசியான் ஏற்பாடு செய்துள்ள கூட்டங்களில் கலந்து கொள்வர்; அதில் கிழக்கு ஆசிய உச்சிமாநாடும் உள்ளது. ஒபாமாவிற்குப் பதிலாக கெர்ரி பங்கு பெறுவார், பிரதமர் லியினால் சீனா பிரதிநிதித்துவப்படுத்தப்படும்.

ஒபாமா நிர்வாகம் முந்தைய கிழக்கு ஆசிய உச்சிமாநாடுகளை தென் சீனக்கடலில் சீனாவிற்கும் அதன் அண்டை நாடுகளுக்கும் இடையேயுள்ள கடலோரப் பகுதி மோதல்களை தூண்டிவிட பயன்படுத்தியது. இதில் பிலிப்பைன்சும் வியட்நாமும் அடங்கும். கடந்த ஆண்டு பிரச்சினையை குறைக்கும் முயற்சியில் பெய்ஜிங் பிராந்திய பேச்சுக்களில் ஈடுபட்டிருக்கையில், கெர்ரி ஐயத்திற்கு இடமின்றி பிரச்சினையை பயன்படுத்தி செய்தி ஊடகம் குறிப்பிட்டிருக்கும் சீனாவின் களிப்பான தாக்குதலை எதிர்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுவார்.