சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Air France to lay off 2,800 workers

ஏயர் பிரான்ஸ் 2,800 தொழிலாளர்களை வேலைநீக்கம் செய்யவுள்ளது

By Pierre Mabut
8 October 2013

Use this version to printSend feedback

செப்டம்பர் 18ம் திகதி, ஏயர் பிரான்ஸ்-KLM 2,800 வேலைகளை அகற்றுவதுடன், அதனுடைய “2015 மாற்று” மறுகட்டமைப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக என்பதையும் அறிவித்தது. இது 2012 இல் 5,600 வேலைகளை ஏயர் பிரான்சிலுள்ள மொத்த 69,553 வேலைகளிலிருந்து அகற்றியபின் வந்துள்ளது.

இவ்வேலை நீக்கங்கள், ஏயர் பிரான்ஸ்-KLM தொழிலாளர்கள் மீது “தன்விருப்ப வேலைநீக்கம்” என்று தொழிற்சங்கங்கள் உடன்பாட்டின்படி சுமத்தப்பட்டுள்ளன. அப்பொழுது முதல் ஊதியங்களும் தேக்கப்பட்டுள்ளன, விரைவான நீக்கங்கள் சுமத்தப்பட்டுள்ளன. தற்போதைய வேலை நீக்கங்கள் 1,800 தரையிலுள்ள ஊழியர்கள், 350 விமானிகள், 700 விமானப் பணிப்பெண்கள் மற்றும் மேற்பார்வையாளர்களை பாதிக்கும். பாரிஸ் பங்குச் சந்தையின் ஒப்புதலின் அடையாளமாக, நிறுவனத்தின் பங்கு மதிப்பு கிட்டத்தட்ட இரு மடங்காக, 2015 மாற்றும் திட்டம் தொடங்கியபின் அதிகரித்துள்ளது.

எயர் பிரான்சில் CFDT (பிரெஞ்சு ஜனநாயக தொழிலாளர் கூட்டமைப்பு) இன் முக்கிய தொழிற்சங்க அதிகாரத்துவவாதியான Béatrice Lestic மாற்றம் 2015 வெட்டுக்களை புத்திசாலித்தனமான வணிகத் திட்டம் என்று பாராட்டினார். “சிக்கன நடவடிக்கையின் ஒரு பகுதிக்கு நாங்கள் உடன்படுகிறோம்: ஆனால் இதையொட்டி, வளர்ச்சிக்கான நடவடிக்கைகள் இருக்க வேண்டும்... நிறுவனத்தின் வருங்காலத்திற்கு ஒரு நீண்ட காலத் திட்டம் இருக்கும் வரை, நாங்கள் தியாகங்கள் செய்யத் தயாராக உள்ளோம்.”

தற்போதைய வேலை இழப்புக்களுடன், நிறுவனம் அதனுடைய கடனை மூன்று ஆண்டுகளில் 2 பில்லியன் யூரோக்கள் குறைக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது; வெறித்தனமாக, மாற்றம் 2015, இல்லாவிடின் நிறுவனம் “மடிந்துவிடும்” என்றும் வலியுறுத்துகிறது. இதனுடைய விமான சேவைகள் முழுமையாக இருக்கும், கோடைகால மாதங்களில் இலாபங்கள் இருக்கும் என்பதை ஒப்புக்கொள்ளும் நிறுவனம் “குளிர் காலத்தில் இழப்புக்களை” கொண்டுள்ளது என்று கூறுகிறது.

ஏயர் பிரான்ஸ் நிர்வாகியான Frédéric Gagey கருத்துப்படி, “நம் செயல்கள் பருவகாலத்தை பெரிதும் ஒட்டியவை என்பதால், குறைவான பயண காலத்திற்கு ஏற்ப சரி செய்வதில் எங்களுக்கு வளைந்து கொடுக்கும் தன்மை இல்லை.”

தொழிலாளர் தொகுப்பிற்கு இந்த அச்சுறுத்தும் செய்தி, அவர்கள் முழு வளைந்து கொடுக்கும் தன்மையை குறைந்த தொழிலாளர் தொகுப்பில் எதிர்பார்க்க வேண்டும் என்பதாகும். இதுதான் குறைந்த செலவில் நடத்தப்படும் விமான நிறுவனங்களில் வாடிக்கையாக உள்ளது. இலாபமின்றியுள்ள ஐரோப்பிய விமான சேவை இடங்கள் மூடப்படும், குளிர் காலத்தில் மாநில விமான நிலையங்களும் மூடப்படும்.

ஏயர் பிரான்ஸ் 2003ல் தனியார்மயமாக்கப்பட்டபின், ஏயர் பிரான்ஸும் டச்சு ஏயர்லைன்ஸான KLM ம் 2004ல் இணைந்தன. நலிவுற்றுள்ள இத்தாலிய ஏயர்லைன் அல்இத்தாலியாவிலும் இந்த நிறுவனம் 25% பங்குகளைக் கொண்டுள்ளது; அதற்கு பில்லியன் யூரோக்களுக்கு மேல் கடன் உண்டு, கடந்த ஆண்டு நிகர நஷ்டமாக 290 மில்லியன் யூரோக்களைக் கொண்டிருந்தது.

பிற முக்கிய ஐரோப்பாவிலுள்ள தேசிய விமான நிறுவனங்களைப் போலவே ஏயர் பிரான்ஸ்-KLM ம் சந்தைக்காக மிருகத்தனப் போட்டியில் ஈடுபட்டுள்ளது. 2008 ஆண்டு நிதிய நெருக்கடிக் காலத்தில் இருந்தே, பல்லாயிரக்கணக்கான வேலைகள் இழக்கப்பட்டுவிட்டன, 2012 ன் முதல் ஆறுமாத காலத்தில் மட்டும் ஐரோப்பிய ஏயர்லைன் தொழிலில் 20,000க்கும் மேற்பட்ட வேலைநீக்கங்கள் இருந்தன.

ஏயர்லைன்ஸ், ஊதியங்களையும் தொழிலாளர்களின் வேலை நிலைமையையும், குறைந்த தூர, குறைவூதிய நிறுவனங்களான Ryanair மற்றும் EasyJet  போல் குறைக்கும் உந்துதலில் உள்ளன; ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள் மற்றும் கட்டாரிடமிருந்து நெடுந்தொலைவு போட்டியையும் முகங்கொடுக்கின்றன. விமானிகள், மேற்பார்வையாளர்கள் ஆகியோரின் அதிக உற்பத்தித்திறன் மற்றும் விமானங்களுக்கு குறைந்த சுற்றுக் காலங்கள் ஆகியவை ஏயர் பிரான்ஸ்-KLM  உடைய சிறப்பு அடையாளங்கள் ஆகும்.  ஜேர்மனியின் Lufthansa பெரும்பாலான அதனுடைய ஐரோப்பிய பயணங்களை குறைந்த செலவுடைய துணை நிறுவனங்களுக்கு மாற்றுகிறது.

ஏயர் பிரான்ஸ்-KLM ல் இருக்கும் தொழிலாளர்கள் இதே போன்ற தாக்குதல்களையும் பணியிட தொழிலாளர் நெறித் தொகுப்பையும் Ryanair இல் இருப்பது போல் முகங்கொடுப்பர். அக்டோபர் 2ம் திகதி, பிந்தைய நிறுவனம் 200, 000 யூரோக்கள் அபராதம் செலுத்துமாறு Aix-en-Provence நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டது, சமூகப் பாதுகாப்பு முறை மற்றும் விமான ஊழியர் குழுக்களுக்கு சேத வகையில் 9 மில்லியன் யூரோக்களைக் கொடுக்குமாறு உத்தரவிடப்பட்டது; இது Marseille-Marignane விமான நிலையத்தில் பிரெஞ்சுத் தொழிலாளர் சட்டத்தை மீறியதற்கான தண்டனையாகும்.

Ryanair ஆனது Marseille-Marignane விமான நிலையத்தில் 127 தொழிலாளர்களை அயர்லாந்து ஒப்பந்தங்களின்படி வேலையில் இருத்தியது. 2007ல் இருந்து 2010க்குள் அது Aix-en-Provence இல் உள்ள உள்ளூர் வணிகக் குழுவில் பதிவு செய்துகொள்ளவில்லை. அங்கு அதற்கு செயற்பாட்டுத் தளம் உண்டு, அதன் ஊழியர்கள் அங்கேயே வசிக்கின்றனர். ஊழியர்களை தான் நடத்தியமுறையை பாதுகாக்கும் வகையில் Ryanair கூறியது: “அவர்கள் அயர்லாந்து விமானங்களில் பறக்கின்றனர், பல நாடுகளுக்குச் சென்றாலும்; அவர்கள் பிரான்சில் மற்ற இடங்களில் உழைப்பது போல் உழைக்கவில்லை.”

Ryanair  உடைய மேல்முறையீடு, தடையற்ற சந்தை ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகளில் இருக்கும் கூற்றான “நகர்ந்து செல்லும் வேலைக் குழுக்கள், அயர்லாந்து நிறுவனத்திற்கு வேலை செய்பவை, அயர்லாந்தில் பதிவு செய்யப்பட்ட விமானங்களில் வேலை செய்பவர்கள், தங்கள் வரிகளையும் சமூகப் பாதுகாப்பையும் அயர்லாந்தில் செலுத்த வேண்டும் எனத் தெளிவாக இசைவு கொடுக்கப்படுகிறது” என்பதை மேற்கோளிட்டுள்ளது.

2010ல் இதே போன்ற குற்றங்களுக்காக EastyJet 140,000 யூரோக்கள் அபராதம் விதிக்கப்பட்டு, வேலையின்மை நலன்கள் துறைக்கு 1.4 மில்லியன் யூரோக்கள் கொடுக்கவும் உத்தரவிடப்பட்டது. Cityjet, ஏயர் பிரான்சின் துணை நிறுவனமும் இதே போன்ற குற்றங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு ஒவ்வொரு தொழிலாளிக்கும் 2000 யூரோக்கள் சேதத் தொகை அளித்தது.

ஏயர்பிரான்ஸ்-KLM ல் தொழிலாளர் நலன்கள் மீதான சமீபத்திய தாக்குதல்களுக்கு தொழிற்சங்கத்தின் விடையிறுப்பு நிறுவனம் மற்றும் அரசாங்கத்துடன் இணைந்து ஒரு அழுகிய உடன்பாட்டை காண முயல்வதாகும். இதன் நோக்கம் வெட்டுக்களுக்கு எதிராக தொழிலாளர்களின் சுயாதீன போராட்டத்தை தடுப்பதாகும்—அது ஒன்றுதான் வேலைகளை பாதுகாக்கும்.

ஏயர் பிரான்சிலுள்ள ஸ்ராலினிச CGT ஆனது (தொழிலாளர் பொதுக் கூட்டமைப்பு) தொழில்துறை புதுப்பித்தல் மந்திரியான Arnaud Montebourg உடன் வட்ட மேசை மாநாட்டிற்கு முறையிட்டது. CGT மற்றும் Montebourg உம் அரசாங்கம் இடரில் இருக்கும் நிறுவனங்களை மீட்கும் முன்னோக்கு என்பதற்கு தொழிலாளர்களை காத்திருக்க வைப்பதில் நீண்ட கால அனுபவங்களை கொண்டவர்கள், அதன் பின் விரைவில் நிறுவனங்களை மூடிவிடுவர்.

இவ்வகையில் Montebourg, PSA உடைய ஓல்நே கார்த்தயாரிப்பு ஆலை மூடப்படுவதை தடுப்பதில் தன்னுடைய வெளிப்படை முயற்சி குறித்து, “தலையீடு குறித்து” பெருமை பேசியபின், இறுதியில் தன்னுடைய நிலையை மாற்றிக் கொண்டு ஆலை மூடல் “தவிர்க்க முடியாது” என்றார்.