சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

With US shutdown in fourth day, Wall Street signals concern on debt ceiling

அமெரிக்க அரசாங்க மூடல் நான்காம் நாள் தொடர்கையில், வோல் ஸ்ட்ரீட் கடன் வரம்பு குறித்த கவலைகளை தெரிவிக்கின்றது

By Bill Van Auken 
5 October 2013

Use this version to printSend feedback

வெள்ளியன்று அமெரிக்க அரசாங்கத்தின் பகுதியளவு மூடல்கள் நான்காம் நாள் முடிவுற்றிருக்கையில், 800,000 மத்திய அரசாங்க ஊழியர்களை தெருவில் நிறுத்திவைத்து, முக்கிய சமூக, சுற்றுச் சூழல் மற்றும் பிற பணிகள் முடங்கியுள்ள நிலையில், செவ்வாயன்று ஆரம்பித்த புதிய நிதி ஆண்டை அரசாங்கம் நடத்துவதற்குப் போதுமான நிதி ஒதுக்கீடுகளை கொடுக்கும் சட்டவரைவு குறித்த உடன்பாட்டை, அமெரிக்க காங்கிரஸ் விரைவில் அடைவதாகத் தோன்றவில்லை.

WIC போன்ற திட்டங்கள்தான் உடனடியான பாதிப்பிற்கு உட்பட்டுள்ளன. இத்திட்டங்கள் மழலைகள், குழந்தைகள் உட்பட கிட்டத்தட்ட 9 மில்லியன் குறைவூதிய வருமானம் உடையவர்களுக்கு மேலதிக உணவு உதவியை கொடுக்கின்றது. மேலும் அக்டோபர் 1ல் ஆரம்பிக்கும் சமூகத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த 20,000 குழந்தைகள் நலன்களை பெறும் திட்டங்களுக்கான மானிய உதவிகள் ஏற்கனவே மூடப்பட்டுவிடும் அச்சுறுத்தலை எதிர்நோக்குகின்றன.

இந்த மூடல், தனியார் துறைக்கும் பரவி வந்துள்ளது; சில பிரிவுகளில் மூடப்பட்ட அரசாங்கக் கட்டிடங்களில் வேலை செய்வதால் அல்லது அரசாங்க பரிசோதகர்கள் அவர்களின் வேலைக்கு ஒப்புதல் கொடுக்க வேண்டும் என்பதால் அரசாங்க ஒப்பந்தக்காரர்கள் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துள்ளனர். வெள்ளிக்கிழமை அன்று Martin Corp தான் தன் ஊழியர்களில் 3,000 பேரை நிறுத்தத் தொடங்குவதாகவும், மூடலின் ஒவ்வொரு கூடுதல் வாரத்திலும் எண்ணிக்கை அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளது. Boeing தானும் தொழிலாளர்களை அகற்றத் தொடங்க இருப்பதாகக் கூறியுள்ளது.

ஆயினும்கூட, வோல் ஸ்ட்ரீட் அரசாங்கத்தின் நிதிய நெருக்கடி குறித்துக் கவலைப்படவில்லை எனத் தோன்றுகிறது; Dow Jones Industrial Average  வெள்ளியன்று அரை சதவிகிதத்திற்கும் சற்று அதிகமாகி மூடியது. மூடலினால் பாரிய துன்பம் ஏற்பட்டுள்ளது குறித்து பொருட்படுத்தாத தன்மையில் வங்கிகளும் நிதிய நிறுவனங்களும் காங்கிரஸ் தலைவர்கள் கடன் வரம்பை உயர்த்துவது என்னும் தங்கள் பணியைச் செய்வர் என்றும் அக்டோபர் 17 கடன் வரம்பை அரசாங்கம் எட்டுவதற்குள் செலுத்துமதியின்மை அடையாது பார்த்துக் கொள்வர் என்றும் நம்புகின்றன.

வெள்ளியன்று மன்ற குடியரசுச் சிறுகுழுவின் மூடிய கதவுகளுக்குப் பின் நடந்த கூட்டம் ஒன்றில், மன்றத் தலைவர் ஜோன் போஹ்னர் தன்னுடைய கட்சியினரிடம் தான் அரசாங்கம் செலுத்துமதியின்மை அடைய அனுமதிக்கப் போவதில்லை என்று கூறினார். அதே நேரத்தில் கடன் வரம்பை உயர்த்துவது குறித்த விவாதம் மூடல் பிரச்சினையுடன் பிணையக்கூடும் என்றும், சமூகப் பாதுகாப்பு, Medicare, பெருநிறுவனங்கள், செல்வந்தர்களுக்கு வரிவிதிப்புக்களில் புதிய குறைப்புகளுடன் ஒன்றிணையலாம் என்றும் குறிப்புக் காட்டியுள்ளார்.

கடனைத் திருப்புவதில் நாம் தாமதம் செய்யக் கூடாது என நான் நம்புகிறேன் என்று போஹ்னர் நிருபர்களிடம் வெள்ளிச் சிறப்புக்குழுக் கூட்டத்திற்குப்பின் கூறினார். ஆனால் நாம் கொடுக்க வேண்டிய கடனுக்குத் தேவையான பணத்தை சேர்க்க வேண்டும் என்றால், நாம் செலவுப் பிரச்சினை, பொருளாதார வளர்ச்சியின்மை குறித்தும் ஏதேனும் செய்ய வேண்டும் என்றார்.

அரசாங்கத்தின் மூடல் குறைந்தப்பட்சம் இன்னும் ஒரு வாரம் தொடரக்கூடும் என்பது வெள்ளியன்று மன்ற ஜனநாயகக் கட்சியினரின் ஒரு தந்திரஉத்தி நடைமுறையால் எடுத்துக்காட்டப்பட்டது; அது குடியரசுத் தலைமை மன்றத்தை "தூய" செலவுச் சட்டவரைவு எனப்படுவதற்கு வாக்களிக்கும் நோக்கத்தைக் கொண்டது. அதாவது குடியரசுக் கட்சியின் கோரிக்கைகளுடன் பிணைந்திராதவை ஒபாமா பாதுகாப்பு என அழைக்கப்படும் சுகாதாரப் பாதுகாப்புச் சட்டத்தில் மாற்றங்கள் தேவை.

தள்ளிவிடும் மனு என அழைக்கப்படுவதை சுற்றி இருக்கும் ஜனநாயகக் கட்சியின் திட்டம், நவம்பர் 15 வரைதான் அரசாங்கத்திற்கு நிதி அளிக்கும் முடிவைக் கொண்டிருக்கும். இதற்கு மன்றத்தில் உள்ள 200 ஜனநாயகக் கட்சியினரும் ஒரு மனுவில் குறைந்தப்பட்சம் 18 குடியரசுக் கட்சி உறுப்பினர்களுடன் கையெழுத்திட வேண்டும். குடியரசுக் கட்சியினர் தங்கள் சொந்தக் கட்சியின் தலைமையை மீறுதல் வேண்டும். மன்றத்தில் ஜனநாயகக் கட்சியின் இரண்டாம் உயர்நிலையில் இருக்கும் மேரிலாந்தின் காங்கிரஸ் உறுப்பினர் தந்திரஉத்தியை வரவேற்கையில், "குடியரசுக் கட்சியின் அச்ச உணர்வுக் காரணம் உயர்ந்துள்ளது" என எச்சரித்து, பெரும்பான்மைக் கட்சி உறுப்பினர்கள் எந்த தூய செலவுச் சட்டவரைவிற்கும் ஆதரவு கொடுக்கக்கூடாது என்று "அச்சறுத்தப்படுகின்றனர்" என்றார்.

ஆனால் இந்த ஜனநாயகக் கட்சியின் மூலோபாயத்தின் முக்கிய கூறுபாடான தேவையான கையெழுத்து எண்ணிக்கையை இது பெறமுடிந்து மன்றத்தில் இயற்றினாலும்கூட, விரைவில் வாக்கெடுப்பு என்பது அக்டோபர் 14தான் நடத்தப்பட முடியும். இது மூடலை இன்னும் 10 நாட்களுக்கு விரிவாக்கும்.

அமெரிக்க நிதிய மூலதனம் வாஷிங்டனில் நடக்கும் அரசியல்மோதல் மீது கொண்டிருக்கும் மனப்பாங்கு BMO Capital Markets உடைய தலைமை முதலீட்டு மூலோபாயதாரர் பிரியன் பெல்ஸ்கியால் சுருக்கிக் கூறப்பட்டது; அவர் USA Today இடம் கூறினார்: "இந்த மூடல் ஒரு இரண்டாம் பட்சக் காட்சி. இது கடன் வரம்பு மற்றும் சாத்தியமான செலுத்தமதியின்மையுடன் தொடர்புடையது."

இந்த உணர்வு Brown Brothers Harriman Wealth Management தலைமை முதலீட்டு மூலோபாயதாரராக இருக்கும் ஸ்கொட் கிளெமான்ஸாலும் எதிரொலிக்கப்பட்டது. வெள்ளி அன்று CNBC இடம் அவர் கூறினார்: "இதைக் கூறுவது எனக்கு வேதனையாக உள்ளது, ஆனால் அரசாங்க மூடல் சந்தைகளைப் பாதிக்கும் வாய்ப்பே இல்லை. ஆனால் கடன் வரம்பு பற்றிய விவாதம் வேறு விடயம். கடைசி வரை உறுதியற்ற நிலையில்தான் நாம் இருப்போம்".

பில்லியனர் முதலீட்டாளர் வாரன் பஃபே, Fortune இதழிற்குக் கொடுத்த பேட்டியில், "அரசாங்கத்தின் கடன் வாங்கும் அதிகாரத்தை ஏனைய கொள்கைகளை மாற்றுவதற்கு அரசியல்வாதிகள் பயன்படுத்துவது தடுக்கப்பட வேண்டும். இது கண்டிப்பாக ஒரு ஆயுதம் என்னும் முறையில் தடைசெய்யப்பட வேண்டும். இது அணுகுண்டுகள் போல் இருக்க வேண்டும், அடிப்படையில் பயன்படுத்துவதே மிகக் கொடூரம்" என்றார்.

வியாழன் அன்று அமெரிக்க கருவூலத்துறை கடன் வரம்பை உயர்த்துவதில் தோல்வி மற்றும் அரசாங்கம் செலுத்துமதியின்மையை அடைவது என்பது "பேரழிவு தரும் திறனை உடையது. 2008 நிகழ்வுகளை அல்லது அதைவிட இன்னும் மோசமானதைப் பிரதிபலிக்கும் என்ற வகையில் ஒரு நிதியக் கரைப்பை ஏற்படுத்தும்" எனக்கூறியது.

கருவூலத்துறை மதிப்பீடுகளின்படி, அக்டோபர் 17க்குள் கடன் வாங்கும் வரம்பில் அதிகரிப்பு இல்லை என்றால், அன்றாடச் செலவுகளான 60 பில்லியன் டாலர்களை 30 பில்லியன் டாலர்களில் பூர்த்தி செய்வது என்பது இயலாது. அரசாங்கப் பத்திரங்களில் வட்டியை கொடுக்கமுடியாது போவது செலுத்துமதியின்மை நிலையை ஏற்படுத்தும்.

அத்தகைய செலுத்துமதியின்மை நிலை கடன், சந்தைகளைப் பற்றும், டாலரின் மதிப்பில் சரிவை ஏற்படுத்தும் மற்றும் அமெரிக்காவின் வட்டி விகிதங்களை மிகவும் உயர்த்திவிடும், இவை உலகெங்கிலும் விளைவுகளைக் கொடுக்கும் என்று கருவூலத்துறை எச்சரித்துள்ளது.

வாஷிங்டனில் அரசியல் விவாதத்தின் பாசாங்குத்தனம், ஒபாமாவும் ஜனநாயகக் கட்சியினரும் "தூய" சட்டவரைவுகளை அரசாங்கத்திற்கு நிதி கொடுக்க உறுதியாக உள்ளதுடன், கடன் வரம்பை உயர்த்துவதிலும் உறுதி காட்டுகின்றனர், குடியரசுக் கட்சியினர் அத்தகைய சட்டத்தில் தாமதங்களை உள்ளடக்குவது அல்லது ஒபாமா பாதுகாப்பில் மாற்றங்கள், வெட்டுக்கள் என்பவை அடிப்படை உரிமைத் திட்டங்களில் இருப்பது நிபந்தனை என்கின்றனர். உண்மை என்ன என்றால் இரு கட்சிகளுக்கும் சமூகப் பாதுகாப்பு, Medicare மற்றும் பிற திட்டங்களில் வெட்டுக்கள் தேவை என்பதில் உடன்படுகின்றனர். அப்பொழுதுதான் வோல் ஸ்ட்ரீட்டிற்கு தொடர்ந்து பெரியளவில் பிணையெடுக்க முடியும் என்று கருதுகின்றன. அவை சட்ட வரைவுகளை தொடருமா, அரசாங்கச் செயல்களுக்கு நிதியளிக்குமா, கடன் வரம்பை உயர்த்த உதவுமா என்பது பொறுத்திருந்துதான் பார்க்கப்பட முடியும்.

CBS நிறுவன கருத்துக் கணிப்பு ஒன்று, வியாழன் வெளியிடப்பட்டது, பத்து அமெரிக்கர்களில் கிட்டத்தட்ட 9 பேர் அரசாங்க மூடலை ஏற்கவில்லை என்றும் 43 வீதத்தினர் தங்களுக்கு இதனால் கோபம் ஏற்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளதை காட்டுகிறது. இக்கருத்துக் கணிப்பில் ஒபாமா மற்றும் காங்கிரசில் உள்ள ஜனநாயகக் கட்சியினரும், குடியரசுக் கட்சியினரும் எதிர்மறைப் புள்ளிகளைத்தான் பெறுகின்றனர். அதிக குறைகூறல் குடியரசுக் கட்சியினருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

உழைக்கும் மக்களின் பெரும்பிரிவினர், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் தமக்கிடையேயான மோதலை செயலற்றுப் போக செய்யவேண்டும் என்பதில் ஈடுபடுவது மட்டுமன்றி, சமூகப்பணிகள், வாழ்க்கைத் தரங்களில் தண்டனையளிக்கும் புதிய தாக்குதல்களுக்கும் தயாரிப்புக்களை நடத்துகின்றன என்பதையும் அறிந்துகொள்கின்றனர். பல மில்லியன் தொழிலாளர்கள் இன்று மத்திய அரச தொழிலாளர்களைப்போல் தாங்கள் வேலைகளில் இருந்து அகற்றப்படுவோம் மற்றும் வருமானம் கிடைக்காது என்பது பற்றி நன்கு அறிவர்.

காங்கிரஸ் மற்றும் முழு அரசாங்கம் சாதாரண உழைக்கும் மக்களுடைய கவலைகளைப் பற்றி, ஒதுங்கி, பொருட்படுத்தாமல் இருப்பது மற்றும் நாடு முழுவதும் அவர்கள் வெறுக்கப்படுகின்றனர் என்று அறிந்துள்ளது, இது வாஷிங்டனில் அச்சச் சூழ்நிலையை ஏற்படுத்தியுள்ளது: இது வியாழன் அன்று உணர்வுரீதியாக பாதிக்கப்பட்ட ஒரு இளம் பெண் அமெரிக்கத் தலைநகர தெருக்களில் துப்பாக்கியால் சுடப்பட்டதில் சோகமான வெளிப்பாட்டைக் கண்டது.

கனக்டிக்கெட்டினை சேர்ந்த 34 வயதான பற்கள் தூய்மைப்படுத்தும் மிரியம் காரே, வெள்ளை மாளிகைக்கும் பின்னர் காபிடோல் கட்டிடத்திற்கு வெளியே தடைகளையும் பொலிஸ் வாகனங்களையும் உடைத்து சென்றபோது தன்னுடைய காரின்மீது பல தோட்டாக்கள் பாய்ந்த நிலையில் இறந்துபோனார். அதில் அவரும் அவருடைய மழலைப் பெண்குழந்தையும் இருந்தனர்.

அப்பெண்மணியின் வாகனம் வேகமாகத் தப்பிச் சென்றபோது பல சுற்றுக்கள் தோட்டாக்களை சுட்ட இரகசியப்பிரிவு மற்றும் காபிடோல் பொலிஸ் நடத்தை குறித்து பெருகிய வினாக்கள் எழுந்துள்ளன. இவை பயங்கர அதிகாரத்தை பயன்படுத்துவது பற்றிய அடிப்படை நெறித் தொகுப்பை மீறியவை. சில தகவல்களின் படி அப்பெண்மணி காரை விட்டு வெளியேறி வந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டார். ஆயுதமற்ற நிலையில் வெளிவந்த மிரியம் காரே குறைந்தப்பட்சம் 6 முறை சுடப்பட்டார். அவருடைய காயங்களின் பேரழிவு தரக்கூடிய தன்மையில் அவரை அடையாளம் காண்பதே கடினமாயிற்று.

ஒரு சுற்றுலா பயணி, காரே பொலிஸ் தடையைத் தாக்கியதற்கு பாதுகாப்புப் படையினரின் பிரதிபலிப்பை ஒரு குளவிக்கூட்டைத் தாக்குவதுடன் ஒப்பிட்டார். மிக அதிக பலமான ஆயுதங்களைக் கொண்ட துணை இராணுப் பொலிஸ் உத்தியோகபூர்வ வாஷிங்டனின் மையத்தில் திரண்டு, காங்கிரஸை பூட்டி வைத்து அங்கத்தவர்களை உரிய இடத்தில் பாதுகாப்பாக இருக்குமாறு உத்தரவிட்டது.

வரவு-செலவுத் திட்ட மோதலினால் மில்லியன் கணக்கானவர்களின் வாழ்க்கைத் தரத்திற்கு தேவையான பணிகள் முடக்கப்பட்டிருந்தாலும், பாரிய இராணுவ, பொலிஸ் மற்றும் உளவுத்துறைக் அமைப்பு முழு வீச்சில்தான் செயல்படுகின்றது என்பதையே இந்த நிகழ்வு எடுத்துக்காட்டுகின்றது.