சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

Melting of Greenland ice shelf likely caused by global warming

கிரீன்லாந்து பனி அடுக்கு உருகுவதற்கான புவி வெப்பமயமாதலே காரணமாக இருக்கலாம்

By Bryan Dyne 
2 August 2012

Use this version to printSend feedback

கிரீன்லாந்து பனி அடுக்கின் மேற்பரப்பு ஜூலை 8 முதல் ஜூலை 12 வரையில் அதிகளவு உருகியது. நாட்டில் கிட்டதட்ட 97 சதவீதத்தினர் நான்கு நாட்களில் 40 சதவீதத்திலிருந்து அதிகரித்த மேற்பரப்பு பனி உருகலை கண்ணுற்றனர். இதுபோன்ற ஒரு நிகழ்வு கடைசியாக 1889ல் நிகழ்ந்தது.

ஒரு குறைந்தகால உறைவுக்குப் பின்னர், ஜூலையின் இறுதியளவில் வெப்பநிலை மறுபடியும் உயர்ந்தது. ஜூலை 28 இல், கிட்டத்தட்ட கிரீன்லாந்தின் மேற்பரப்பில் மூன்றில் ஒரு பங்கில் பனிப் படலம் உருகியது. இது ஜூலை மாத 25 சதவீத சராசரி பனி உருகலுக்கு இணையாகிறது.

வழக்கமாக, கோடையின் அதிவெப்பமான தருணத்தின்போது, 50 சதவீதம் வரை கிரீன்லாந்து மேற்பரப்பு பனி உருகியிருக்கிறது. பின்னர், ஆர்க்டிக் குளிர்காலம் வரும்போது அது மறுபடியும் உறைகிறது. இவ்வருடம், கிரீன்லாந்தை கண்காணிப்பதற்கு செயற்கைக்கோள் படங்களை பயன்படுத்தி, அதன் உயர்ந்த அளவு உள்ளிட்ட, ஏறக்குறைய கிரீன்லாந்தின் அனைத்து பனி அடுக்கும் சில டிகிரி அளவுக்கு உருகியிருப்பதை காண்பித்ததாக மூன்று தனித்தனி கருவிகள் மூலமாக விஞ்ஞானிகள் ஊர்ஜிதம் செய்தனர்.


படம்: இளஞ்சிவப்பு நிறத்தால் குறிப்பிடப்பட்ட பகுதி ஜூலை 8 முதல் (இடது) 12 வரை சற்று உருகிய மேற்பரப்பினைக் குறிக்கிறது
நன்றி: நாசா

தீவிரமான உருகலுக்கு சந்தேகிக்கப்படும் காரணம்வெப்பக் கூரை” (heat dome) என்று அறியப்படுகிறது. ஒரு உயர் அழுத்த அமைப்பு குளிரான வேக காற்றோட்டத்தை வடக்கிற்கு அப்பால் வைத்திருப்பதாலும் அது மெக்சிகோ வளைகுடாவிலிருந்து வடக்கிற்கு வெப்பத்தையும் ஈரப்பதத்தினையும் கொண்டுவருவதாலும் இது நிகழ்கிறது. இவ்வுயர் அழுத்தம் அப்பகுதியில் மேகங்கள் உருவாவதையும் தடுத்து, மழையினையும் தடுக்கிறது. இந்த வளிமண்டல வடிவமைப்பே இந்த கோடைகாலத்தில் அமெரிக்கா முழுவதிலுமான வரட்சிக்கு காரணமாக இருந்திருக்கிறது.

இதே வெப்பக் கூரை பின்னர் கிழக்கு நோக்கி நகர்ந்தது, அதுவே பனி அடுக்கு உருகலுக்கான காரணமாகின்றது. இது, மிகவும் பொதுவாக, அதிக அளவு ஆர்க்டிக் பனி உருகுவதற்கும் காரணமாக இருந்திருக்கிறது.

இந்த உயர் வெப்பநிலையே வடக்கு கிரீன்லாந்தில் அமைந்துள்ள பீட்டர்மேன் சறுக்கு பனிப் பாளங்களின் ஒரு பகுதி உருகலுக்கு காரணமுமாகும். இந்த பனித்தொடர் 130 சதுர கிலோமீட்டர்கள் (50 சதுர மைல்கள்) பரப்பளவானது. இந்தப் படலம் ஏற்கனவே நீரின் மேல் மிதந்து கொண்டிருந்தது, அதனால் உலக கடல் மட்டத்துடன் சேராது. ஆயினும், இது கிரீன்லாந்தின் பனிப்படலங்கள் உருகி அட்லாண்டிக் கடலில் விழும் போக்கின் ஆரம்பம் என்றால், தீவின் உள்பகுதி பனி உருகி கடலில் கலந்து, உலகெங்கிலும் கடல் மட்டம் உயருவதற்கு குறுகிய காலமே எடுக்கும்.

எச்சரிக்கையாக, சேகரிக்கப்பட்ட அறிவியல் தகவல்கள் கிரீன்லாந்து பனி உருகல் அதிகரிப்பினை சுட்டிக் காட்டுகின்றன. 1979 முதல் 2002 வரை திரட்டப்பட்ட தகவல்கள், பெருமளவு கடற்கரையோர பனிப்பாறையிலிருந்து 16 சதவீத பனி உருகல் அதிகரிப்பினை காட்டுகின்றன, அவை கடல் மட்டத்தை அதிகரிப்பதில்லை. 2003 முதல் 2008 வரை, கிரீன்லாந்து சராசரியாக வருடத்திற்கு 195 கியூபிக் கிலோமீட்டர்களை (47 கியூபிக் மைல்களை) இழந்தது என்று, 2002ல் ஏவப்பட்ட, நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE)- ஆல் சேகரிக்கப்பட்ட மிக சமீபத்திய தகவலகள் தெரிவிக்கின்றன.

இந்த நூற்றாண்டில், கிரீன்லாந்தின் உள்ளூர் வெப்பநிலை 9 டிகிரி செல்சியஸ் அளவுக்கு உயரும் என்னும் எதிர்பார்ப்புடன் இணைந்து இந்நிகழ்வுகள், கிரீன்லாந்தின் பெரும் பனி உருகுவதன் அதிகரித்துவரும் அபாயத்தை தெளிவுபடுத்துகின்றன. கடந்த ஒரு சில தசாப்தங்களில் ஒரு குறிப்பிட்ட அதிகபட்ச பனிஉருகும் புள்ளியை எட்டிவிட்டது என்பதை ஏனைய சில ஆய்வு முறைகள் நிராகரிக்காத போது, இதுபோன்ற ஒரு நிகழ்வு சில நூற்றாண்டுக்கு ஒருமுறை நிகழும் என்று மிகவும் பழமைவாத மதிப்பிடல்கள் கணிக்கின்றன. மொத்த பனி அடுக்கான 28,50,000 கியூபிக் கிலோமீட்டர்களும் (683,751 கியூபிக் மைல்கள்)  உருகினால், உலக கடல்மட்டம் 7.2 மீட்டர் (23.6 அடி) உயரும்.

மிகவும் பொதுவாக, இவ்வாண்டு அமெரிக்க மத்தியமேற்கில் நிலவிய வரட்சி போன்ற தீவிர காலநிலை நிகழ்வுகள், பொதுவான உலக வெப்பநிலை உயர்வால் எதிர்பார்க்கப்படுபவைகளுக்கு உதாரணங்கள். இதுபோன்ற காலநிலை உலகின் எப்பகுதியிலும் உறுதியாக இல்லாத பட்சத்தில், புவி வெப்பமயமாதல் உள்ளூர் வெப்பநிலையில் ஒவ்வொரு வருடமும் அதிக அளவுடன் தீவிர மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கார்பன் வெளியேற்றத்தால் புவி வெப்பமயமாதல் ஏற்படுவதற்கான தெளிவான ஆதாரம் இருந்தபோதிலும், உலக அரசாங்கங்கள் காலநிலை மாற்றத்தை கவனித்து எந்த ஒரு தீவிர நடவடிக்கையும் எடுக்க விரும்பாமலும், முடியாமலும் உள்ளன. பிரேசிலில் ஜூன் மாதம் நடந்த, மிக சமீபத்திய காலநிலை மாநாடு, உருப்படியாக எதையும் செய்யவில்லை. அமெரிக்காவால் தலைமைதாங்கப்படும் உலக அரசாங்கங்கள், பெருநிறுவன ஆதாயங்களையும் பூகோள-அரசியல் நலன்களையும் பாதுகாத்துக்கொள்ள தீர்மானமாக இருப்பதுடன், தம்முள் கசப்புடன் பிளவடைந்தும் உள்ளனர்.  

மனித இனத்தின் வாழ்வின் மீதும் மற்றும் பூமியின் மீதான காலநிலை மாற்றத்தின் தாக்கங்களை தீர்ப்பதற்கான உலக அரசாங்கங்களின்  இயலாமை, இயற்கை உட்பட அனைத்து விடயங்களும் உலக நிதிய மேல்தட்டின் நலன்களுக்கு அடிணியச்செய்யப்படுகின்றன என்ற ஒரு பொதுவான காரணத்திலிருந்து நேரடியாக ஊற்றெடுக்கின்றது.

ஆசிரியர் மேலும் பரிந்துரைப்பவை:

Rio+20 climate conference: “An epic failure”

Evidence of intensifying climate change grows