World Socialist Web Site www.wsws.org |
US-Japan talks escalate war preparations against China அமெரிக்க-ஜப்பானிய பேச்சுக்கள் சீனாவிற்கு எதிரான போர்த் தயாரிப்புக்களை விரிவாக்குகின்றன
Peter Symonds இந்த வாரம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி மற்றும் பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் ஆகியோர் ஜப்பானிய வெளியுறவு மந்திரி, பாதுகாப்பு மந்திரி ஆகியோருடன் 2+2 என்று அழைக்கப்படும் பேச்சுக்கள், சீனாவிற்கு எதிரான அமெரிக்க இராணுவக் கட்டமைப்பிற்கு கணிசமான விரிவாக்கத்தை கொடுத்தன. ஒரு நீண்ட கூட்டறிக்கையானது உயர் தொழில்நுட்ப அமெரிக்க ஆயுதங்கள் ஜப்பானில் நிலைகொள்ள இருப்பதையும், ஜப்பான் மீண்டும் இராணுவப் பாதையில் வருவதற்கு பச்சை விளக்கு காட்டப்பட்டதையும், “இன்னும் கூடுதலான வலுவான கூட்டமைப்புடைய வடிவமைப்பிற்குள்” அது இருக்கும் என்று அறிவித்தது. அன்றைய வியாழன் பேச்சுக்கள், ஒபாமா நிர்வாகம் கடந்த மாதம் தவிர்க்க முடியாத சிரியா மீதான தாக்குதலை அமெரிக்காவிலும் உலகெங்கிலும் மக்களின் எதிர்ப்பையொட்டி ஒத்திவைத்த முடிவையடுத்து வந்துள்ளன. “2+2” பேச்சுக்கள் சிரியாவுடனான போர் ஒத்தி வைக்கப்பட்டாலும், வாஷிங்டனின் இராணுவ விரிவாக்கம் தொடர்ந்து நடைபெற்றுத்தான் வருகின்றது என்பதைத் தெளிவாக்கியுள்ளன. வாஷிங்டனுடைய பின்வாங்கும் முடிவு அமெரிக்காவின் நட்பு நாடுகளிடையே பெரும் அச்சத்தை மத்திய கிழக்கில் மட்டும் இல்லாமல் ஆசியாவிலும் தூண்டியது; ஆசியாவில் ஒபாமாவின் “முன்னிலை” கோட்பாடு ஜப்பான் மற்றும் பிற நாடுகளை சீனா மீது இன்னும் ஆக்கிரோஷ நிலைப்பாட்டைக் கொள்ள ஊக்கமளித்தது. அமெரிக்க நட்பு நாடுகள் ஆதரவற்று விட்டுவிடக்கூடும் என்னும் அச்சங்கள், இந்த வாரம் ஒபாமா தென்கிழக்கு ஆசியாவில் மேற்கொள்ள இருந்த உயர்மட்ட பயணத்தை, வாஷிங்டனில் தோன்றிய அரசாங்க மூடல் ஏற்படுத்திய நெருக்கடியின் மத்தியில் இரத்து செய்ததில் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டது. ஒபாமா நிர்வாகம் பலமுறையும் இந்திய-பசிபிக் பிராந்தியத்தில் அமெரிக்கப் படைகளின் “மீள்சமநிலை” என்று அறிவித்தாலும், சிக்கன நடவடிக்கைகளிலிருந்து தப்பும் எனக்கூறப்பட்டாலும், அத்தகைய உறுதிமொழிகள் வரவு-செலவுத் திட்டம் குறித்த அரசியல் கொந்தளிப்பினால் வினாவிற்கு உட்பட்டன. வியாழன் நடைபெற்ற “2 +2” பேச்சுக்கள் ஆசியாவில் தன்னுடைய இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா தொடர்கிறது என்ற பிழைக்கு இடமில்லாத தகவலை அனுப்பியுள்ளன; இதில் அமெரிக்கக் கடற்படை மற்றும் விமானப் படையின் சொத்துக்கள் 2020 ஐ ஒட்டி இப்பிராந்தியத்தில் 60% நிலைப்பாடு கொள்ளும். கூட்டறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள அமெரிக்க நிலைப்பாடுகள் அனைத்தும் அமெரிக்க ஜப்பானிய இராணுவ நடவடிக்கை சீனாவிற்கு எதிராக இயக்கப்பட உள்ளதை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை; அவற்றில் கீழ்க்கண்டவை அடங்குகின்றன: * ஜப்பானில் க்யோடோவிற்கு அருகே இரண்டாவது X-band முன்கூட்டி எச்சரிக்கும் ராடர் முறை அமைப்பது, பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை முறைகளில் கூட்டு என்பதின் ஒரு பகுதியாக இருக்கும். பெயரளவிற்கு இது வட கொரியாவின் பழைய அணுத் திறன் ஆயுதங்களுக்கு எதிராக இயக்கப்பட்டாலும், இந்த ஆயுதங்கள் சீனா, ரஷ்யா ஆகியவற்றிற்கு எதிரான பென்டகனுடைய தயாரிப்புக்களின் ஒரு பகுதியாகும். * நவீன P8 கண்காணிப்பு மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்கள் டிசம்பர் 2013ல் இருந்து தளம் கொள்ளப்படும்; அடுத்த ஆண்டில் நீண்ட தூரம் செல்லும் கிளோபல் ஹாக் டிரோன்கள் நிலைகொள்ளும். கிழக்கு சீன மற்றும் தென் சீனக் கடல்களில் அமெரிக்க கடற்படைக் கண்காணிப்பு முடுக்கிவிடப்பட்டுள்ளது; இங்கு அமெரிக்காவில் “முன்னிலை” சீனாவுடனான நிலப் பகுதிகளுடன் அழுத்தங்களை விரிவாக்கியுள்ளது. இதில் ஜப்பானுடன் சென்காகு/டயாவோயு தீவுகள் குறித்த மோதலும் குறிப்பிடத்தக்க வகையில் தூண்டுதல் தன்மை உடையது. * MV-22 Osprey என்ற செங்குத்தாக உயரே செல்லும் போக்குவரத்து விமானங்களின் இரு பிரிவுகள் ஜப்பானிய இராணுவம் விரைவில் சென்காகுஸுடன் மோதல் ஏற்பட்டால் படைகளை அனுப்பும் திறனை அதிகரிக்கும். பென்டகன் F-35B செங்குத்தாக நேரடியாக உயரே செல்லும் ஸ்டேல்த் போர் விமானங்களையும் 2017ல் நிலை கொள்ள வைக்கும் திட்டங்களையும் கொண்டுள்ளது; இது அமெரிக்காவிற்கு வெளியே முதல் தடவையாக இருக்கும். இது சீனாவிற்குள் உள்ள இராணுவத் தாக்குதல்களுக்கு எதிரான மின்னல் வேக விமான கடற்படைத் தாக்குதல் மூலோபாயத்தை செயல்படுத்தும் திறனை அதிகப்படுத்தும். 2009 நடுப்பகுதியில் தொடங்கிய “ஆசியாவில் முன்னிலை” என்னும் ஒபாமா நிர்வாகத்தின் கோட்பாடு வெளிப்படையாக நவம்பர் 2011ல் அறிவிக்கப்பட்டது; இது தேசியவாதம் மற்றும் இராணுவவாதத்தைப் பிராந்தியம் முழுவதும் எரியூட்டியுள்ளது. இதற்கு ஜப்பானை விட அதிக வெளிப்பாடு தேவையில்லை; இங்கு வலதுசாரி பிரதம மந்திரி ஷின்ஜோ அபே இன் அரசாங்கம், கடந்த டிசம்பர் மாதம் அதிகாரத்திற்கு வந்தது, தன்னுடைய இராணுவச் செலவை அதிகரித்துள்ளது, சென்காகுஸுக்கு எதிரான நிலைப்பாட்டை கடினமாக்கியுள்ளது, இராணுவத்தை ஜப்பானிய அரசியலமைப்பு சுமத்தியுள்ள தடைகளிலிருந்து விடுவிக்க முயல்கிறது, அரசியலமைப்பு முறையாக வெளிநாட்டின் மீது இராணுவத் தாக்குதலை தடுக்கிறது. கூட்டு “2+2” அறிக்கையில், அமெரிக்க அரசாங்கம் ஜப்பானின் “நோக்கம் தீவிர பங்களிப்பை சர்வதேச சமூகம் எதிர்கொள்ளும் சவால்களை சந்திக்க உருவாக்குவது” என்பதை “வரவேற்றுள்ளது”, அதனுடைய முடிவான ஒரு தேசிய பாதுகாப்பு சபை நியமித்தல், அதனுடைய இராணுவ வரவு-செலவுத் திட்ட விரிவாக்கம், “கூட்டுப் பாதுகாப்பிற்கு சட்டபூர்வ தளத்தை மறு ஆய்வு செய்தல்”, மற்றும் “தென்கிழக்கு ஆசியான் நாடுகளுக்கு எதிராக கட்டமைப்பு விளைவுகளில் காட்டும் திறன் என்னும் பிராந்திய பங்களிப்புக்கள்” ஆகியவற்றையும் வரவேற்றுள்ளது. தன்னுடைய தேர்தல் உறுதிமொழியான “ஒரு வலுவான ஜப்பானை வலுவான இராணுவத்துடன் கட்டமைப்பது” என்பதை அபே தொடர்கிறார். அவருடைய அரசாங்கம் அரசியலமைப்பைக் கடக்க அல்லது திருத்த முற்படுகிறது; இது “கூட்டுத் தற்காப்பிற்கு” அனுமதிக்கும். அதாவது ஜப்பானிய ஏகாதிபத்தியம் அமெரிக்காவுடன் “தவிர்க்க முடியாத” இராணுவத் தாக்குதல்கள் உட்பட, போர்களை நடத்தும் திறனை. ஜப்பான் ஏற்கனவே பிலிப்பைன்ஸில் கடலோரப் படைகளுக்கு ஏற்றம் கொடுக்க உறுதிமொழி கொடுத்துள்ளது—இது ஒரு முன்னாள் அமெரிக்க காலனியாகும்; முக்கிய தென் கிழக்கு ஆசிய பங்காளியான சீனாவை எதிர்ப்பதற்காகும். “2+2” அறிக்கை உளவுத்துறைத் தகவல் பகிர்வு, சைபர் போர், “விண்வெளித் தளமாகக் கொண்ட கடற்படைப் பிரிவு குறித்த விழிப்புணர்வு” இன்னும் நெருக்கமான அமெரிக்க ஜப்பானிய இராணுவ ஒத்துழைப்பைக் குறிப்பிடுகிறது. அதாவது உளவுச் செயற்கை கோள்களை மேற்கு பசிபிக்கை கண்காணிக்கவுமாகும். ஜப்பானும் அமெரிக்காவும் ஓகினாவில் அமெரிக்கத் தளங்கள் குறித்தும் உடன்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்தின. டோக்கியோவிலுள்ள குவாமில் 9,000 அமெரிக்க மரைன்கள் நிலைகொள்ளச் செய்துகொள்வதற்கான 3.1 பில்லியன் டாலர்களைக் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளது; இது பிராந்தியம் முழுவதும், ஆஸ்திரேலியா, பிலிப்பைன்ஸ் உட்பட அமெரிக்கப் படைகளின் பரந்த மறுகட்டமைப்பு குறித்த பென்டகனின் திட்டத்தில் ஒரு பகுதியாக இருக்கும். இந்த வார மந்திரிகள் கூட்டம் வாஷிங்டனில் என்று இல்லாமல் டோக்கியோவில் உயர்மட்ட அளவில் நடப்பது முதல் தடவையாகும்; இது ஜப்பானின் “கூடுதல் பொறுப்புக்களுக்கு” அங்கீகாரமாகும். ஒபாமா நிர்வாகம் அபே அரசாங்கத்தை சீனாவிற்கு எதிரான போர்த் தயாரிப்புக்களில் அதைக் கட்டுப்படுத்தவும், போரை மேற்கொள்வதிலும் மையப் பங்காளி எனக் கருதுவது தெளிவாகும். “ஜப்பானிய அமெரிக்க பாதுகாப்பு ஒத்துழைப்பிற்கு வழிகாட்டி நெறிகள்” என்பதின் திட்டமிடப்பட்டுள்ள திருத்தப் படிவம் புதிய இராணுவ ஏற்பாடுகளின் “வலுவான” தன்மையை முறைப்படுத்தும். கிழக்கு ஆசியாவில் அமெரிக்க நிலைகொள்ளலின் விரிவாக்கம் மற்றும் ஜப்பானிய இராணுவவாதத்தை அமெரிக்கா ஊக்குவிப்பது, பென்டகனின் இணைப்பு என்ற முறையில், அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையின் முழுப் பொறுப்பற்ற தன்மையை நிரூபிக்கிறது. அமெரிக்காவிலும் உலகெங்கிலும் தீர்க்க முடியாத முதலாளித்துவ நெருக்கடியால் அதிர்ந்துள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம் இராணுவ மிரட்டல் போர் மூலம் தன்னுடைய உலக மேலாதிக்கத்தை தொடர்வதை தீவிரப்படுத்திக் கொண்டிருக்கிறது. போருக்கு மக்கள் எதிர்ப்பு பெருகியிருப்பதின் நடுவே, அமெரிக்க இராணுவ ஆக்கிரோஷத்தின் வேகம் 2008 ஆண்டு உலகப் பொருளாதார நெருக்கடி வெடித்தபின் அதிகமாகியுள்ளது—இது இன்னும் பெரும் மோதலுக்குத்தான் அச்சுறுத்துகிறது. சிரியாவின் மீதான தாக்குதலிலிருந்து தற்காலிகமாக பின்வாங்கினாலும்—அப்போர் ஈரான், ரஷ்யா, சீனா ஆகியவற்றுடன் மோதல் என்னும் இடரைக் கொடுத்தது—அமெரிக்கா அத்தகைய போர் ஒன்றிற்கான தயாரிப்புக்களை முடுக்கிவிட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் போருக்கான உந்துதல், நச்சு படிந்த தேசியவாதத்தை தூண்டுதல் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது இடைவிடா தாக்குதல் இவற்றுடன் தொடர்கிறது. போரைத் தடுக்கும் ஒரே சமூக சக்தி சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கமானது போருக்கான மூலக்காரணமான --உலக முதலாளித்துவம் மற்றும் காலாவதியாகிவிட்ட தேசிய அரசு அமைப்புமுறை ஆகியவற்றை-- ஒழிப்பதின் மூலம்தான் இதைச் சாதிக்கமுடியும்; அத்தோடு உலகப் பொருளாதாரம் அனைத்து மனித குலத்தின் நலன்களுக்காக சோசலிசப் பாதையில் மறுஒழுங்கமைக்கப்பட வேண்டும். |
|