World Socialist Web Site www.wsws.org |
US-Japan ministerial meeting strengthens military stance against China அமெரிக்க-ஜப்பான் அமைச்சர்கள் கூட்டம் சீனாவிற்கு எதிரான இராணுவ நிலைப்பாட்டை வலுப்படுத்துகின்றன
By John Chan நேற்று டோக்கியோவில் “2+2” என அழைக்கப்பட்ட கூட்டம் —அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி, பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல் மற்றும் ஜப்பானிய வெளியுறவு மந்திரி ப்யூமியோ கிஷிடா மற்றும் பாதுகாப்பு மந்திரி இட்சுநோரி ஓனொடெரா—சீனாவுடனான அமெரிக்க ஜப்பானிய இராணுவ அழுத்தங்களை அதிகரிக்கும் என்ற உடன்பாடுகளுடன் முடிவுற்றன. அமெரிக்க அரசாங்க பணிநிறுத்தம் காரணமாக, ஜனாதிபதி பாரக் ஒபாமா அடுத்த வாரம் தென் கிழக்கு ஆசியாவிற்கு வரவிருந்த வருகையை குறைத்து, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியாவிற்கு திட்டமிட்டிருந்த பயணங்களையும் விட்டுவிட்டார். சீனாவிற்கு எதிரான ஒபாமாவின் ஆக்கிரோஷ “ஆசிய முன்னிலையை” தொடர, அமெரிக்கா அரசியல் உறுதியையும், நிதிய ஆதாரங்களையும் கொண்டுள்ளதா என்னும் அதிகரித்துள்ள கவலையில், கெர்ரியும் ஹேகலும் டோக்கியோ பேச்சுக்களை வாஷிங்டன் அதனுடைய உறுதிப்பாடுகள் குறித்துத் தீவிரம் என்னும் வலுவான தகவலை அனுப்ப பயன்படுத்தியுள்ளனர். டோக்கியோவில் நிருபர்களிடம் ஹேகல் கூறினார்: “ஜப்பானின் பாதுகாப்பிற்கான அமெரிக்க உறுதியை உள்ளடக்கிய நம் இரு நாடுகளின் பாதுகாப்பு ஒற்றுமை, நம் மொத்த உறவுகளில் முக்கியக் கூறுபாடாகும், அதே போல் ஒபாமா நிர்வாகத்தின் ஆசிய பசிபிக் மறு சமநிலைக்கும் முக்கிய கூறுபாடாகும்.” ஒரு சக்தியை காட்டிய வகையில் பென்டகன் இக்கருத்தை வலியுறுத்தியது. அணு சக்தியால் இயங்கும் விமானத் தளத்தை கொண்ட USS George Washington மற்றும் அதனுடைய போர் புரியும் குழு, தென் கொரியா மற்றும் ஜப்பானிய போர்க் கப்பல்களுடன் கூட்டுப் பயிற்சிகளை புதன்கிழமையிலிருந்து கொரிய தீபகற்பத்தின் தெற்குக் கடலோரப் பகுதிகளில் நடத்திவருகிறது. டோக்கியோவிற்கு சியோலிலிருந்து ஹேகல் பறந்து வந்தார்; அங்கு அவர் அமெரிக்க கொரிய நட்பின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடினார். தென் கொரியாவுடன் ஒரு மூலோபாய உடன்பாட்டிலும் கையெழுத்திட்டார். இது வட கொரியாவிற்கு எதிராக பியோங்யாங் உடைய அணுவாயுத தாக்குதலை எதிர்கொள்ள என்னும் போலிக்காரணம் காட்டி “தவிர்க்க முடியாத” தாக்குதலை அனுமதிக்கிறது. தவிர்க்க முடியாத தாக்குதல் என்னும் அச்சுறுத்தல் சீனா மீதும் மேற்கொள்ளப்படலாம். டோக்கியோ விவாதங்களின் மையத்தில் சீனா இருந்தது என்பது தெளிவு. கூட்டு அறிக்கையானது பெய்ஜிங் “ஒரு பொறுப்பான, ஆக்கபூர்வ பங்கை பிராந்திய உறுதிப்பாடு, செழிப்பில் கொள்ள ஊக்கம் கொடுக்கிறது, சர்வதேச நடத்தை நெறிகளைக் கடைப்படிக்க வேண்டும் என்று கூறுகிறது மற்றும் அதனுடைய இராணுவ நவீனப்படுத்துதலில் வெளிப்படைத்தன்மையை முன்னேற்றுவிக்கவும் வேண்டும்.” ஒபாமாவின் “முன்னிலை”, பிராந்தியம் முழுவதும் அழுத்தங்களுக்கு எரியூட்டியுள்ளது; அமெரிக்க நட்பு நாடுகள் சீனாவிற்கு எதிராக இன்னும் அதிக மோதல் அணுகுமுறையைக் கொண்டுள்ளன. ஜப்பான் குறிப்பிடத்தக்க வகையில் மோதலுக்கு உட்பட்ட கிழக்கு சீனக் கடலிலுள்ள சென்காகு தீவுகள் குறித்து (சீனாவில் டயோயு என அறியப்படுவது) கடந்த மூன்று ஆண்டுகளில், சீனாவுடன் விரிசலை அதிகப்படுத்தியுள்ளது. உத்தியோகபூர்வ அமெரிக்க நிலைப்பாடான நிலப்பூசலில் எப்புறமும் இல்லை என்பதை வலியுறுத்துகையில் கெர்ரி குறிப்பாக “நாங்கள் ஜப்பான் இத்தீவுகளை நிர்வகிப்பதை அங்கீகரிக்கிறோம்” என்று அறிவித்தார். இராணுவ நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டதில், அமெரிக்கா நீண்ட தூரம் செல்லும் குளோபல் ஹாவ்க் கண்காணிப்பு டிரோன்களை அடுத்த ஆண்டு ஜப்பானில் கொண்டுவந்து மேற்கு பசிபிக் பிராந்தியத்தை, கிழக்கு சீனக்கடல் உட்பட கண்காணிக்க பயன்படுத்தப் போவதாக அறிவித்தார்; இந்த நடவடிக்கை சீனாவுடனான அழுத்தங்களை அதிகப்படுத்தும். அமெரிக்க-ஜப்பான் “2+2” மந்திரிகள் கூட்டமானது, 1990ல் இருந்து நடைபெறுகின்றன; ஆனால் நேற்றையது வாஷிங்டனில் என்று இல்லாமல், டோக்கியோவில் நடைபெறும் முதல் முழுக் கூட்டமாகும். பேச்சுக்களின் முக்கிய கருத்து, ஜப்பான் இன்னும் அதிகமான “சமநிலைப் பங்கை” கூட்டில் கொள்ளும் என்பதை வலியுறுத்துவதுதான்—அதாவது அது தன்னுடைய இராணுவத்தை விரிவாக்கி, சீனாவிற்கு எதிராக பிராந்திய இராணுவக் கட்டமைப்பை அமெரிக்கா வலுவாக்குகையில் கூடுதல் பொறுப்புக்களை கொள்வதுதான். கூட்டறிக்கையானது அமெரிக்கா இரண்டாவது X-band முன்கூட்டிய ராடர் எச்சரிக்கையை ஜப்பானில் கியோட்டாவிற்கு அருகே, கூட்டு பாலிஸ்டிக் எதிர்ப்பு ஏவுகணை முறைகளுக்கு எதிராக நிலைகொள்ளும் என அறிவித்துள்ளது. இவைகள் பொதுவாக வட கொரியாவிற்கு எதிராக இலக்கு கொண்டவை, ஆனால் உண்மையில் இது பென்டகனின் சீனா, ரஷ்யாவிற்கு எதிரான அணுப்போர் திட்டங்களின் பகுதியாகும். அமெரிக்கா F-35B நேரடியாக உயரே செல்லும் ஸ்டெல்த் போர் விமானங்களையும் 2017 ஐ ஒட்டி நிலைகொள்ளும்; P-8 நீர்மூழ்கி எதிர்ப்பு விமானங்களையும் (அமெரிக்காவிற்கு வெளியே அத்தகைய முதல் நிலைகொள்ளல்) பயன்படுத்தும்; இரண்டு பிரிவுகள் MV-22 Osprey நேரடியாக உயரே செல்லும் போக்குவரத்து விமானங்கள் ஜப்பானிய படைகளுடன் கூட்டுப் பயிற்சிக்காக பயன்படுத்தப்படும். தன்னுடைய பங்கிற்கு ஜப்பான், அமெரிக்க முறையிலான தேசிய பாதுகாப்புச் சபையை தோற்றுவிக்கிறது. இது பிரதம மந்திரியின் இராணுவ அதிகாரத்தை விரிவாக்கும், நாட்டின் பெரும் பொதுக் கடன் உள்ளபோதிலும், நாட்டின் பாதுகாப்பு உதவியை தென் கிழக்கு ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ் போன்றவற்றிற்கு அதிகப்படுத்தும். டோக்கியோ, ஆசிய பசிபிக்கில் 9,000 அமெரிக்க மரைன்களை ஓகினாவாவை விட்டு, குவாம் இன்னும் பிற இடங்களுக்கு நிலைகொள்ள வைக்கவும், அமெரிக்காவில் மூலோபாய மறுசீரமைப்புத் திட்டம் சீனாவிற்கு எதிராக என்பதின் கீழ் மேற்கொள்ள 3.1 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நிதி உதவிக்கு ஒத்துக்கொண்டது. அமைச்சர்கள் கூட்டம் தற்போதைய “ஜப்பானிய அமெரிக்க பாதுகாப்பு கூட்டுறவு என்பதை திருத்தவும் ஒப்புக்கொண்டுள்ளது. ஜப்பான் தற்பொழுது சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர்த் தயாரிப்புக்களில் இன்னும் தீவிர பங்கைக் கொள்வதில் நாட்டின் போருக்குப் பிந்தைய அரசியலமைப்பை ஒட்டி “சமாதானப் பிரிவினால்” தடுக்கப்படுகிறது; இது முறையாக ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையை தடுக்கிறது. ஆனால் ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்ஜோ ஏப் இவ்விதியை வேறுவகையில் விளக்கம் கொள்ள அழுத்தம் கொடுக்கிறார், அல்லது அச்சுறுத்தல்கள் எனக் கருதப்படுவதற்கு எதிரான தவிர்க்க முடியாத தற்காப்பையொட்டி, அரசியலமைப்பை மாற்றி ஜப்பான் அமெரிக்காவுடன் “கூட்டுப் பாதுகாப்பை” செயல்படுத்தும். அமெரிக்க ஜப்பானிய பாதுகாப்பு வழிகாட்டி நெறிகள் முதலில் 1978 பனிப் போர்க் காலத்தில் இயற்றப்பட்டபோது, ஜப்பான் சோவியத் ஒன்றியத்தின் மீது படையெடுத்தால் கடுமையாக குறைந்த பங்கையே கொடுக்கப்பட்டது. 1997ல் கடைசியாக வழிகாட்டி நெறிகள் நிகழ்நிலைப்படுத்தப்பட்டபோது அது ஜப்பானின் இராணுவச் செயற்பாடுகள் உடனடியாக அருகில் இருக்கும் பிராந்தியத்தில் பரந்த வழிமுறையாக்கப்பட்டன; வட கொரியாவில் ஒரு நெருக்கடி என்றால் அமெரிக்காவிற்கு உதவுவது என்று; ஆனால் ஜப்பானியப் படைகளை மற்ற நாடுகளுக்கு எதிராக கூட்டுத் தாக்குதலில் ஈடுபடுவதைத் தடுத்துவிட்டது. இந்த ஆண்டு ஜப்பானின் சொந்த பாதுகாப்பு வழிகாட்டி நெறிகளின் இடைக்கால அறிக்கையில் அபே அரசாங்கம் தான் “தவிர்க்க முடியாத” தாக்குதல் திறன்களை அடையப் போவதாக குறிப்புக் காட்டியது. சீனாவுடன் சென்காகு தீவுகள் பற்றிய தீவிர மோதலுக்கு இடையே, ஜப்பானின் பாதுகாப்பு மந்திரி ஏற்கனவே ஒரு புதிய நெறியைத் திட்டமிட்டுள்ளார்; அது சீன டிரோன்களை சுட்டுவீழ்த்த அனுமதிக்கும். பாதுகாப்பு மந்திரி ஒனோடெரா செய்தியாளர் கூட்டம் ஒன்றில் அக்டோபர் 1ம் திகதி முறையான ஆட்கள் உள்ள போர் விமானங்கள் போல் இல்லாமல், டிரோன்கள் எச்சரிக்கைகளுக்கு விடையிறுக்காது என்றார்: “இதையொட்டி அவை பெரும் இடரைப் பிரதிபலிக்கின்றன.” தற்போதைய வழிகாட்டி நெறிகள் ஜப்பானிய போர் விமானங்கள் வானொலி மற்றும் காட்சி அடையாளங்களை ஒரு விமானி கீழிறங்க அல்லது பறக்க அனுமதிக்கின்றன; விமானி செயல்பட மறுத்தால்தான் வலிமை பயன்படுத்தப்படும். ஜப்பான் டிரோனைச் சுட்டுவீழ்த்தினால் அது ஒரு போர் நடவடிக்கையாகும் என சீனா எச்சரித்துள்ளது. செப்டம்பர் 26ம் திகதி, ஐ.நா. பொதுச் சபையில் தன்னுடைய உரையில் அபே தன்னுடைய இராணுவச் செயற்பட்டியலை கூறினார். ஜப்பானிய இராணுவம் ஐ.நா.வின் “கூட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ்” “சமாதானத்திற்கு தீவிர பங்களிப்பு தரும்” என்று அவர் அறிவித்தார். முன்பு ஜப்பான் அதன் அரசியலமைப்பினால் ஐ.நா. தலைமையிலான போர்களில் கலந்து கொள்வது தடையில் இருந்தது; ஆப்கானிஸ்தான், லிபியாவிற்கு எதிராக செயல்பட முடியவில்லை. அதிகம் மறைக்கப்படாத சீனாவைப் பற்றிய விமர்சனத்தில், அபே பொதுச் சபையில் ஜப்பானின் தேசிய நலன்கள் கடல்களின் “உறுதித் தன்மையுடன்” தொடர்புடையவை என்றார். “கடல் பகுதி ஒழுங்கில் மாற்றங்கள், வலிமை அல்லது அழுத்தத்தின் விளைவாக என்பது எச்சூழலிலும் மன்னிக்கப்பட முடியாது” என்று அவர் அறிவித்தார். கன்சர்வேடிவ் அமெரிக்க சிந்தனைக் குழுவான ஹட்சன் இன்ஸ்ட்டியூட்டிலும் அபே பேசினார்; அங்கு அவர் தன் அரசாங்கத்தின் திட்டமான இராணுவச் செலவுகளை அதிகரிப்பதை ஆதரித்துப் பேசினார். ஜப்பானின் இராணுவ வரவு-செலவுத் திட்டம் சீனாவுடன் ஒப்பிடுகையில் நிதானமானது என்று கூறிய அவர், “எனவே நீங்கள் விரும்பினால் என்னை வலதுசாரி இராணுவவாதி என அழையுங்கள்” என்று கூறினார். ஜப்பானை மீள்ஆயுதமயமாக்கல் மற்றும் அதனுடைய இராணுவவாதத்தை ஊக்குவிப்பதின் மூலம் ஒபாமா நிர்வாகம் பொறுப்பற்ற முறையில் ஆசியாவில் போர் ஆபத்தை உயர்த்துகிறது. |
|