World Socialist Web Site www.wsws.org |
Amid government shutdown, US officials push“pivot to Asia” அரசாங்க மூடலுக்கு நடுவே அமெரிக்க அதிகாரிகள் “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுக்க”அழுத்தம்
By Alex Lantier ஆசிய-பசிபிக்கில் இராணுவக் கூட்டுகளுக்கு ஊக்கம் கொடுக்கும் இராஜதந்திர செயற்பாட்டின் முதல் பகுதியாக, அமெரிக்க பாதுகாப்பு மந்திரி சக் ஹேகல், இன்று தென் கொரிய பயணத்தை முடிக்கையில், வாஷிங்டன் அதிகாரிகள் அமெரிக்க அரசாங்க மூடலினால் ஏற்படுத்தப்பட்டுள்ள நெருக்கடிக்கு விடையளிக்கும் வகையில் சீனாவை இராணுவரீதியில் தனிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்ட தங்கள் ஆத்திரமூட்டும் “ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுக்கும்” மூலோபாயத்தை செயல்படுத்த முனைகின்றனர். இது ஈரான் மற்றும் சிரியாவுடன் பேச்சுவாரத்தைகளை தொடர்ந்த பின்னரும் மற்றும் சிரியாவிற்கு எதிரான அமெரிக்கப் போர் உந்துதல் ஒத்திவைக்கப்பட்ட பின்னரும் ஒபாமா நிர்வாகத்தின் அடுத்த பெரிய வெளியுறவுக் கொள்கை முன்னெடுப்பாகும். ஹேகல் தென்கொரியாவிலிருந்து புறப்பட்டு அவர் அமெரிக்க வெளிவிவகார செயலர் ஜோன் கெர்ரியுடன் டோக்கியோவில் ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சுக்களுக்காக இணைந்து கொள்வார். இராஜதந்திர முனைப்பின் முக்கிய பகுதி, மிக கவனத்துடன் மேற்கொள்ளப்பட இருக்கும் ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் எட்டு நாட்கள் தெற்கு ஆசியப் பயணம் ஆகும். இந்தோனிசியா, ப்ரூனே, மலேசியா மற்றும் பிலிப்பைன்ஸுக்கு செல்லுகையில் அவர் பசிபிக்-கடந்த கூட்டு (TPP) பிராந்திய உடன்பாடு போன்ற வணிக உடன்பாடுகளைப் பற்றி விவாதிப்பார். அத்துடன் ஆசியான் (ASEAN), தென்கிழக்கு ஆசிய நாடுகளின் சங்கம், ஆசிய-பசிபிக் பொருளாதார ஒற்றுமை (APEC), மற்றும் கிழக்கு ஆசிய உச்சிமாநாடு (EAS) ஆகியவற்றின் பிராந்திய உச்சிமாநாடுகளில் பங்கு பெறுவார். ஆனால் நூறாயிரக்கணக்கான மத்திய அரச தொழிலாளர்கள் அவதியில் இருக்கையிலும் இப்பொழுது அரசாங்கம் மூடலில் சிக்கியுள்ள நிலையில் அமெரிக்காவை விட்டு நீங்கக்கூடாது என்று முடிவெடுக்கலாம் என்ற ஊகம் உள்ளது. நீடித்த மூடல் ஒபாமாவை ஆசியப் பயணத்தை இரத்து செய்யக் கட்டாயப்படுத்தலாம். ஒபாமாவின் மூத்த ஆலோசகர் டான் பைபர் ப்ளூம்பேர்க் செய்தி நிறுவனத்திடம்: “இங்கு தர்க்கபூர்வ வினாக்கள் உள்ளன.” எனக் கூறினார் மூடல் நீடிக்குமேயாயின், அது அமெரிக்காவில் ஒரு புதுப்பிக்கப்பட்ட பொருளாதார மந்தநிலையை தூண்டிவிடலாம். அது பொருளாதார நடவடிக்கைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் அச்சுறுத்தலைக் கொண்டு, அமெரிக்காவைத்தான் ஏற்றுமதிச் சந்தைகளுக்கு நம்பியுள்ள ஆசிய-பசிபிக்கிற்கு கடன் கொடுத்தலையும் பாதிக்கும். இந்த மூடல் அமெரிக்கா ஆசியாவில் இராணுவ மேலாதிக்கத்தை செலுத்தும் நீண்டகால இயலுமை குறித்த வினாக்களை தீவிரப்படுத்தியுள்ளது. ஏற்கனவே அமெரிக்காவிற்குள் போருக்கான மக்கள் எதிர்ப்பு பெருகியிருக்கையில், ரஷ்ய, ஈரானிய தலையீட்டு அச்சுறுத்தல்களும், சிரியாவுடனான அமெரிக்கப் போர் உந்துதலில் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளன. அமெரிக்க ஊக்கத்துடன் ஆசிய-பசிபிக் நெடுகிலும் பல வலதுசாரி ஆட்சிகள், சீனா மற்றும் சீனப் பாதுகாப்பில் இருக்கும் வடகொரியாவிற்கு எதிராக இயக்கும் வகையில் மிக அதிக ஆக்கிரோஷக் கொள்கைகளை வளர்த்துள்ளன. அவை இப்பொழுது ஒரு ஆதரவு கூட்டினை உருவாக்கிக்கொண்டு கூடுதலான ஏகாதிபத்திய ஊடுருவல் ஆசிய-பசிபிக்கில் தேவை எனக் கோருகின்றன; அதுதான் அவர்களின் சொந்த ஆத்திரமூட்டல் கொள்கைகளுக்கான சீனாவின் அச்சுறுத்தலுக்கு எதிர்ப்பலமாக இருக்கும் எனக்கருதுகின்றனர். இந்த ஆட்சிகளில் பிரதம மந்திரி ஷின்ஜோ ஏபே உடைய ஜப்பானிய அரசாங்கம் உள்ளது. இது அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து கிழக்கு சீனக்கடல் போன்ற இடங்களில் ஜப்பானிய இராணுவ முன்னெடுப்பு கோட்பாட்டை வளர்க்க முற்பட்டுள்ளது. அங்கு ஜப்பான் சீனாவுடன் சென்காகு/டயாவோயு தீவுகளைக் குறித்து கடுமையான மோதலை கொண்டுள்ளது. தென்கொரிய ஆட்சி வடகொரியாவில் இருந்து அணுவாயுத ஏவுகணைத் தாக்குதல்கள் எனக் கருதப்படும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் வகையில் “முற்கூட்டிய தாக்குதல்களுக்கு” தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. பிலிப்பனைன்ஸை பொறுத்தவரை, அது வாஷிங்டனுடன் ஒரு தளம் பற்றிய உடன்பாடு ஒன்றில் கையெழுத்திடத் தயாராக உள்ளது. இது தென் சீனக் கடலில் சீனக் கப்பல்களுடன் பல முறை மோதிய பின் வந்துள்ள நிலைப்பாடாகும். அமெரிக்க அதிகாரிகள் மூடல் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி வாஷிங்டன் ஆசியாவில் அதன் தலையீட்டை முடுக்கிவிட வேண்டும், அதுதான் பிராந்தியத்தில் இருக்கும் இந் நட்பு நாடுகளுக்கு உறுதியை அளிக்கும் என வலியுறுத்தியுள்ளனர். முன்னாள் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா கூறினார்: “அரசாங்கம் மூடப்பட்டு இருக்கையில் ஜனாதிபதி வெளிநாடு செல்வதை என்னால் கற்பனைகூடச் செய்ய முடியவில்லை.”காங்கிரசில் உள்ள குடியரசுக் கட்சியினரை அவர் கண்டித்துக் கூறினார்: “இது தேசியப் பாதுகாப்பை சேதப்படுத்தும் ஒரு அரசியல் விளையாட்டு. எமது தேசிய பாதுகாப்புற்கு தற்போதுள்ள அச்சுறுத்தல் இப்பொழுது ஆள்வதில் நாம் தோற்றிருப்பதுதான் [மற்ற நாடுகளை] இதை வலுவற்ற தன்மை எனக் காணும்.” அமெரிக்க வெளியுறவுகள் குழுவில் மூத்த உறுப்பினர் சார்ல்ஸ் குப்சன் கூறினார்: “இது கிழக்கு ஆசியாவில் மிகவும் முக்கியத்துவம் உடையது; அங்கு நாடுகள் நீண்டக்கால பூகோள அரசியல் போக்குகள் குறித்து உறுதியற்று உள்ளன. அமெரிக்கா பக்கம் சாய்வதா, சீனா பக்கம் சாய்வதா என்று முடிவெடுக்க முயல்கின்றனர். அதன் விளைவாக ஒபாமாவிற்கு, வாஷிங்டன் அதனை கவனிக்கின்றது என்பதைக் காட்டுவதற்கான மிகவும் முக்கியமான காலமாகும்.” தென் கொரியாவில் இருந்து பாதுகாப்பு மந்திரி ஹேகல் மூடலை “வியத்தகு முறையில், பொறுப்பற்ற முறையில் ஆளுவது .... உலகில் இப்பிராந்தியத்தில் உள்ள நம் நட்பு நாடுகளுக்கு இந்த உடன்பாடுகளில் நாம் உறுதியாக உள்ளோம் என்பதை உத்தரவாதம் அளிப்பது மிக முக்கியம் என்று நான் கருதுகிறேன்.”என்றார். தென் கொரியாவில் அமெரிக்கா 28,500 துருப்புக்களை நிலைநிறுத்தியிருப்பதற்கு ஆதரவு இல்லை என்றாலும், ஹேகல் திங்கன்று வாஷிங்டன் அந்நாட்டில் எண்ணிக்கையை குறைப்பதற்கு இல்லை, பிராந்தியத்திலும் குறைப்பதற்கு இல்லை என்று கூறினார். “நம் படைப்பாதுகாப்பு அல்லது படைகள் கொரியாவிலோ பிராந்தியத்தில் முற்ற இடங்களில் இருப்பதையோ மாற்றுதல் என்ற கருத்தே இல்லை” என்றார் ஹெகல். “செலவுக் குறைப்புக்களில் இயன்றதை தொடர்ந்து செய்வோம், ஆனால் அதே நேரத்தில் நம் பங்காளிகளுக்கு.... குறிப்பாக ஆசிய-பசிபிக்கில் நம் வாக்குறுதிகள் நிலைத்திருக்கும் என்று உறுதியளிப்போம்.” அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தலைவர் ஜெனரல் மார்ட்டின் டெம்ப்சே தென் கொரிய இராணுவத் தலைவர் ஜெனரல் ஜியோங் சியுங் ஜோவைச் சந்தித்து இரு இராணுவங்களுக்கு இடையேயான இராணுவ ஒருங்கிணைப்பை விவாதித்தார். கூட்டத்தில் வரவு-செலவுத் திட்ட பிரச்சினைகள் இடம் பெறவில்லை என்ற டெம்ப்சே, அமெரிக்க இராணுவ கொள்கையில் அரசாங்க மூடலின் தாக்கத்தை குறைத்தும் பேசினார். “முற்கருதுகோள் முறையான முற்கருதுகோள்தான். எங்கு நம் மிகப்பெரிய தேசிய நலன்கள் உள்ளனவோ அங்கு நாம் செய்யவேண்டிய கடமைப்பாடுகளுக்கு தேவையான ஆதாரங்களை திரட்ட வழிகாண்போம்” என்றார் அவர். அமெரிக்காவிலுள்ள நூறாயிரக்கணக்கான மத்திய அரசுத் தொழிலாளர்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டது பணம் இல்லை என்பதால் அல்ல என்பதையும், வோல்ஸ்ட்ரீட்டும் இராணுவ உளவுத்துறைக் அமைப்புகளும் அவற்றை தேவையற்றவை எனக் கருதுவதால்தான் என்பதை நிரூபிக்கிறது. ஆனால் அமெரிக்க ஆளும் உயரடுக்கு பாரிய நிதியங்களை மக்கள் ஆதரவற்ற ஆத்திரமூட்டும் இராணுவ நடவடிக்கைகளுக்கு ஆசிய-பசிபிக் பிராந்தியம் முழுவதும் செலவழிக்க உறுதி கொண்டுள்ளது. அமெரிக்க மற்றும் தென் கொரிய அதிகாரிகள் கொரியத் தீபகற்பத்தில் இருக்கும் அமெரிக்க, தென் அமெரிக்கப் படைகளின் கூட்டுக் கட்டுப்பாட்டை அமெரிக்காவிடம் இருந்து தென் கொரிய அதிகாரிகளின் கட்டுப்பாட்டிற்கு மாற்றுவது என்பது குறித்த முடிவை ஒத்தி வைத்தனர். நேற்று ஹேகல் தெற்குக்கொரியாவின் ஒரு தசாப்தத்தின் மிகப் பெரிய இராணுவ அணிவகுப்பிற்கு ஜனாதிபதி பார்க் க்யூன் ஹை உடனும், மறைந்த இராணுவ சர்வாதிகாரி ஜெனரல் பார்க் சுங்ஹீயின் மகளுடனும் சென்றிருந்தார். இந்த அணிவகுப்பு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நீண்ட தூரம் செல்லும் 500 அல்லது 1000 கி.மீ. சென்று தாக்கும் திறன் உடைய க்ரூஸ் ஏவுகணைகளை கொண்டிருந்தது. இது தென் கொரியாவை, வடக்கு கொரியாவிற்குள் இருக்கும் இலக்குகளை விருப்பப்படி தாக்க அனுமதிக்கும், தென் கொரிய இராணுவ கோட்பாடான“முற்கூட்டிய”தாக்குதல்கள் காட்டும் ஆபத்துக்களை எடுத்துக்காட்டுகிறது. |
|