தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி Germany: Left Party leader attacks PSG election campaign ஜேர்மனி: இடது கட்சித் தலைவர் PSG தேர்தல் பிரச்சாரத்தை தாக்குகிறார்
By Ulrich Rippert Use this version to print| Send feedback கடந்த சனிக்கிழமை, பொதுத் தேர்தலுக்கு ஒரு நாள் முன்பு, இடது கட்சி பிரதிநிதியும் அதன் பாராளுமன்ற துணைத் தலைவருமான பேட்ரா பௌவ் N-TV News தொலைக் காட்சிக்கு ஒரு நேர்காணலை வழங்கினார். அப்பேட்டியில் பௌவ், சோசலிச சமத்துவக் கட்சியை (Partei für Soziale Gleichheit, PSG) விமர்சித்தார். இக் கட்சி “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை” பிடித்துக் கொண்டிருக்கிறது என்று குற்றஞ்சாட்டிய அவர், இது ஜனநாயக விரோத முன்னணிப்படை குறித்த நிலைப்பாட்டிற்காக வாதிடுகிறது என்று கூறினார். மற்ற இடதுசாரிக் கட்சிகளான “ஜேர்மனிய கம்யூனிஸ்ட் கட்சி [DKP], ஜேர்மனியின் மார்க்சிச லெனினிசக் கட்சி [MLPD], சோசலிச சமத்துவக் கட்சி [PSG] போன்றவற்றுடன் பேச்சுக்கள் நடத்தத் தயாரா என்ற ஒரு வினாவிற்கு பௌவ் கொடுத்த விடை: “அவற்றுள் சில இடதுசாரி நிலைப்பாடுகளைப் பிரதிபலிக்கின்றனவா என்பது குறித்து எனக்குச் சந்தேகம்தான். அவற்றுள் சில பிளவுபட்ட ட்ரொட்ஸ்கிச குழுக்கள் இன்னமும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரக் கோட்பாட்டை கைவிட்டுவிடவில்லை. நீங்கள் ஒரு முன்னணியினர் என்று கூறிக்கொண்டு மக்களுக்கு எது நல்லது என்று ஆணையிட விரும்பினால் அது இடதுசாரியல்ல.” என்றார். பேட்ரா பௌவ் கிழக்கு பேர்லினில் (முன்னாள் கிழக்கு ஜேர்மனி GDR) உள்ள “கார்ல் மார்க்ஸ் கட்சிப் பள்ளி” இல் மார்க்சிச சமூக விஞ்ஞானம் பயின்றார். மார்க்சிச தத்துவத்தில், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் சொற்றொடரின் பங்கு என்ன என்பது பற்றியும் நன்கு தெரியும். ஆயினும்கூட அவர் பயனற்ற கம்யூனிச விரோதப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு PSG உடைய நோக்கங்கள் ஜனநாயக விரோதமானவை என்று குற்றம் சாட்டுகிறார். முதலாளித்துவ சிந்தனையாளர்களுக்கு, சோவியத் ஒன்றியத்திலும் அதன் ஆதரவு ஆட்சிகள் கிழக்கு ஐரோப்பாவிலும் ஜேர்மனிய ஜனநாயகக் குடியரசிலும் (GDR) இருந்த ஸ்ராலினிச சர்வாதிகாரத்தை, தொழிலாள வர்க்க சர்வாதிகாரம் என்று குறிப்பது ஒன்றும் புதிதல்ல, கார்ல் மார்க்ஸ் மற்றும் பிரெடெரிக் ஏங்கெல்ஸை ஸ்ராலினிச அடக்குமுறைக்காக குறைகூறுவதும் புதிதல்ல. 20ம் நூற்றாண்டின் இந்த பெரும் பொய்யை, பேட்ரா பௌவ் பலமுறையும் கூறுவது இடது கட்சியின் வலதுசாரி முதலாளித்துவத் தன்மையை பற்றி நிறையவே கூறுகிறது. பெரு வணிகத்தின் இலாப நலன்களுக்கு மேலாக தொழிலாளர்களுடைய நலன்களுக்கு உழைக்கும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கு எதிராக பௌவ் வெளிப்படையாக பேசுகிறார். உண்மைகளில் இருந்து நாம் ஆரம்பிப்போம். சமூகம் பற்றிய விஞ்ஞானரீதியான கோட்பாட்டை அபிவிருத்தி செய்கையில் மார்க்ஸும் ஏங்கெல்ஸும் மனிதகுலத்தின் வரலாறு வர்க்கப் போராட்டங்களின் வரலாறு என நிரூபித்தனர். பொதுவான தேவை என்பதில் சமத்துவத்தை அடித்தளமாக கொண்ட ஆதிப்புராதான கால சமூகத்தை தொடர்ந்து, மனித சமூகங்களின் அதிகரிப்புடன் வர்க்க வேறுபாடுகளின் வளர்ச்சியும் ஏற்பட்டன. வர்க்க சமூகத்தின் வளர்ச்சி மற்றும் மாற்றங்கள், சூழ்நிலைமைகளால் தீர்மானிக்கப்பப்பட்டன அல்லது உற்பத்தி முறைகளின் முன்னேற்றத்தினால் நிர்ணயிக்கப்பட்டன. ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் உற்பத்தியின் வளர்ச்சி பழைய சமூக உறவுகளுடன் மோதலுக்கு வந்தது. இவ்வகையில் சமூக மாற்றக்காலம் (புரட்சி) தொடங்கியது. தற்கால தொழில்துறை தொழிலாள வர்க்கம், முதலில் பிரெஞ்சுப் புரட்சிக்காலத்தில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வெளிப்பட்டது. அதையும் விட 1848 புரட்சியில் வெளிப்பட்டு இக்காலத்தில் இருந்துதான் “பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்” என்னும் சொற்றொடர் வழக்கத்திற்கு வந்தது. “சர்வாதிகாரம்” என்பது இங்கு “வர்க்க ஆட்சி” என்பதைவிட எவ்வித பொருளையும் வழங்கவில்லை. ஆனால் கடந்த காலத்திலும் இன்றும் கூட சலுகை பெற்ற சமூக வர்க்கங்கள் எப்பொழுதும் சிறுபான்மையாக இருப்பதுடன், அவற்றின் ஆட்சி எப்பொழுதும் தொழிலாள வர்க்கத்தை போலன்றி சமூகத்தில் பெரும்பான்மையாக இருப்பவர்களை அடக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புபட்டது. தொழில்துறை வளர்ச்சி எழுச்சியடைந்த பின், இது பண்புரீதியாக சமூக வளர்ச்சியில் ஒரு புதிய கட்டத்தை பிரதிபலிக்கிறது. கடந்த காலத்தில் வர்க்க ஆட்சி எல்லா மக்களுக்கும் தேவையானவற்றை உற்பத்தி செய்ய இயலாமையின் விளைவு என்றால், தற்கால தொழில்துறை இந்த மட்டுப்படுத்தலை கடந்தது. பாட்டாளி வர்க்கம் என்பது, உழைக்கும் மக்களது பாரிய பெரும்பான்மையை உள்ளடக்குகின்றது. இதன் வர்க்க ஆட்சி என்பது, ஒரு சலுகை படைத்த சிறுபான்மையின் மூலம் பெரும்பான்மையை அடக்குவதை அடித்தளமாக கொள்ளவில்லை. முற்றிலும் அதற்கு மாறாகத்தான் இருந்தது. தொழிலாள வர்க்கத்தின் ஆட்சியில் சிறுபான்மை மீது பெரும்பான்மையின் சர்வாதிகாரமான உண்மையான ஜனநாயகம் தொடங்குகிறது. எனவே பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்என்பது, உண்மையில் வர்க்க ஆட்சியின் கடைசிக் கட்டத்தை குறிப்பதுடன், வர்க்க பேதமற்ற சோசலிச சமுதாய மாற்றத்திற்கான தொடக்கத்தை முன்னெடுக்கின்றது. ஆனால் அத்தகைய பெரும்பான்மையின் ஒரு ஆட்சி வடிவம், உற்பத்தி சாதனங்கள் மீதான தனியார் சொத்துடமையை அகற்றுவதுடன் பிணைந்திருப்பதால், அதனால் இன்றைய உயரடுக்கின் சலுகைகளையும் அகற்றுவதால், முதலாளித்துவம் இப்பிரச்சினைகளைப் பற்றி மிகப் பெரிய குழப்பத்திற்கு எரியூட்டுவதுடன், ஆரம்பத்தில் இருந்தே தொழிலாள வர்க்கம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கத்தைக் கொண்ட எத்தகைய சுயாதீன இயக்கத்தினையும் ஒடுக்குகின்றது. 1871ம் ஆண்டு பாரிஸ் தொழிலாளர்கள் முதல்தடவையாக ஒரு தொழிலாளர் அரசாங்கத்தை நிறுவ முயன்றபோது, பாரிஸ் கம்யூனின் அனைத்து உறுப்பினர்களுக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டு அது நிறைவேற்றவும் பட்டது. இருபது ஆண்டுகளுக்குப் பின் ஏங்கெல்ஸ் இதுபற்றி பின்வருமாறு எழுதினார்: “ஜேர்மனிய நடுத்தர வர்க்க அற்பர்கள், மீண்டும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்னும் சொற்களில் முழு அச்சத்தைக் காண்கின்றனர். நல்லது, சீமான்களே, இந்தச் சர்வாதிகாரம் எப்படி இருக்கும் என அறிய விரும்புகிறீர்களா? பாரிஸ் கம்யூனைப் பாருங்கள். அதுதான் தொழிலாள வர்க்கத்தின் சர்வாதிகாரம். (Friedrich Engels, Introduction to: The Civil War in France by Karl Marx, March 18, 1891) பேட்ரா பௌவ், ஏங்கெல்ஸின் இச்சொற்கள் இன்றும் எவ்வளவு பொருந்தும் என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறார். அவர் பெருவணிகத்தின் இலாப நலன்களை பெரும்பாலான தொழிலாளர்களின் நலன்களின் தேவைகளுக்கு அடிபணிய செய்யும் தொழிலாளர்கள் அரசாங்கத்தை நிராகரிப்பது, தற்கால வங்கிகளின் சர்வாதிகாரத்தின் பாதுகாப்பதுடன் இணைந்து செல்கிறது. 2006ல் இருந்து பாராளுமன்ற துணைத் தலைவராக பேட்ரா பௌவ் உள்ளார். அவர் பாராளுமன்றம் விரைவில் செயல்பட வைத்தவகையில் வங்கிப் பிணையெடுப்புக்கள் என்பவற்றை கொண்டுவருவதில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தார். ஆலோசனை இல்லாமல், பெரும் விவாதங்கள் இல்லாமல், பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பரந்த உள்ளடக்கத்தை பற்றி படிக்கப் போதுமான நேரம்கூட கொடுக்காமல், ஐரோப்பிய பாராளுமன்றங்களில் வங்கிகளுக்கு 1600 ட்ரில்லியன் யூரோக்களை வழங்க சட்டங்கள் இயற்றப்பட்டன. இப்பொழுது இந்த நிதி, சிக்கன நடவடிக்கைகள் மற்றும் சமூகநலச் செலவுகளை வெட்டுவதன் மூலம் மீட்டெடுக்கப்படுகின்றன. சமூக சொத்து இத்தகைய ஒரு அடிப்படை மறுபங்கீடு செய்யப்பலாம் என்பதற்கு உடன்படுமாறு எப்பொழுது மக்கள் கேட்கப்பட்டனர்? இந்த நடைமுறை உண்மையில் நிதிய மூலதனத்தின் சர்வாதிகாரத்தை குணாதிசயப்படுத்தவில்லை என்றால், அது வேறென்ன? இந்நிலையில் இடது கட்சி தன்னுடைய நன்கு அறியப்பட்ட சிடுமூஞ்சித்தனமான இரட்டை விளையாட்டை விளையாடுகின்றது. நடவடிக்கைகளுக்கு இடது கட்சி விரைவில் ஒப்புக் கொண்டது. அவ்வாறான நடவடிக்கை அனைத்துக் கட்சிகளுடைய ஒப்புதலின் பேரில்தான் அது நடத்தப்பட முடியும். பின் ஒரு உண்மையான பாராளுமன்ற வாக்கெடுப்பில், இடது கட்சி பங்கெடுக்காவிட்டாலும் பெரிய பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில் அது அதற்கு எதிராக வாக்களித்தது. கட்சித் தலைவர்கள் ஒஸ்கார் லாபொன்டைன் மற்றும் கிரிகோர் கீஸி போன்றவர்கள் பின்னர் “பிணையெடுப்பு” முக்கியம் என்று தாங்கள் கருதுவதாகக் கூறினர். இது பிற அரசியல் பிரச்சினைகளுக்கும் பொருந்தும். மிகச் சமீபத்திய பாருளாமன்றத் தேர்தல் பிரச்சாரத்தை நினைவுகூர வேண்டும்; இதில் தீவிர அரசியல் முரண்பாடுகள் தவிர்க்கப்பட்டன. அனைத்துப் பாராளுமன்ற கட்சிகளும் இந்த அடிப்படையில் ஒன்றுபட்டன. எதிர்வரவிருக்கும் அரசாங்கம் எத்தகைய கூட்டணிக் கட்சிகளைக் கொண்டாலும், அதன் பொருளாதார, சமூகக் கொள்கைகள் பெரு வணிக, வங்கிகளின் இயக்குனர்கள் அறைகளில் நிர்ணயிக்கப்பட்டு, பெருவணிகத்தால் ஆணையிடப்படும். இது குறிப்பாக வெளியுறவுக் கொள்கைக்கும் பொருந்தும். கடந்த காலத்தில் ஆப்கானிஸ்தானில் ஏகாதிபத்திய யுத்தத்தில் மக்களைக் கேட்காமல் இராணுவம் (Bundeswehr) தலையிட்டது. அடுத்த அரசாங்கம் இன்னும் வலுவாக அமெரிக்க அழுத்தத்திற்கு உடன்பட்டு, சிரியா இன்னும் பல நாடுகளில் நடக்கவிருக்கும் போரில் ஜேர்மனியின் பங்கு அதிகரிக்கும். மக்களிடையே போருக்கு மகத்தான எதிர்ப்பு இருந்தாலும், இக்கொள்கை மிருகத்தனமாகச் செயல்படுத்தப்படும். ஆனால் இதுவும் போதவில்லை. சமூக வாழ்வின் முக்கியமான பகுதிகள் முற்றிலும் பொதுவான ஜனநாயகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, மக்களின் குறைந்தப்பட்ச ஜனநாயகக் கட்டுப்பாடு, பங்கைக்கூட கொள்ளவில்லை. பெருநிறுவன, வங்கிகளின் இயக்குனர் குழு அறைகளில் அன்றாடம் எடுக்கப்படும் முடிவுகள்தான் தொழிலாளர்களின் வாழ்க்கையை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாதிக்கின்றன. ஆனால் இவை குறைந்தப்பட்ச ஜனநாயகக் கட்டுப்பாடு அல்லது நியாயப்படுத்தப்படுதலுக்கு கூட உள்ளாக்கப்படுவதில்லை. எனவே சோசலிச சமத்துவ கட்சி –PSG- வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும், பொருளாதாரத்தின் மீது மக்களுடைய ஜனநாயகக் கட்டுப்பாடு நிறுவப்பட வேண்டும் என அழைப்பு விடுகிறது. அப்பொழுதுதான் தொழிலாள வர்க்கம் அதிகாரத்தைக் கைப்பற்றி தொழிலாளர்கள் அரசாங்கங்களை நிறுவுவதன் மூலம் உண்மையான ஜனநாயகம் தோற்றுவிக்கப்பட முடியும். PSG மீதான பௌவ் இன் தாக்குதலில் இன்னும் ஒரு அச்சுறுத்தும் கூறுபாடும் உள்ளது. கடந்த ஆண்டில் இருந்து பௌவ் வலதுசாரி தேசிய சோசலிச தலைமறைவான பயங்கவாதக் குழு –NSU- பற்றிய விசாரணை நடாத்தும் பாராளுமன்றக் குழுவில் இடது கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றார். பாதுகாப்புப் பிரிவுகள் அப்பட்டமாக NSU நடத்திய கொலைகளில் பங்கு கொண்டவவை என்றாலும், பௌவ் பலமுறையும் உளவுத்துறையின் தலைமைகளுடன் தனது நெருக்கமான ஒத்துழைப்பை வலியுறுத்தியுள்ளார். 1956 இல் ஜேர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை [KPD] தடை செய்வதில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரப் பிரச்சினை முக்கிய பங்கைக் கொண்டிருந்தது என்பதை நினைவு கூர்கையில், பௌவுடைய பேட்டி பெருகிய முறையில் பாதுகாப்புப் பிரிவுகளிடம் PSG ஐ பற்றி கண்டிப்பதுபோல் தோன்றுகிறது. கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச சர்வாதிகாரத்தில் இருந்து வெளிப்பட்ட இடது கட்சி மற்ற கட்சிகளுடன் கொண்டுள்ள ஒரே வேறுபாடு இன்னும் குறைந்த ஜனநாயக மரபுகளையும் கோட்பாடுகளையும் அது கொண்டிருப்பதுதான். தன்னுடைய முக்கியபணி கீழிருந்து வரும் எத்தகைய சமூக இயக்கத்தையும் அடக்குதல் என்று அது கருதுவதுடன், புரட்சிகர சோசலிசக் கட்சி கட்டமைக்கப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்தின் தாக்குதலுக்கு அழைப்பு விடுகிறது. |
|
|