World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Far-right parties forge alliance for the European elections தீவிர வலது கட்சிகள் ஐரோப்பியத் தேர்தல்களில் கூட்டை இணைக்க முற்படுகின்றனBy Christoph Dreier புதன் அன்று பிரான்சின் தேசிய முன்னணி (Front National -FN) இன் தலைவர் மரீன் லு பென் மற்றும் சுதந்திர டச் கட்சியின் (Dutch Freedom Party -PVV) தலைவர் கீர்ட் வில்டெர்ஸ் இருவரும் செய்தியாளர் கூட்டம் ஒன்றை டச்சுப் பாராளுமன்றத்தில் நடத்தினர். இரு அதி-வலது அரசியல்வாதிகளும் அவர்களுடைய கட்சிகள் கூட்டாக மே 2014 ஐரோப்பிய தேர்தல்களில் சுதந்திரத்திற்கான கூட்டணி (Alliance for Freedom) என்ற பெயரில் பங்கு பெறும் என்று அறிவித்தனர். மற்ற தீவிர வலது கட்சிளும் தங்கள் ஆதரவை அடையாளம் காட்டியுள்ளனர். லு பென்னும், வில்டெர்ஸும் தமது பிரச்சாரத்தின் மையத்தில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான தங்களின் எதிர்ப்பை முன்வைப்பர். வில்டெர்ஸ், “இது ஒரு வரலாற்றுப் புகழ் வாய்ந்த நாளாகும்; ஏனெனில் சுதந்திரம் இன்று தொடங்குகிறது” என்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். “ஐரோப்பிய உயரடுக்குகளில் இருந்து விடுதலை. பிரஸ்ஸல்ஸில் உள்ள அரக்கனிடம் இருந்து விடுதலை. நாம் பிரஸ்ஸல்ஸில் இருந்து இறைமையை மீட்டு தேசிய அரசுகளுக்கு கொடுக்க விரும்புகிறோம்”. ஐரோப்பிய ஒன்றியம் என்பது, நாம் ஒருவகை “அடிமை முறையில்” முடிந்துள்ளோம் என்று பொருளாகும் என்றார் லு பென். நாடுகள் தங்கள் நாணயங்கள், தங்கள் சட்டம், தங்கள் எல்லைகள் குறித்து மீண்டும் முடிவெடுக்க வேண்டும். இவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரான்ஸ் விலக வேண்டும் அல்லது ஒரு கருத்துக் கணிப்பு மூலம் பிரச்சினைக்கு முடிவு காண அழைப்பு விடுத்துள்ளார். லு பென் இன் கருத்துப்படி, ஐரோப்பிய ஒன்றியம் சரிந்துவிடும், பிரான்ஸ் அதற்கு தயாராக இருக்க வேண்டும் என்கிறார். ஐரோப்பிய சரிவு நெதர்லாந்திற்கு என்ன இழப்பை உண்டாக்கும் என்பதை PVV ஆராயும். சுதந்திரத்துக்கான கூட்டணி (Alliance of Freedom) மற்ற உறுப்பினர்கள் சேரும்வகையில் விரிவாக்கப்பட உள்ளது. கடந்த வாரக் கடைசியில் ஆஸ்திரிய சுதந்திரக் கட்சி (FPÖ) ஒரு பிரத்தியேகப் பேச்சை FN உடனும் பெல்ஜிய விளாம்ஸ் பெலாங், இத்தாலிய லீகா நோர்ட், ஸ்வீடன் டெமக்ராட்டுக்கள் மற்றும் ஸ்லோவாக் தேசியக் கட்சி (SNS) உடனும் நடத்தியது. FPÖ தலைவர் Heinz-Christian Strache கருத்துப்படி, இக்கூட்டம் "ஐரோப்பிய மட்டத்தில் ஒத்துழைப்பு பொதுவான குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள் பற்றி தீவிர கருத்துப்பறிமாற்றங்களைக் கண்டது.” பொது வேலைத்திட்டத்தின் மையக் கருத்துக்கள் குடியேற்றத்திற்கு எதிரான போராட்டம், “இஸ்லாமிய மயமாகல் அச்சுறுத்தல்”, மற்றும் “யூரோவின் தவறான வடிவமைப்பு”. ஆறு கட்சிகளின் பிரதிநிதிகள் யூரோவிற்குப் பதிலாக தேசிய நாணயங்கள் நீண்ட காலத்தில் கொண்டவரப்பட வேண்டும் என்று ஒப்புக் கொண்டனர். புதிய கூட்டணி ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஒரு குழுவை அமைக்க முனையும், இதற்கு குறைந்தப்பட்சம் ஏழு நாடுகளில் இருந்து 25 உறுப்பினர்கள் தேவைப்படும். ஜேர்மனிக்கு வலதுசாரி மாற்றீடு அழைப்பை ஏற்கவில்லை. “இரு கட்சிகளும் எங்களைக் கேட்க வருவதில்லை, இப்பொழுது அல்லது வருங்காலத்திலும்” என்று கட்சித் தலைவர் பேர்ன்ட் லுக்க ntv சனலிடம் கூறினார். “தீவிர வலதுடன் நாங்கள் செய்வதற்கு எதுவும் இல்லை” என்றார். ஐக்கிய இராச்சிய சுதந்திரக் கட்சியும் (UKIP) கூட்டில் இருந்து தன்னை ஒதுக்கி வைத்துக் கொண்டுள்ளது. வெளிப்படையான பாசிச பிரித்தானிய தேசியக் கட்சி (BNP) மற்றும் ஹங்கேரிய Jobbik ம் சுதந்திரத்துக்கான கூட்டணி (Alliance of Freedom) ஆல் நிராகரிக்கப்பட்டுவிட்டது. கூட்டின் உறுப்பினர்களுக்கு இடையே வேறுபாடுகளும் உள்ளன. FN தெளிவாக யூத எதிர்ப்பு வேர்களைக் கொண்டிருக்கையில், வில்டெர்ஸின் PVV இதுவரை ஒரு வலுவான இஸ்ரேலிய சார்பு நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது. 2007 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட முந்தைய ஐரோப்பிய பாராளுமன்ற வலதுசாரிக் கட்சிகளின் கூட்டுக்களான Identity, Tradition, Sovereignty பிரிவுகள், தேசிய அழுத்தங்களின் விளைவாக விரைவில் சிதைந்து போயின. தற்போது தீவர வலது தங்கள், அதிர்ஷ்டத்தில் ஒரு மாறுதலை உணர்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு ஐரோப்பிய நாட்டின் மீதும் கடந்த ஐந்து ஆண்டுகளாக நடைபெற்றுவரும் தீவிர சமூக தாக்குதல்கள், ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் நிறுவனங்களையும் மக்களின் பரந்த அடுக்குகளிடையே குறைமதிப்பிற்கு உட்படுத்தியுள்ளது. தீவிர வலது தங்கள் சொந்த பிற்போக்குத்தன செயற்பட்டியலை திணிக்க, இந்த மகத்தான எதிர்ப்பை பயன்படுத்த விரும்புகிறது. சில ஆண்டுகளாக, தனித்தனி தீவிர வலது கட்சிகள், சமூகம் தொடர்பான வார்த்தைஜாலங்களுடன் தங்கள் பிற்போக்குத்தன நிலைப்பாடுகளை இணைக்க முற்பட்டுள்ளன. வில்டெர்ஸ் தன்னுடைய தீவிர புதிய-தாராளவாத பொருளாதாரக் கொள்கை கோரிக்கைகளை பின்புறம் தள்ளி, இப்பொழுது தன்னுடைய தீவிரத்தை முக்கியமாக ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக பயன்படுத்தும் நோக்கம் கொண்டுள்ளார். 2012 டச்சுத் தேர்தல்கள் அவர் "ஐரோப்பா மீதான வாக்கெடுப்பு, யூரோ, ESM பிணை எடுப்பு நிதி, பிரஸ்ஸல்ஸ் மற்றும் அதன் அதிகாரத்துவத்தின் ஆணைகள் பற்றிய கருத்துக் கணிப்பு” என்று கூறியுள்ளார். FN, பெருகிய முறையில் பிரெஞ்சு அரசாங்கத்தின் சிக்கன நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து முக்கிய நிறுவனங்கள் தேசியமயமாக்கப்பட வேண்டும் என்றும் பிரான்சில் பிறந்த தொழிலாளர்களுக்கு உயர்ந்த சமூக நலனகள் பற்றியும் பேசுகிறது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தீவிர வலதின் எதிர்ப்பு, தொழிலாளர்களுடைய நலன்களுடன் பொதுவாக எதையும் கொண்டிருக்கவில்லை. சுதந்திரத்திற்கான கூட்டணி (Alliance for Freedom) முதலாளித்துவத்தின் ஒரு பிரிவின் நலன்களையும், அதேபோல் மத்தியதர வகுப்பின் வசதியான பிரிவின் நலன்களைப் பற்றித்தான் பேசுகிறது; இவை தேசிய பூசல்கள் பெருகியுள்ள நிலையில் தேசிய நாணயம் திரும்ப வரவேண்டும், தேசிய பொருளாதாரக் கொள்கை திரும்ப வேண்டும் என எதிர்பார்க்கின்றன. இது தொழிலாளர்களுக்கு முற்றிலும் நேரடி விரோதமானதாக உள்ளது. கூட்டால் கோருவதன் படி, பொருளாதாரப் பாதுகாப்புவாதம் மற்றும் தேசிய நாணயங்களுக்கு திரும்புதல் என்பது ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைகள் மற்றும் யூரோவைப் போன்றே தொழிலாளர்களுக்கு பேரழிவு தரும் விளவுகளை உருவாக்கும். FPÖ, Lega Nord, SNS, PVV ஆகியவற்றுடன் கூட்டின் ஏழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஏற்கனவே தேசிய அரசாங்கங்களில் பங்கேற்றுள்ளனர். கூட்டணியின் அனைவரும், தொழிலாளர்களின் மீதான சமூக தாக்குதல்களுக்கு பெயர்போனவை. அக்டோபர் 2010 முதல் 2012 வரை PVV டச்சு அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுத்தது; அது குடியேறுவோருக்கு எதிராக மிருகத்தன சட்டங்களைச் செயல்படுத்தியது, தொழிலாளர்கள் எதிர்ப்புக்களுக்கு எதிராக அரச அதிகாரங்களைப் பெருக்கியது. தேசிய அரசாங்கங்களில் பங்கெடுக்காத பிற வலதுசாரிக் கட்சிகள், ஆளும் வட்டங்களால் நாடப்படுகின்றன. உதாரணமாக சிறிது காலமாக பிரான்சின் கன்சர்வேடிவ் UMP, FN ஐப் பெரிதும் ஈர்க்க முற்படுகிறது, முடிந்தால் ஒத்துழைப்பு பற்றியும் விவாதிக்கிறது. கிரேக்கத்தில் வெளிப்படையாக அரசால் பாசிச கோல்டன் டோன் முறையாக கட்மைக்கப்பட்டு தொழிலாளர்களை அச்சுறுத்துகிறது, அவர்களின் எதிர்ப்பை ஒடுக்குகிறது. இத்தெளிவான சான்று இருந்தபோதிலும் கூட, வலதுசாரிக் கட்சிகள் தங்கள் ஐரோப்பிய ஒன்றிய எதிர்ப்பு நிலைப்பாட்டையும், சமூக வார்த்தைஜாலங்களையும் பயன்படுத்தி பெரும்திகைப்புக்குட்பட்ட குட்டி முதலாளித்துவத்தின் கூறுபாடுகளினதும், குழப்பமான தொழிலாளர்களினதும் வாக்குகளை வெல்ல விரும்புகிறது. தற்போதைய கருத்து கணிப்புக்கள், PVV நெதர்லாந்தில் 21% வாக்குகளுடனும், FN பிரான்சில் 24% உடனும் வரவிருக்கும் ஐரோப்பியத் தேர்தல்களில் பெரிய கட்சிகளாக தத்தமது நாடுகளில் வெளிப்படும் என தெரிவிக்கின்றது. அதிவலது, ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூகத் தாக்குதல்களுக்கு எதிப்பாளர்களாக தம்மை காட்டி தங்கள் செல்வாக்கை அதிகரித்துக் கொள்ள முடியும்; ஏனெனில் அனைத்து நடைமுறைக் கட்சிகளும் அமைப்புக்களும் ஐரோப்பிய ஒன்றியத்தையும் அதன் நிறுவனங்களையும் பாதுகாக்கின்றன. ஐரோப்பா முழுவதும் சமூக ஜனநாயகக் கட்சிகள் சமூக வெட்டுக்களை சுமத்துவதில் முன்னணியில் உள்ளன; தொழிற்சங்கங்கள் பெரும் பணி நீக்கங்களை சுமத்த, ஆலைகளில் ஊதியக் குறைப்புக்களைச் செய்ய உதவுகின்றன. பேரளவிலான இடதுசாரி அமைப்புக்களான ஜேர்மனியின் இடது கட்சி, கிரேக்கத்தில் தீவிர இடதுகளின் கூட்டான சிரிசா போன்றவை ஐரோப்பிய ஒன்றியத்தை பாதுகாப்பதோடு, பழைய அதிகாரத்துவக் கருவியுடன் தொழிலாளர்களை கட்டிவைக்க மற்றும் தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்கம் வளர்வதைத் தடுக்க ஒவ்வொரு முயற்சியையும் மேற்கொள்கின்றன. இது தீவிர வலதிற்கு தளம் அமைக்கிறது. மேலும் சமூக முரண்பாடுகள் தீவிரமாகையில், போலி இடதுகள் மேலும் வலதிற்கு நகர்ந்து அரசுடன் ஒட்டிக் கொள்வர். இவர்கள் தொழிலாள வர்க்கம் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு காட்டும் பெருகிய எதிர்ப்பிற்கு விடையளிக்கும் வகையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் பிற்போக்குத்தன நிறுவனங்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்றன. சமீபத்தில் ஐரோப்பிய இடது குழு, ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைமை பதவிக்கு மக்களால் நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கூறியுள்ளது; இந்த முற்றிலும் ஜனநாயகத் தன்மை அற்ற நிறுவனத்திற்கு ஒரு ஜனநாயக வண்ணம் கொடுக்க முற்படுகிறது. ஆணையம்தான் ஐரோப்பிய ஒன்றியத்தின் சமூகத் தாக்குதல்களுக்கான முக்கிய பொறுப்பைக் கொண்டுள்ளது. சிரிசா தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸ், ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் பதவிக்கு வேட்பாளர் என்று பேசப்படுகிறார். ஜேர்மனிய இடது கட்சியின் தலைவர் கட்ஜா கிப்பிங் ஐரோப்பிய ஒன்றியத்தின் பின்னே அணிவகுத்து நிற்கிறார் மற்றும் ஐரோப்பிய சமூக உடன்பாடுகளை ஏற்று கொள்வதன் மூலம் தொழிலாளர்களின் சமூக நிலைமைகளை மேம்படுத்தும் கருவியாகவும் மாற்ற முடியும் என்று கூறுகிறார். இந்த நிலைமைகளின் கீழ், ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான மக்களின் விரோதப்போக்கிற்கு அழைப்பு விடுவதின் மூலம்தான் வலதுகள் வளரமுடியும். தீவிர வலது அச்சுறுத்தலுக்கு எதிரான போராட்டம் என்பது போலி இடது போக்குகளுக்கு எதிரான போராட்டத்தில் இருந்தும், தொழிலாள வர்க்கத்தை சுயாதீனமாக அணிதிரட்டுவதற்கான ஒரு போராட்டத்தில் இருந்தும் பிரிக்க முடியாததாகும். இது ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான போராட்டத்தில், ஐரோப்பிய ஒன்றியம், வங்கிகள் மற்றும் பெருநிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக இயக்கப்பட வேண்டும். |
|