World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US Census: Mobility among young adults at 50-year low

அமெரிக்க சனத்தொகைக் கணக்கெடுப்பு: இளைஞர்களிடையே இடம்பெயர்வாற்றல் 50 ஆண்டுகளில் குறைவாகவுள்ளது

By Bryan Dyne 
19 November 2013

Back to screen version

அமெரிக்க மக்கள் கணக்கெடுப்பு அமைப்பு கொடுத்துள்ள 2013 ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, 25-29 வயது வரையிலான இளைஞர்களின் இடம்பெயர்வாற்றல் இப்பொழுது 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ளது. இது 2007-2009 இன் பெரும் பின்னடைவு, அதேபோல் தற்பொழுது நடைபெறும் பொருளாதாரச் சரிவின் விளைவுமாகும்.

இந்த வயதுப் பிரிவில் 4.9 மில்லியன் அல்லது 23.3% மட்டுமே மார்ச் 2012 முதல் மார்ச் 2013 க்குள் இடம்பெயர்ந்தனர்; இது ஓராண்டிற்கு முன்பு 24.6% ஆக இருந்தது. இப்புள்ளிவிவரம் குறைந்தப்பட்சம் 1965 இலிருந்து கீழ்நோக்கிய சரிவைத்தான் கொண்டுள்ளது; அந்த ஆண்டு அது 36.7% என இருந்தது.

குடிபெயர்தலின் சரிவு, பெரிதும் நாட்டிற்குள்ளேயே இடம்பெயர்வதில் சரிவு ஏற்பட்டுள்ளதால் வந்துள்ளது; இது இப்பொழுது மிக குறைவான பதிவு உடையதாக உள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் கூறுகிறது. மக்கள் கணக்கெடுப்புத் தகவல்களும் 25 வயது முதல் 29 வரையிலானவர்களில் 3.4 சதவீதத்தினர்தான் மாநிலத்தை விட்டு வெளியேறுகின்றனர் என்று காட்டுகிறது; இது முந்தைய ஆண்டின் 3.8% இலிருந்து சரிவு ஆகும். ஆயினும் 2010ல் மிகவும் குறைந்த 3.2% ஐவிட அதிகம்தான்.

25-29 வயதுக்காரர்களிடையே, 2007 இலிருந்து 2012 வரை வீடுகளை சொந்தமாக வைத்திருந்ததும் குறைந்துவிட்டது; முன்பு இது 40.6% இலிருந்து 34.3% ஆக. இச்சரிவு அனைத்து வயதுக் குழுக்கள் முழுவதிலும் 68% இலிந்து 65% என ஆகியுள்ளது.

இப்புள்ளிவிவரங்கள் இளம் வயது வந்தோர், நிதிய நெருக்கடியின் போது வந்தவர்கள் மீளவில்லை என்பதைக் குறிக்கின்றன. தொழிலாளர் துறைப் புள்ளிவிவர அலுவலகத்தின்படி, ஜூலை 2009ல் வேலையின்மை விகிதம் 16-24 வரை 18.5% என இருந்தன. நான்கு ஆண்டுகளுக்குப்பின், பொருளாதார “மீட்பு” இந்த வயதுக் குழுவின் வயதான உறுப்பினர்களிடையே நிதிய உறுதிப்பாட்டை ஏற்படுத்தவில்லை.

மாறாக, இளம் வயதிற்கு வந்தோர், தாங்களே வாழத் தயாராக இருக்க வேண்டியவர்கள் பெற்றோர்கள், பிற உறவினர்கள் அல்லது நண்பர்களுடன் வசிக்கும் கட்டாயத்தில் உள்ளனர். பட்டப்படிப்பு தகுதி உடையவர்கள் கூட பாதிபேர் ஒன்று வேலையற்று உள்ளனர், அல்லது தகுதிக்குக் குறைவான வேலையில் உள்ளனர். இது வாழ்க்கைக்கான உத்தியோகத்தை தொடர்வதில் தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது;  அதேபோல் நீண்ட கால உறவுகளை நிறுவுதல், குழந்தைகளைப் பெறுதல் இவற்றிலும் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் பிறப்பு விகிதம் ஓரளவு இதைப் பிரதிபலிக்கிறது. அனைத்து குழந்தைபெறும் வயதுடைய பெண்களிடையே பிறப்பு விகிதம் 1,000 பெண்களுக்கு 63 என இருந்தது; புள்ளிவிவரப்படி இது முந்தைய ஆண்டிலிருந்து சிறிதும் மாறவில்லை.

இந்த இளம் மக்களின் வாழ்வு, நிறுத்தத்தில்தான் உள்ளது. வேறுவிதமாகக் கூறினால், கிட்டத்தட்ட 25-34 வயதில், ஐந்து வயதிற்கு வந்தோரில் ஒருவர் சமூகத்திலிருந்து தொடர்பற்று உள்ளார்; வேலையும் பார்க்கவில்லை, பள்ளியிலும் இல்லை. இவர்கள் அன்றாடம் தப்பித்து உயிரோடு இருக்கத்தான் முயல்கின்றனர்.

தனியார் சனத்தொகைக் குறிப்பு அமைப்பின் துணைத் தலைவரான மார்க் மாதெர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார்: “இளம் வயதிற்கு வரும் நிலை மிகவும் சிக்கலாகவும் நீடித்தும் போய்விட்டது; ஏராளமானவர்கள் நிதிய சுதந்திரம் அடைய சிரமப்படுகின்றனர். பலரும் அதை அடைவர், ஆனால் கடந்த காலத்தைவிட மிகவும் பிற்பட்டுத்தான். நாம் இன்னும் பல இளம் வயதிற்கு வந்தோர்கள் வாடிக்கையாக தங்கள் 30 வயது வரை பெற்றோர் பாதுகாப்பில் இருந்து நீங்கக் காத்திருப்பதைத்தான் காண்கிறோம்.”

சனத்தொகைப் பரம்பல் ஆராய்ச்சியாளரான ப்ரூக்கிங்ஸ் நிறுவனத்தில் இருக்கும் வில்லியம் எச். பிரேயும் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் பேசினார்: “பல இளம் வயதிற்கு வந்தோர், குறிப்பாக கல்லூரி பட்டம் அற்றவர்கள், இன்னும் தங்கள் இடத்திலிருந்து நகரமுடியவில்லை. அவர்களுக்கு வெளியே செல்லுவது என்பது தற்காலிகத் தன்மையைவிட அதிகம் ஆகும், இது ஒரு புதிய வாடிக்கையாக மாறலாம்.”

இப்போக்கு அநேகமாகத் தொடரும். இந்த ஆண்டு முன்னதாக அமெரிக்க முன்னேற்றத்திற்கான நிலையம் (Centre for American Progress) நடத்திய ஆய்வு ஒன்றின்படி வேலையின்மை விகிதம் அமெரிக்காவில் 16-24 வயதினருக்கு 16.2% என உள்ளது. ஆனால் அறிக்கை சுட்டிக்காட்டுவது போல், இளவயது வேலையின்மையில் சரிவு என்பது புதிய வேலைகள் கண்டுபிடிக்கப்பட்டன என்ற பொருளைத்தராது, மாறாக இளம் சமுதாயம் வேலை கிடைக்காததால் தேடுவதை நிறுத்திவிட்டனர் என்பதாகும்.

மேலும் தொழிலாளர் தொகுப்பில் இல்லாத இளைஞர்களின் சதவிகிதம் (எனவே வேலையின்மை புள்ளிவிவரங்களில் சேர்க்கப்படாதவர்கள்), ஆனால் வேலை விரும்புவோர் 11சதவிகிதமாகும். அனைத்து வயதிலும் கணக்கில் எடுக்கப்படாதவர்கள், தொழிலாளர் தொகுப்பில் இருப்பதால், ஆனால் வேலை நாடுவோர் விகிதம் 7.1% ஆகும்.

இளம் வயதிற்கு வந்தோர் குடிபெயர்தலில் சரிவு இளைஞர்களால் உணரப்படும் கடுமையான மாணவர் கடனைப் பற்றியும் குறிப்பிடுகிறது. நுகர்வோர் நிதியப் பாதுகாப்பு நிலையத்தில் சமீபத்திய கண்டுபிடிப்புக்கள் மொத்த மாணவர் கடன் மே 2013ல் 1.2 டிரில்லயன் டாலர்களைவிட அதிகமாயிற்று,15 மாதங்களுக்கு முன்பு 1 டிரில்லியன் டாலர்களிலிருந்தது. இப்பொழுது மொத்தம் 1 டிரில்லியன் டாலர்கள் மாணவர் கடன் உத்தரவாதமாக உள்ளது அல்லது கூட்டாட்சி அரசாங்கத்தால் வைக்கப்பட்டுள்ளது; அதே நேரத்தில் 200 பில்லியன் டாலர்கள் தனியார் கடன் கொடுப்போர் அளித்தவையாகும்.

இது மாணவர் கடனில் 20% அதிகம் ஆகும். மற்ற கடன்களைவிட இது மிகவும் அதிகமாகும். கடன் அட்டைக் கடன் 843 பில்லியன் டாலர்களிலிருந்து 857 பில்லியன் டாலர்கள் என அதாவது 2% மட்டுமே உயர்ந்துள்ளது. அமெரிக்காவில் மாணவர் கடன் இப்பொழுது வீடுகள் அடைமானத் தொகையைவிட அதிகமாகிவிட்டது.

மாணவர் கடன் அதிகரித்துள்ளமை, பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் பயிற்சிக் கட்டணங்கள் அதிகரித்துள்ளதின் விளைவாகும். பொதுப் பல்கலைக்கழகங்களில் சராசரி பயிற்சிக் கட்டணம் மாநில வாசிகளுக்கு 8,400 டாலர்கள் என்று 2013-2014 பள்ளி ஆண்டும், 19,100 டாலர்கள் வெளி மாநிலத்தவருக்கு என்றும் உள்ளது. தனியார் நிறுவனங்களில் சராசரி செலவு 30,500 டாலர்கள் என உயர்ந்துள்ளது.

இதன் விளைவாக பட்டப்படிப்பை முடித்தவர்கள் சராசரியாக 28,000 டாலர்கள் மாணவர் கடனை கொண்டுள்ளனர். எட்டில் ஒருவர் 50,000 டாலருக்கும் மேலான கடனைக் கொண்டுள்ளனர். கிட்டத்தட்ட இவர்களில் 7 மில்லியன் பேர் திருப்பித்தர முடியாதுள்ளனர். இரண்டு ஆண்டு காலத்திற்குக் கொடுக்கப்படாத விகிதம் 10% என்று 2011ல் உள்ளது; மூன்று ஆண்டு திருப்பித் தராத விகிதம் 14.7% என 2010ல் உயர்ந்துள்ளது.