தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Obamacare exposed: The gutting of health care for workers ஒபாமாகேர் அம்பலமானது: தொழிலாளர்களுக்கான மருத்துவ காப்பீடு வெட்டப்படுகிறது
Kate
Randall Use this version to print| Send feedback கட்டுப்படியாகக் கூடிய மருத்துவ-காப்பீட்டு சட்டம் (Affordable Care Act - ACA), பராக் ஒபாமாவின் இந்த பிரபல உள்நாட்டு காப்பீட்டு கொள்கை, பெருவியாபார நலன்களுக்கு அமெரிக்க மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறையை மறுகட்டமைப்பதை நோக்கமாக கொண்ட ஒரு சீர்திருத்த விரோத நடவடிக்கை என்றரீதியில் ஒவ்வொரு நாளும் அம்பலமாகி வருகிறது. அந்த சட்டம் அமெரிக்க மக்களுக்கு குறைந்த செலவில், தரமான மருத்துவ காப்பீட்டு சேவையை வழங்கும் என்ற ஜனாதிபதியின் தொடர்ச்சியான வாதங்கள் ஒரு திட்டமிட்ட பொய்யாகும். அமெரிக்க மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறையில் ஓர் உண்மையான சீர்திருத்தமென்பது அனைவருக்கும் உயர்தர மருத்துவ பாதுகாப்பை வழங்கக்கூடும். அது ஆயிரக்கணக்கான புதிய மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஏனைய மருத்துவத்துறை வல்லுனர்களுக்கு பயிற்சி வழங்கும். அது நோய்களைத் தடுக்கவும், அவற்றை இல்லாதொ-ழித்து ,அதற்கான ஆராய்ச்சியில் பில்லியன் கணக்கான டாலர்களை அர்ப்பணிக்கக்கூடும். அது வாழ்வின் தரத்தை உயர்த்தி, மருத்துவ தொழில்நுட்பத்தின் அபிவிருத்திகளோடு இணைந்து மனித வாழ்நாளை அதிகரிக்கச் செய்யும். இந்த விஷயங்களோடு, பொதுவாக ஒபாமாகேர் என்றழைக்கப்படும் மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறையை செப்பனிடும் நடவடிக்கைக்கு எந்த தொடர்பும் இல்லை. அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு வழங்குவதென்று வரும்போது, அது வர்க்க பிளவுகளை ஆழப்படுத்தி அதற்கு நேரெதிராக செயல்படும். ACA படிப்படியாக தொழில் வழங்குனர்களுக்கும் அரசிற்கும் செலவுகளைக் குறைக்கும், அதேவேளை மில்லியன் கணக்கான சாமானிய மக்களுக்கு மருத்துவ சேவைகளைக் குறைத்து, அவற்றை பங்கீடு செய்கிறது—அதேசமயம் மருத்துவ காப்பீட்டு துறையின் இலாபங்களை அதிகரிக்க செய்கிறது. செவ்வாயன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் CEO கவுன்சிலுக்கு முன்னால் அளித்த குறிப்புகளில், ஒபாமா அவரது மருத்துவ காப்பீட்டு அமைப்புமுறையை செப்பனிடும் நடவடிக்கை "தற்போதைய தனியார் காப்பீட்டு அமைப்புமுறையின்" அடிப்படையில் அமைக்கப்பட்டிருப்பதாக வலியுறுத்தினார். உண்மையில் அது மருத்துவ காப்பீட்டு வழிவகைகளில் முதலாளித்துவ சந்தையின் அதிகாரத்தை விரிவாக்குகிறது. அதன் முக்கிய வழிவகையானது காப்பீடு இல்லாதவர்கள் தனியார் காப்பீட்டாளர்களிடம் இருந்து காப்பீட்டைப் பெற வேண்டும் அல்லது உள்நாட்டு வருவாய் சேவை அமைப்பால் அமுலாக்கப்பட்ட அபராதத்தைச் செலுத்த வேண்டுமென கோருகிறது. அங்கே காப்பீட்டு நிறுவனங்களின் கட்டணங்கள் மீது, அவர்கள் திணிக்கும் கைக்கு மிஞ்சிய செலவுகள் மீது, அல்லது மக்களின் மருத்துவ காப்பீட்டு தேவைகளைச் சுரண்டுவதில் இருந்து அவர்கள் உறிஞ்சும் இலாபங்கள் மீது அங்கே உண்மையான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை. மத்திய அரசின் HealthCare.gov தளத்தை படர்ந்துள்ள தொழில்நுட்ப பிரச்சினைகள் மற்றும் ACAஇன் கீழ் அமைக்கப்பட்ட அரசு பரிவர்த்தனை மையங்கள் (exchanges) மீது கவனம் குவிந்துள்ள நிலையில், நிஜமான பிரச்சினையோ வழங்கப்படும் படுபாதாள திட்டமாக உள்ளது. அந்த ஹெல்த்கேர் சட்டம் சில குறிப்பிட்ட காப்பீட்டு விஷயங்களைக் கட்டாயமாக நிர்பந்திப்பதோடு, காப்பீடு எடுக்கப்பட்ட நிலைமைகளுக்கு முந்திய உதவி நிலைமைகளை மக்களுக்கு கிடைப்பதை மறுக்க முடியாது, ஆனால் காப்பீட்டு நிறுவனங்கள் அவற்றின் விதிமுறைகளின்கீழ் கட்டண கொள்கைகள் மற்றும் பெருத்த காப்புறுதி தவணைத் தொகைகள், தள்ளுபடி செய்ய கூடியவை மற்றும் இத்தகைய கட்டாய சேவைகளுக்கான தொகையை ஈடுசெய்ய பணத்தை அவரவர் சொந்தமாக செலுத்த செய்வது ஆகியவற்றைத் தடைசெய்ய அங்கே அந்த சட்டத்தில் ஒன்றுமே இல்லை. காப்பீட்டைப் பெறும் உழைக்கும் மக்கள், ஒபாமாகேர் பரிவர்த்தனை மையங்கள் மூலமாக விற்கப்படும் "எளிய" காப்பீடுகள் பெயரளவில் மட்டுமே "காப்பீடுகளாக" உள்ளன என்ற கொடிய எதார்த்தத்தை எதிர்கொள்கின்றனர். மலிவான "வெண்கல பிரிவு" காப்பீடுகளில் பாரியளவு அவரவர் சொந்தமாக பங்குசெலுத்துவது உள்ளடங்கி உள்ளன, பல மாநிலங்களில் தனிநபருக்கு $5,000 மற்றும் ஒரு குடும்பத்திற்கு $10,000 செலுத்த வேண்டும், அதுவும் காப்பீட்டு காலம் தொடங்குவதற்கு முன்னரே முழு தொகையையும் செலுத்தியாக வேண்டும். மருத்துவர் வந்து பார்க்கும் செலவுகள், மருத்துவமனையில் தங்கும் செலவுகள் மற்றும் ஏனைய சேவைகளுக்கான செலவுகள் ஆகியவற்றின் கூடுதல்-தொகைகள் மற்றும் கூடுதல்-காப்பீட்டு பயன்கள், தற்போதைய தனிநபர் காப்பீட்டு சந்தையோடு ஒப்பிட்டால் கணிசமான அளவிற்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த தரக்குறைவான காப்பீடுகளை வாங்க பொருளாதார தேவைக்குள் தள்ளப்படுபவர்களின் கதி மிகவும் அழிவுகரமாக இருக்கும். தொழிலாளர்களின் ஒரு குடும்ப உறுப்பினர் ஒரு முக்கிய மருத்துவ தேவையை எதிர்கொள்ள வேண்டியிருந்தால், அல்லது சாதாரணமாக அவர்கள் சிகிச்சைக்குச் செல்ல வேண்டியிருந்தால் தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கான டாலர்களைச் செலவு செய்ய வேண்டியதிருக்கும். இந்த காப்பீடுகளுக்குள் இருப்பவர்கள் குறைந்த ஆரோக்கியத்துடன் தான் இருப்பார்கள், அவர்களின் ஒபாமாகேர் காப்பீட்டின் விளைவாக புதிய உடல்நலக் குறைகளையும் அவர்கள் எதிர்கொள்ளக் கூடும். அதிக செலவாகும் என்பதற்காக ஒரு குழந்தையின் நோய்க்கு சிகிச்சை அளிக்கப்படாமல் கூட போகலாம்; ஒரு குடும்பம் கூடுதல்-காப்பீட்டு பயனுக்குரிய செலவை செய்ய முடியாமல் மருத்துவமனையில் சேர்வது தவிர்க்கப்படலாம். மக்கள் நோய்வாய்பட்டு சாகக்கூடும். ஏனையவர்கள் காப்பீட்டில் சேராமல் அபராதம் செலுத்துவதைத் தேர்ந்தெடுக்கலாம், ஏனென்றால் (1) அவர்களால் காப்பீட்டுத் தவணைத் தொகையை செலுத்த முடியாமல் இருக்கலாம், அல்லது (2) காப்பீடு மிகவும் தரக்குறைவாக இருக்கிறது—காப்பீட்டிற்காக கையிலிருந்து செலவிடும் தொகை மிக அதிகமாக இருக்கிறது—அதைவிட காப்பீட்டில் சேராமல் அபராதம் செலுத்துவதே மேல் என்பதால் இருக்கலாம். காப்பீட்டு நிறுவனங்கள் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைக்கும் தொகையால் அவர்களின் இலாபங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதளவிற்கு வறண்டு போய்விட்டதாக கருதினால், அவை அவற்றின் தவணைத் தொகையையும் அதிகரிக்க வாய்ப்புள்ளது. அரசாங்கமே ஒப்புக் கொண்டபடி, “ஏறத்தாழ அனைவருக்குமான மருத்துவ காப்பீடு" என்று ஒபாமா வலியுறுத்திய அந்த மருத்துவ காப்பீட்டு திட்டம் 31 மில்லியன் மக்களை காப்பீடு அற்றவர்களாக ஆக்கும். அதில் ஏனையவர்களோடு சேர்ந்து, மெடிகேர் திட்டத்தை விரிவுபடுத்த போவதில்லை என்று முடிவெடுத்துள்ள மாநிலத்தைச் சேர்ந்த மில்லியன் கணக்கான மிகவும் வறியவர்கள், அரசு மானியங்கள் மறுக்கப்பட்ட ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர், மற்றும் சிறிய மானியங்களுடனோ அல்லது இல்லாமலோ காப்பீட்டைப் பெற செலவு செய்ய இயலாதவர்களும் உள்ளடங்குவர். "நீங்கள் உங்கள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை விரும்பினால், அதே திட்டத்தில் தொடரலாம்” என்ற ஒபாமாவின் பொய், தனிநபர் காப்பீட்டு சந்தையில் தங்களின் காப்பீட்டை இழப்பவர்களையும் கடந்து விரிந்து செல்கிறது என்பதும் வெளிப்பட்டு வருகிறது. அமெரிக்க மக்கள்தொகையில் பெரும்பான்மை, சுமார் 170 மில்லியன் மக்கள், தங்களின் தொழில்வழங்குனர் மூலமாக தற்போது காப்பீட்டிற்குள் உள்ளனர், மேலும் இந்த பரந்த சந்தை, கட்டுப்படியாகக் கூடிய மருத்துவ காப்பீட்டு சட்டத்தோடு சேர்ந்து ஒரு கடுமையான செப்பனிடும் நடவடிக்கைகாக காப்பீட்டு துறை மற்றும் வியாபாரங்களால் இலக்கில் நிறுத்தப்பட்டுள்ளது. 50 அல்லது அதற்கு மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட வியாபாரங்கள் அவர்களின் முழு-நேர தொழிலாளர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்க வேண்டுமென கோரும், 2015 வரையில் ஒபாமாவால் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் ACA சட்டத்தை கணக்கில் கொண்டு, பல தொழில்வழங்குனர்கள், கைக்கு மீறி அதிக செலவெடுக்கும் திட்டங்களில் இருந்து அதிகமாக அவரவர் சொந்தமாக பங்குசெலுத்துவது உள்ள திட்டங்களுக்கு ஏற்கனவே அவர்களின் தொழிலாளர்களை மாற்ற தொடங்கி விட்டனர். இந்த நெறிமுறையோடு இணங்கி செலவுகளைத் தங்கள் தோள்களில் தாங்க பெரு வியாபாரங்களுக்கு விருப்பம் இல்லை, மாறாக அவை தொழிலாளர்களின் மீது சுமத்தப்படும். சில நிறுவனங்கள் அந்த சட்டத்திற்கு இணங்காமல், எளிமையாக பெயரளவிற்கு ஒவ்வொரு ஊழியருக்கும் 2,000 டாலர்கள் அபராதம் செலுத்தும் வாய்ப்பை தேர்ந்தெடுக்கலாம். தனியார் துறையிலும், மாநில மற்றும் உள்ளாட்சி அரசு துறையிலும் இரண்டையும் சேர்ந்த ஏனைய தொழில்வழங்குனர்கள், சில இடங்களில் ஏற்கனவே ஓய்வு பெற்றவர்களையும் மற்றும் தொழிலாளர்களையும் ACA பரிவர்த்தனை மையங்களைப் போன்ற மாதிரியில் அமைந்துள்ள தனியார் காப்பீட்டு பரிவர்த்தனை மையங்களுக்கு மாற்ற தொடங்கி விட்டனர். சிலர் தங்களின் தொழிலாளர்களுக்கு, சிறிய மானியங்கள் அளித்து, நேரடியாக ஒபாமாகேரினுள் தள்ளி உள்ளனர். தசாப்தங்களாக மரபார்ந்தரீதியில் தொழில்வழங்குனர் வழங்கிய காப்பீட்டைப் பெற்று வந்த தொழிலாளர்கள் தற்போது தனியார் சந்தையில் தனிநபர்களாக தனித்து நிற்க இத்தகைய பரிவர்த்தனை மையங்களுக்குள் தூக்கி வீசப்பட்டு வருகின்றனர். இத்தகைய நகர்வுகளோடு, ஒரு கூப்பன்-மாதிரியிலான அமைப்புமுறையும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது. இரண்டு அரசியல் கட்சிகளிலும் உள்ள பெரு வணிகங்களும், அதன் பிரதிநிதிகளும் அரசு மருத்துவ கவனிப்பு திட்டம் (Medicare), அதாவது முதியோர் மற்றும் ஊனமுற்றோருக்காக செயல்பட்டு வருவது, மற்றும் மருத்துவ உதவி திட்டம் (Medicaid), அதாவது மத்திய மற்றும் மாநில அரசுகளால் இணைந்து கூட்டாக நிர்வகிக்கப்படும் ஏழைகளுக்கான திட்டம், ஆகியவற்றை தனியார்மயமாக்கலுக்குரிய மற்றும் சிதைப்பதற்கான அடுத்த பெரிய இலக்குகளாக காண்கின்றனர். ஒபாமாகேரின் பிற்போக்குத்தனமான, பெருநிறுவன-சார்பு குணாம்சத்தை இந்த வெளிச்சத்தில் பார்ப்பது அவசியமாகும். பெருநிறுவன-நிதியியல் மேற்தட்டுக்களின் அரசியல் மூலோபாயவாதிகளைப் பொறுத்தவரையில், சமீபத்திய தசாப்தங்களில் எட்டப்பட்ட நீண்ட ஆயுள்காலம்—தொழிலாளர்கள் ஓய்வுக்குப் பின்னர் நீண்டகாலம் வாழ்கின்றனர், மேலும் அதன் விளைவாக அவர்களுக்கான மொத்த மருத்துவ செலவுகள் அதிகரிக்கின்றன என்பதோடு சேர்ந்து—விரும்பத்தகாத அரசு விவகாரங்களை உருவாக்கி உள்ளது. இந்த மருத்துவ காப்பீட்டு துறையைச் செப்பனிடும் வேலை சாமானிய அமெரிக்கர்களுக்கான மருத்துவ சேவைகளை கடுமையாக குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது, அது தொழிலாளர்களின் மற்றும் அவர்களின் குடும்பத்தாரின் ஆரோக்கியத்தில் நாசகரமான விளைவுகளைக் கொண்டு வரும் என்பதோடு, அகால மற்றும் தவிர்க்கக்கூடிய மரணங்களையும் உண்டாக்கும். கட்டுப்படியாகக் கூடிய மருத்துவ காப்பீட்டு சட்டம் ஒபாமா நிர்வாகத்தின் ஒட்டுமொத்த தொழிலாள வர்க்க விரோத நிகழ்ச்சிநிரலின் ஒரு சிறிய துணுக்காகும். அது ஒரு நூற்றாண்டு கால போராட்டங்களில் தொழிலாளர்களால் வென்றெடுக்கப்பட்ட சமூக நலன்களை திரும்ப பெற கோருகிறது, அதேவேளையில் மேலே உள்ள சிறிய மேற்தட்டின் செல்வவளத்தை அதிகரிக்க செய்கிறது. மருத்துவ காப்பீடு போன்ற அத்தியாவசிய சமூக தேவைகளுக்கு "பணம் இல்லை" என்று கூறும் அரசு, வங்கிகள் மற்றும் ஆட்டோ தொழில்துறையை பிணையெடுக்க ட்ரில்லியன் கணக்கில் செலவிட்டுள்ளது. மேலும் பங்கு மற்றும் பத்திர சந்தைகளுக்கு முட்டுகொடுக்க மாதந்தோறும் 85 பில்லியன் டாலர்கள் பாய்ச்சுவதை தொடர்கின்றது. அமெரிக்காவில் மருத்துவ காப்பீடு அமைப்புமுறையின் நெருக்கடிக்கு ஒரு நிஜமான தீர்வு ஒபாமாகேர் போன்ற எதுவாகவும் இருக்க முடியாது. மருத்துவ காப்பீடு என்பது சமூக உரிமை, அது தொழிலாள வர்க்கத்தின் அதன் சொந்த வேலைத்திட்டம் மற்றும் முன்னோக்கோடு பாதுகாக்கப்பட வேண்டும். இந்த தற்போதைய மருத்துவ அமைப்புமுறையை உடைத்து, சோசலிச அடித்தளத்தில் அதை நிறுத்துவதன் மூலமாக மட்டுமே அனைவருக்குமான, தரமான மருத்துவ காப்பீட்டு அமைப்பு முறையை பெருந்திரளான மக்களுக்காக எட்ட முடியும். |
|
|