சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The social catastrophe of Typhoon Haiyan

ஹையான் சூறாவளியின் சமூகப் பேரழிவு

Joseph Santolan
13 November 2013

Use this version to printSend feedback

குறைந்தது 10,000 பேர், பேரழிவுகரமான சூறாவளி எழுந்ததை அடுத்து பிலிப்பைன்ஸில் இறந்துள்ளனர். இந்து சமுத்திர சுனாமிக்கு 9 ஆண்டுகளுக்கு பின்னரும், பெரும்புயல் காத்ரினாவிற்கு எட்டு ஆண்டுளுக்குப் பின்னரும், ஹைட்டிய நிலநடுக்கத்திற்கு மூன்று ஆண்டுகளுக்குப் பின்ன்னரும், மனிதகுலம் மீண்டும் பேரழிவு தரும் இடர்களையும் பாரிய அளவிலான உயிரிழப்பையும் முகங்கொடுக்கிறது.

ஒரு மில்லியன் மக்கள் இப்பொழுது காலியான மையங்களில் இருத்தப்பட்டுள்ளனர்; நூறாயிரக்கணக்கான மக்கள் உணவும் குடிநீரும் இல்லாமல் உள்ளனர், சூறாவளியில் இருந்து தப்பி மருத்துவமனைளில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகள் இடருற்று நோய்களால் இறக்கின்றனர்; மருந்துகள் கிடைக்குமெனின் இந்நோயக்களில் இருந்து நோயாளிகள் காப்பாற்றப்பட்டிருப்பர். பிராந்தியத்தின் மின்சக்தி, தொடர்புள் போக்குவரத்து உள்கட்டுமானம் ஆகியவை சிதைவுற்றுள்ளன.

அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க கட்டிடப் பாதுகாப்பு மையங்களை கட்டமைத்து, இத்தகைய பேரழிவுகளால் தாக்கப்பட்டுள்ள நகரங்களை மறுகட்டமைக்கும் செலவு மகத்தானது என்பதில் ஐயமில்லை. மணிக்கு 195 மைல் வேக காற்று, மணிக்கு 235 மைல் வன்காற்று என்று ஹையான் புயல், வரலாற்றில் பதிவு செய்யப்பட்டதில் மோசமான புயலாகும். உலகச் சுற்றுச் சூழல் மாற்றம், புயல்கள், சூறாவளிகள் பெருகிய தீவிரத்துடன் தோன்றுவதற்கு ஒரு காரணி என்பதில் சந்தேகம் இல்லை.

ஆனால் சர்வதேச செய்தி ஊடகத்தின் கூற்றுக்களின் அடித்தளத்தில், கார்டியனில் இருந்து நியூ யோர்க் டைம்ஸ் வரை ஒரு உறுதியான அரசியல் செயற்பட்டியல் உள்ளது, சூறாவளியின் 200 மைல் வேகக் காற்றை எதுவும் எதிர்த்து நின்றிருக்க முடியாது என்பதுதான் அது.

ஆனால் சூறாவளி தாக்கிய டாக்லோபான் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள இடங்களில் இருந்து வந்துள்ள படங்கள் வேறு கதையைச் சொல்கின்றன. வணிகங்கள், நவீன கடைகள், அரசாங்கக் கட்டிடங்கள் பெரிய கட்டிடங்கள் இன்னும் உறுதியாக நிற்கின்றன. நகரத்தின் பொழுதுபோக்கு மன்றம் கிட்டத்தட்ட எந்த சேதத்தையும் அடையவில்லை.

ஹையானின் சீற்றமிகு காற்றுக்கள் நிறுத்தப்ப முடியாதவை என்றாலும், மிகப் பெரிய இறப்பு எண்ணிக்கை, காயமுற்றோர் எண்ணிக்கை, டாக்லோபானில் ஏற்பட்டுள்ள இழப்பு அளவுகள் இயற்கையானவை அல்ல; மாறாக ஒரு சமூகப் பேரழிவாகும். சூறாவளியின் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டோருக்கு பாதுகாப்பான இடங்களில் நன்கு கட்டப்பட்ட வெளியேறும் மையங்களில், முன்கூட்டியே சேமித்து வைத்திருக்கும் தேவையான அளிப்புக்களை அணுக முடிந்திருந்தால் தப்பியிருந்திருப்பர்.

டாக்லோபானின் காலி மையங்களில் ஒன்று நகரத்தின் வளைவுச் சுற்றுடைய விளையாட்டு அரங்காகும். புயலுக்குத் தப்பி ஓடிவந்த நூற்றுக்கணக்கான மக்கள் இந்த அரங்கில் பாதுகாப்பு பெறுமாறு உள்ளூர் அதிகாரிகளால் பணிக்கப்பட்டனர். டாக்ளோபானில் பல உறுதியா கட்டிடங்களைப் போல், அது புயலின் பாதிப்பில் இருந்து பெரிதும் தப்பியது. ஆனால் அரங்கு கடல் மட்டத்தில் இருந்து போதுமான உயரத்தில் இல்லாததால் அதன் உட்பகுதி வெள்ள நீரால் நிறைந்தது. உள்ளே இருந்தவர்கள் ஒன்று மூழ்கிப்போயினர், அல்லது உள்ளே வரும் நீருக்கு மேலே உயரப் போராடியபோது நசுக்கப்பட்டனர்.

இப்பொழுது சரிந்துவிட்ட அல்லது அடித்துச் செல்லப்பட்ட புறநகர்ப்பகுதிகள் மலிவான, இழிந்த பொருட்களால் கட்டப்பட்டவை; அவற்றைக் கொண்டுதான் தொழிலாளர்களும் ஏழை மக்களும் தங்கள் வீடுகளைக் கட்டும் கட்டாயத்தில் இருந்தனர். டாக்லோபானின் அனைத்து வீடுளிலும் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானவை மர வெளிச் சுவர் கொண்டவை; ஏழில் ஒரு வீடு புல்லாலான கூரையைக் கொண்டவை என்று பிலிப்பைன்ஸ் மக்கள் தொகைக் குறிப்புத் தரவுகள் கூறுகின்றன. மியாமி பல்கலைக்கழகத்தின் சூறாவளி ஆய்வாளர் பிரியன் மக்நோல்டி இந்த வீடுகள் “மிக இடிந்து விழும் நிலையில் கட்டப்பட்டவை... இதிலும் வலுவற்ற புயலாயிருந்தாலும் இதே அளவு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும்.” என்றார்.

2012ல் உலக வங்கி நடத்திய ஆய்வு ஒன்று, பத்து பிலிப்பினோக்களில் நான்கு பேர் 100,000 பேருக்கும் மேல் உள்ள நகரத்தில் வசிக்கின்றனர், அவர்கள் புயலின் பாதிப்பிற்கு உட்படுவர் என்று கூறுகிறது. காலி மையங்கள் எனப்படுபவை திருச்சபைகள், முனிசிபல் அரங்குகள் மற்றும் பள்ளிகள் ஆகும்; இவற்றில் அடிப்படை சுகாதார வசதிகளோ நிவாரணப் பொருட்களோ கிடையாது.

மீண்டும் அம்பலப்படுத்தப்பட்டிருப்பது, உலகம் முழுவதும் உழைக்கும் மக்கள், டாக்லோபானில் இருந்து போர்ட் பிரின்ஸ், நியூ ஓர்லியன்ஸ் வரை, மலிவாகக் கட்டப்படும் வீடுகளில் வாழும் கட்டாயத்தில் உள்ளனர், பெரிய புயல் அல்லது பிற பேரழிவின் பாதிப்பிற்கு உட்படுவர் என்பதாகும்.

இந்த நிலைக்கான பொறுப்பு ஒன்றும் விதியிடம் இல்லை, முதலாளித்துவத்திடம்தான் உள்ளது. மனிதகுலம் சூறாவளிகளை எதிர்கொள்ளத் தயாராகும் தொழில்நுட்பத்தைக் கொண்டுள்ளது, பெரும் புயல்களில் இருந்து தப்பக்கூடிய போதுமான பாதுகாப்பு உறைவிடங்ளையும் கட்டும் திறனைக் கொண்டுள்ளது, முழு நகரங்களையும் மறு கட்டமைக்கும் திறனையும் கொண்டது.

முதலாளித்துவச் சந்தை, அனைத்து சமூக முயற்சிகளிலும் மேலாதிக்கம் கொண்டுள்ள இலாப உந்துதல் என்னும் பகுத்தறிவற்ற தன்மையால் தேவையான வளங்கள் திரட்டப்பட முடிவதில்லை; காலம் கடந்துவிட்ட போட்டியிடும் தேசிய அரசுகள் என்ற அழிவுதரும் பிளவுகளும், கோரமான அளவு சமூக சமத்துவமற்ற நிலை உலகம் முழுவதும் நிறைந்திருப்பதும் காரணம் ஆகும். பெரும்பாலும் தேவையான நிதிகள் கிடைப்பதில்லை, காரணம் டிரில்லியன் கணக்கான டாலர்கள் “அதிக நிகர மதிப்புடைய தனிநபர்களின்” வங்கிக் கணக்குகளில் உட்செலுத்தப்படுகின்றன; அவர்கள் உலகெங்கிலும், 27 டிரில்லியன் டாலர்கள் (27,000,000,000,000$) என அதிர்ச்சி தரும் செல்வத்தை ஏகபோக உரிமையாகக் கொண்டுள்ளனர்.

பிலிப்பைன்ஸில் கௌரவமான வீடுகள் மற்றும் புயலில் இருந்து பாதுகாப்பு மையங்களைக் கட்டும் திறனற்று இருப்பது, இந்த காலங்கடந்துவிட்ட, பகுத்தறிவற்ற சமூக முறை தொழிலாளர்கள் மீது சுமத்தியுள்ள பரந்த இழி நிலைகளின் ஒரு வெளிப்பாடாகும்.

பிலிப்பைன்ஸில் உள்ள பத்து பேரில் நால்வர்தான் போதுமான ஊட்டச் சத்தைப் பெறுகின்றனர் என்று தேசிய ஊட்டச் சத்துக்குழு கூறுகிறது. மக்களில் 27%த்தினர், நிரந்தர பட்டினியை அனுபவிக்கின்றனர். இப்பொழுது ஹையானால் நாசப்படுத்தியுள்ள சமர் தீவில் 2012ம் ஆண்டு சராசரி ஆண்கள் ஆயுட்கால எதிர்பார்ப்பு 64.5 ஆண்டுகள் ஆகும் – இது மேற்கு ஐரோப்பாவை விட முற்றிலும் 15 ஆண்டுகள் குறைவாகும்.

இந்நிலைமைகள், பெரும் செல்வந்தர்கள் அருவருக்கத்தக்க வகையில் பதுக்கி வைத்துள்ள செல்வத்தின்மீது தொழிலாள வர்க்கம் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டு, அவற்றை சமூக முற்போக்கான நோக்கங்களுக்காக  பயன்படுத்த வேண்டிய தேவையை அடிக்கோடிட்டு காட்டுகின்றது. இதற்காக செய்யப்படும் எந்த முயற்சியும் முதலாளித்துவ அரசில் இருந்து வன்முறையான எதிர்ப்பைக் கொண்டுவரும்; அது தற்பொழுது தன் ஆயுத வலிமையை, தனியார் சொத்தை பாதுகாக்கவும், சூறாவளியினால் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்தவும் தான் பயன்படுத்த தயாராக உள்ளது.

நூறாயிரக் கணக்கான பிலிப்பைன்ஸ் சூறாவளிப் பாதிப்பாளர்கள் உணவைப் பெறுவதற்கு போராடுகையில், அரசாங்க நிவாரண நடவடிக்கைகள் எங்கும் காணப்படவில்லை, சூறாவளிப் பாதிப்பாளர்கள் தேவையான உணவு,  நீர், பிற பொருட்களை மூடியிருக்கும் கடைகள், பன்முகப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் இருந்து எடுத்துக் கொள்ள முயல்கின்றனர்.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி அக்கீனோ, இதை எதிர்கொள்ளும் வகையில் 1,300 அதிக ஆயுதம் தாங்கிய பொலிஸ், இராணுவப் பிரிவினரை கவச வாகனத்தில் நகரத்தை ரோந்து வரச்செய்து, தனியார் சொத்துக்களை பாதுகாக்கும் வகையில் பதிலளித்துள்ளார். நகரம் ஊரடங்கு உத்தரவின்கீழ் உள்ளது; சூறாவளி பாதுப்பாளர்கள் ஒருதலைப்பட்ச சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். நிவாரணப் பணியை அவர் பல தனியார் நிறுவனங்களுக்கும், இன்னும் தீய முறையில் பிலிப்பைன்சின் முன்னாள் காலனித்துவ சக்தியான அமெரிக்காவின் இராணுவத்திற்கும் ஒதுக்கிவிட்டார்.

தற்போதைய நிவாரண முயற்சியில் உள்ள சிக்கல் வாய்ந்த விநியோக செயற்பாடுகள், இத்தகைய புயல்களை எதிர்த்து நிற்கும் திறன் உடைய சமூகத்தைத் தோற்றுவிக்கும் தேவையின் மங்கிய குறிப்பு மட்டுமே. இது தொழிலாள வர்க்கத்தின் தலைமையின் கீழ் ஒரு திட்டமிட்ட, சர்வதேச பிராந்திய மற்றும் உலகத்தின் தொழில்துறை மற்றும் விஞ்ஞானபூர்வமான வளங்களை அணிதிரட்டுவதன் மூலமே அடையப்படமுடியும்.