World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lanka: Northern Chief Minister seeks deal with Colombo government

இலங்கை: வடக்கு முதலமைச்சர் கொழும்பு அரசாங்கத்துடன் கொடுக்கல் வாங்கலை எதிர்பார்க்கின்றார்

S. Jayanth
9 November 2013

Back to screen version

யுத்தத்தால் நாசமாக்கப்பட்ட வட மாகாணத்திற்கு புதிதாக தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன், தமிழ் முதலாளித்துவ தட்டுக்களின் சிறப்புரிமைகளை தக்கவைத்துக்கொள்வதற்காக, ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் சமரசத்துக்கு செல்வதற்கான தனது விருப்பத்தை வெளிப்படுத்துவதற்காக சபையில் தனது கன்னி உரையை அர்ப்பணித்தார். தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு முன்னணி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஏகாதிபத்திய மற்றும் பிராந்திய சக்திகளின் ஆதரவுடன், கொழும்பு அரசாங்கத்துடன் தீவின் வடக்குக்கு ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்திக்கொள்ள முயற்சிக்கின்றது.

மேற்கத்தைய சக்திகளுக்கும் மற்றும் கொழும்பு அரசாங்கத்துக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு நபராக, வடமாகாண சபை முதலமைச்சர் வேட்பாளருக்கு முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதி விக்னேஸ்வரனை தமிழ் கூட்டமைப்பு தேர்வு செய்துகொண்டது. கொழும்பு அரசாங்கத்துடனான பேரம் பேசலில் அழுத்தம் கொடுப்பதற்காக தேர்தல் வெற்றியை பயன்படுத்திக்கொள்ள கூட்டமைப்பு எண்ணியது.

அவர் தனது உரையின் பெரும்பகுதியை, கூட்டமைப்புக்குதமிழ் மக்கள் கொடுத்துள்ள மக்கள் ஆணையைகவனத்தில் எடுத்து, மீள் கட்டுமானம், மீள் குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் அபிவிருத்தி வேலைகளை முன்னெடுப்பதற்கு உதவி செய்யுமாறு அரசாங்கத்துக்கு வேண்டுகோள் விடுப்பதற்காக செலவிட்டார். வெளிநாட்டு மூலதனத்துக்கு தமிழ் தொழிலாள வர்க்கத்தை சுரண்டுவதன் பேரில், வறுமைப் பிடியில் உள்ள வட மாகாணத்தை திறந்து விடும் கூட்டமைப்பின் வேலைத் திட்டத்தை சமிக்ஞை செய்த விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது: “சர்வதேச நாடுகள் தொழில்சார் ஆலோசனைகளையும் நிதிகளையும் வழங்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.”

அரசாங்கத்துக்கும் வட மாகாண சபைக்கும் இடையிலான ஒத்துழைப்பின்மூலம் வடக்குக்குஜனநாயகத்தைகொண்டு வர முடியும் என விக்னேஸ்வரன் பிரகடனம் செய்தார். அவர்ஒத்துழைப்புக் கரத்தை நீட்டுவதாகஉறுதியளித்த அதே சமயம், “உயர்ந்த இராஜதந்திரத்தைக் காட்டசந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அரசாங்கத்துக்கு அழைப்பு விடுத்தார். இவை சிடுமூஞ்சித்தனமான வார்த்தைகளாகும். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொடூரமான இராணுவ நடவடிக்கையில் 26 ஆண்டுகால யுத்தத்தை கொழும்பு முடிவுக்கு கொண்டுவந்த பின்னரே இவர் இந்த கருத்துக்களை தெரிவிக்கின்றார். இந்த தாக்குதல்களில் பல பத்தாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர்.

வடக்கில் தமிழ் பேசும் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களும் தாம் எதிர்கொண்டுள்ள ஒடுக்குமுறை நிலைமைகள் மற்றும் இராணுவ ஆக்கிரமிப்பு மீதான தமது எதிர்ப்பையும் சீற்றத்தையும் வெளிப்படுத்துவதற்காகவே கூட்டமைப்புக்கு வாக்களித்தனரே அன்றி, இந்த அவப்பேறு பெற்ற கட்சியின் மீதான எந்தவொரு அனுதாபத்தினாலும் அல்ல. யுத்தத்தின் முடிவில் இருந்தே நிரந்தர இராணுவ கட்டிடங்கள் அமைத்தல், ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்தல் மற்றும் மக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு அங்க்திலும் ஒடுக்குமுறையான கட்டுப்பாட்டை கொண்டிருந்தலின் ஊடாக அரசாங்கம் இராணுவ ஆக்கிரிமிப்பை தொடர்ந்து வருகின்றது.

சிவில் நிர்வாகத்தை சிறப்பாக செய்ய இராணுவம் உடனடியாக முகாங்களுக்குள் முடக்கப்படுவதோடு இராணுவ ஆளுனருக்கு பதிலாக பொதுமகன் ஒருவரை நியமிக்க வேண்டும் என்ற விக்னேஸ்வரனின் அழைப்பை தமிழ் ஊடகங்கள் தூக்கிப் பிடித்தன. ஆனால், உண்மையில் விக்னேஸ்வரன் இந்த எரியும் பிரச்சினையை அரசாங்கத்துக்கு அற்ப அழைப்பு விடுக்குமளவுக்கு தரங்குறைத்தார். அதிகளவு சிப்பாய்களை ஐ.நா. அமைதிப் படையில் சேர்க்க முடியுமா என்பதையிட்டும் சிந்திக்குமாறு கூட அவர் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுகின்றார்.

எமது மக்கள் வட மாகாணத்தில் இராணுவத்தை நிறுத்த வேண்டிய நிலைமையை உருவாக்க இனிமேலும் அனுமதிக்க மாட்டார்கள்என அவர் மீண்டும் மீண்டும் கூறினார். அவர்கள்தேசிய பாதுகாப்பை ஆபத்துக்குள்ளாக்கும் எந்தவொரு நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டார்கள்என அவர் உறுதியளித்தார். இந்த வாக்குறுதிகள், கூட்டமைப்பு ஒரு பொலிஸ்காரனாக செயற்படுவதோடு தமிழ் மக்கள் மத்தியில் எழும் கொழும்பு ஆட்சிக்கு விரோதமான எந்தவொரு எதிர்ப்பையும் அடக்குவதற்கும் செயற்படும் என்ற செய்தியை கொழும்புக்கு அனுப்புகின்றன. “தேசிய பாதுகாப்பைகாப்பதற்கான கூட்டமைப்பின் அர்ப்பணிப்பு, அது கொழும்பு ஆட்சியுடன் தன்னை இணைத்துக்கொள்ளத் தயாராக உள்ளது என்ற தகவலே ஆகும்.

தொடர்ச்சியான இராணுவ ஆக்கிரமிப்பு மற்றும் போரினால் ஏற்பட்ட சமூக அழிவுகளின் காரணமாக மக்கள் அரசாங்கத்தின் மீது ஆத்திரமடைந்திருப்பதை கூட்டமைப்பும் விக்னேஸ்வரனும் நன்கு அறிவர். மக்களில் பெரும்பான்மையானவர்களை வறுமை ஆட்டுவிக்கின்றது.

தானும் கூட்டமைப்பும் பிரிவினைவாதத்தை எதிர்ப்பதாக விக்னேஸ்வரன் வலியுறுத்துகின்றார். அது இப்போதுஉள்ளக சுயநிர்ணயகோரிக்கையாக மாற்றப்பட்டுள்ளது. கூட்டமைப்புஒன்றுபட்ட நாட்டின் இறைமையை ஏற்றுக்கொள்வதாகவும்மற்றும்தேசிய பாதுகாப்பு, சர்வதேச உறவுகள் போன்ற விவகாரங்கள் மத்திய அரசாங்கத்தால் இயக்கப்பட வேண்டும் என்பதை அங்கீகரிப்பதாகவும்விக்னேஸ்வரன் மேலும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள ஆளும் வர்க்கத்துக்கு புரியவைக்கும் முயற்சியில், தமிழ் கூட்டமைப்பு பிரிவினைவாதத்தை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை சிங்களமக்கள்புரிந்துகொள்ள வேண்டும், என அவர் வலியுறுத்துகின்றார்.

புலிகளின் ஊதுகுழலாக செயற்பட்ட கூட்டமைப்பு, இந்த சந்தர்ப்பத்தில் இலங்கையில் பிரிவினைவாத கொள்கைகளுக்கு அமெரிக்கா ஆதரவளிக்கவில்லை என்பது தெளிவான நிலையில், தனது கொள்கையை மாற்றிக்கொண்டுள்ளது. தனியான அரசுக்கான அத்தகைய ஆதரவு, தனது மாநிலங்களில் பிரிவினைவாத இயக்கங்களை ஊக்குவிக்கக் கூடும் என்பதையிட்டு புது டில்லியும் கவலைகொண்டுள்ளது.

அமெரிக்கா மற்றும் இந்தியாவைப் போல், அவற்றின் பொருளாதார எதிரியான சீனாவும் இராஜபக்ஷவின் யுத்தத்துக்கான தனது ஆதரவை இலங்கையில் அதன் செல்வாக்கை ஸ்தாபித்துக்கொள்ளப் பயன்படுத்துகின்றது. ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவுக்கு திரும்புதலின் கீழ், சீனாவை சுற்றி வளைப்பதற்காக ஆசியாவைச் சூழ உள்ள நாடுகளுடன் இராணுவ கூட்டணியைக் கட்டியெழுப்பும் அமெரிக்கா, இராஜபக்ஷ அரசாங்கத்தை பெய்ஜிங்கில் இருந்து தூர விலகச் செய்வதற்கு நெருக்குவதன் பேரில், அதன் யுத்தக் குற்றங்களைப் பற்றிக்கொண்டுள்ளது.

பிராந்தியத்தில் பெரும் வல்லரசுகளின் பூகோள-அரசியல் நலன்களுக்கு ஆதரவளிப்பதன் மூலம் தமிழ் மக்களால் தமது ஜனநாயக உரிமைகளை வெல்லவும் வடக்கு மாகாணத்துக்கு பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை தக்கவைத்துக்கொள்ளவும் முடியும் என்ற மாயையை கூட்டமைப்பு முன்னிலைப்படுத்துகின்றது.

மாகாண சபைகளை ஸ்தாபிப்பதன் மூலம் அரசியல் தீர்வொன்றை திணிப்பதற்காக, இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழ், 1987ல் அரசியலமைப்பில் ஏற்படுத்தப்பட்ட 13வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியாவின் காங்கிரஸ் அரசாங்கம் தொடர்ந்தும் இராஜபக்ஷவை வலியுறுத்தி வருகின்றது. ஆனால், இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் கொழும்பு வந்தபோது, அவரை எதிர்கொண்ட இராஜபக்ஷ, அரசியல் தீர்வு காண்பதற்கு சரியான இடம் பாராளுமன்றமே எனத் தெரிவித்தார்.

சிங்கள இனவாதத்தில் ஊறிப்போயுள்ள இலங்கை ஆளும் கும்பல், தமிழ் தட்டுக்களுக்கு எந்தவொரு சலுகையும் வழங்குவதை எதிர்க்கின்றது. விக்னேஸ்வரன் பதவியேற்று ஒரு வாரத்தின் பின்னர், இராஜபக்ஷவின் ஆளும் கும்பலுக்குள்ளேயே உள்ள எதிர்ப்பை வெளிப்படுத்திய இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் தயா ரட்ணாயக்க, “எவரும் தீவிரவாதிகளாகி நாட்டைப் பிரிக்க முயற்சித்தால், பிரியப் போவது அவர்களது உடலில் உள்ள தலைகள் மட்டுமேஎன வெளிப்படையாக எச்சரிக்குமளவுக்குச் சென்றார்.

ஜனாதிபதி இராஜபக்ஷவின் சகோதரரான பாதுகாப்புச் செயலாளர் கோடாபய இராஜபக்ஷ, தமிழ் பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்த போது, “இராணுவம் எங்கு இருக்க வேண்டும் என தீர்மானிப்பது அரசாங்கமே, அவர்களை வெளியேற்றுமாறு யாரும் கோர முடியாதுஎன அறிவித்தார்.

வடக்கில் ஏற்கனவே பதட்ட நிலைமைகள் மேலோங்கத் தொடங்கியுள்ளன. தனது ஆக்கிரமிப்பை உக்கிரமாக்கும் இராணுவம், திங்களன்று யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் கட்டுவனில் உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள வீடுகளை இடிக்கத் தொடங்கியதுடன், கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களையும் பத்திரிகையாளர்களையும் எதிர்கொண்ட போது, படையினர் அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர். இராணுவத்தினரின் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டப் போவதாக அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரதானமாக கூட்டமைப்பினால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் பலவீனமான தமிழ் முதலாளித்துவம், தமிழ் தொழிலாள வர்க்கத்தின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரானது என்பதை நிரூபித்துள்ளது. கொழும்பு அரசாங்கத்தின் திட்டங்களுடன் இணைந்து, வடக்கை மலிவு உழைப்பு களமாக திறந்துவிடுவதற்கு, வடக்கை பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களுடன் ஆளுவதே கூட்டமைப்பின் பிரதான நோக்கமாகும்.

இன்னொரு இன மோதல் தனது பொருளாதார நலன்களைப் பாதிக்கும் என கவலைகொண்டுள்ள, இலங்கை பெரும் வர்த்தகர்களின் ஒரு தட்டினரின் மனோநிலையை வெளிப்படுத்தும் வகையில், இலங்கை வர்த்தக சம்மேளனம் கூட்டமைப்பை பாராட்டி ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. “சமாதானமும் நல்லிணக்கமும் இப்போது உணரப்பட்டுள்ளனஎன அந்த அறிக்கை தெரிவிக்கின்றது. விக்னேஸ்வரன் தேர்வு செய்யப்பட்டதும் ஜனாதிபதியின் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய தீர்மானித்தமையும்அரசியல் ஆபத்துக்கள் இருந்தும்- இலங்கைக்கான கூட்டமைப்பின் அர்ப்பணிப்பை பற்றிய பலமான செய்தியை அனுப்புகிறது,” என சம்மேளனம் தெரிவித்துள்ளது.

சிங்கள மற்றும் தமிழ் முதலாளித்துவங்கள் ஒரே நலன்களையே கொண்டுள்ளன. அது சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களின் ஐக்கியத்துக்கான எதிர்ப்பே அன்றி வேறொன்றும் அல்ல. சர்வதேச நாணய நிதியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு எதிராக வெகுஜனப் போராட்டங்கள் வெடிக்கும் என, முதலாளித்துவ வர்க்கத்தின் இரு பகுதியினரும் பீதியடைந்துள்ளனர். கொழும்புடனான நெருக்கமான உறவுக்கு விக்னேஸ்வரன் விடுக்கும் அழைப்பு, அபிவிருத்தியடைந்து வரும் இந்த வர்க்க நிலைமையினாலேயே தூண்டிவிடப்பட்டுள்ளது.