World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் 

US, Australia face backlash over spy operations in Asia

ஆசியாவில் உளவு நடவடிக்கைகள் தொடர்பாக எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கு அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா முகங்கொடுக்கின்றன

By Peter Symonds 
1 November 2013

Back to screen version

ஏற்கனவே ஐரோப்பாவில் NSA உடைய கண்காணிப்பு நடவடிக்கைகள் குறித்து இராஜதந்திர நெருக்கடிச் சேற்றில் மூழ்கியுள்ள வாஷிங்டன் —கான்பெர்ராவும்— ஆஸ்திரேலிய முகவர் நிறுவனங்களுடன் இணைந்து செயற்படும் NSA ஆனது பிராந்தியம் முழுவதும் இருக்கும் தூதரகங்களின் தொலைபேசி அழைப்புத் தகவல்களை இடைமறித்து ஒற்றுக் கேட்டுள்ளது என்னும் வெளிப்பாட்டினால் ஆசியாவில் எதிர்ப்பு கிளம்பியிருப்பதற்கு முகங்கொடுக்கின்றன.

நேற்று Fairfax செய்தி ஊடகமானது ஆஸ்திரேலிய சமிக்கை இயக்குனரகம் (ASD), NSA திட்டத்தில் தொடர்பு கொண்டிருப்பது குறித்து தகவல் கொடுத்துள்ளது; இதற்கு STATEROOM என்று பெயரிடப்பட்டது. இது இராஜதந்திர பணிகளுக்குள் இருக்கும் இரகசிய வசதிகளிலிருந்து மின்னணு உளவுகளைச் சேகரிக்கிறது. முன்னாள் ஆஸ்திரேலிய உளவுத்துறை அதிகாரி கருத்துப்படி, ASD “ஜாகர்த்தா, பாங்காக், ஹனோய், பெய்ஜிங், டிலி ஆகிய ஆஸ்திரேலிய தூதரகங்களில் இருந்தும், கோலாலம்பூர் மற்றும் போர்ட் மோர்ஸ்பி உயர் ஆணையங்களிலிருந்தும், பிற தூதரக அலுவலகங்களில் இருந்தும் செயல்படுகிறது.”

NSA ஆவணம் ஒன்றில் STATEROOM திட்டம் பற்றிய விவரங்கள் எட்வார்ட் ஸ்னோவ்டெனால் கசியவிடப்பட்டது; முதலில் இது ஜேர்மனியில் Der Spiegel  இல் வெளியிடப்பட்டது. அமெரிக்க இராஜதந்திர பணிகளும் ஐந்து கண்கள் உளவுத்துறைக் கூட்டின் மற்றய உறுப்பு நாடுகளும், கனடா, பிரித்தானியா உட்பட, இதில் தொடர்பு கொண்டுள்ளன. அதிக இரகசிய “சேகரிப்பு இடங்கள்” சிறிய இடத்தை சேர்ந்தவை, “அவற்றின் பணி அங்குள்ள பெரும்பாலான தூதரக அலுவலர்களுக்கே தெரியாது” என்று ஆவணம் குறிப்பிடுகிறது.

Fairfax மற்றும் Der Spiegel கட்டுரைகளுக்கு சீற்றமான விடையிறுப்புக்கள் நேற்று வந்தன, ஆசியா முழுவதும் உருவாகும் இராஜதந்திர புயல் குறித்து ஒரு பார்வையை அளிக்கிறது. சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஹுவா சுன்யிங் கூறினார்: “இத்தகவல்கள் குறித்து சீனா பெரிதும் அக்கறை கொண்டுள்ளது, தெளிவுபடுத்துதலும் விளக்கம் அளித்தலும் தேவை.” மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா மற்றும் பாப்புவா நியூ கினியா ஆகியவையும் தீவிர கவலையை தெரிவித்துள்ளன.

இந்தோனேசியாவின் வெளியுறவு மந்திரி மார்ட்டி நடலேகவா அவருடைய அரசாங்கம், ஒற்று நடவடிக்கை குறித்து “வலுவான எதிர்ப்புக்களை” கொண்டுள்ளது என்றும், இது உறுதிப்படுத்தப்பட்டால், “பாதுகாப்பு மீறல் மட்டும் இல்லாமல் இராஜதந்திர நெறிகள், அறக் கோட்பாடுகளை மீறுவதும் ஆகும்” என்றார். இந்தோனேசிய ஜனாதிபதிக்கு மூத்த ஆலோசகரான டீய்க்கு பைசையா “இவை சட்டவிரோதமான தகவல் திரட்டுதல்கள்”, “முற்றிலும் ஏற்கத்தக்கவை அல்ல” என்று முத்திரையிட்டார்.

“பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதை போட்டியாளர்கள், நண்பர்கள் அனைவர் மீதும் பெரும் ஒற்றாடலைச் செய்ய வாஷிங்டன் பயன்படுத்தியுள்ள போதிலும், NSA உடைய செயற்பாடுகள் அதிகமான பரப்புடையவை என்பது தெளிவு. முன்னாள் ஆஸ்திரேலிய உளவுத்துறை அதிகாரி ஜாக்கர்த்தாவிலுள்ள ஆஸ்திரேலிய தூதரகத்திலுள்ள கண்காணிப்புத் திட்டம், “அரசியல், இராஜதந்திர, பொருளாதார உளவுத்துறை” மீது முக்கிய குவிப்பு காட்டுகிறது என விளக்கினார். “கைத்தொலைபேசி வலையமைப்புகளின் பெரும் வளர்ச்சி ஒரு பெரும் வரமாகி விட்டது, ஜாக்கர்த்தாவின் அரசியல் உயரடுக்கு அதிகம் பேசும் ஒரு கூட்டமாகும்.”

Fairfax ஊடகம் பல ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இரகசியமாகக் கூறப்பட்ட தகவல்கள் “மலேசியாவின் மிக மூத்த இராணுவத் தளபதிகளுக்கு இடையே நடந்த பேச்சுக்களை குறுக்கிட்டு பதிவு செய்த சான்றையும் தொடர்ச்சியாக, விவரமாக, அடக்கியிருந்தது” என்று கூறியுள்ளது.

செவ்வாயன்று Der Spiegel வெளியிட்ட உயர்மட்ட இரகசிய NSA வரைபடம், அமெரிக்காவின் வெளிநாட்டு இராஜதந்திர நோக்கங்கள் உலகெங்கிலும் இருப்பவற்றில் 90 கண்காணிப்பு வசதிகளையும் கொடுத்துள்ளது. இது CIA-NSA கூட்டாக நடத்தும் “சிறப்பு சேகரிப்புச் சேவை” என்னும் குழுவால் நடத்தப்படுகிறது.

* கிழக்கு ஆசியாவில் சீனா முக்கிய இலக்காகும்; பெய்ஜிங்கிலிருக்கும் அமெரிக்க தூதரகத்தில் கண்காணிப்பு வசதிகள் உள்ளன; தவிர ஷாங்காய், செங்டு அமெரிக்க துணைத் தூதரகங்களிலும், உத்தியோகபூர்வமற்ற தைவான் அமெரிக்க தூதரக அலுவலகத்திலும் உள்ளது.

* ஒற்றுக் கேட்கும் நிலையங்கள் எட்டை தெற்கு ஆசியாவில் அமெரிக்கா கொண்டுள்ளது; இவற்றில் இந்தியா, பாக்கிஸ்தானில் இருக்கும் தூதரகங்களும் அடங்கும்.

* தென்கிழக்கு ஆசியாவில், ஒற்றுக் கேட்கும் நிலையங்கள் தாய்லாந்து, பர்மா, மலேசியா, இந்தோனேசியா, கம்போடியா ஆகியவற்றின் தூதரகங்களிலுள்ளன. பாங்காக் தூதரகமும் தொழில்நுட்ப ஆதரவுக் குழு ஒன்றைக் கொண்டு, வடக்கு தாய்லாந்தில் சாங் மாய் அமெரிக்க தூதரகத்தில் தொலைதூரச் செயற்பாடு உடையவற்றை கண்காணிக்கிறது.

சமீபத்திய வெளிப்பாடுகள் ஒபாமா நிர்வாகத்தின் “ஆசியாவில் முன்னிலை” என்பதற்கு பெரும் அடியாகும்—இது ஒரு இராஜதந்திர தாக்குதல், இராணுவக் கட்டமைப்பு வளர்ச்சி, பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு மற்றும் மூலோபாய நிலையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது. அமெரிக்க பிரச்சாரத்தின் வாடிக்கையான கூறுபாடு பெய்ஜிங் பெரிய அளவில் சைபர் ஒற்று வேலையை அமெரிக்கா இன்னும் பிற நாடுகள்மீது பார்க்கிறது என்பதாகும். ஆனால் NSA சட்டவிரோத ஒற்றுச் செயல்களின் முன்னோடியில்லாத அளவு இப்பொழுது அம்பலமாகியுள்ளது, அரசாங்கங்கள் மற்றும் பரந்த மக்கள் பிரிவுகள் மீது ஆசியாவிலும் உலகம் முழுவதும் செய்கிறது என்பதுதான்.

முக்கிய நட்பு நாடுகளையும் மூலோபாய பங்காளிகளையும் விரோதப்படுத்திக் கொள்ளும் இடரில் ஒபாமா நிர்வாகம் உள்ளது; சீனாவை மூலோபாயமாக சூழ்வதின் திட்டங்களில் இவை பங்கு கொண்டுள்ளன. Diplomat போனவாரம் கொடுத்த செய்தியின் கருத்துப்படி, NSA ஆனது உலகத் தலைவர்கள் மீது ஒற்று நடத்துகிறது என்பது “சில ஆசிய நாடுகள், குறிப்பாக தென் கொரியாவை தங்கள் தலைவர்களும் கண்காணிக்கப்படும் 35 தலைவர்களுள் உள்ளனரா என்னும் தகவலை கோரவைத்துள்ளது ஆகும்.” இந்தியா ஏற்கனவே அதிகாரபூர்வ மின்னஞ்சல்கள் குறித்து புதிய கொள்கையை அறிவித்துள்ளது; NSA மிக அதிகம் ஒற்றுப் பார்க்கும் ஐந்தாவது நாடு என்னும் தகவல் வந்ததை அடுத்து இந்த அறிவிப்பு வந்துள்ளது.

ஆஸ்திரேலிய ஒற்று நிறுவனத் தளங்கள் ஆசியாவில் NSA கண்காணிப்பு செயற்பாடுகளில் மையப் பங்கு கொண்டுள்ளது என்பதை சமீபத்திய வெளிப்பாடுகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. தற்போதைய கூட்டணி அரசாங்கம், முந்தைய தொழிற் கட்சி அரசாங்கம் போல், ஆஸ்திரேலிய இராணுவத் தளங்களை அமெரிக்க துருப்புக்களுக்கு சீனாவிற்கு எதிரான கட்டமைப்பிற்கு திறந்து விடுகிறது; எனவே ASD முற்றிலும் பரந்த அமெரிக்க மின்னணு ஒற்று வலையமைப்பில் ஒருங்கிணைந்துள்ளது.

முன்பு கசிந்த NSA ஆவணங்கள் நான்கு ஆஸ்திரேலிய இடங்களானது X-Keyscore என பெயரிடப்பட்டுள்ள NSA திட்டத்திற்குத் தகவல்கள் கொடுக்கின்றன என்பதை வெளிப்படுத்தின; இது தகவல்களை தொலைப்பேசி எண்கள், மின்னஞ்சல் முகவரிகள், உள் நுழைதல், பாரிய தகவல் வங்கிகளில் சேகரிப்பு நடவடிக்கை பயன்படுத்துவோர் குறித்து என்று பிரிக்கிறது. இத்தளங்கள் அமெரிக்க ஆஸ்திரேலிய கூட்டுப் பாதுகாப்பு வசதி பைன் காப் என்று ஆலிஸ் ஸ்ப்ரிங்ஸ் மற்றும் மூன்று ASD நிலையங்கள் அருகில் உள்ளன—டார்வினுக்கு அருகே Shoal Bay Receiving Station,  மேற்கு ஆஸ்திரேலியாவில் கெரால்டன் பாதுகாப்பு துணைக்கோள் தொடர்பு நிலையம் மற்றும் கான்பெர்ராவிற்கு வெளியேள்ள HMAS ஹார்மன் கடற்படைத் தொடர்பு நிலையம் ஆகியவையாகும்.

இன்று சிட்னி மார்னிங் ஹெரால்ட் ஐந்தாவது மின்னணு கண்காணிப்பு நிலையம், உள்ளூரில் “சன்னல்கள் இல்லாத வீடு” என அழைக்கப்படுவதை அம்பலப்படுத்தியுள்ளது. இது தொலைவிலுள்ள இந்தியப் பெருங்கடல் கோகோஸ் தீவுகளில் இருக்கிறது. முன்னாள் ஆஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் கருத்துப்படி ASD நிலையம் “கடற்படை, இராணுவக் கண்காணிப்பிற்கு உள்ளது, குறிப்பாக இந்தோனேசிய கடற்படை, விமானப் படை மற்றும் இராணுவத் தொடர்புகள் பற்றியதாகும்.” ஆஸ்திரேலியாவின் கோகோஸ் தீவுகள் புறக்காவல் நிலையம், அமெரிக்க டிரோன்கள், போர் விமானங்களுக்கு தளத்திறன் கொண்டது எனக் குறிக்கப்பட்டுள்ளது, தென் கிழக்கு ஆசியாவில் முக்கிய மூலோபாய கப்பல் பாதைகளுக்கு அருகே உள்ளது.

முக்கியமான கேட்கும் நிலையங்களுக்கும் ஆஸ்திரேலியா ஆதரவு கொடுத்துள்ளது; அவை பெரிய கடலடி கேபிள்களுடன் பிணைக்கப்பட்டவை, மிக அதிக அளவு இணைய தள போக்குவரத்தை வட அமெரிக்கா, ஆசியாவிற்கு இடையே கொண்டு செல்லுபவையாகும். ஒரு மாதம் முன்பு Kyodo News, 2011ல் இதேபோன்ற கேபிள் வசதிகளை ஜப்பானில் நிறுவ வேண்டும் என்ற NSA இன் வேண்டுகோள்களை ஜப்பானிய அரசாங்கம் நிராகரித்தது; அதற்கு “சட்டமன்ற அதிகாரம் இல்லாததுதான் காரணம்” என்று கூறப்பட்டது. ஆனால் ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் ASD மற்றும் பிற ஒற்று நிறுவனங்கள் NSA உடைய சட்டவிரோத நடவடிக்கைகளில் இணைந்திருப்பது குறித்து மன உளைச்சலைக் கொண்டிருக்கவில்லை.

1999ல் ஆஸ்திரேலியாவின் கிழக்கு தீமோர் இராணுவத் தலையீட்டிற்கு நடுவே, முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி ஜோன் ஹோவர்ட் இழிந்த முறையில் ஒரு பேட்டியாளரிடம் ஆஸ்திரேலியா அமெரிக்காவிற்கு ஆசியாவில் “துணை ஷெரிப்” போல் செயல்படுகிறது என்பதை ஒப்புக்கொண்டார். அவருடைய கருத்து பிராந்தியம் முழுவதும் சீற்றத்தைத் தூண்டியது. நேற்றைய வெளிப்பாடுகள் குறித்துக் கருத்துத் தெரிவித்த சீனப் பேராசிரியர் ஜ பெங் அறிவித்தா: “ஆஸ்திரேலியா அமெரிக்காவை கொள்கைகளற்று, நிபந்தனையற்று பின்பற்றுகிறது. ‘துணை ஷெரிப்’ என்றுகூட அழைக்கப்பட ஆஸ்திரேலியாவிற்கு தகுதி இல்லை—அவர்கள் கீழ்ப்படிந்து நடப்பவர்களாகத்தான் உள்ளனர்.”

பிரதம மந்திரி டோனி அப்போட் இன் அப்பட்ட மறுப்புக்கள் இருந்தபோதிலும், ஆஸ்திரேலியாவின் ஆசியாவில் அமெரிக்க உளவு நடவடிக்கைகளில் கொண்ட நெருக்கமான ஈடுபாடு பரந்த கருத்தான கான்பெர்ரா அமெரிக்க ஏகாதிபத்தியம் மற்றும் அதன் கொள்ளை முறைச் செயல்களுக்கு தாழ்ந்து நடக்கும் நிலையைத்தான் கொண்டுள்ளது; இவை போட்டி அரசாங்கங்களுக்கு எதிராக என்று இல்லாமல், ஆசியா மற்றும் உலகின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும்தான்.