தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
European unemployment hits new high ஐரோப்பிய வேலையின்மை புதிய உயர் மட்டத்தை அடைகிறது
By Stefan Steinberg Use this version to print| Send feedback Eurostat தரவு நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய புள்ளிவிவரங்களின்படி, 17 நாடுகள் கொண்ட யூரோப்பகுதி நெடுகிலும் வேலையின்மை மிக அதிகமாக 12.2% என செப்டம்பர் மாதம் எட்டியுள்ளது. கூடுதலாக 60,000 பேர் வேலையற்றோர் எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர், இது யூரோப்பகுதியில் வேலையின்மையின் மொத்த எண்ணிக்கையை 19.5 மில்லியன் என ஆக்குகிறது. யூரோஸ்டாட் அதன் ஆகஸ்ட் மாத வேலையின்மை எண்ணிக்கையை 12.0% என்பதில் இருந்து 12.2% என உயர்த்தியுள்ளது. கிரேக்கம் மற்றும் ஸ்பெயினில் உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதங்கள் 25%க்கும் மேல் உள்ளன. பிரான்சில் வேலையின்மை விகிதம் ஆகஸ்ட்டில் இருந்த 11% ல் இருந்து செப்டம்பரில் 11.1% என உயர்ந்துள்ளது; இத்தாலியில் இந்த விகிதம் 12.4ல் இருந்து 12.5% என உயர்ந்துள்ளது. 27 உறுப்பினர் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில், உத்தியோகபூர்வ வேலையின்மை விகிதம், செப்டம்பர் மாதம் மாறாமல் 11% என நான்காம் தொடர்ச்சியான மாதத்தில் உள்ளது. யூரோஸ்டாட் புள்ளிவிவரங்கள் குறிப்பிடத்தக்க முறையில் வேலையின்மையின் உண்மை விகிதத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன; வேலை தேடுவதை நிறுத்திவிட்டவர்களை கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை அல்லது முழுநேர வேலை விரும்புவோர், பகுதி நேரத்தை கட்டாயமாக எடுத்துக்கொள்வதையும் கணக்கில் கொள்வதில்லை. இளைஞர்கள் வேலை தேடும் நிலை, இது யூரோஸ்டாட்டின் இளைஞர் வேலையின்மை புள்ளிவிவரங்களில் துல்லியமாகப் பிரதிபலிக்காவிட்டாலும் இன்னும் அழிவைத் தருவதாக உள்ளது. கிரேக்கத்தில் செப்டம்பர் மாதம் இளைஞர் வேலையின்மை 57% என இருந்தது என்று நிறுவனம் கூறுகிறது. ஆனால் ஹெலெனிக் (Hellenic) புள்ளிவிவர அதிகாரத்தின்படி, கிரேக்கத்தில் இளைஞர் வேலையின்மை ஏற்கனவே கடந்த மே மாதம் 64.9% ஐ எட்டிவிட்டது. வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை தொடர்ந்து கிரேக்கத்தில் இளைஞர் நிலை மேலும் மோசமாகிவிட்டது. மற்றய பல நாடுகளிலும் நிலைமை கடுமையாகத்தான் உள்ளது. ஸ்பெயினில் இளைஞர் வேலையின்மை மட்டங்கள் கிரேக்கத்துடையதை அண்மிக்கின்றன; 50% க்கும் மேலான விகிதம்தான் பொஸ்னியா, மாசிடோனியா மற்றும் புதிய ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் நுழைந்துள்ள குரோஷியா ஆகியவற்றில் உள்ளது. குறிப்பாக இளைஞர் வேலையின்மையை பொறுத்தவரை, யூரோஸ்டாட் புள்ளிவிவரங்கள் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான ஒரு குற்றச்சாட்டாகும். கடந்த ஜூன் மாதம் ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் பிரஸ்ஸல்ஸில் சந்தித்து கண்டத்தில் வேலையற்றோர், மற்றும் அரைகுறை வேலை வாய்ப்பு இளைஞர்கள் நிலைமை பற்றி முதலைக்கண்ணீர் வடித்தனர். அவர்கள் “இளைஞர் வேலையின்மை பற்றி அதிரடி நடவடிக்கைக்கு அழைப்பு” என்பதையும் வெளியிட்டனர். தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் அரசுசாரா அமைப்புக்களின் தலைவர்கள் பாராட்டியுள்ள வகையில், ஐரோப்பிய அரச தலைவர்கள் சிறப்பு நிதிகளை நிறுவுவதாக உறுதியளித்துள்ளனர்; அது கணிசமான இளைஞர் சதவிகிதத்திற்கு வேலை அல்லது முறையான வேலை பயிற்சியை அளிக்கும் எனக் கூறப்படுகிறது. அப்பொழுது முதல் பொதுவாக வேலையற்றோருக்கும், குறிப்பாக இளைஞர்களுக்கும் நிலைமை மோசமாகித்தான் விட்டது. புதிய வேலை தொடர்பான அறிக்கையை வெளியிடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, கண்டம் முழுவதும் இப்பொழுது நடந்து வரும் பொருளாதார நெருக்கடி, ஐரோப்பிய ஒன்றியத்தின் நீண்டகால வறுமைக்-குறைப்பு, வேலைகள் வாய்ப்பிற்கான மூலோபாய இலக்குகளை தடைக்கு உட்படுத்திவிட்டது என்பதை யூரோஸ்டாட் ஒப்புக் கொண்டுள்ளது. அக்டோபர் 29ல் வெளிவந்த அறிக்கை கூறுகிறது: “இந்த வறுமைப் போக்கு அதிகரிப்பை விரைவில் மாற்ற போதுமான கொள்கையளவு நடவடிக்கைகள் இல்லாத நிலையில், ஐரோப்பிய ஒன்றியம் 2020 ஐரோப்பிய வறுமை மீதான தலையங்க இலக்கில் இருந்து நகர்ந்துவிடும் ஆபத்தில் உள்ளது.” செப்டம்பர் மாதம் ஆக்ஸ்பாம் வெளியிட்ட அறிக்கை ஒன்று, ஏற்கனவே கிட்டத்தட்ட 150 மில்லியன் ஐரோப்பியர்கள் 2025 ஐ ஒட்டி வறுமையில் தள்ளப்படுவர் என எச்சரித்துள்ளது. (See: “Up to 150 million in Europe threatened with poverty”) வேலையின்மை குறித்து பெரும்பாலான கவனம் செய்தி ஊடகத்தால் காட்ட பெறுகையில், பணவீக்கம் பற்றிய ஐரோப்பிய ஒன்றிய அமைப்பின் புள்ளிவிவரமும் முக்கியமானது, இது பெருகும் பணப்புழக்கமற்ற அழுத்தங்களை சுட்டிக்காட்டுகிறது. யூரோஸ்டாட் கருத்துப்படி, யூரோப்பகுதியில் பண வீக்கம் அக்டோபரில் 0.7% என சரிந்தது. இது ஜூலையில் 1.6 சதவீதத்துடன் ஒப்பிடுகையில், செப்டம்பர் மாதம் 1.1 சதவீதம் ஆகும். விலைகள் உயர்வு மெதுவான விகிதத்தில் இருப்பது, தொழிலாளர்களின் சுருங்கும் பணப்பைகளையும், சரியும் வாங்கும் திறனையும் பிரதிபலிக்கிறது; இது சிக்கனக் கொள்கைகள், பரந்த வேலையின்மை மற்றும் ஊதியங்களின் கீழ்நோக்கிய அழுத்தம் ஆகியவற்றுடன் பிணைந்துள்ளது. இத்தகைய புள்ளிவிவரங்கள், சமீபத்திய கூற்றுக்களான, யூரோ நெருக்கடி முடிவை அடைந்து கொண்டிருக்கிறது, “ஐரோப்பிய சுரங்கப்பாதை வழியின் முடிவில் வரும் வெளிச்சம்” தெரிகிறது என்பவற்றை மறுதலிக்கிறது. நுகர்வோர் செலவில் வீழ்ச்சி என்பது, அரசாங்க வரி மூலம் பெறும் வருவாயை குறைக்கிறது; இது ஏற்கனவே அதிக வேலையின்மை விகிதங்களால் சரிந்து விட்டது. இதையொட்டி, தேசிய அரசாங்கங்களுடைய வீழ்ச்சியடையும் வருவாய் தளமும், அவற்றின் கடன் மட்டங்களும் அதிகரிக்கிறது. இத்தாலி, கிரேக்கம், அயர்லாந்து மற்றும் போர்த்துக்கல் அனைத்தும் தற்பொழுது தங்கள் ஆண்டு பொருளாதார உற்பத்தியைவிட அதிக அளவில் பொதுக்கடன்களை கொண்டுள்ளன; யூரோப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கடனின் சராசரி விகிதம் மிக உயர்ந்து 95% என உள்ளது — இந்த அளவு பொருளாதார வல்லுனர்களால் நீண்டகாலம் நீடிக்க இயலாது என்று கருதப்படுகிறது. ஐரோப்பாவில் பல மில்லியன் மக்களுக்கு சமூகப்பேரழிவை தோற்றுவித்துள்ள தங்கள் சிக்கன நடவடிக்கைகளை இடையறாமல் சுமத்துவதில் இருந்து பின் வாங்குவதற்கு மாறாக, பிரஸ்ஸல்ஸிலும் பேர்லினிலும் அரசியல்வாதிகள் அவற்றை தீவிரப்படுத்த முயல்கின்றனர். சமீபத்திய Der Spiegel பதிப்பின்படி, ஜேர்மனியின் நிதி அமைச்சரக அதிகாரிகள் தற்பொழுது “ஒற்றுமை உடன்பாடு” என்பதை வரைந்து கொண்டிருக்கின்றனர்; இதன்படி ஐரோப்பிய நாடுகள் புதிதான பிணைஎடுப்பு நிதியை நாடுபவை, கடுமையான கட்டுமான நடவடிக்கைகளை செயல்படுத்த வேண்டும், அவை போட்டித்தன்மையை அதிகரிக்கும் நோக்கம் கொண்டிருக்க வேண்டும், அதாவது வேலைகள், ஊதியங்கள், பணிநிலைகள் மீது புதிய தாக்குதல்களை நடத்த வேண்டும். Der Spiegel ல் வந்துள்ள இதே கட்டுரை, ஜேர்மனிய சான்ஸ்ர் அங்கேலா மேர்க்கெல் தன் “புதிய விருப்பமான” சமூக ஜனநாயகக் கட்சியின் ஐரோப்பிய பாராளுமன்ற தலைவர் மார்ட்டின் ஷூல்ட்ஸ் தன் திட்டங்களை அடைய நெருக்கமாக ஒத்துழைப்பு கொடுப்பார் என நம்புகிறார் என எழுதியுள்ளது. சரியும் ஊதியங்களால் பெருநிறுவனங்கள் பெரும் இலாபங்கள் அடைவது மற்றும் கிட்டத்தட்ட வட்டி இல்லாமல் வங்கிகள் ஐரோப்பிய மத்திய வங்கியில் இருந்து கடன் பெறுவது ஆகியவை பங்குச் சந்தைகளை கண்டம் முழுவதும் ஏற்றம் காண வைத்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மனிய DAX குறீயீடு 9000 புள்ளி அளவை வரலாற்றில் முதல் தடவையாக கடந்தது. அதே நேரத்தில் ஐரோப்பிய மத்திய வங்கி மற்றும் உலகின் மற்ற மத்திய வங்கிகள் முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் பெரும் நிதியங்கள் புதிய ஊகக் குமிழ்களுக்கு எரியூட்டுகின்றன. கடந்த ஐந்து ஆண்டுகளாக வங்கிகளையும், ஊக வணிகர்களையும் கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை என்று குறிப்பிட்ட பின்னர், நிதிய வர்ணனையாளர் வொல்ப்காங் முன்ச்சொவ் தன்னுடைய சமீபத்திய Der Spiegel கட்டுரையில் கீழ்க்கண்டவாறு முடிவுரை கூறியுள்ளார்: “மீண்டும் மலிவான கடன், நச்சு நிதிய தயாரிப்புகள், நிதியக் களியாட்டம் மற்றும் அரசியல், வங்கிகளில் தலையிட விருப்பமின்மை அனைத்தும் ஒன்றாக வந்துள்ளன. நாம் மீண்டும் சூதாட்டத்திற்குள் வந்துவிட்டோம், அது எப்படி முடிவடையும் என்று நாம் அனைவரும் அறிவோம்.” |
|
|