சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Emergency manager continues threat to “monetize” DIA art treasures

அவசர மேலாளர் DIA கலைப் பொக்கிஷங்களை பணமாக்கும் அச்சுறுத்தலைத் தொடர்கிறார்.

By Jerry White
17 October 2013

Use this version to printSend feedback

சமீபத்திய செய்தி அறிக்கையின்படி, கிறிஸ்டியின் ஏல நிறுவனம் உலக புகழ் வாய்ந்த கலைப்படைப்புகளின் மதிப்புகளை கணக்கிடும் பணியை அக்டோபர் மாத இறுதி வாக்கில் நிறைவு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் அவசர மேலாளரான கெவின் ஓர் இந்த மதிப்பிடலுக்கு ஆணையிட்டிருப்பதுடன் டெட்ராய்ட்டின் கடன்களைக் கட்டுப்படுத்தும் பெரும் வங்கிகள் மற்றும் பத்திர உரிமையாளர்களுக்கு பணத்தை திருப்பி செலுத்துவதற்காக குறைந்தபட்சம் அரை பில்லியன் டாலர்களாவது அதிகரிக்கும் வகையில், விலைமதிக்க முடியாத கலை படைப்புகளை விற்கப் போவதாக அச்சுறுத்தியும் உள்ளார்.

ஓரின் பத்திரிகை செயலாளரான பில் நவ்லிங்கின் கூற்றுப்படி, மத்திய திவால் நீதிபதி ஸ்டீவ் ரோடெஸிடம் இவ்வாண்டின் இறுதியளவில், தனது மறுகட்டமைக்கும் திட்டத்தை முன்வைக்க  திட்டமிட்டுள்ளதுடன், ஓர் நவம்பரில் DIA பிரச்சனையை தீர்க்க விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

பொது நிர்வாகத்தின் கீழ் இருக்கும் கலைப்படைப்புகளில் இருந்து எவ்வாறு பணம் திரட்டுவது என்பது குறித்து அவசரகால மேலாளர் இதுவரையிலும் முடிவெடுக்கவில்லை என்று நவ்லிங் கூறினார். கடன் கொடுத்தவர்களுடன் ஒரு உடன்படாட்டை போலியாக அமைப்பதையும் சில வழியில் கலைப்படைப்புகளை பணமாக்குவது குறித்து ஒரு மறுகட்டமைப்புத் திட்ட இணைப்புக்கான நீதிபதி ஸ்டீவன் ரோடஸின் அனுமதியைப் பெறுவதையும் ஓர் நம்புகிறார் ஆனால் எந்த தவறும் செய்யவில்லை, என்பதாக Detroit Free Press அக்டோபர் 14ல் வெளியிட்ட கட்டுரை ஒன்றில் எழுதியது. வேறுபட்ட சொத்துகளுக்காக நாம் மிக-உகந்த தேசிய வரையறை நிலைமை ஒன்றை உருவாக்க ஆரம்பிக்க முடியாது என்றும் அவர் கூறினார்.

டெட்ராய்ட்டில் எந்த ஒரு விற்பனையையும் எதிர்த்து சமீபத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 78 சதவீதத்தினர்  பொருட்காட்சிசாலையை சூறையாடும் அச்சுறுத்தலை எதிர்த்ததுடன், மக்கள் பெரும் கொந்தளிப்பில் உள்ளனர். சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE- ஆல் (International Youth and Students for Social Equality) அக்டோபர் 4இல் நடத்தப்பட்ட ஒரு பேரணியில் இந்த எதிர்ப்பு வெளியிடப்பட்டது, அது DIA இனை பாதுகாப்பதற்காக நூற்றுக்கணக்கான தொழிலாளர்களையும், மாணவர்கள் மற்றும் கலைஞர்களையும் அணிதிரட்டியது.

இந்த நிலைமைகளின் கீழ், அருங்காட்சியகத்தின் பொருட்களை ஒட்டுமொத்தமாக விற்பதற்கு முன்வைக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை ஓரும் உள்ளூர் ஊடகமும் பரப்பிவிடுகின்றன. திடீரென, இது இனிமேல் கலைப்படைப்புகளை விற்பது குறித்து அல்ல, ஆனால் அதற்கு பலம் கொடுப்பதற்காக என்பதாக Detroit Free Press பத்திரிகையில் ஒரு செய்தி வெளியானது.

DIA உடன்பாட்டின் விதங்கள்: கலைப்படைப்புகளை விற்காமல் அவற்றிலிருந்து ஓர் பணம் பெற வேண்டும், என்ற The Free Press இன் கட்டுரை, குறைந்த கடுமையான நடவடிக்கைகள் பரிசீலிக்கப்படுகின்றன என்று செய்தித்தாள் வாசிப்பவர்களை நம்ப வைப்பதற்கான ஒரு கஸ்டப்படும் முயற்சியாகும்.

எவ்வாறாயினும், இந்த பலதரப்பட்டமாற்றீடுகளின் தர்க்கம் DIA ஒரு பொது நிறுவனமாக இருப்பதை அழிப்பதும் மற்றும் அதன் கலையை நிதி நிறுவனங்கள் மற்றும் கலை ஊகவாணிபர்கள் வாங்கி விற்கவும் முடிகிற வரை கலையை பணப்பொருளாக்கும்நடவடிக்கை DIA வின் அழிவிற்கே இட்டுச்செல்லும்.

முதலீட்டாளர்களிடமிருந்து நிதியினை அதிகப்படுத்துவதற்காக பங்குகளை விற்பது அல்லது தனிநபர்களுக்கான ஒப்பந்தங்கள் மூலம் கலைப்படைப்புகளைமதிப்பீடு செய்யும் முதல் திட்டம், ஓரால் அவசரமாக செயல்படுத்தப்பட்டிருக்கிறது. என பத்திரிகை தெரிவிக்கின்றது.

ஆயினும், ஒரு பகுதி பொருட்களை உலகெங்கிலும் பொருட்காட்சியகங்களுக்கு நீண்ட-கால குத்தகைக்கு விடுவது மற்றும் அரும்பொருள்காட்சியகத்தின் ஓவியங்கள் மற்றும் சிற்பங்களை வங்கிக் கடன் அல்லது நகரசபையின் பங்குப்பத்திரங்களுக்கான உடனொத்த பணமாகப் பயன்படுத்துவது போன்றவை பிற திட்டங்களுள் உள்ளடங்கும்.

ஒரு வங்கிக் கடனை பாதுகாப்பதற்காக கலை பயன்படுத்தப்படலாம் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர் என்பதாக The Free Press எழுதுகிறது. ஆயினும், உதாரணமாக கலையை உடனொத்த பணமாக பயன்படுத்துவதென்பது கவர்ச்சிகரமானதாக இருக்கலாம். ஆனால் நகரசபை அதன் மதிப்பிற்குகேற்ற கடன் பெற்று பின்னர் பிரச்சனை என்றால், வங்கி அடமான அதிகாரி சொத்துக்களைக் கைப்பற்றவும் விற்கவும் செய்யலாம் என்று பொருள்படும்.

இது நடைமுறைக்குட்படமுடியாத கேள்வியல்ல. கடந்த வாரம், லண்டனை அடிப்படையாகக் கொண்ட பார்க்லே வங்கியுடன், வங்கி திவால் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 350 மில்லியன் டாலர்கள் கடனுக்கான ஒப்பந்தத்தம் ஒன்றுக்கு ஓரின் அலுவலகம் அனுமதியளித்தது. அவசரகால மேலாளரால் ஆதாயங்கள் நீக்கப்பட்டுவருகின்ற பணி ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியத்தினை பாதுகாப்பதற்காக இக்கடன் பயன்படுத்தப்படாது, மாறாக, மில்லியன் கணக்கான டாலர்கள் தவறான கடன் உள்ளிருப்பு பரிவர்த்தனைகளால் நாட்டை ஏமாற்றிய Bank of America-Merrill Lynch மற்றும் UBS க்கு செலுத்துவதற்காக பயன்படுத்தப்படும்.

ஒரு செய்தியின் படி,டெட்ராய்ட்டின் வருமான வரி மற்றும் கேஸினோ வரி வருவாயின் ஒரு உத்திரவாதத்துடன் இந்த கடன் பாதுகாக்கப்படும் என்பதாகத் தெரிகிறது. முக்கியமாக, அந்த நிதி போதுமானதாக இல்லையென்றால், 10 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக இருக்கும் நகரின் சொத்துக்களில் எதாவது ஒரு நகரத்தின் முக்கிய சொத்தினை பணமாக்குவதன் மூலம் கிடைக்கும் நிகர பணத்தொகை கடனை திருப்பி செலுத்துவதற்கு பயன்படுத்தப்படும்.

DIA இற்கு கடனால் அச்சுறுத்தல் இல்லை. சொத்துக்கள் பணத்திற்காக விற்கப்படுகிறது என்று சொன்னால், அவை அடமானமானமாக மட்டுமே வைக்கப்படும். அதனால் டெட்ராய்ட் கலைக் கழகத்தில் இருக்கும் அரசால் நிர்வகிக்கப்படும் கலை அநேகமாக இந்த ஒப்பந்தத்திற்கான இணையான பயன்படுத்தப்படுகிறது என்று பொருள்படும் என்பதாக பார்க்லே உடனான ஒப்பந்தத்தின் மீதான அதன் கட்டுரையில் The Free Press கூறுகிறது.

ஆயினும் இது அரிதாகவே மறு-உத்தரவாதம் அளிக்கிறது. சாத்தியமுள்ள வகையில்பணமாக்க முடிகின்ற DIA இன் கலைப்படைப்புகள் உள்ளிட்ட எதுவும், கடன் கொடுத்தவர்களுக்கு செலுத்துவதற்காக மேசையின் மேல் வைக்கப்படுகிறது என்று ஓர் திரும்பத் திரும்ப சொல்லியிருக்கிறார். டெட்ராய்ட் மிருகக்காட்சி சாலை மற்றும் Belle Isle உள்ளிட்ட நாட்டின் பிற பொதுச் சொத்து போன்றே, DIA இன் கலை படைப்பையும் வங்கிகளுக்கு திருப்பி செலுத்துவதற்கான பணமாக மாற்றப்பட முடியும்.

அமெரிக்க வங்கி திவால் சட்டம் அத்தியாயம் 9 இன் கீழ், நீதிபதி ரோடெஸோ அல்லது நகருக்கு கடன் கொடுத்தவர்களோ எந்த ஒரு சொத்தின் விற்பனையையும் கட்டாயப்படுத்த முடியும். ஆயினும், ஓரிடம் DIA விடமிருந்து பணத்தை பிடுங்காத எந்த ஒரு திட்டத்தையும் நீதிபதி மறுக்க முடியும். கலைக்கு மதிப்பு இல்லை என்பதுபோல் பாசாங்கு செய்ய முடியாதுஎன்று நகராட்சி திவால் நிபுணரான கிரெய்க் பார்பரோஷ் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஓரின் தேவையான 500 மில்லியன் டாலர்களை எதிர்கொள்வதற்காக, உணைமையில் மாநிலம் அருங்காட்சியகத்தை எடுத்துக் கொள்வது தொடர்பான ஒரு திட்டத்தினை DIA அதிகாரிகள் முன்மொழிந்துள்ளதாக The Free Press கட்டுரை குறிப்பிடுகிறது. நகரின் மறு கட்டமைப்பிற்காக, DIAஇன் சார்பாக அடுத்த இருபது வருடங்களுக்கு, வருடத்திற்கு 20 முதல் 25 மில்லியன் டாலர்கள் வரை வழங்குமாறு ஆளுனர் ரிக் ஸ்னைடர் மற்றும் மிச்சிகன் சட்டமன்றத்திடம் அவர்கள் கேட்டிருக்கிறார்கள். அருங்காட்சி சாலை செயல்பாடுகளுக்கு நிதியளிப்பதற்காக இந்த நிதி போகாது. மாறாக, சொல்லப்போனால் கடன் கொடுத்தவர்களுக்கு செலுத்துவதற்காக கிடைப்பதாக இருக்கும். இதற்கு மாற்றாக, DIA அதன் மாநில அளவிலான திட்டத்தினை விரிவுபடுத்தி பொருட்காட்சிசாலைக்காக நாடு முழுவதும் பயணக் கண்காட்சிகளை நடத்த அனுப்பும்.

மேலும், பொருட்காட்சிசாலை கட்டிடம் மற்றும் கலையின் உரிமையை டெட்ராய்ட்டிடமிருந்து மாநிலம் அல்லது நகருடனான ஓர் இயக்க ஒப்பந்தத்தின் கீழ் அருங்காட்சி சாலையை நடத்தி வரும் தனியார் இலாப-நோக்கற்ற அமைப்புக்களுக்கு மாற்றுவதையும் இந்த திட்டம் உள்ளடக்குகிறது என்று செய்தி தெரிவிக்கிறது.

அருங்காட்சியகத்தின் நிதியில், வருடத்திற்கு 16 மில்லியன் டாலர்கள் அளவுக்கு -பெரும்பான்மையாக வழங்கி வந்த மிச்சிகன் அரசு, DIA இற்கான அனைத்து நிதிய உதவிகளையும் நிறுத்திக் கொண்டுள்ளது. பொது கல்வி, ஓய்வூதியம் மற்றும் பிற முக்கிய சேவைகளுக்கான நிதியினை தற்போது விலக்கிக் கொண்டிருக்கும் ஜனநாயக அல்லது குடியரசுக்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் பொருட்காட்சிசாலையை ஆதரிப்பதற்காக ஏதேனும் செலவு செய்வார்களா என்ற எதிர்பார்ப்பில் சிலர் இருக்கின்றனர்.

மிக முக்கியமாக, Belle Isle park, டெட்ராய்ட் குடிநீர் மற்றும் கழிவு நீர்த்துறை, மற்றும் பிற அரசுடமையான சொத்துக்கள் உள்ளிட்ட பல்வேறு மாநில மற்றும் பிராந்திய கையகப்படுத்தும் நடவடிக்கைகள் ஏற்கெனவே ஓரால் முன்மொழியப்பட்டிருக்கிறது. டெட்ராய்ட் மக்களுக்கான அல்லது பிற பகுதி மக்களுக்கான வளங்களைப் பாதுகாப்பதற்கும் இவற்றுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. முரணாக, இந்த பொது சொத்துக்களை ஒட்டு மொத்தமாக தனியார்மயமாக்குவதற்கான வழிவகுத்து வரும் வேளையில், பொது சொத்துக்களின் சட்டபூர்வ பாதுகாப்புகளை குறைத்து மதிப்பிடுவது, பொது அனுமதி இல்லாதவற்றை கட்டணங்களுக்காக அனுமதியளிப்பது மற்றும் நகராட்சி தொழிலாளர்களின் கூலிகள் மற்றும் ஓய்வூதியங்களை குறைத்தல் போன்றவற்றை குறி வைக்கின்றன.

எந்த ஒரு மாநிலமாவது DIAவை எடுத்து கொள்வதென்பது நுழைவுக் கட்டணம் அதிகரிக்க வழிவகுக்கும். தற்போது வெய்னி, மேகோம்ப் ஓக்லேண்ட் நாட்டில் வசிப்பவர்களுக்கு இந்த பொருட்காட்சிசாலைக்கு  நுழைவுக்கட்டணம் கிடையாது.

ஊடகமும் ஒரு பகுதி அரசியல் ஆளும்தட்டினரும் DIA பாதுகாப்பாக இருப்பதாக மாயைகளை பரப்ப விரும்புகின்றன. அதே நேரம், ஒட்டுமொத்த திவால் செயல்முறை மற்றும் வால் ஸ்ட்ரீட் வங்கிகள் மூலம் டெட்ராய்ட்டை சூறையாடுவதற்கான சட்டபூர்வ தன்மையை  அவர்கள் தக்க வைத்துக் கொள்கிறார்கள்.

ஆளுனர் ஸ்னைடர் போன்ற குடியரசுவாதிகள் முதல், ஓர், நகரசபைத் தலைவர் மேயர் டேவிட் பிங் மற்றும் ஜனாதிபதி ஒபாமா போன்ற ஜனநாயகக் கட்சியினர் வரையிலான ஒட்டுமொத்த அரசியல் நிர்வாகமும், நாட்டின் ஓய்வூதியங்களை அழிப்பதற்கான மற்றும் தாங்கள் பிரதிநித்துவப்படுத்தும் பெரு நிறுவன மற்றும் நிதி உயரடுக்கிடம் தங்களால் முடிந்த அனைத்தையும் ஒப்படைப்பதற்கான ஒரு பரிசோதனையாக நகரத்தினை பயன்படுத்திக் கொள்ள விரும்புகின்றன.

பெரும் வங்கிகள் மற்றும் நிறுவனங்கள் சமுதாயத்தை பற்றியிருக்கும் இரும்புப் பிடியை உடைப்பதற்கு, உழைக்கும் வர்க்கத்தினை தொழிற்துறை மற்றும் அரசியல்ரீதியாக அணிதிரட்டுவதன் மூலம் மட்டுமே கலாச்சார உரிமையை பாதுகாத்துக்கொள்ள முடியும்.

சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் IYSSE இரண்டும் DIA மற்றும் உழைக்கும் வர்க்கத்தின் அனைத்து உரிமைகளையும் பாதுகாப்பதற்கான பிரச்சாரத்தை தொடர்ந்து வருகிறது. கூடுதல் தகவலுக்கு defendthedia.org. -ஐ பார்க்கவும்.