World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரித்தானியா

Top UK universities call for cuts to funding for poorer students

உயர்மட்ட ஐக்கிய இராச்சிய பல்கலைக்கழகங்கள் ஏழை மாணவர்களுக்கான நிதியங்களில் வெட்டுக்கு அழைப்பு விடுகின்றன

By Joan Smith and Paul Mitchell
30 May 2013

Back to screen version
 

டைம்ஸுடைய தகவல்படி, பிரித்தானியாவின் ரஸ்ஸல் குழுவின் 24 உயர்மட்ட ஆராய்ச்சி பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், ஏழை மாணவர்களுக்கு உதவுவதற்காக அளிக்கப்படும் நிதியங்களில் குறைப்புக்களை ஏற்படுத்த அரசாங்க மந்திரிகளிடம் "தனிப்பட்ட முறையில் வலியுறுத்தி" உள்ளனர்.

கிட்டத்தட்ட 4 பில்லியன் பவுண்டுகள் தற்பொழுது பராமரிப்பு மானியங்கள் மற்றும் மாணவர்கள் கடன் உதவி நிதிக்குச் பொது நிதியிலிருந்து செல்கின்றன. பல்கலைக்கழகத்தில் சேருவதற்காக ஏழை மாணவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் “வாய்ப்பு நிதிகளும் உள்ளன.

இது, ஜூன் 23ல் கன்சர்வேடிவ் லிபரல் டெமக்ராடிக் கூட்டணி அரசாங்கத்தின் அடுத்த செலவுப் பரிசீலினை வெட்டில் இருந்து விஞ்ஞான ஆராய்ச்சி நிதியை பாதுகாக்க மாணவர்களுக்கான ஆதரவு வரவு-செலவுத் திட்ட நிதியை குறைத்தல் தேவை என துணை வேந்தர்கள் கூறுகின்றனர். 4.6 பில்லியன் பவுண்டுகள் விஞ்ஞான வரவு-செலவுத் திட்டம் பெரும்பாலும் தொடாமல் விட்டுவிடப்பட்ட நிலையில், அறிக்கைகள் அதுவும் பிற வளையத்திற்குள் இருக்கும் பொதுச்செலவுகளும், பள்ளிகள், வெளிநாட்டு உதவி போன்றவை இப்பொழுது இலக்கு வைக்கப்படலாம் என்று தெரிவிக்கின்றன.

துணை வேந்தர்கள் விடுத்துள்ள அழைப்பு குறுகிய தன்மை உடையதும், பல்கலைக்கழகங்களை சந்தைமயமாக்குதல் மற்றும் தனியார்மயமாக்கப்படுதல், பொதுநிதி அளித்தலை திரும்பப்பெறல் இவற்றின் விளைவுகளால் ஊக்கம் பெற்ற, யாரையாவது துன்புறுத்தி தமது வெற்றியை சாதித்துக்கொள்ளும் சூழ்நிலைக்கு மேல்தட்டின் விடையிறுப்பாக உள்ளது. ரஸ்ஸல் குழு பல்கலைக்கழகங்கள், கூடுதலான விகிதத்தில் செல்வந்தர்களையும், தனிப்பட்ட முறையில் படித்த மாணவர்களையும் கொண்டுள்ளது. இவை புதிய பல்கலைக்கழகங்களை போல அதிக மானியங்களை பெறுவதில்லை, பெரும்பாலான விஞ்ஞான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன.

புதிய பல்கலைக்கழகங்கள் ரஸ்ஸல் குழுத் திட்டங்களை எதிர்ப்பதோடு மேலும் தற்போதைய பயிற்சிக் கட்டணத்தை சராசரி 7,500 பவுண்டுகளில் இருந்து அதிகப்பட்சம் 9,000 என உயர்த்த வேண்டியிருக்கும் என்றும் கூறுகின்றன. கிட்டத்தட்ட ரஸ்ஸல் குழுப் பல்கலைக்கழகங்கள் அனைத்துமே ஏற்கனவே இந்த அதிகபட்ச கட்டணங்களைத்தான் வசூலிக்கின்றன.

இங்கிலாந்தின் உயர்கல்விக்கான நிதியளித்தல் சபை (HEFCE) ஏற்கனவே அதன் அடுத்த கல்வி ஆண்டிற்கான நிதி ஒதுக்கீடுகளை வெளியிட்டுவிட்டது, 120 பல்கலைக்கழகங்களின் வரவு-செலவுத் திட்டங்களைக் குறைத்து, 203 கூடுதல் கல்லூரிகளின் வரவு-செலவுத் திட்டங்களையும் 15%க்கு மேல் தற்போதைய 5.3 பில்லியன் பவுண்டுகள் என்பதில் இருந்து 4.5 பில்லியன் பவுண்டுகள் என குறைத்துவிட்டது. ஆசிரியர் மானியம் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்டு, 2.3 பில்லியன் பவுண்டில் இருந்து 900 மில்லியன் பவுண்டுகள் எனக் குறைக்கப்பட்டுவிட்டது.

கடந்த இரு வருடங்களில், மொத்தம் 1.6 பில்லியன் பவுண்டுகள் வரவு-செலவுத் திட்டத்தில் இருந்து வெட்டப்பட்டுவிட்டன. இது பாடத்திட்டங்களுக்கு நிதியளிக்க மாணவர்கள் கட்டணங்களை பல்கலைக்கழகங்கள் நம்பவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. இந்த வெட்டுக்களின் மத்தியில் பல்கலைக்கழகங்கள் செயற்பாட்டை தொடரப் போராடுகையில், வேலை இழப்புக்கள், துறைகள்மூடல்கள் ஆகியவற்றிற்கு வகை செய்கின்றன. 2012ல் பல்கலைக்கழகங்களில் படிப்பதற்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை, 8.9% என முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது குறைந்துவிட்டது இது பயிற்சிக் கட்டணம் 9,000 பவுண்டுகள் என மும்மடங்காக ஆக்கப்பட்டதின் நேரடி விளைவாகும். இந்த ஆண்டு ஏற்கனவே தகுதியுடைய மாணவர்களின் விண்ணப்பங்களில் 40% சரிவு ஏற்பட்டுவிட்டது.

ரஸ்ஸல் குழுவின் இல்லாத டர்ஹாம் பல்கலைக்கழகத்தின் விவகாரம், 2010ல் நடந்த கடைசி செலவுப் பரிசீலனைக்கு பின் சுமத்தப்பட்ட வெட்டுக்களின் பாதிப்பிற்கு உதாரணமாக உள்ளது. அதேபோல் மானியத்தில் இருந்து பயிற்சிக் கட்டண உயர்விற்கு விரைவில் திரும்பியுள்ளதின் விளைவும் தெரியவருகிறது. டர்ஹாமில் பயிற்றுவிப்பதற்கான நிதி, 2012ல் இருந்த 39 மில்லியன் பவுண்டுகளில் இருந்து இந்த ஆண்டு 19 மில்லியன் பவுண்டுகள் என பாதிக்கும் மேல் வெட்டப்பட்டுவிடும். ஆசிரியர் நிதி வெட்டுக்கள் என கடந்த ஆண்டு சுமத்தப்பட்டது, அதன் கட்டணத்தை அதிகப்பட்சமாக 9,000 பவுண்டுகள் என உயர்த்தும் கட்டாயத்திற்கு தள்ளியது என பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

ரஸ்ஸல்குழு அல்லாத பல்கலைக்கழகங்கள் மீது ABB தரங்கள் அல்லது A தரங்கள் சாதிக்கும் மாணவர்களுக்கான இடங்களின் வரம்புகளை உயர்த்துவதற்கும் அழுத்தம் கொடுத்துள்ளது. இந்த ஆண்டு வரைக்கும்சமூகநிலையில் மாற்றத்தைஅதிகரிக்க என்ற பேரில், ஒவ்வொரு பல்கலைக்கழகமும் உயர்மட்டத் தரங்கள் கொண்ட மாணவர்களை அனுமதிக்கும் எண்ணிக்கையில் உச்ச வரம்பு இருந்தது. இப்பொழுது அந்த வரம்பு அகற்றப்பட்டுவிட்டது; மிகவும் பெருமை பொருந்திய கல்விக்கூடங்கள் அதிக தகுதியுடைய மாணவர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்திக் கொள்ள முடியும்.

அதே நேரத்தில், லண்டனில் உள்ள Regent’s College நாட்டின் இரண்டாம் தனிப் பல்கலைக்கழகமாக ஆகிவிட்டது. இந்த நிறுவனம் கடந்த ஆண்டு பட்டம் அளிக்கும் அதிகாரங்களைப் பெற்றது. அதன் முழுநேர பட்டப்படிப்புத் திட்டங்களுக்காக மாணவர்களிடம் ஒவ்வொரு ஆண்டும் 15,000 பவுண்டுகள் பயிற்சிக் கட்டணம் வசூலிக்கும், பட்டப்படிப்பின் பின்னரான திட்டங்களுக்கு (post-graduate courses) கிட்டத்தட்ட 19,000 பவுண்டுகள் வசூலிக்கும். பிரித்தானிய மாணவர்கள் ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற, அரசாங்கத்திடம் இருந்து 6,000 பவுண்டுகள் வரை கல்விக்கடன் பெறமுடியும்.

தனியார் நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக அந்தஸ்து அளித்துள்ளமை பங்குச் சந்தை நிறுவனங்களினால் தலைமைதாங்கப்படும்  இலாபத்திற்காக செயல்படும் நிறுவனங்களுக்கு வழிவகுத்து அவை  பொது நிதிப் பயிற்சிக் கட்டணக் கடன்களை அணுகவும், பிணையற்ற அடைமானத்துறையை போன்ற ஒரு பெரிய சந்தையை  தோற்றுவிப்பதற்கும் ஆகும்.

தன்னுடைய புதிய புத்தகமான The Great Universtiy Gamble, Money, Markets and the Future of Higher Education என்பதில் ஆண்ட்ரூ மக்கெட்டிகன் எழுதுவதாவது: “இங்கிலாந்தில் பலக்லைக்கழக எண்ணிக்கை, இணைப்புக்கள் மூலம் அல்லது சரிந்துவிடுவதின் மூலம் குறைவதை நாம் எதிர்பார்க்கலாம், வருங்கால மாணவர்கள் எங்கு என்ன படிக்க வேண்டும் என்பதில் குறைந்த தேர்வைத்தைத்தான் முகங்கொடுப்பர்.”

உயர்கல்வி முறை “மாற்றத்தின் விளிம்பில் உள்ளது என அவர் விளக்குகிறார்; 20 ஆண்டுகளுக்கு முன் கால்பந்தில் இருந்த நிலைமையுடன் ஒப்புமை காட்டுகிறார்; “அப்பொழுது பிரிந்து சென்ற பிரிமியர் லீக் மற்றும் Sky TV பணமும் இணைந்து பெருநிறுவன மறுகட்டமைப்பில் கட்டுப்பாட்டுத்தன மேலாதிக்கத்தை கொண்டு விளையாட்டின் நிதிய வழிவகைகளை வேறுவழிக்கு மாற்றினஎன்று எழுதியுள்ளார்.

ஒரு புதிய உயரடுக்கு உயர் கல்வியில் “அதன் நிலைமையை உறுதிப்படுத்திக் கொள்ளும்”; மற்றவர்கள் “ஒரு புதிய சந்தையில் இடம் தேட வேண்டும், அது நிறைய மலிவாகப் பட்டம் அளிக்கக் கூடியவர்களைக் கொண்டிருக்கும்” என்று அவர் கணித்துள்ளார்.

“மரபார்ந்த பன்முகப் பல்கலைக்கழகம், பல பட்டங்கள் மற்றும் நிதானமான முறையில் ஆராய்ச்சி திட்டத்தைக் கொண்டிருந்த காலகட்டம் முடிவடைந்துவிட்டது” என்று சேர். மைக்கேல் பார்பர், பியர்சனுக்கு தலைமை கல்வி ஆலோசகர் தன் அறிக்கையான An Avalanche is Coming என்பதில் எழுதியுள்ளார். அதே நேரத்தில் மிக கௌரவம் பொருந்திய பல்கலைக்கழகங்கள் தனியார் நிதிவழங்கும் அமைப்புக்களின் தாக்குதலில் இருந்து தப்பிப் பிழைக்கும் என்றும் எச்சரித்துள்ளார்.

நிதியப் பிரபுத்துவத்தின் நலன்களுக்கு பார்பர் குரல் கொடுக்கிறார்; அவற்றின் உயர் கல்விச் செயற்பட்டியல் பொது நிதியை நெரித்து, பல்கலைக்கழகங்களை பெருநிறுவனக் கட்டுப்பாட்டின்கீழ் இருக்கும் நிறுவனங்களாக மாற்றுதல், அதையொட்டி வணிகத் தேவைகளுக்கு ஏற்ப பாடத் திட்டங்கள் அளித்தல் என்பதாகும். பாடத்திட்ட பன்முக வகை குறைக்கப்படும், பாடங்கள் எளிதாகவும் இலாபகரமாக கற்பிப்பதற்கும், விஷேடமுறை பாடங்களை அகற்றுவதற்கும் உதவும். -குறிப்பாக கலைத்துறை, மனிதயியல் பாடத்திட்டங்கள் அகற்றப்படும்-. மாணவர்கள் எண்ணிக்கை குறையும், செல்வம் நிர்ணயிக்கும் இரு அடக்கு உயர் கல்வி முறை வேறூன்றிவிடும்.

இவை எதுவுமே தங்களை பேச்சுக்களில் நிர்வாகம் தொடர்புபடுத்தி வைத்திருக்கும்வரை வேலைகள் இழப்பையும் ஊதியங்கள், பணிநிலைமைகள் மாற்றப்படுவதற்கும் தங்கள் விருப்பத்தைக் காட்டியுள்ள கல்வித்துறை தொழிற்சங்கங்களாலோ அல்லது தேசிய மாணவர் அமைப்பாலோ தீவிரமாக எதிர்க்கப்படவில்லை. முன்னாள் இடது அமைப்புக்களான சோசலிச தொழிலாளர் கட்சி போன்றவை மாணவர்களையும் ஊழியர்களையும் தொழிற்சங்கங்களுக்கும் NUSக்கும் பயனற்ற எதிர்ப்பு அரசியல் மூலம் அடிபணியசெய்ய தம்மால் இயன்ற அனைத்தையும் செய்கின்றன.

சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் பின்னர் பொலிசால் முறியடிக்கப்பட்ட தொடர்ந்த ஆர்ப்பாட்டங்களும் எட்டு வாரகால மாணவர் ஆக்கிரமிப்பும் போலி இடதுகளினால் ஏற்பாடு செய்யப்பட்டது. இது கடந்த ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட 235 குடியிருப்புக்கள், உணவளிக்கும் துறை வேலைகளை வெளியோருக்கு கொடுப்பதற்கு எதிராக போராட  தொழிற்சங்கம் மறுத்துவிட்டதை மூடிமறைப்பதற்காக நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களுக்கு பின்தான் Unison, Unite, University and College Union  ஆகியவை தங்கள் உறுப்பினர்களிடம்கொள்கையளவில் அவர்கள் தொழில்துறை நடவடிக்கை எடுக்கத் தயாரா என ஆலோசிக்கப் போவதாக” அறிவித்தன; ஆனால் அது “தன் திட்டம் குறித்து பல்கலைக்கழகம் முறையாக ஆலோசனைகளை நடத்த தவறினால்தான்” என்றும் கூறிவிட்டன.