World Socialist Web Site www.wsws.org |
Japanese share sell-off a sign of growing financial instability ஜப்பானிய பங்குகளை பெருமளவில் விற்பது பெருகும் நிதிய உறுதியற்ற தன்மைக்கு அடையாளம் ஆகும்
Nick Beams கடந்த வியாழன் அன்று ஜப்பானின் நிக்கேய் பங்குச் சந்தை குறியீட்டில் தீவிர சரிவு மற்றும் அதைத்தொடர்ந்த உலக பங்குகள் பெருமளவில் விற்பனை ஆகியவை உலக நிதியச் சந்தைகளில் பெருகும் உறுதியற்ற தன்மையை எடுத்துக் காட்டுகின்றன. நிக்கேய் 7 சதவிகிதம் குறைந்து அதன்பின் வெள்ளியன்று கணிசமான நிலையற்ற தன்மையை காட்டி நாளின் இறுதியில் ஓரளவு உயர்ந்து நின்றது. அமெரிக்காவில் சந்தைகள் ஒரு மாதகாலம் மிக அதிக இலாபங்களுக்குப்பின் தங்கள் முதல் வாராந்திர இழப்பைக் காட்டின. ஜப்பானிய சரிவிற்கான காரணிகளில் ஒன்று சீனாவில் உற்பத்தித்துறையில் சரிவாக இருக்கையில், நெருக்கடியின் முக்கிய கூறுபாடு அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பு தன் “அதிக பணத்தை புழக்கத்தில் விடுவதை” குறைத்தல் அல்லது நிறுத்துமானால் ஏற்படும் அச்சமாகும். மாதம் ஒன்றிற்கு இது 85 பில்லியன் டாலர்கள் மதிப்பை நிதியச் சந்தைகளில் செலுத்துகிறது. புதன் அன்று அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னன்கே அமெரிக்காவில் பொருளாதாரச் சூழல் முன்னேறினால், அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு அதன் சொத்துக்களை வாங்கும் திட்டத்தை “ஒரு படி குறைப்பதை” பரிசீலிக்கும் என்றார். உறுதியான கருத்து ஏதும் இல்லாதபோதும் மற்றும் திகதி எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்றாலும் ஆனால் நிதியச் சந்தைகள் அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு இன்னும் பிற மத்திய வங்கிகளில் இருந்து பெறும் எளிதான பண உட்செலுத்தலில் தங்கியிருக்கும் தன்மையினால் அவை நிறுத்தப்படலாம் எனக் கூறப்படுவது கூட சந்தையில் ஒரு சரிவைத் தூண்டியது. பைனான்சியல் டைம்ஸில் பங்கு விற்பனை குறித்து விமர்சித்த HSBC உடைய தலைமைப் பொருளாதார வல்லுனர் ஸ்டீபன் கிங் “நிதிய நம்பிக்கைக்கும் பொருளாதார யதார்த்தத்திற்கும்” இடையே உள்ள பரந்த இடைவெளியை சுட்டிக்காட்டினார். “ஆண்டுத்தொடக்கத்தில், உலகப் பொருளாதாரம் அதன் செயலற்ற தன்மையில் இருந்து நிதிய மருந்துகள், அமெரிக்க மீட்பு, சீனாவின் வலிமை ஆகியவற்றின் உதவியுடன் வெளியே கொண்டுவரப்பட்டுவிடும் என நினைக்கப்பட்டது. ஆனால் நிதிய மருந்துகள் போலித்தோற்றமான விளைவுகளைத்தான் கொடுத்துள்ளன போலும்.” என்று அவர் எழுதியுள்ளார். ஜப்பானின் கொந்தளிப்பு என்பது குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொண்டது. ஏனெனில் பிரதம மந்திரி ஷின்ஜோ அபேயின் அரசாங்கம் மற்றும் ஜப்பானிய வங்கி ஆரம்பித்த திட்டமான “பணப்புழக்கத்தை அதிகரிப்பதின் அதிகூடிய ”வடிவமைப்பைப் பிரதிபலிக்கும் நாட்டின் பண விநியோகத்தை இரண்டு ஆண்டுகளில் இரு மடங்கு ஆக்குதலே காரணமாகும். ஏப்ரல் தொடக்கத்தில் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து, ஜப்பானிய வங்கி 70% புதிதாக வெளியிடப்பட்ட அரசாங்க பத்திரங்களுக்கு சமமான மதிப்பை வாங்குகிறது. கொள்கையின் நோக்கம் வட்டி விகிதங்களைக் குறைத்தல், பணவீக்கத்திற்கு ஊக்கம் கொடுத்தல் மற்றும் பொருளாதார நடவடிக்கைகளை அதிகரித்தல் ஆகியவையாகும். கூறப்படாத நோக்கங்களில் ஒன்று, ஜப்பானின் தொழில் போட்டியாளர்கள் கொரியா, சீனா இன்னும் பிற இடங்களில் இருப்பவர்களுடைய மதிப்பைக் குறைக்கும் வகையில் யென்னின் மதிப்பை அவர்களுடைய நாணயங்களுக்கு எதிராகக் குறைத்தல் மூலம் ஜப்பானிய ஏற்றுமதிக்கு ஏற்றம் கொடுத்தல் என்பதாகும். இது முக்கிய சக்திகளுக்கு இடையே தீவிர அழுத்தங்களுக்கு எரியூட்டும். ஏனெனில் ஒவ்வொரு சக்தியும் போட்டித்தன்மையான மதிப்பு குறைப்பால் பிறருடைய இழப்பில் ஆதாயத்தை அடைய முயல்கின்றன. இத்தகைய அழுத்தங்கள் கிழக்கு ஆசியாவில் ஆபத்தான மூலோபாய நிலையை அதிகப்படுத்தும். ஒபாமா நிர்வாகமோ பிராந்திய மோதல்களில் சீனாவிற்கு எதிராக ஜப்பானின் ஆக்கிரோஷ நிலைப்பாட்டிற்கு ஊக்கம் அளிக்கின்றது. அபேயின் அரசாங்கம் தளர்த்தப்படும் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டத்தை பயன்படுத்தி நிதிய நிலைப்பாட்டிற்கு உதவவும், ஓய்வூதியக் குறைப்புக்கள், மதிப்புக்கூட்டு வரிகள் அதிகரிப்பு, தொழில்துறை மறுகட்டமைப்பு மற்றும் பிற பிற்போக்குத்தன நடவடிக்கைகள் போன்ற பொருளாதார மறுகட்டமைப்பு திட்டத்தை கொண்டு தொழிலாள வர்க்கத்தை தாக்கவும் முயல்கிறது. இது அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் கொள்கைகளுடன் இயைந்துள்ளது. அங்கு பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டம் சமூகநலச் செலவுக் குறைப்புக்கள், ஏராளமான பணிநீக்கங்கள் மற்றும் ஆழ்ந்த ஊதியக் குறைப்புக்களுடன் உற்பத்தியும் விரைவாக்கப்பட்டுள்ளது. ஜப்பானிய மத்திய வங்கித் திட்டத்தின் உடனடிப் பாதிப்பு பங்கு விலைகளில் ஏற்றம் ஏற்பட்டுள்ளது ஆகும். இது ஜப்பானிய வங்கியின் கொள்கை, ஜப்பானிய பொருளாதாரத்தை புதுப்பிப்பதற்கு பதிலாக ஒரு பெரிய நிதிய நெருக்கடிக்கான சூழலை எற்படுத்துகிறதோ என்னும் அச்சங்களை எழுப்பியுள்ளது. கொள்கையின் ஒரு இலக்கு அரசாங்க பத்திரங்களின் விலையை மத்திய வங்கி வாங்குவதின் மூலம் உயர்த்துவது ஆகும், இதனால் குறைந்தவட்டி விகிதங்கள் ஏற்படும். ஆனால் எதிர்பார்த்தபடி குறையாமல், பங்குப்பத்திரத்தில் இருந்து வரும் வருமானங்கள் கடந்த மாதத்தில் அதிகரித்துவிட்டன. பெரிய அளவில் முதலிடுவோர் எதிர்காலத்தில் பத்திரச் சந்தையில் பெரிய சரிவு இருக்கலாம் என்று அஞ்சுவதால் அரசாங்கக் கடன்களில் தங்களின் ஈடுபாட்டை குறைக்க முனையலாம். இந்த வெளியேறுவதற்கான நடவடிக்கை அதிகரித்தால், பின் இது ஒரு பெரிய நிதிய நெருக்கடியை ஏற்படுத்தக்கூடும். ஜப்பானிய அரசாங்கத்தின் கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கிட்டத்தட்ட 245% என இருப்பது, முதலீட்டு நிறுவனங்கள், உள்நாட்டுச் சேமிப்புக்கள் ஆகியவற்றில் இருந்து நிதியைப் பெறுகிறது. ஆனால் இது தொடர வாய்ப்பு இல்லை. அரசாங்கத்தின் குழு வரைவு அறிக்கை உள்நாட்டு முதலீட்டாளர்கள் அரசாங்கக் கடனுக்கு நிதியைத் தொடர்ந்து வழங்குவர் என்பதற்கு “உத்தரவாதம் உறுதியாக இல்லை” என்று எச்சரித்துள்ளனர். ஞாயிறன்று கருத்தரங்கு ஒன்றில் பேசிய ஜப்பானிய வங்கியின் ஆளுனர் ஹருஹிகோ குரோடா பொருளாதாரச் சூழலில் முன்னேற்றம் இல்லை, ஆனால் அரசாங்க நிதி குறித்த கவலைகளினால் வட்டிவிகிதங்கள் தொடர்ந்து ஏறுகின்றன என்று எச்சரித்தார். அந்நிலையில் நிதிய நிறுவனங்கள் தங்கள் பத்திர இருப்புக்களை ஒட்டி நஷ்டங்களை அடையும். ஜப்பானிய வங்கி 1 சதவிகிதப் புள்ளி, வட்டி விகிதங்களில் உயர்வது சந்தை இழப்புக்களில் அவற்றின் அடிப்படை முக்கிய வங்கிகளின் மூலதனத்தில் 10% உயர்த்தும் எனக் கணக்கிட்டுள்ளது; சிறிய பிராந்திய வங்கிகளில் இது 20% எனப் போகும். வங்கிகிள் உயரும் வட்டி விகிதங்களை சமாளிக்கும் பொருளாதாரம் முன்னேறினால் என்று கூறும் குரோடா அரசாங்கக் கடன் குறித்து தெரிவிக்கும் கவலைகள் ஒரு திட்டவட்டமான அரசியல் நோக்கத்தைக் கொண்டவை. ஜப்பானிய மற்றும் சர்வதேச நிதிய மூலதனம் கடன் அளவுகள் தாங்கமுடியாத தன்மையை அடைந்துவிட்டன என்றும் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக சிக்கனத் திட்டத்தை தொடங்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றன. ஆனால் அபேயின் அரசாங்கக் கொள்கைகள் ஒரு முக்கிய சர்வதேச ஆதரவாளரை ஈர்த்துள்ளது. நியூயோர்க் டைம்ஸின் கட்டுரையாளர் பௌல் க்ருக்மன் நடவடிக்கைகளை மேற்கு உலகில் ஏற்பட்டுள்ள “பொருளாதாரத் தோல்விவாதத்திற்கு” மாற்றுமுறை என்று பாராட்டியுள்ளார். “அபேயின் பொருளாதாரம் செயல்படுமேயாயின், அது இரட்டை நோக்கத்திற்கு உதவும். ஜப்பானுக்கே அதிகம் தேவைப்படும் ஏற்றத்தை கொடுப்பதுடன், நமக்கு எல்லோருக்கும் இன்னும் அதிகம் தேவைப்படும் சோம்பேறித்தன கொள்கைக்கு மாற்றுமுறையை கொடுக்கும்” என்று அவர் எழுதினார். அபே அரசாங்கத்தின் பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டத்திற்கு க்ருக்மன் உடைய ஆர்வம் அவர் பிரதிநிதித்துப்படுத்தும் தாராளவான கீன்சியப் பொருளாதாரக் கூடத்தில் முழுத்திவால்தன்மைக்கு வியத்தகு நிரூபணம் ஆகும். அது பொருளாதார நெருக்கடி மிகவும் அறிவு ஒளி சார்ந்த அரசாங்கக் கொள்கையினால்தான் தீர்க்கப்படமுடியும் எனக்கூறுகிறது. முதலில் அபேயின் பொருளாதாரம் என அழைக்கப்படுவது அவருடைய அரசாங்கத்தின் அரசியல் செயற்பட்டியலில் இருந்து பிரிக்கப்பட முடியாதது. அதாவது ஜப்பானிய ஆளும் உயரடுக்கின் பிராந்திய நலனை உறுதிப்படுத்துவதை அடித்தளமாக கொண்ட இன்னும் கூடுதலான ஆக்கிரோஷ வெளிநாட்டுக்கொள்கையும் மற்றும் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தை தாக்குவதையும் அதிகரிப்பதுமாகும். பங்குச் சந்தைகளின் இந்த சுழற்சிகள் அமெரிக்காவிற்கும் உலகின் மற்ற நாடுகளுக்கோ ஒரு “மாதிரியை” முன்வைத்தல் என்பதற்குப் பதிலாக அபேயின் பொருளாதரம் உலகப் பொருளாதார நெருக்கடி முழுமையாக நெருக்கடியில் ஆழ்ந்துள்ளது என்பதற்கு மற்றொரு வெளிப்பாடாகும். |
|