WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
இந்தியாவில் மாருதி
சுஜூகி
தொழிலாளர்களுக்கு
எதிராக
தேடுதல்
வேட்டை
தொடர்கிறது
By Arun Kumar and Kranti Kumara
10 January 2013
use this version to print | Send
feedback
தலைநகரம்
புதுடில்லிக்கு
அண்மையிலுள்ள மானேசர்
நகரத்தில்
இருக்கும்
மாருதி
சுஜூகி
இந்தியா
(MSI)
தொழிற்சாலையில்
வாகன
தயாரிப்பு
தொழிற்சாலை
தொழிலாளர்களுக்கு
எதிராக
வட
மாநிலமான
ஹரியானாவில்,
தொழிற்சாலை
நிர்வாகமும்
காங்கிரஸ்
தலைமையிலான
இந்திய
அரசாங்கமும்
அவர்களின்
ஒடுக்குமுறையின் தீய தாக்குதலை தொடர்ந்து
கொண்டிருக்கிறார்கள்.
நிர்வாகத்தால்
வழங்கப்பட்ட ஒரு பட்டியலைப் பயன்படுத்தி மாநில அரசு சமீபத்தில் இன்னும் ஒரு
தொழிலாளரை கைது செய்த்தன் மூலம் தடுப்புகாவலில் வைக்கப்பட்டிருக்கும் வாகன
தயாரிப்பு தொழிற்சாலை தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கை 150
ஆகியுள்ளது.
அதனுடன் சேர்த்து,
போலீஸ் ஒடுக்குமுறையிலிருந்து
தப்பிக்க தலைமறைவாக இருக்கும் அல்லது தப்பி ஓடிய மற்ற
65
தொழிலாளர்களுக்காக ஒரு போலீஸ் மனித
வேட்டை நடந்து கொண்டிருக்கிறது.
கடந்த கோடைக் காலத்தில்,
கிளர்ந்தெழுந்த மாருதி சுஜூகி
தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தின்
(MSWU) 149
தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து
தலைவர்களும் போலீஸின் ஒரு வலை விரிப்பு நடவடிக்கையில் சுற்றி வளைக்கப்பட்டார்கள்.
தொழிற்சாலையில் வாடகை
கூலிக்கும்பல் மற்றும் நிர்வாகத்தால் ஜூலை
18
அன்று தொழிலாளர்களின் மீது
நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட தாக்குதலின்போது இறந்த மனித வளத்துறை மேலாளரின்
இறப்பிற்காக போலிக்குற்றச்சாட்டிற்குட்பட்டனர்.
கைது செய்யப்பட்ட
தொழிலாளர்களின் "ஒப்புதல்
வாக்குமூலங்களைப்"
பெற கடுமையான சித்ரவதைகளுக்கு
உட்படுத்தப்பட்டார்கள். (பார்க்கவும்:
இந்தியா:
சிறையிலடைக்கப்பட்ட மாருதி
சுஜூகி தொழிலாளர்கள் சித்ரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டார்கள்)
மோதல் ஏற்பட்டபோது
சித்ரவதை செய்யப்பட்ட தொழிலாளர்களில் அதிகமானோர் தொழிற்சாலையிலேயே இருக்கவில்லை.
ஆனாலும்
MSI
நிர்வாகத்தால் வழங்கப்பட்ட ஒரு
பட்டியலில் அவர்களின் பெயர்கள் சேர்க்கப்பட்ட பிறகே அவர்கள் சுற்றி
வளைக்கப்பட்டார்கள்.
பொதுவாக,
தொழிலாளர்களின் நல்லெண்ணத்தைப்
பெற்ற மேலாளர் அவனிஷ் தேவின் மரணத்திற்கான காரணம் என்ன என்பதில் இதுவரை சுயாதீன
மற்றும் நம்பகமான விசாரணை இதுவரை இல்லை.
உதவி காவல் ஆணையாளர் தலைமையிலான
ஒரு சிறப்பு புலனாய்வு குழு
(SIT), நிர்வாகத்தின் பங்கை
மூடிமறைத்ததோடு,
தொழிலாளர்கள் மீது மட்டுமே குற்றம்
சுமத்தியது.
மேலும் வாகன தயாரிப்புத் தொழிற்சாலை
தொழிலாளர்கள்,
தொழிற்சாலையில் உள்ள ஒவ்வொரு
மேலாளரையும் கொல்லுவதற்கு திட்டமிட்டதாக கூறும் அளவுக்கு சென்றுவிட்டது.
இந்த போலியாக ஜோடிக்கப்பட்ட
குற்றச்சாட்டு குறித்த அறிக்கைக்கூட இனிமேல்தான் வெளியிடப்படவுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய
கார் தயாரிப்பு நிறுவனமும் உலகளாவிய பாரிய கார்த்தயாரிப்பு நிறுவனமும் மற்றும்
காங்கிரஸ் கட்சியின் மாநில அரசுஅதிகாரிகளும் இதை தொழிலாளர்களுக்கு ஒரு
உதாரணமாக்கவும் மற்றும் குறைந்த கூலி மற்றும் கொடுமையான வேலைசூழ்நிலைகளுக்கு எதிரான
எவ்வித போராட்டம் சகித்துக் கொள்ளப்படாது என்பதை தெளிவுபடுத்தவும் விரும்பினார்கள்.
ஐக்கிய முற்போக்கு
கூட்டணி ஆட்சி செய்யும் கூட்டணி அரசாங்கத்தில் முக்கிய பங்காளியும் மற்றும் இந்திய
முதலாளித்துவத்தின் முதன்மையான அரசியல் கட்சியான காங்கிரஸ் கட்சி குறிப்பிட்ட
ஈவிரக்கமில்லாத தன்மையுடன் எதிர்ச்செயலாற்றிக் கொண்டிருக்கிறது.
ஏனென்றால்,
தயவுதாட்சண்யமில்லாத அடக்குமுறை
இருந்தபோதிலும் மாருதி சுஜூகி வாகன தயாரிப்பு தொழிலாளர்கள் அவர்களின்
தீர்மானிக்கப்பட்ட போராட்டத்தை தொடர்ந்தார்கள்.
தொழிலாளர்களின் அசாதாரணமான
புத்தெழுச்சி MSI
தொழிற்சாலை அமைந்துள்ள பரந்த குர்கான்-மானேசர்
தொழிற் பகுதி மற்றும் மேலும் பரந்த அளவில் இந்தியா முழுவதும் தொழிலாளர்
வர்க்கத்தின் ஒரு பரந்த இயக்கத்தை தூண்டும் என்ற அச்சுறுத்தலை ஏற்படுத்தியது.
1990களில்
உலகப்பொருளாதாரத்திற்கு நாட்டை திறந்துவிட்டதில் இருந்தே,
இந்திய ஆளும் வர்க்கத்தின் முழு
பொருளாதார மூலோபாயமும்,
அந்நிய முதலீட்டாளர்களுக்கு ஒரு
மலிவான மற்றும் அதிகளவு சுரண்டலுக்குட்பட்ட தொழிலாளர்களின் விநியோகத்தை
வழங்குவதற்கு தயாராகவிருப்பதனூடாக பரந்த இலாபங்களுக்கு உத்தரவாதம் அளிப்பதிலேயே
தங்கியிருக்கிறது. 2010இல்
நடந்த சீன வாகன தயாரிப்பு தொழிற்சாலை தொழிலாளர்கள் நடத்திய திரளான போராட்டங்கள் போல,
MSI தொழிலாளர்களின்
போராட்டங்கள் இந்த முழு ஒழுங்கமைப்பையுமே அச்சுறுத்துகின்றன.
தொடர்ந்துக்
கொண்டிருக்கும் ஒரு தேடுதல் வேட்டையில் மானேசர் தொழிற்சாலையில் இருந்து நாடு
முழுவதும் இருக்கும் நிறுவனத்தின் பல்வேறு தயாரிப்பு வசதியுள்ள இடங்களுக்கு
திடீரென
12
நிரந்தர தொழிலாளர்களை இடமாற்றம்
செய்துவிட்டது.
இது நிர்வாகத்தின் தனி உரிமை என
வெறுமனே அறிவித்து நிர்வாக அதிகாரிகள் இந்த ஒரு தலைப்பட்சமான நடவடிக்கைக்கு யாதொரு
காரணமும் தெரிவிக்கவில்லை.
தொழிற்சாலையில் வேலைக்கான ஒரு
நிபந்தனையாக நிர்வாகம் விரும்பும் நேரம் அவர்களை தொழிற்சாலையின் தயாரிப்பு
வசதியுள்ள எந்த இடத்திற்கும் இடமாற்றம் செய்ய நிர்வாகத்தின் உரிமையை ஒப்புக்
கொள்ளும் ஒரு ஆவணத்தில் கையெழுத்திட தொழிலாளர்கள் நிர்பந்திக்கப்பட்டார்கள்.
சந்தேகமில்லாமல் இது தீவிரமாக
போராடும் தொழிலாளர்களை களையெடுப்பதற்கான இன்னொரு வழிமுறையாகும்.
அத்துடன்,
செப்டம்பரில்
546
நிரந்தர மற்றும்
2,000
ஒப்பந்த மற்றும் தற்காலிக
தொழிலாளர்களையும் ஒரேயடியாக நிர்வாகம் பணி நீக்கம் செய்தது.
தொழிலாளர்களின் உறவினர்கள் கூட
போலீஸால் நியாத்திற்குப் புறம்பாக தொல்லைக் கொடுக்கப்பட்டார்கள் மேலும் சிலர்
சிறையில் இடப்பட்டார்கள்.
வேலையிலிருந்து
நீக்கப்பட்ட ஆயிரக்கணக்கான தொழிலாளர்களில் ஒருவர் கூட பணியில் சேர்க்கப்பட
மாட்டார்கள் ஏனென்றால் அவர்கள்
"வன்முறைச்
சம்பவங்களில் பங்கெடுத்துக் கொண்டார்கள்"
மற்றும்
“அவர்கள்
அடிதடிகும்பலின் ஒரு பகுதியினர்"
என
MSI
யின் தலைவர் ஆர்.சி.பார்கவா
ஆணவத்துடன் அறிவித்தார்.
அவருடைய தொழிற்சாலையில்
ஒரு வருடத்திற்கும் மேலாக தொழிலாளர்கள்,
நிர்வாகத்தின் தலையாட்டி
தொழிற்சங்கத்திற்கு எதிரான ஒரு போராட்டத்தில் தோற்றுவிக்கப்பட்ட அவர்களின் சொந்த
தொழிற்சங்கத்தின் அங்கீகாரத்திற்காக போராடிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலாக,
நிர்வாகம் மற்றும் காங்கிரஸ்
தலைமையிலான அரசாங்கம் மாருதி சுஜூகி தொழிலாளர்கள் தொழிற்சங்கத்தை
(MSWU)
அங்கீகரிக்க மறுத்து விட்டது.
இந்தியா தொழிலாளர்களை
மலிவுக் கூலிகளாக வழங்குவதற்கான தேசியவாத வேலைத்திட்டத்திற்கு
அர்ப்பணித்துக்கொண்டுள்ள காங்கிரஸ் கட்சி மற்றும் ஸ்ராலினிசவாதிகளால் வழி
நடத்தப்படும் தொழிற்சாலை நிர்வாகத்தின் ஆதரவு தொழிற்சங்கங்கள் அல்லது தற்போது உள்ள
தொழிற்சங்க கூட்டமைப்புகளிலிருந்து உடைத்துக்கொண்டு செல்லும் தொழிலாளர்களின்
எந்தவொரு முயற்சியையும் பெருநிறுவனமும்,
அரசாங்க அதிகாரிகளும்
மட்டுப்படுத்த விரும்பினார்கள்.
அமெரிக்க வாகன
தயாரிப்பு தொழிற்சாலைகளில் தொழிலாளர் கூலி ஒரு மணி நேரத்திற்கு
$35
என்றளவில் இருக்கிறது.
அதேநேரம் இந்தியாவில் தொழிலாளர்
கூலி அதே வேலைக்கு ஒரு மணிக்கு
$3
என்றளவில் இருக்கிறது,
"நாங்கள் பிரம்மாண்டமான
இலாபத்தை கொண்டிருக்கிறோம்"
என
MSI
இன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.
ஒய் சித்திக் செய்தியாளர்களிடம்
கூறினார்.
ஹிந்து மேலாதிக்க
கட்சியான பாரதீய ஜனதாவினால்
(BJP)
ஆளப்படும்,
இந்தியாவின் மேற்கு மாநிலமான
குஜராத்தில் ஒரு புதிய கார் தயாரிப்பு தொழிற்சாலை திறப்பதற்கான ஒரு திட்டத்தை
மாருதி சுஜூகி அறிவித்துள்ளது.
சமீபத்தில் மீண்டும் ஒருமுறை
தேர்வு செய்யப்பட்ட ஹிந்து இனவாத முதலமைச்சர் நரேந்திர மோடி வரிவிலக்குகள் மற்றும்
மற்ற ஊக்கச் சலுகைகளை அளிப்பதற்கு மட்டுமல்ல தொழிலாளர்களின் வேலை நிறுத்தங்களில்
தீவிரமாக தலையிட்டு அவற்றை "சட்டவிரோதம்"
என அறிவிப்பதற்கும் கூட உள்நாடு
மற்றும் வெளிநாட்டு பெருநிறுவனங்களிடம் நன்மதிப்பைப் பெற்று இருக்கிறார்.
கடந்த நவம்பர் மாதம் அப்போலோ
டயர் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தின் ஒரு சம்பவம் கவனத்திற்கு வருகிறது.
நிர்வாகம் மொத்தமாக தொழிலாளர்களை பதவிநீக்குவதற்கு அனுமதி அளிப்பதற்காக குஜராத்
அரசாங்கம் தடைகளை ஏற்படுத்தியது.
உலக பொருளாதார
நெருக்கடியின் பாதிப்புகளால்,
இந்தியாவின் ஏற்றுமதி-மேலாதிக்க
பொருளாதாரம் தாக்கப்பட்டுக் கொண்டிருப்பதால் கார் தொழிற்சாலை தொழிலாளர்கள் மீது
தாக்குதல்கள் இடம் பெறுகின்றன.
"ரூபாய்
4,000
மில்லியன்($727
மில்லியன்)
மதிப்பில்
MSIL
தொழிற்சாலை குஜராத்தில் வரவிருக்கிறது.
தொழிற்சாலை
2015-16-ல்
உற்பத்தியை துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
....."
என்று சித்திக் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
"கார்
தொழிற்துறை வளர்ச்சி விகிதம்
14
சதவிகிதத்தில் இருக்கும் என கணக்கிடப்
பட்டபோதிலும்,
அது
(தற்பொழுது)
நடப்பு நிதியாண்டின் கால
கட்டத்தில் நான்கிலிருந்து ஐந்து சதவிகிதத்திற்கு குறைந்துவிட்டது."இதனால்,
அவர் மேலும் கூறியதாவது
"அது
எங்களது குஜராத் திட்டங்களைப் பற்றி ஒரு சிறு குழப்பத்தை உருவாக்கி விட்டது"
MSI
தொழிலாளர்களுக்காக
மிகவும் பெரிய,
பரந்த அளவில் பரிவு இருக்கிறது.
நிர்வாகம் மற்றும்
அரசாங்கத்தால் அவர்களுக்கு எதிராக ஒரு பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட முடிந்தது.
ஏனென்றால்,
குர்கான்-மானேசர்
தொழிற் பகுதியிலுள்ள தொழிற்சங்க கூட்டமைப்புகள் மற்றும் ஸ்ராலினிச தலைமையிலான இடது
முன்னணி ஆகியவை MSI
தொழிலாளர்களை திட்டமிட்டு
தனிமைப்படுத்திவிட்டன.
இதோடு அல்லாமல் தொழிலாளர் துறை,
நீதிமன்றங்கள் மற்றும்
காங்கிரஸ் கட்சியின் ஹரியானா அரசாங்கம் ஆகியவற்றிடம் முறையிடுவதற்கான
முட்டுச்சந்திற்குள் தொழிலாளர்களை திசைதிருப்பிவிட முனைந்துள்ளார்கள்.
இது,
இந்த சக்திகள் அனைத்தும்
நிர்வாகத்துடன் இணைந்து மறைமுகமாக வேலை செய்துக் கொண்டிருப்பதைக் காட்டுகிறது.
குறிப்பாக,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(CPI)
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்
)
அல்லது
CPM
கட்சிகளின் சங்க கூட்டமைப்புகளான அகில
இந்திய தொழிற்சங்க காங்கிரஸ்
(AITUC)
மற்றும் இந்திய தொழிற்சங்கங்களின்
மையம் (CITU)
ஆகியவற்றின் பங்கு அழிவுகரமானதாக
இருந்தது.
ஸ்ராலினிசவாதிகள் வழிநடத்திய
AITUC
மற்றும்
CITU,
மானேசர் தொழிலாளர்களின் கோரிக்கைகளை
கட்டுப்படுத்த மற்றும் தொழிலாளர்களுடனான உறவுகளை பராமரிப்பதில் தொழிற்சங்கங்கள்
உதவமுடியும் என்று முதலாளிகளை ஏற்றுக் கொள்ளச் செய்யும் அவர்களின் முயற்சிகளின் ஒரு
பகுதியாக பெருநிறுவன ஆதரவு கூட்டு பேச்சுவார்த்தை தொடர்ந்து வற்புறுத்தி வந்தார்கள்.
புதிய தாராளவாத
"சீர்திருத்தங்களை"
நடைமுறைப்படுத்தியபோதும்
CPI
மற்றும்
CPM
கட்சிகளின் இடது முன்னணி,
டில்லியில் காங்கிரஸ் கட்சி
தலைமையிலான அரசாங்கங்களுக்கு தொடர்ந்து முட்டு தாங்கியுள்ளன.
மேலும்,
ஸ்ராலினிசவாதிகள் அவர்கள்
ஆட்சியிலிருந்த மாநிலங்களில் அவர்கள்
"முதலீட்டாளர்
ஆதரவு"
கொள்கைகள் என தாங்கள் கூறியதை அவர்களே
பின்பற்றினார்கள்.
MSI
தொழிலாளர்கள் மத்தியில்
தொடரும் தீவிரமயப்படுத்தப்பட்ட மனப்போக்கினால் எச்சரிக்கை அடைந்த தொழிற்சங்க
நிர்வாகிகள், MSWU
உடன் இணைந்த தொழிலாளர்களால் ஏற்பாடு
செய்யப்பட்ட பேரணிகளில் தொழிற்சங்க நிர்வாகிகள் தோன்றத் தொடங்கி
MSI
தொழிலாளர்களை தனிமைப்படுத்த அவர்களின்
அதிகாரத்தினால் செய்யக்கூடிய அனைத்தையும் செய்தார்கள்.
MSWU-வினால் ஏற்பாடு
செய்யப்பட்ட ஒரு டிசம்பர் பேரணியில்,
ஸ்ராலினிச
CPM
இணைப்புப் பெற்ற
CITU, CPI
இணைப்புப் பெற்ற
AITUC
மற்றும் பல்வேறு ஏனைய சிறிய சங்க
கூட்டமைப்புகள் ஒற்றுமையின் பொய் வாக்குறுதிகளை அளித்து பேரணியில் உரையாற்றின.
பலதடவை
எடுத்துக்காட்டப்பட்டதுபோல்,
MSI தொழிலாளர்கள்
தொழிற்சங்க அமைப்புகள் மீது நம்பிக்கை வைத்து சார்ந்திருக்க முடியாது.
ஆனால்,
தற்பொழுது இருக்கும்
தொழிற்சங்கங்கள் மற்றும் அவற்றின் பின்னால் இருக்கும் அரசியல் கட்சிகளுக்கு எதிராக
தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனமான அணிதிரட்டலுக்கு போராட வேண்டும்.
அதே நேரம்,
ஒரு சிறிய கையளவினரை
செழிப்படைய செய்ய உலகம் முழுவதும் தொழிலாளர் வர்க்கத்தை ஏழ்மை நிலைக்குத் தள்ளும்
முதலாளித்துவ முறை மற்றும் உலகளாவிய கார் நிறுவனங்களுக்கு எதிராக போராட ஒரு சர்வதேச
மூலோபாயத்தை அபிவிருத்திசெய்ய அமெரிக்கா,
ஐரோப்பா,
ஆசியா மற்றும் உலகம்
முழுவதும் உள்ள கார் நிறுவன தொழிலாளர்களுக்கு அழைப்புவிடப்பட வேண்டும்.
ஆசிரியர்
இதையும்
சிபாரிசு
செய்கிறார்:
மாருதி
சுஜூகி
நிர்வாகம்
மற்றும்
இந்திய
அதிகார
அமைப்புகளினால்
பாதிக்கப்பட்ட
தொழிலாளர்களை
ஆதரிப்பீர் |