சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

The“Ecosocialist”conference in New York

A fraudulent campaign for “climate justice

நியூ யோர்க்கில் “சுற்றுச்சூழல் சோசலிஸ்ட்” மாநாடு

“காலநிலை நீதி” குறித்த ஒரு மோசடித்தனப் பிரச்சாரம்

By Sandy English and Jerry White
23 May 2013

use this version to print | Send feedback

தேசிய சமுத்திர மற்றும் வளிமண்டல நிர்வாகமானது ஹவாயின் மௌன லோவா எரிமலையில் இருந்து வெளிவரும் கார்பன் டையாக்சைட் அளவுகள் மில்லியனுக்கு 400 பாகங்களை விட அதிகரித்துள்ளமையானது, மூன்று மில்லியன் ஆண்டுகளில் மிக உயர்ந்த அளவாக இருக்கலாம் என்னும் சமீபத்திய அறிவிப்பு, மனித நடவடிக்கைகள் உந்துதல் கொடுப்பதால் ஏற்படும் பூகோள வெப்பமயமாதலுக்கு வியத்தகு சமீபத்திய நிரூபணம் இதுவாகும்.

தீவிர வானிலை (காலநிலை) நிகழ்வுகளால் ஏற்படுத்தப்படும் பேரழிவு தரும் இழப்புக்கள் இருந்தபோதிலும், முதலாளித்துவ அரசாங்கங்கள் உலகெங்கிலும் கிரீன்ஹவுஸ் (பசுமை இல்ல) வாயுக்களின் அதிகரிப்பை மாற்றுவது ஒரு புறம் இருக்க அது குறித்த தீர்வைக்கூட கொண்டுவரும் திறன் அற்றவையாக உள்ளன. அமெரிக்காவில் ஒபாமா—ஜனநாயகக் கட்சியுடன் தொடர்புடைய பல குழுக்களால் “சுற்றுச்சூழல் ஜனாதிபதி” என்று பாராட்டப்படுபவர்—எரிசக்திப் பெருநிறுவனங்களுக்கு ஆதரவைக் கொடுப்பதைவிட எதுவும் செய்துவிடவில்லை, அத்தோடு BP ஆல் (பிரிட்டிஷ் பெற்றோலிய நிறுவனம்) மோசமான சுற்றுச்சூழல் பேரழிவு அமெரிக்க வரலாற்றிலேயே ஏற்பட்டபோதும் அதைப் பாதுகாத்தும், பெருநிறுவனங்கள் மீது சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகள் கொண்டுவருவதையும் தடுப்பதைத்தான் அவர் செய்தார்.

இராணுவவாத வெடிப்புடன், சமூக சமத்துவமின்மையின் வெடிப்புத்தரும் வளர்ச்சி மற்றும் எப்பொழுதும் இல்லாதவகையில் அதிகரிக்கும் வெகுஜன உழைக்கும் மக்களுடைய சமூக, ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களும், உலக அரசாங்கங்கள் சுற்றுச்சூழல் அழிப்பை தடுத்து நிறுத்துவதில் கண்டுள்ள தோல்வியும் முதலாளித்துவத்தின் மீதான பெரும் குற்றச்சாட்டாகும்.

நியூ யோர்க் நகரத்தில் பார்னர்ட் கல்லூரியில் நடைபெற்ற “சுற்றுச்சூழல் சோசலிஸ்ட் மாநாடு”—முக்கியமாக சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு (ISO) மற்றும் பசுமைக் கட்சியினால் (Green Party) ஏற்பாடு செய்யப்பட்டது—தொழிலாள வர்க்கம் சாத்தியமான சுற்றுச்சூழல் பேரழிவிற்கு எதிராக எந்தவொரு சுயாதீனமான இயக்கத்தையும் தடுக்கும் ஒரு முயற்சியாகும்.

இந்த அமைப்புக்களின் அரசியல் பற்றி  அதிகம் அறியாதவர்கள் மாநாட்டின் “முதலாளித்துவ எதிர்ப்புப்” பகட்டான பிரச்சாரத்தால் கவருகின்ற தவறான கருத்தைக் கொண்டு, மாநாடு ஒரு தீவிர அல்லது சோசலிசத் திட்டத்தை உலகம் வெப்பமயமாதலை எதிர்க்க முன்வைக்கிறது என நினைக்கலாம். உண்மையானது இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டது ஆகும்.

“சுற்றுச்சூழல் சோசலிசம்” என்னும் சொற்றொடர் ஐரோப்பாவில் சமூக ஜனநாயக, முன்னாள் ஸ்ராலினிஸ்ட்டுக்கள், பசுமைவாதிகள் இன்னும் பிற முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்துள்ள பல போலி இடது குழுக்களால் பயன்படுத்தப்படுகிறது. இதன் ஆர்வலர்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பாத்திரத்தின் பங்கு என்பதன் மார்க்சிச கருத்துருவை நிராகரிப்பது மட்டும் இல்லாமல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளுக்கு நுகர்வுவாதத்தால் (நுகர்வுக் கலாச்சாரத்தால்) ஏற்படுவதாகக் கூறப்படும் நுகர்வு வெறிக்கு தொழிலாளர்களை குறைகூறி, சிக்கன நடவடிக்கைத் திட்டத்திற்கு வாதிடுகின்றனர்.

ஆரம்ப சிறப்புத் தொடரில், “சுயேட்சையான சோசலிஸ்ட்” என விவரிக்கப்படும் எழுத்தாளரான ரிச்சர்ட் ஸ்மித், “கார்பன் டையாக்சைட் வெளியேற்றங்களை உண்மையிலேயே ஒபாமா குறைக்க விரும்பினால், அவர் அமெரிக்கர்களை அதிக அளவு எண்ணெயை (எரிபொருள்) பயன்படுத்துவதை நிறுத்தச் சொல்ல வேண்டும், அவர்களுடைய SUV (Sport Utility Vehicle) அழிக்க வேண்டும், மின் குளிரூட்டிக் கருவிகளை நிறுத்த வேண்டும், கப்பல்கள் மூலம் மேற்கொள்ளப்படும் விடுமுறைகளை நிறுத்தவேண்டும், கான்குனிற்கு ஜெட்டுக்கள் மூலம் செல்லுவதை நிறுத்த வேண்டும்” என்றார்.

ISO உடைய முக்கிய உறுப்பினரான கிறைஸ் வில்லியம்ஸ், முதலாளித்துவ அந்நியமாதல்” என்பது “எனக்கு அதிகப் பொருள்கள் கிடைத்தால், அடிப்படை மனிதத் திருப்தி அடையப்படும் என்ற அர்த்தத்தைத் தருகிறது. இது நம் வாழ்வைச் சிதைத்துள்ளது. எப்படி முழுமையான மனிதர்களாக இருப்பது என்பதன் அர்த்தம் நமக்குத் தெரியவில்லை.... ஒரு நல்ல வாழ்க்கைத்தரம் என்று நாம் கூறுவதின் அர்த்தம், நிறைய பொருட்களை, இன்னும் அதிகமானவற்றை ஒன்றுதிரட்டுவது என ஆகிவிட்டது” என்று கூறினார்.

அவருக்கு முன்னால் இருந்த பல மார்க்சிச எதிரிகள் போலவே, வில்லியம்ஸும் வேண்டும் என்றே “அந்நியமாதல்” என்னும் கருத்துருவின் அர்த்தத்தை சிதைக்கிறார்; விஞ்ஞான சோசலிசத்தின் நிறுவனரான மார்க்ஸ் தன்னுடைய ஆரம்ப கால படைப்புக்களில் தொழிலாளியின் உழைப்பின் உற்பத்திப் பொருட்களில் இருந்து தொழிலாளியை பிரித்தல், முதலாளித்துவத்தின் கீழ் அவருடைய வாழ்வின் மீது எந்தவொரு கட்டுப்பாட்டையும் இழத்தலாகும் என்பதை அபிவிருத்தி செய்ததுடன், இந்தச் சமூக உறவு தொழிலாளர்கள் உற்பத்தி கருவிகளைக் கைப்பற்றினால் மட்டும்தான் வெற்றி பெறப்பட முடியும் என்றார்.

மாறாக, வில்லியம்ஸ் கருத்துப்படி, இந்த உளரீதியான நிலையை திருப்திகரமான தொழிலாளர்களால் வெற்றிபெற முடியும் அதாவது அவர்களுடைய வாழ்வுநிலையில் தீவிரக் குறைப்பை ஏற்றால்தான் “இன்னும் மனிதத்தன்மை” உடையவர்களாக அவர்கள் மாறுவார்கள். இத்தகைய வாதம் உலகம் முழுவதும் ஒவ்வொரு முதலாளித்துவ அரசாங்கமும் சுமத்தும் சிக்கன நடவடிக்கையுடன் மிகவும் நெருக்கமாக இணைந்துள்ளது—கிரேக்கத்தில் இருந்து அமெரிக்கா வரை.

மாநாட்டின் தொழிலாள வர்க்க எதிப்புத் தன்மையை குறிப்பாக புலப்படுத்தும் வகையில், தொழிற்சங்க அதிகாரத்துவத்தினர், தொழிலாள வர்க்கத்தின் நுகர்வைக் குறைப்பதில் வல்லுனர்கள், “இயற்கையான கூட்டணிகள்: தொழிலாளர் மற்றும் சுற்றுச்சூழல் இயக்கங்கள்” என்ற தலைப்பிலான குழு விவாதத்தில் உரையாற்ற அழைக்கப்பட்டிருந்தனர்.

இவ்விவாதக் குழுவில் Amalgamated Transit Union (ATU) உடைய சர்வதேசத் துணைத் தலைவர் ப்ரூஸ் ஹாரில்டனும் இருந்தார்; இந்த தொழிற்சங்கமானது இந்த ஆண்டு முன்னதாக கிட்டத்தட்ட 9,000 நியூ யோர்க் நகரப் பள்ளி பஸ் சாரதிகள் மற்றும் பிரயாண பாதுகாவலர்களின் வேலைப்பாதுகாப்பு மற்றும் ஊதியங்களுக்கு எதிரான தாக்குதல்களை எதிர்த்து நடத்திய ஒரு மாதக் கால வேலைநிறுத்தத்தைக் காட்டிக் கொடுத்தது. ATU வின் சில பசுமைக் கொள்கைகள் குறித்து ஹாமில்டன் பெருமையாகப் பேசிக் கொண்டார்; தலைமையானது வழிநடத்தி உறுப்பினர்களுக்கு வழிகாட்டியது என்று உறுதியாக விளக்கினார்.

அமைப்பாளர்கள் கருத்துப்படி, அமெரிக்காவில் நடைபெற்ற முதல் “சுற்றுச்சூழல் சோசலிச” மாநாடானது பசுமைவாதிகளுக்கும் ISO விற்கும் நெருக்கமான உறவுகளை வளர்க்கப் பயன்படும் என்றனர்; இவர்கள் ஒருவரை ஒருவர் 15 ஆண்டுகளாக ஒருவர் பிடியில் ஒருவர் இழுக்க வேண்டும் என்று விரும்புபவர்கள். தத்தம் வழியில் பசுமைவாதிகளும் ISO வும் ஜனநாயகக் கட்சியின் துணை அமைப்புக்கள் போல் செயல்பட்டுவருகின்றன.

பசுமைவாதிக் கட்சியினர் மத்தியதர வர்க்க உயர்மட்ட பிரிவினைச் சேர்ந்தவர்கள். முக்கியமாக தங்கள் சொந்த வாழ்க்கை பிரச்சனைகளை பாதுகாக்கவும், சுற்றுச்சூழல் சீர்திருத்தம் பற்றிய மரபார்ந்த கவனக் குவிப்பைக் காட்டுவதின் மூலமும் பெருநிறுவன, அரசியல் ஸ்தாபனத்திற்குள் சில செல்வாக்குகளைப் பெற முயல்கின்றனர். அவர்கள் முதலாளித்துவ அமைப்பு முறையை தாம் ஏற்பதையே அடித்தளமாகக் கொண்டவர்கள். அவர்களில் ஒரு பேச்சாளரான கிளோரியா மட்டேரா, முன்னாள் நியூ யோர்க் மாநில பசுமைவாத வேட்பாளர், “பசுமைவாதக் கட்சி ஒரு முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி அல்ல என்பதை நான் முதலில் ஒப்புக் கொள்வேன்” என்றார்.

அதிகாரத்திற்கு வந்தபின், பசுமைவாதிகள், முதலாளித்துவ சொத்துடைமை மற்றும் ஏகாதிபத்தியத்தை விசுவாசமாகப் பாதுகாப்பவர்கள் என நிரூபிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக ஜேர்மனியின் பசுமைவாதிகள் சமூக ஜனநாயகவாதிகளுடன் ஒரு கூட்டணியில் சேர்ந்தனர்; பெருவணிகத்தின் நலன்களைப் பாதுகாத்தனர், தங்கள் சமாதான நோக்கங்களைக் கைவிட்டனர், யூகோஸ்லாவியா மற்றும் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போர்களை ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் சார்பில் ஆரம்பிப்பதற்கு ஆதரித்தனர். பிரான்ஸில் அவர்கள் சோசலிஸ்ட் கட்சியுடன் இணைந்து, சிக்கன நடவடிக்கைகளுக்கு ஆதரவு கொடுத்து, அணுசக்திச் செல்வாக்குக் குழுவிற்கு தலைவணங்குகின்றனர்.

அமெரிக்காவில் பசுமைக் கட்சியின் அரசியல் முன்னோக்கு வெளியிலிருந்து ஜனநாயகக் கட்சிக்கு அழுத்தம் கொடுப்பது என்பதாக உள்ளது; இந்நிலைப்பாடானது ISO வினாலும் பகிரப்படுகிறது. 2000ம் ஆண்டில் பசுமைக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் ரால்ப் நாடரை ISO ஆதரித்தது. அவர்கள் மீண்டும் நாடரை 2004ல் அவரை சுயேச்சை வேட்பாளராக நின்றபோதும் ஆதரித்தனர்; அவரோ வலதுசாரி அரசியல்வாதி பாட் புச்சனனுடன் சேர்ந்து மெக்சிகோவிலிருந்து வரும் சட்டவிரோத வெளிநாட்டினரைக் கண்டித்து தன்னை ஜனநாயகக் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் ஜோன் கெர்ரியின் அரை உத்தியோகப்பூர்வ ஆலோசகராக இருக்கத் தயார் என்றார். 2006ல் ISO இடது பசுமைவாதிகள்” என அழைக்கப்பட்ட கலிபோர்னியாவின் கவர்னர் வேட்பாளர் பீட்டர் காமெஜோ மற்றும் நியூ யோர்க் நகர அமெரிக்க செனட் வேட்பாளர் ஹௌவி ஹாக்கின்ஸ் ஆகியோருக்கு ஆதரவளித்தார். தன்னுடைய சொந்த உறுப்பினரான டோட் ஷேரெடியனை பசுமைவாத வேட்பாளராக கலிபோர்னியாவில் இருந்து செனட்டிற்கு வேட்பாளராகவும் நிறுத்தியது.

 

ஆனால் 2008ல் ISO ஆனது ஒபாமா பிரச்சாரத்திற்கு ஆதரவாகத் தன்னை இருத்துக்கொண்டு, தன்னுடைய அடையாள அரசியல் இருப்புக்கள் ஜனநாயகக் கட்சிக்கு முதல் ஆபிரிக்க அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவது அடிப்படை மாற்றத்திற்கு வழிவகுக்கும் என்னும் பொய்யை வளர்த்தது. ஒபாமா குறைமதிப்பிற்குப் பெரிதும் உட்டபட்ட சூழலில் —நான்கு ஆண்டுகள் வோல் ஸ்ட்ரீட் வங்கிகளுக்குப் பிணை எடுத்தல், தொழிலாளர்கள் மீதான தாக்குதல் மற்றும் குற்றம் சார்ந்த போர்களின் விரிவாக்கம், ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் — ISO ஆனது பசுமைக் கட்சி ஜனதிபதி வேட்பாளர் ஜில் ஸ்டீனுக்கு 2012ல் ஆதரவளித்து, அதே நேரத்தில் கீழிருந்து  எதிர்ப்புக்கள் கொடுப்பது ஒபாமாவை அவருடைய இரண்டாவது பதவிக் காலத்தில் மாற்ற வைக்கும் என வலியுறுத்தியது.

ISO தலைவரான கிறைஸ் வில்லியம்ஸ் இப்பொய்யை இம்மாநாட்டில் மீண்டும் கூறி, ஒபாமா நிர்வாகம் முதலாளித்துவ மரண இரயில் நம்மை கார்பன் மலையுச்சிக்குக் கொண்டு செல்வதைக் குறைப்பதற்கு” அழுத்தம் கொடுக்க முடியும் என்று வலியுறுத்தினார்.

நியூ யோர்க் நகர நிகழ்வு பெப்ருவரி 17 “காலநிலை குறித்த முன்னேற்ற” எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் வாஷிங்டன் டி.சி.யில் தோன்றியதை அடுத்து கருத்திற் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்; ISO மற்றும் பசுமைவாதிகள் ஒபாமாவை கீஸ்டோன் XL குழாய்த் திட்டத்தை எதிர்க்க ஒன்றிணைந்தனர்.

மாநாட்டில் தான் கொடுத்த கருத்துக்களில் ISO பற்றி ஸ்டீன், “எங்களிடையே நிறைய பொதுக் கருத்துக்கள் உள்ளன, அரசியல் அமைப்புக்கள் என்ற முறையில்” என்றார். இது உண்மையே.

ஐரோப்பாவிலுள்ள பசுமைவாதிகளைப் போலவே, ISO வும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சதித் திட்டங்களுடன் ஆழ்ந்த ஈடுபாட்டைக் கொண்டுள்ளது; சிரியாவிற்கு எதிரான அமெரிக்க அரச அலுவலகத்திற்கு ஆதரவு கொடுக்கிறதுஅமெரிக்காவும் அதன் வளைகுடா நட்பு நாடுகளும் ஆதரிக்கும் இஸ்லாமியவாத குறுங்குழுவாதப் போர் உண்மையிலேயே மக்கள் புரட்சி என்று கூறுகிறது; இதையொட்டி மற்றொரு நவ காலனித்துவ மனித உரிமைப் போர் ஒபாமா நிர்வாகம் நடத்துவதற்கு வகை செய்கிறது.

ஒபாமா நிர்வாகத்திற்கு தொழிலாள வர்க்கத்திடம் இருந்து எதிர்ப்பு பெருகும் சூழலில், ISO ஆனது பசுமைவாதிகளுடன் இணைந்து ஜனநாயகக் கட்சியில் எந்த முறிவையும் தடுக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறது; அதே நேரத்தில் அதன் ஐரோப்பிய அமைப்புக்கள் ஏற்கனவே பிரியமான அரசியல் இடத்தை முதலாளித்துவ அரசில் அடையலாம் என்று நம்புகிறது.

எப்படியும், ISO ஆனது அமெரிக்க முதலாளித்துவத்தின் அரசியல் ஸ்தாபனத்தில் இடது” புறம் என்பதைத் தவிர வேறு ஒன்றுமில்லை என்ற வகையில் செயற்பட்டு வருகிறது.

சுற்றுச்சூழலை அழிப்பதற்கு எதிரான உண்மையான போராட்டம்—மற்றும் போர், சமூக சமத்துவமின்மை மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குலுக்கு எதிராக—என்பதற்கு அரசியலளவில் சுயாதீனமான தொழிலாள வர்க்க இயக்கத்தைக் கட்டமைப்பது தேவைப்படுகிறது; இது சர்வதேச சோசலிச வேலைத்திட்டத்தை அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும். அத்தகைய போராட்டத்திற்கு தொழிலாள வர்க்க நலன்களின் பகைமைப் போக்குகள் முறையாக அம்பலப்படுத்தப்பட வேண்டும்; ISO மற்றும் பசுமைவாதிகள் இன்னும் பிற போலி இடது அமைப்புக்கள் அதைத்தான் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.