தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Why the SEP does not endorse the WikiLeaks Party சோசலிச சமத்துவ கட்சி ஏன் விக்கிலீக்ஸ் கட்சிக்கு ஒப்புதலளிக்கவில்லை
By Patrick
O’Connor—SEP Senate candidate for Victoria use this version to print | Send feedback செப்டம்பர் 14 அன்று ஆஸ்திரேலியாவில் நடக்கவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலுக்கு முன்னதாக விக்கிலீக்ஸின் நிறுவனர் ஜூலியன் அசாஞ் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். லண்டனில் உள்ள ஈக்வடோரிய தூதரகத்தில் இருந்து—பிரித்தானிய அதிகாரிகளின் முற்றுகையை கீழ் அவர் அங்குதான் இருக்கிறார், அதிகாரிகள் தென் அமெரிக்க நாட்டின் அரசியல் தஞ்சத்தை ஏற்கும் ஜனநாயக உரிமையை அவருக்கு மறுத்து வருகின்றனர்— அசாஞ் விக்டோரியா, நியூ சௌத் வேல்ஸ், வெஸ்டர்ன் ஆஸ்திரேலியா ஆகிய மாநிலங்களில் தேர்தலில் நிற்பதற்கு செனட்டர்கள் பட்டியலை தயாரித்துள்ளார். பிரதான அரசியல் கட்சிகள் குறித்து சாதாரண உழைக்கும் மக்களிடையே பரந்த வெறுப்பு இருக்கும் நேரத்தில், விக்கிலீக்ஸ் கட்சி (WLP) பெருகிவரும் ஸ்தாபகமய-எதிர்ப்பு உணர்விற்கு முறையீடு செய்கிறது; ஆனால் பிரதான பாராளுமன்றக் கட்சிகளிடையே இது குறித்த வெளிப்பாடு ஏதும் இல்லை. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கர்கள் பொதுமக்களை படுகொலை செய்தது, சித்திரவதை செய்ததில் உடந்தையாக இருந்தது, இன்னும் பல குற்றங்கள் உலக மக்களிடம் இருந்து முன்பு மறைக்கப்பட்ட கணக்கிலடங்காதவை குறித்த விவரங்களடங்கிய ஆணவங்களை ஆயிரக்கணக்கில் அம்பலப்படுத்திய பங்கிற்காக அவர் ஒரு தைரியம் மிக்க மனிதராக கருதப்படுகிறார். சோசலிச சமத்துவக் கட்சி, ஆஸ்திரேலிய தொழிற் கட்சி அரசாங்கத்தின் உதவியுடனான ஒபாமா நிர்வாகத்தின் முயற்சிகளை எதிர்த்துள்ளது; அசாஞ் ஆதாரமற்ற பாலியல் குற்றச்சாட்டுக்களுக்காக சுவீடனில் மற்றும் ஒற்று வழக்கிற்காக வாஷிங்டனில் தயாரிக்கப்படும் வழக்கிலும் சிறையில் தள்ளப்பட உள்ளார். அவரைத் துன்புறுத்துவதற்கு எதிராக ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேச அளவில் தொழிலாள வர்க்கத்தை நாம் அணிதிரட்ட முற்பட்டுள்ளோம். எனினும் அரச தயாரிப்புகளுக்கு எதிராக நாம் அசாஞ்சை நீண்ட காலமாக பாதுகாப்பது, அவருடைய செனட் வேட்புத் தன்மைக்கோ அல்லது அவருடைய புதிதாகத் தொடங்கப்பட்ட அரசியல் கட்சிக்கோ ஆதரவு கொடுக்க வேண்டும் என்று எம்மைக் கட்டாயப்படுத்தவில்லை. கொள்கை வழிப்பட்ட சோசலிச அரசியல், தனிநபர்களை அடித்தளமாக கொள்வதில்லை; மாறாக தொழிலாள வர்க்கத்தின் நலன்களைத் தான் அடித்தளமாகக் கொண்டுள்ளது. தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் வேட்பாளர்களை, நாம் அவர்களுடைய அரசியல் வரலாறு, வேலைத்திட்டம், வர்க்க சார்பு ஆகியவற்றை வைத்தே மதிப்பீடு செய்கிறோம். இந்த அளவுகோல்களில் இருந்து புறப்படுகையில், சோசலிச சமத்துவக் கட்சி, ஜூலியன் அசாஞ்சை சுற்றி எழுப்பப்பட்டுள்ள விக்கிலீக்ஸ் கட்சிக்கு அரசியல் ஆதரவு அளிக்காது. விக்கிலீக்ஸ் கட்சி அதன் வேலைத்திட்ட கோரிக்கைகளை உருவாக்க முற்படுகையில், அது முதலாளித்துவ-சீர்திருத்த பாராளுமன்றவாத அரசியல் தன்மையின் கட்டமைப்பிற்குள்தான் உள்ளது. ஜூலியன் அசாஞ் ஒரு பத்திரிகையாளர் என்றவகையிலும், பெரும் தவறுளை அம்பலப்படுத்துவதிலும் முக்கிய பங்கை கொண்டுள்ளார். அவருடைய அரசியல் கருத்தாய்வுகளும் செயற்பாடுகளும் மற்றொரு விஷயம். அசாஞ்சின் அரசியல், சுதந்திரக்கொள்கை மற்றும் சீர்திருத்த வாதத்தின் உயர்ந்த கலப்பாகும். ஆனால் நோக்கங்களில் எத்தனை நேர்மையாக இருந்தாலும், அசாஞ்சின் அரசியல் தொடர்புக்கள் உலகெங்கிலும் உள்ளன, புரிந்து கொள்ளும் உணர்வுமுறை, எளிதில் நம்பும் தன்மை, குறுகிய சந்தர்ப்பவாதம் ஆகியவற்றின் செல்வாக்கிற்கு உட்பட்டவை. ஆஸ்திரேலியாவிற்குள், அரசியல் நடைமுறையின் கூறுபாடுகளுக்குள் அசாஞ் உறவுகளை வளர்க்க முற்பட்டார், WLP உடைய பிரச்சார இயக்குனரும் மிக முக்கிய செய்தித் தொடர்பாளருமான கிரெக் பார்ன்ஸ், இவர் ஒரு பாரிஸ்டர், ஜோன் ஹோவர்ட் இன் கன்சர்வேடிவ் லிபரல் தேசிய அரசாங்கதிற்கு மூத்த ஆலோசகராக இருந்தவராவர். WLP உடைய கட்டமைப்பை பொறுத்தவரை, பதவியில் இருப்பவர்கள் மற்றும் பரந்த மாறுபட்ட அரசியல் கருத்துக்களை உடைய தாராளவாத அதிருப்தியாளர், விடுதலை விரும்பிகள் மற்றும் பல மத்தியதர எதிர்ப்பு அரசியல் வாதிகள் என புதிய கட்சியின் உறுப்பினர்கள் உள்ளனர். தன் முழு செனட் வேட்பாளர் பட்டியலை WLP இன்னும் அறிவிக்க இருக்கையில், அதன் தேசியக் குழுவில், அசாஞ்சின் குடும்ப உறுப்பினர்களும் முன்னாள் சக ஊழியர்களும், விக்கிலீக்ஸின் செயலர்கள், (ஆஸ்திரேலிய குடிமக்கள் கூட்டில் இருப்பவர்கள்), வக்கீலும் மனித உரிமைகளுக்கு வாதிடுபவருமான Kellie Tranter, சமாதானப் பிரச்சாரகர் Gail Malone, பூர்விகக் குடிமக்களுடைய கல்வி ஆலோசகர் Luke Pearson, திரைப்படத் தயாரிப்பாளரும், திமிங்கில எதிர்ப்பு கடல் பாதுகாப்புக் குழுவில் செயலர் Omar Todd ஆகியோரும் உள்ளனர். கட்சி இன்னும் அதன் வேலைத்திட்டத்தை வெளிவிடவில்லை. அதன் யாப்பு பல சீர்திருத்த நோக்கங்களை கோடிட்டுக் காட்டுகிறது; அதில் “அரசாங்கச் செயற்பாடுகளில், கொள்கை மற்றும் தகவல்களில், வெளிப்படைத்தன்மையை வளர்த்தல், பெருநிறுவனங்கள், அரசாங்கமல்லாத அமைப்புக்களின் செயல்ப்பாடுகள், மற்றும் தகவல்கள், கொள்கைகளில் வெளிப்படைத்தன்மை தேவை என்கிறது; இதையொட்டி “அரசாங்கங்கள், பெருநிறுவனங்கள், அமைப்புக்கள், சங்கங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அத்தகைய அமைப்புக்களுடன் தொடர்புடைய நபர்கள், அரசியல் வாதிகள், பெருநிறுவன நிர்வாகிகள் ஆகியோர் தங்கள் கொள்கைகள், செயல்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.” இந்த ஆண்டு அசாஞ்சுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடல் பற்றிய ஒரு குறிப்பில், விக்கிலீக்கிஸ் ஆசிரியர் ஆஸ்திரேலிய செனட்டிற்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவருக்கு எதிரான அமெரிக்கப் பெரு நடுவர் நீதிமன்றத்தின் வழக்கு அகற்றப்படும், ஏனெனில் “அமெரிக்க நீதித்துறை ஒரு சர்வதேச இராஜதந்திர பூசலைத் தூண்ட விரும்பாது.” அதேபோல் பிரித்தானிய அரசாங்கமும் அதன் ஸ்வீடனுக்கு அனுப்பும் அச்சுறத்தலை கைவிட்டுவிடும்; ஏனெனில் “தற்போதைய எதிரெதிர் நிலைப்பாட்டின் அரசியல் இழப்புக்கள் இன்னும் அதிகமாகிவிடும்.” என நம்புகிறார். இதுதான் உண்மையில் அசாஞ்சின் பாராளுமன்றத்திற்கு போட்டியிடும் முடிவிற்கு அடித்தளம் என்றால், பின் தன் சொந்த அனுபவத்தில் இருந்தே அவர் அதிகம் கற்றுக் கொள்ளவில்லை என்பதுதான் தெளிவாகும். ஆஸ்திரேலிய பாராளுமன்றம் அவரை கௌரவமாக விடுவிக்கும் கருவி என்பதற்கு முற்றிலும் மாறாக, அவருக்கு எதிரான சதிக்கு அது முக்கிய கருவியாக இருக்கும். ஒபாமா நிர்வாகம் அசாஞ்சை ஒரு உதாரணமாக்க முயல்கிறது, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் எதிரிகளை மிரட்டுவதற்காக துணை ஜனாதிபதி ஜோ பிடென் அவரை “உயர்மட்ட தொழில்நுட்ப பயங்கரவாதி” என்று அறிவித்தார். நிர்வாகத்தில் எவரும் செப்டம்பர் 14க்குப் பின்னர் ஒருவேளை அசாஞ்ச் பெறக்கூடிய “தேர்ந்தெடுக்கப்பட்ட செனட்டர்” என்ற அந்தஸ்து குறித்து இரண்டாம் முறை நினைத்துப்பார்க்க மாட்டார்கள். இராஜதந்திர நெறிகளுக்கு அமெரிக்கா காட்டும் இழிவுத்தன்மை, மற்றும் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்திற்கு காட்டும் இழிவுத்தன்மை விக்கிலீக்ஸே வெளியிட்ட கசியவிட்ட தந்திகளில் நன்கு தெளிவாயுள்ளது. சோசலிச சமத்துவக் கட்சி, கூட்டாட்சித் தேரதல் பிரச்சாரத்தின் போது, ஜூலியன் அசாஞ்சின் பாதுகாப்பிற்கு தொடர்ந்தும் உறுதியாகப் போராடும். நாம் அதை, முதலாளித்துவ இலாப நோக்கு அமைப்புமுறையை தூக்கியெறியும் இலக்கு கொண்ட தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான மற்றும் ஐக்கியப்பட்ட அரசியல் இயக்கத்தை கட்டியெழுப்பும் எங்கள் போராட்டத்தின் அடிப்படையில் அவ்வாறு செய்வோம். அது ஒன்று மட்டுமே ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்க சாத்தியமான வழியாகும். |
|
|