World Socialist Web Site www.wsws.org |
The betrayal of the Greek teachers’ strike கிரேக்க ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தின் காட்டிக்கொடுப்புChris Marsden தேசிய முன்-பல்கலைக் கழக பான்ஹெலெனிக் பரீட்சை தேர்வுகளின் போது தொடர்ச்சியாக திட்டமிட்டிருந்த வேலைநிறுத்தங்களை தகர்த்து, கிரேக்கத்தின் இடைநிலைப்பள்ளி தொழிற்சங்கமான OLME இன் உள்ளூர் தலைவர்களுடைய கூட்டம் இறுதியாக வியாழனன்று முதுகில் குத்தியது. இவ்வாறு செய்கையில், தொழிற்சங்க அதிகாரத்துவமானது முழு கிரேக்கத் தொழிலாள வர்க்கத்திற்கும் தீவிர அடி ஒன்றைக் கொடுத்ததுடன், மற்றும் அரசாங்கமும் அரச படைகளும் ஒரு மிருகத்தன நடவடிக்கையினால் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துகையில் அதை வலுப்படுத்தியுமுள்ளது. OLME உடைய இக்குற்றத்தின் பங்காளிகளான முக்கிய தொழிற்சங்க கூட்டமைப்புகளும் போலி இடது எதிர்ப்புக் கட்சியான சிரிசாவும் ஆகும். கிரேக்க ஆசிரியர்கள் பலமுறை மிகப் பெரிய பெரும்பான்மையாக (90 சதவிகிதத்திற்கும் மேல் ஆதரவாக) வாராந்திர வேலை மணி நேரத்தில் 2 மணித்தியால அதிகரிப்பையும் கட்டாயமாக வேறு இடைநிலைப் பள்ளிகளுக்கு மாற்றப்படுவதையும் எதிர்த்து வாக்களித்துள்ளனர்; இதற்கான வேலைநிறுத்த நடவடிக்கைகள் மே 17ல் தொடங்கின. ஆசிரியர்களுடைய நிலைப்பாடு பொதுக்கல்வி முறையை மூடுதல், பள்ளிகள், பல்கலைக்கழகங்களை மூடுதல், 10,000 ஆசிரியர்களின் வேலைகளை இல்லாமல் செய்தல் என்று இன்னும் பரந்த 150.000 பொதுப்பணி ஊழியர்களின் வேலைகளை அகற்றுதலின் ஒரு பகுதியாக இருப்பதை எதிர்ப்பதாகும். அரசாங்கம் இதை எதிர்கொள்ளும் வகையில் சிவில் அணிதிரள்வு உத்தரவு என்பதை 88,000 ஆசிரியர்களுக்கு வழங்கியது. கிரேக்கத்தில் 2008ல் சிக்கன நடவடிக்கைகளை சுமத்துதல் கொண்டுவரப்பட்டதிலிருந்து இந்த உத்தரவுகள் அடிக்கடி பயன்படுத்தப்பட்டு தொழில்துறை நடவடிக்கையை சட்டவிரோதமாக்குகின்றன. தொழிலாளர்கள் ஒரு பொழுதும் கட்டாயப்படுத்தப்படக்கூடாது என்று கூறுகின்ற கிரேக்கத்தின் சொந்த அரசியலமைப்பையும் இது மீறுவதாகும். இந்த உத்தரவு, தொழிலாளர்கள் மீது இராணுவக் கட்டுப்பாட்டை சுமத்துகிறது; “யுத்த கால தேசிய பாதுகாப்பை பாதுகாக்கவும், அவசரகால நடவடிக்கைகளை எதிர்கொள்ளவும்” என்று கூறப்படுகிறது; இதில் வெகுஜன வேலை நீக்கங்கள், கைதுகள், சிறைத் தண்டனைகள் ஆகியவைகளும் உள்ளன. இந்த ஆண்டில் தொழிலாளர்களுக்கு எதிராக இத்தகைய உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது மூன்றாவது முறையாகும். ஜனவரி மாதம் ஏதென்ஸில் சுரங்க இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க பயன்படுத்தப்பட்டது; பின் 2,500 இரயில் மற்றும் டிராம் தொழிலாளர்கள் அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதற்கும் எதிராகவும் பயன்படுத்தப்பட்டது. ஆசிரியர்களுக்கு எதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையானது தீர்மானகரமான எதிர்ப்பை தூண்டியுள்ளது. உள்ளூர் ஆசிரியர்கள் சங்கங்கள் உத்தரவை மீறி வேலைநிறுத்தங்களுக்கு வாக்களித்தனர், சிவில் அணிதிரள்வு உத்தரவு ஆணைகள் மொத்தமாக எரிக்கப்பட்டன. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஏதென்ஸில் ஆசிரியர்கள் இராணுவச் சீருடைகளில் அணிவகுத்து வந்ததை பார்க்கக்கூடியதாகவிருந்தது; இது 1967-74 இராணுவ ஆட்சிக் குழுவுடன் தொடர்புடைய நிலைமை மீண்டும் வந்துவிட்டது என்பதைக் குறிப்பிட்டது. பகிரங்கமாக, OLME உடைய தலைவர்கள் காட்டிக் கொள்வது, முக்கிய தொழிற்சங்கங்களிடம் இருந்து வேலைநிறுத்தத்திற்கான உதவியாகும். ஆனால் இது OLME உடைய அரசியல் அரங்காகும், அது ஒருபொழுதும் வேலைநிறுத்தம் நடத்த விரும்பியதில்லை. ஆளும் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளரான அதனுடைய தலைவர் நிகோஸ் பாப்பகிறிஸ்டோஸ் ஏற்கனவே சிவில் அணிதிரள்வு சுமத்தப்பட்டால், அது நடக்கும் என தனக்குத் தெரியும் என்றும், “நாங்கள் எங்கள் தலைகளை உயர்த்தி வைத்து பாடசாலைகளுக்கு திரும்புவோம்” என்றார். ஒரு பெயரளவு முறையீடாக 48 மணி நேரத்திற்கான பொது வேலைநிறுத்தத்திற்கு, வியாழன் மற்றும் வெள்ளிகளில் பரீட்சை தேர்வுகள் நேரத்தில் வரும் வகையில் நடக்க இருப்பதோடு இணைந்து வருவதற்கு ADEDY என்னும் பொதுத்துறைத் தொழிலாளர்கள் கூட்டமைப்பினால் முறையீடு செய்யப்பட்டது. பின்னர் அது நிராகரிக்கப்பட்டது. ADEDY தன் எதிர்ப்பை தேர்வுகளுக்கு இடையூறு விளைவிப்பதாக இருக்கும் என்று அறிவித்தது. ஏதோ இந்த சூழ்நிலையின் கீழ் அரசாங்கம் வெகுஜனக் கைதுகளையும் பணிநீக்கங்களையும் செய்ய இருப்பது போல். மாறாக அது செவ்வாயன்று ஒரு வேலைநிறுத்தம், மற்றும் நான்கு மணி நேரம் வேலை நிறுத்தத்தை GSEE உடன் தனியார்துறை தொழிற்சங்கத்துடன் வியாழனன்று நடத்த விரும்பியது. செவ்வாய் 24 மணிநேர பொது வேலைநிறுத்தம் நடைபெறவில்லை. ஒரு சில பள்ளிகளும் மருத்துவமனைகளும்தான் மூடப்பட்டிருந்தன. அன்று மாலை ADEDY ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டம் 300 பேருக்கும் குறைவானவர்களைத்தான் ஈர்த்தது; ஆசிரியர்கள் ADEDY தலைவர் அன்டோனிஸ் அன்டோனகோஸை வேலைநிறுத்த எதிர்ப்பிற்கு ஆதரவாளர் எனக் கண்டித்தனர். அன்று மாலை நடைபெற்ற OLME உடைய பிராந்திய மாநாடுகள் மாபெரும் 95 சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதற்கிடையில் ADEDY உடைய தலைவர்கள் புதிய ஜனநாயகக் கட்சியுடன் எப்படித் திட்டமிடப்பட்டுள்ள வேலைநிறுத்தத்தை தடுக்கலாம் என்ற பேச்சுக்களில் ஈடுபட்டனர். புதனன்று முக்கிய ஆளும் கட்சிகளுடன் பேசிய பின்— அதாவது புதிய ஜனநாயகம், PASOK உடன்— OLME உடைய பாபகிறிஸ்டோஸ் அரசாங்கம் சிவில் அணிதிரள்வு உத்தரவுகளை திரும்பப் பெற்றால் தான் வேலைநிறுத்தத்தை கைவிடத்தயார் என்று அறிவித்தார். இந்த முழக்கமும் கைவிடப்பட்டது. வியாழனன்று OLME உடைய உள்ளூர் தலைவர்கள் மற்றும் உள்ளூர் இடைநிலைப்பள்ளி ஆசிரியர்களின் சங்கங்களின் (ELME) கூடியிருந்த அதிகாரத்துவத்தினரை அவர்கள் வேலைநிறுத்தத்தை நீடிக்கப் போதுமான சமூக ஆதரவு இருக்கிறதாக உணர்ந்தீர்களா என்று வாக்களிக்குமாறு கேட்கப்பட்டனர். 18 பேர்தான் வேலைநிறுத்தத்திற்கான சூழல் உள்ளது என்று வாக்களித்தனர்; 9 பேர் எதிராக வாக்களித்தனர். 57 பேர் விடையேதும் கொடுக்கவில்லை. உத்தியோகபூர்வமாக வேலைநிறுத்தம் கைவிடப்பட்டது. இந்தக் காட்டிக் கொடுப்பிற்கு வழிவகை செய்த நிகழ்வுகள் முழுவதும் சிரிசா அரசாங்கத்துடன் எந்த மோதலுக்கும் போகக்கூடாது என்பதற்கான முக்கிய அரசியல் பாத்திரத்தை வகித்தது. பாபகிறிஸ்டோஸ் சிரிசாவின் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸுடன் பேச்சுக்களை நடத்தினார், அணிதிரள்வு உத்தரவுகள் திரும்ப பெறப்பட்டுவிட்டால் என்ற ஒரே செயல் நடந்தால் வேலைநிறுத்தம் கைவிடப்படும் என்றார் அவர். சர்வாதிகார அதிகாரங்களை அது பயன்படுத்துவது வெகுஜன எதிர்ப்பை தொழிலாள வர்க்கத்திடையே தூண்டும் ஆபத்தைக் கொடுக்கும் என்று சிப்ரஸ் ஆளும் உயரடுக்கை எச்சரித்தார். “தொடர்ந்த அவசரகால நடவடிக்கைகளானது சட்டம் ஒழுங்கை அனுமதிக்காது, மாறாக அவற்றின் சரிவிற்குத்தான் வகை செய்யும்” என்றார் அவர், தன்னுடைய மற்றும் தன் நண்பர்களுடைய பணியை இது நடைபெறாமல் இருக்க தொழிற்சங்கங்களுக்கு கொடுப்பதாகவும் அவர் கூறினார். SEV எனப்படும் ஹெலெனிக் நிறுவனங்களின் கூட்டமைப்பு கொடுத்த உரை ஒன்றில் திங்களன்று அவர் முதலாளிகளுக்கும் தொழிற்சங்கங்களுக்கும் ஒரு புதிய தேசிய தலைமைக் கூட்டமைப்பு தொழில்துறை உடன்பாட்டை இயற்ற ஒத்துழைப்பு வேண்டும் என்றார்; அதுதான் கிரேக்கத்தை மீட்கும் என்றார். SEV தலைவர் டிமிட்ரிஸ் டாஸ்கலோபௌலோஸ் “சிரிசாவின் தீவிரத்தனம் பயனுடையது, வரவேற்கத்தக்கது” என்று விடையிறுத்தார்; ஏனெனில் கிரேக்கத்திற்கு தீவிரமான தீர்வுகள் தேவை என்றார். கடந்த வாரம் நடைபெற்ற வெட்டுக்கள், மூடல்கள், வேலை இழப்புக்களுக்கெதிரான தீரமான எந்தப் போராட்டங்களையும் நடத்துவது எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை என்பதற்கான தொழிலாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை இதுவாகும். ஏனெனில் அழுகிய தொழிற்சங்கத் தலைவர்கள், போலி இடது கட்சிகள் ஆகியவற்றின் இதே தலைமைகளின் கீழ்த்தான் இவைகள் வேகப்படுத்தப்படுகின்றன. GSEE, ADEDY, OLME ஆகியவற்றின் பங்கு DGB மற்றும் அத்துடன் பிணைந்த தொழிற்சங்கங்கள் என ஜேர்மனியில் இருப்பவை, பிரித்தானியாவில் TUC, ஸ்பெயினில் CC.OO, UGT., அமெரிக்காவில் AFL-CIO ஆகியவற்றின் பங்கை, அதாவது இதே வகையிலான தொடர்ந்த காட்டிக் கொடுப்பு தொடர்களைத்தான் கூறுகிறது. எல்லா இடங்களிலும் போலி இடது குழுக்களை பொறுத்தவரை, சிரிசாதான் அவற்றிற்கு முக்கிய முன்மாதிரி ஆகும்; அரசியல் ஊக்கமும் கூட. அதன் தேர்தல் வெற்றிகளும், ஜேர்மனியில் இடது கட்சியின் வெற்றியும், சிக்கனத்திற்கு எதிரான வனப்புரையைக் கூறுதல், அதே நேரத்தில் முதலாளித்துவ சார்புடைய கொள்கைகளை முன்னெடுக்கின்றனர்; அவைகள் அரச கருவிக்குள் முதலாளித்துவத்தின் அரசியல் ஊழியர்கள் என்ற இடத்தைப் பெற விழைய முடியும் என்று நிரூபிக்கின்றனர். இந்த சுயநலன் கருதும் குட்டி முதலாளித்துவ சக்திகள் தொழிலாள வர்க்கத்தை தொடர்ந்து நெரிப்பதானது தீவிர ஆபத்துக்களை எழுப்புகின்றன. ஐரோப்பா முழுவதும் ஆளும் வர்க்கம் இன்னும் வெளிப்படையாக சர்வாதிகார வகை ஆட்சிகளுக்கு திரும்புகிறது; இது டேனிஷ் அரசாங்கம் மேற்கொண்ட சமீபத்திய 70,000 ஆசிரியர்கள் மீதான வேலை நீக்கம் போன்றதாகும். தொழிலாள வர்க்கம் இப்பொழுது அரசு மற்றும் அது பாதுகாக்கும் முதலாளித்துவ அமைப்பு முறைக்கு எதிரான அரசியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. எனவே ஆளும் வர்க்கத்தை எதிர்ப்பது என்பதன் பொருள் தொழிற்சங்கங்களுடனும் அவற்றின் நட்பு அமைப்புக்களான போலி இடது குழுக்களுடனும் முறித்துக் கொண்டு, ஒரு புதிய சோசலிச தலைமையை கட்டமைக்க வேண்டும். இதன் பொருள் வெகுஜன அரசியல் மற்றும் சமூக இயக்கம் ஐரோப்பாவிலுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க அபிவிருத்தி செய்து, ஐரோப்பிய ஐக்கிய சோசலிச அரசுகளுக்குள் தொழிலாளர்களின் அரசாங்கங்களை நிறுவுவதாகும். |
|