World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

The Left Party: A party of German imperialism

இடது கட்சி: ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் கட்சி

By Johannes Stern 
20 May 2013

Back to screen version

அரசியல் கட்சிகளினதும், போக்குகளினதும் வர்க்கத் தன்மை அவற்றின் வெளிநாட்டுக் கொள்கையில் தெளிவான வெளிப்பாட்டைக் காண்கின்றன. இந்த அளவுகோலை அடிப்படையாக வைத்தால், இடது கட்சி, ஒரு ஏகாதிபத்திய சார்புக் கட்சி என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஏனைய அனைத்து முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்த வகையில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் அதிகரித்த வகையில் ஆக்கிரோஷமாக அதன் புவிமூலோபாய நலன்களை தொடர்வதற்கு ஆதரவளிக்கிறது.

இது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளின் முன்னணி அரசியல்வாதிகள் வரைந்த வெளியுறவு கொள்கை அறிக்கையில் நன்கு தெளிவாகிறது. “இன்னும் கூடுதலான ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை: இடது கட்சியில் இருந்து கிறிஸ்துவ சமூக ஒன்றியம் (CSU) வரை ஏழு பாராளுமன்றக் கட்சி உறுப்பினர்கள் இருகட்சி ஒருமித்த உணர்வுடன் இயற்றுகின்றனர்” என்ற தலைப்பில் சமீபத்தில் இந்த அறிக்கை கன்சர்வேட்டிவ் Frankfurter Allgemeine Zeitung இல் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கை ஜேர்மனிய ஏகாதிபத்திய நலன்களை “ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை” என்னும் கட்டமைப்பிற்குள் தொடர்வதற்கான முக்கிய கருத்துக்களை வகுக்கிறது. அறிக்கை கூறுவதாவது: “ஐரோப்பிய ஒன்றிய வடிவமைப்பு, ஜேர்மனியின் செல்வாக்கை சர்வதேச அரசியலில், முற்றிலும் தேசிய அளவில் இயலக்கூடியதை காட்டிலும் மிக அதிக அளவிற்குப் பெருக்குகிறது என்பது உண்மை.”

அறிக்கையை தயாரித்தவர்கள், ஜேர்மனியின் ஆதிக்கத்தில் உள்ள ஐரோப்பிய வெளியுறவுக் கொள்கை, ஜேர்மனிய செல்வாக்கை அதன் போட்டியாளர்களுடன் அதிகரிக்கும் ஒரு வழிவகை என கருதுகின்றனர். அவர்கள் கூறுவதாவது: “ஐரோப்பிய ஒன்றியம் சர்வதேச ஒழுங்கை வடிவமைக்க தயாராக இல்லை என்றால், அது மற்றவர்களை உலகை வடிவமைக்க விட்டுவிடுகிறது.”

இந்த அறிக்கை, இவ்வளவு வெளிப்படையாக சாத்தியமான போட்டியாளர்கள் குறித்து பட்டியலிடுவதோடு, ஜேர்மனிய, ஐரோப்பிய செல்வாக்கு மண்டலங்களையும் ஊக்குவிக்கிறது.

வெளியுறவுக் கொள்கை பிரச்சினைகளில் இது, “ஒத்துழைப்பு மற்றும் அவ்வப்பொழுது திறனாயும் முறையில் அமெரிக்கா போன்ற பங்காளிகளுடன் ஈடுபடுதல், எழுச்சி பெறும் சக்திகளான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா இன்னும் பிறவுடன் ஈடுபடுதல் என்பதை குறிக்கிறது.” “குறிப்பிடப்பட்ட முக்கியத்துவ பிராந்தியங்களில்” ஐரோப்பிய ஒன்றியம் “உறுதியளிக்கும், உருவாக்கும் பங்கை” கொண்டுள்ளது, அறிக்கை வட ஆபிரிக்கா, கிழக்கு ஐரோப்பா, காகசஸ், மேற்கு பால்கன்கள், தீவிர வடக்கு, கருங்கடல் மற்றும் “ஒழுங்கற்ற உலக மண்டலங்களான” விண்வெளிமண்டலம், சமுத்திரங்கள் ஆகியவற்றை குறிக்கிறது.

முழு ஆவணத்திலும் காணப்படும் ஏராளாமான போலிப் புகழுரைகளுடன் ஆவணம் ஜேர்மனிய பொருளாதார, மூலோபாய நலன்களை இராணுவப் பாதுகாப்பிற்கு உட்படுத்துகிறது; நிலத்தில் மட்டுமின்றி, கடல், விண்வெளி, சைபர் இடைவெளியிலும்!

அறிக்கை தொடர்கிறது: “ஐரோப்பிய ஒன்றியம் ஐரோப்பாவின் அண்டைப் பகுதிகளில் நெருக்கடியை நிர்வகிக்க, வெவ்வேறு கருவிகளின் பிரத்தியேகக் கருவியை கொண்டுள்ளது. துரதிருஷ்வசமாக, ஐரோப்பிய தலைநகரங்கள் கடந்த காலத்தில் பலநேரமும் அவற்றை உரிய காலத்தில் பயன்படுத்துவதில் அரசியல் உறுதியை கொண்டிருக்கவில்லை.”

இது போர்களுக்கு இன்னும் ஒரு அப்பட்டமான முறையீடு ஆகும். ஆசிரியர்கள் இழிந்த முறையில் “நெருக்கடி நிர்வாகத்திற்கு பிரத்தியேகக் கருவிகளின் கலவை” என்று விளக்குவது உண்மையில் ஐரோப்பிய நாடுகளின் ஆயுதப் படைகள், ஆயுதக் கிடங்குகளை “உரிய நேரத்திலும் அவ்வப்பொழுதும்” நிலைப்பாடு கொள்ள வேண்டியது குறித்துக் கூறுகிறது. முறையீட்டை இயற்றியவர்கள் இராணுவச் செயல்களின் அப்பட்டமான ஆதரவாளர்களாவர், தற்போதைய கிறிஸ்தவ ஜனநாயக தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தின் முடிவான, 2011ல் லிபியா மீது நேட்டோ நடத்திய போருக்கு ஆதரவு கொடுத்து பங்கு பெறாததை, பெரும் பிழை என்று கருதுபவர்கள்.

சமூக ஜனநாயகக் கட்சியின் சார்பில் முறையீட்டை எழுதுவதில் ஈடுபாடு கொண்டிருந்த லார்ஸ் கிளிங்பைல், ஜேர்மனி பங்கு பெறாததை “அவமானகரமானது” என்றார். Agnieszka Brugger மற்றொரு இணை ஆசிரியர், பசுமைவாதிகளுக்காக பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் அமர்பவர், இதே கருத்தைத்தான் கொண்டுள்ளார். அவர் கூட்டாட்சி அரசாங்கம் திட்டவட்டமாக இராணுவப் பங்கை நிராகரித்திருந்தது” என்று விமர்சித்தார்.

லிபியாவிற்கு எதிரான போர் பற்றிப் பேசுகையில், இடது கட்சியில் இருந்து வரும் இணை ஆசிரியர் ஸ்ரெபான் லீபிக் அத்தகைய வெளிநாட்டுப் பணிகள் “முற்றிலும் நிராகரிக்கப்படக்கூடாதவை” என்றார்.

லிபிய அரசாங்கத்தின் முன்னாள் தலைவர் முயம்மர் கடாபி மிருகத்தனமாக கொலை செய்யப்பட்ட சில வாரங்களுக்குப்பின், CSU பிரதிநிதி ரைன்ஹார்ட் பிராண்டல், அறிக்கை தயாரித்தவர்களில் ஒருவர், லிபியப் போரில் ஜேர்மனி வகித்த பங்கு, ஒரு தவறானது என்று விவரித்தார்.

ஜேர்மனிய இராணுவத்தின் பங்கு பற்றி பிராண்டல் கூறினார்: “எப்படியென்றாலும் பாதுகாப்பு சபையில் நாம் பங்கு பெறாதிருந்ததும், நம் மரபார்ந்த நட்பு நாடுகளை எதிர்த்ததும் தவறு. நான் முன்பு குறிப்பிட்ட தேசிய நலன்களுக்கு இது விரோதமானது. பின்னால் கவனித்துப் பார்க்கையில் நேட்டோ பயன்படுத்தப்பட்டது சரியானதே.”

“லிபிய சங்கடத்திற்கு பின்” பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளும் இப்பொழுது போர்ப் பிரச்சினையில் கருத்துவேறுபாடுகளை மூடுகின்றன. அவை சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டிற்கு ஆதரவு கொடுக்கின்றன; அது சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தை அகற்றி அவருக்குப் பதிலாக ஒரு மேற்கத்தைய சார்பு கைப்பொம்மை ஆட்சியை நிறுவ முயல்கிறது.

லிபியாவை போலன்றி ஜேர்மனிய ஆளும் வர்க்கம் இம்முறை போர்த்திரையின் கொள்ளைப் பங்கில் இருந்து விடுபட்டுவிடும் விருப்பத்தை கொள்ளவில்லை.

ஜேர்மன் ஏகாதிபத்தியம் உலக அரங்கிற்கு மீண்டும் வருவதற்கு இடது கட்சி உந்து சக்தியாக உள்ளது என பொது வெளியுறவுக் கொள்கை அறிக்கை அடிக்கோடிடுகிறது. ஆக்கிரோஷமான ஜேர்மனிய வெளிநாட்டுக் கொள்கை, பெருகியமுறையில் முதலாளித்துவ அரசியல் நடைமுறையிடம் அதன் ஆதரவைப் பெருக்கிக் கொள்ள ஒரு வாய்ப்பாக உதவும் எனக் கருதுகிறது.

கடந்த டிசம்பர் மாதம் இடது கட்சி, SPD, பசுமை வாதிகள் மற்றும் CDU வின் முன்னணி பிரதிநிதிகளுடன் இணைந்து, சிரியா: சுதந்திரத்திற்கு உதவி தேவைப்படுகிறது என்ற தலைப்பில் முறையீடு ஒன்றை வெளியிட்டு, சிரியாவில் தலையீட்டிற்கு அழைப்புவிட்டது.

இதன் கூட்டங்களில் பேசியவர்களில் இஸ்லாமிய முஸ்லிம் சகோதரத்துவம் இன்னும் பிற எதிர்த்தரப்புக் குழுக்களின் பிரதிநிதிகள் அடங்கியிருந்தனர்; இவர்கள் இஸ்லாமியவாத போராளிகளுக்கு நேட்டோ ஆயுதமளித்தலை அதிகப்படுத்த வேண்டும் என்று கோரினர்.

இடது கட்சி எப்பொழுதும் ஒரு ஏகாதிபத்திய சார்பு முதலாளித்துவக் கட்சி, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை குழுக்களுடன் நெருக்கமான பிணைப்புக்களை கொண்டுள்ளது. அதன் பிரநிதிகள் நால்வர் பாராளுமன்ற பாதுகாப்புக் குழுவில் உள்ளனர்; இது இரகசியமாக கூடுகிறது, வெளியுறவு இராணுவ நிலைப்பாடுகளை செயல்படுத்தி, ஆலோசனைகளையும் கூறுகிறது. இடது கட்சியின் முன்னணி அரசியல்வாதிகள், வாடிக்கையாக பல-கட்சி அரசாங்க பிரநிதிக் குழுக்களுடன் பங்குபற்றி ஜேர்மனியின் அரசியல், பொருளாதார நலன்களை சர்வதேச அளவில் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.

சித்தாந்தரீதியாக, இடது கட்சி, ஜேர்மன் முதலாளித்துவத்தின் இராணுவவாத்தை புனரமைக்கும் திட்டங்களில் மத்திய பங்கை வகிக்கிறது. ஜேர்மனிய இராணுவ வாதமோ, இரண்டு உலகப் போர் பேரழிவுகள், தேசிய சோசலிசத்தின் குற்றங்களுக்கு பின்னர் பரந்த அளவில் வெறுக்கப்படுகிறது. அதன் பிரச்சாரத்தின் நோக்கம், மத்தியதர வர்க்கத்தின் பிரிவுகளை மிருகத்தன ஏகாதிபத்தியப் போர்களுக்கு ஆதரவு அளிக்க அணிதிரட்டுவது, பரந்த அளவில் மக்கள் கருத்தை நச்சுப்படுத்துவது என்பதாகும்.

அறிக்கை கூறுகிறது: “ஐரோப்பா, சமாதானத்திற்கு ஒரு சக்தியாக முடியும், இருக்கவும் வேண்டும், இப்பணி சமாதானத்தை சாதிப்பதற்கான திறமைகளை விரிவாக்கி வலுப்படுத்துதல் ஆகும். இதில் நெருக்கடியை தடுப்பதற்கான திறமைகள், கருவிகளை பலப்படுத்துதல், நெருக்கடி நிர்வாகம் மற்றும் நெருக்கடிக்குப் பின் நிலைமைகளை சமாளித்தல் ஆகியவையும் உண்டு.”

21ம் நூற்றண்டில் இதுதான் ஜேர்மனிய, ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஓர்வெலிய சொல்லாட்சி ஆகும். சமாதானக் குருமார்கள் என்பதற்கு முற்றிலும் மாறாக, ஐரோப்பிய தேசங்கள் பெருகிய முறையில் போரில் ஈடுபடுகின்றன. கடந்த 15 ஆண்டுகளில் அவை யூகோஸ்லேவியா, ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா, சிரியா மற்றும் மாலிக்கு எதிரான போர்களில் ஈடுபட்டுள்ளன. சட்டவிரோதப் போர்கள், கொடூரமான ஆக்கிரமிப்புக்கள் மற்றும் கைப்பொம்மை ஆட்சிகளை நிறுவதல் இழிந்த முறையில் “நெருக்கடித் தடுப்பு, நெருக்கடி நிர்வாகம், நெருக்கடிக்குப்பின் நிலைமைகளைச் சமாளித்தல்” என்று கூறப்படுவது ஜேர்மனிய ஆளும் உயரடுக்கின் பிற்போக்குத்தன்மையைப் பற்றி நிறையவே பேசுகிறது.

இந்த கூட்டறிக்கையை இயற்றியவர்கள், தங்கள் ஜேர்மனிய இராணுவவாதத்தை கூட்டாட்சி தேர்தலுக்குப் பின் மேலும் விரிவாக்கும் திட்டத்தை விளக்குகையில், பரந்த மக்கள் கருத்துக்களை மீறி, பேசுகையில் சமமான முறையில் போலித்தனத்தை கொண்டார்கள், அவர்கள் “சில இருகட்சி ஒற்றுமைகள், ஜேர்மனிய வெளியுறவு கொள்கைகள சார்பிற்கு அடிப்படையானதில்  இருப்பவை உயர்த்திக் காட்டப்பட வேண்டும், தற்போதைய பாராளுமன்ற பதவிக்காலத்திற்கும் அப்பால். இந்த முக்கிய கருத்துக்கள, எந்தக் கட்சிகள் அடுத்த அரசாங்கத்தை அமைத்தாலும் பின்பற்றப்பட வேண்டும். இதைத்தவிர, ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கை குறித்து பொது விவாதத்தை அதிகப்படுத்த வேண்டும், அதில் அதிக ஆர்வத்தைத் தோற்றுவிக்க வேண்டும்.”

ஜேர்மனிய முதலாளித்துவம் அதன் சர்வாதிகாரம், போர்த் திட்டத்தை பற்றி அடக்கி பேசும் முயற்சிகளில், தொழிலாள வர்க்கம் ஏமாந்துவிடக்கூடாது. இதுவேதான் அவ்வப்பொழுது ஒரு அரசியல் மாற்றீடு என தன்னைக் காட்டிக் கொள்ள முயலும் இடது கட்சியின் பொய்களுக்கும் பொருந்தும்.

கூட்டு வெளியுறவுக் கொள்கை அறிக்கையானது, இடது கட்சி, CDU/CSU, Free Democratic Party, SPD, பசுமைக் கட்சி போன்றவற்றிடம் இருந்து வேறுபடுவது பெயரில் மட்டும்தானே அன்றி கொள்கைகளில் அல்ல என்பதைக் காட்டுகிறது. இது ஒரு வலதுசாரி முதலாளித்துவக் கட்சி, இராணுவ வழிமுறை மூலம் ஜேர்மனிய தொழில்துறை மற்றும் நிதிய மூலதனத்தின் நலன்களை காக்க மற்ற கட்சிகளுடன் சேர்ந்து செயல்படத் தயாராக உள்ளது.