World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : தென் அமெரிக்கா

South African miners mount new wave of wildcat strikes

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்த புதிய அலையை ஆரம்பித்துள்ளனர்

By Thomas Gaist 
17 May 2013

Back to screen version

இந்த வாரம் இரண்டாவது வேலைநிறுத்தம் நேற்று மாலை Anglo American Platinum’s (Amplat) ருஸ்டென்பேர்க் தளத்தில் தொடங்கத் தயாராகும் நிலையில், ஒரு புதிய வேலைநிறுத்த அலை தென்னாபிரிக்க சுரங்கங்களை அதிர வைத்துள்ளது.

AMCU எனப்படும் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் கட்டுமானத் தொழிலாளர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் வியாழன் மாலை வரை சுரங்க தொழிலாளர்கள் நிலத்தடிக்குச் செல்ல மறுப்பர் என்றும், சுரங்க நிறுவனம் கிட்டத்தட்ட 6,000க்கும் மேற்பட்ட வேலை நீக்கங்களை அறிவிக்கத் தயாராக உள்ள நிலைமையில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினர். நிறுவனம் முன்பு 14,000 வேலை நீக்கங்களுக்கு திட்டமிட்டிருந்தது, ஆனால் இந்த எண்ணிக்கையை சுரங்கத் தொழிலாளர்களிடையே பெருகிய அமைதியின்மையைக் குறைக்கும் முயற்சியாகக் குறைத்துள்ளது.

“இன்று இரவு தொழிலாளர்கள் நிலத்தடிக்குச் செல்லமாட்டார்கள்” என்றார் மாமெட்ல்வ் செபீ; தொழிற்சங்கங்களோடு தொடர்பின்றி சுரங்கத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

வியாழனன்று இரண்டு நாட்கள் திடீர் வேலைநிறுத்தத்திற்குப் பின், லொன்மின் சுரங்கத் தொழிலாளர்கள் பணியை தொடங்கினர்; இரவு முறைப்பணிக்கு 83 சதவிகிதம் தொழிலாளர்கள் வந்தனர் என்று நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் சூ வே தெரிவித்தார். மிகச் சமீபத்திய லொன்மின் வேலைநிறுத்தத்திற்குத் தூண்டுகோலாக இருந்தது உள்ளூர் மதுபானக் கடையில் AMCU அதிகாரி ஒருவர் கொலை செய்யப்பட்டது எனக் கூறப்படுகிறது. சனிக்கிழமை முன்பு 4 துப்பாக்கிதாரிகள் AMCU உடைய பிராந்திய மேலாளர் Steve Khululekile ஐ சுட்டனர்; செய்தி ஊடகம் இதை மாபியா வகைக் கொலை என்று விவரித்துள்ளது.

லொன்மின் தொழிலாளர்கள் தேசிய சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் (NUM) அதன் மாரிக்கான அலுவலகத்தை விட்டு விலக வேண்டும் எனக் கோரியுள்ளனர்; ஒருவேளை NUM, Khululekile கொலைக்கு உத்தரவிட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை ஒட்டி இக்கோரிக்கை வந்துள்ளது; ஏனெனில் NUM மற்றும் AMCU இரண்டும் சுரங்கத்தின் தொழிற்சங்கப் பதவிகளுக்கு மோதுகின்றன.

NUM க்கு எதிராக சுரங்கத் தொழிலாளர்களிடையே ஆழ்ந்த விரோதப் போக்கு உள்ளது. “எங்களுக்கு NUM தேவையில்லை” என்று ஒரு சுரங்கத் தொழிலாளி செவ்வாயன்று ராய்ட்டரிடம் அப்பட்டமாக தெரிவித்தார்; தன் பெயரைக் கூற அவர் விரும்பவில்லை. சுரங்க தொழிலாளர்கள், NUM சுரங்கத்தில் இருந்து முற்றிலும் அகற்றப்பட வேண்டும் என்னும் கோரிக்கைகளை எழுப்பியுள்ளனர்.

AMCU தலைவர் ஜோசப் மாதுஞ்ச்வாவினால் பணிக்கு மீண்டும் செல்லுமாறு லொன்மின் தொழிலாளர்கள் உத்தரவிடப்பட்டனர். இது நிறுவனத்துடன் சாதகமான உடன்பாடு என்னும் வெற்று உறுதிமொழியை தளமாகக் கொண்டது; பேச்சுக்கள் “சுயாதீன நடுநிலை மத்தியஸ்தர்” மூலம் தீர்வு காணப்படும்.”

“முறையான வழிவகைகள் கையாளப்பட வேண்டும்..... பணிக்குச் செல்லுங்கள், பின் உங்கள் விரோதிகள் நிலைமையைச் சாதகமாக்கிக்கொள்ள முடியாது” என்று மாதுஞ்ச்வா தொழிலாளர்களிடம் கூறினார். வரவிருக்கும் காலத்தில் அவருடைய “பயணம் யேசு கிறிஸ்துவால் நிர்ணயிக்கப்படும்” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

தொழிலாளர்களின் பரந்த கோரிக்கைகளில் எதுவும் தீர்க்கப்படாத நிலையில், திடீர் வேலைநிறுத்தத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க முற்படும் AMCU வின் செயற்பாடு என்பது, அதன் முயற்சியான NUM க்கு எதிரான “போராளித்தன்மை உடைய” சக்தி என்று காட்டிக் கொள்வதை நிராகரிக்கிறது.

தன்னை NUM  க்கு மாற்றீடு எனக் காட்டிக் கொள்ளும் AMCU வின் முயற்சிகள், (அதில் இருந்துதான் இது 1998ல் உருவாக்கப்பட்டது), இருந்த போதிலும்கூட, இதுவும் முதலாளித்துவ அமைப்புமுறையுடன் அதேபோல்தான் பிணைந்துள்ளது. தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டங்கள் பலமுறை காட்டியுள்ளது போல், ஒவ்வொரு தீவிர போராட்டமும் தவிர்க்க முடியாமல் தொழிலாள வர்க்கத்தை தொழிற்சங்க அதிகாரத்துவத்துடன் மோதலுக்குக் கொண்டுவருகிறது; பிந்தையதோ முதலாளிகள் மற்றும் தென்னாபிரிக்க அரசின் நலன்களை பாதுகாக்கிறது. ஒரே முன்னேற்றப் பாதை சுயாதீனமாக, தொழிற்சங்கங்களுக்கு எதிராகப் போராட்டத்தை நடத்துவதுதான்.

இதுதான் கடந்த ஆகஸ்ட் மாதம் மாரிக்கானா படுகொலையின் முக்கிய படிப்பினை ஆகும்; அப்பொழுது தென்னாபிரிக்க பொலிஸ், NUM இன் ஆதரவுடனும் தென்னாபிரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவுடனும் மற்றும் ஆளும் ஆபிரிக்க தேசிய காங்கிரசின் ஆதரவுடனும் 34 லொன்மின் சுரங்கத் தொழிலாளர்களை படுகொலை செய்தது. இப்படுகொலை ஒரு நீண்ட கசப்பான வேலைநிறுத்த அலையை தென்னாபிரிக்க சுரங்கத் தொழில்துறை முழுவதும் மற்றும் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவுகளிடையேயும் தூண்டிவிட்டது.

தென்னாபிரிக்க சுரங்கத் தொழிலாளர்கள் முதுகை முறிக்கும், ஆபத்தான பணிநிலைமைகளின் கீழ் வேலைபார்ப்பதற்கு எதிராக வேலைநிறுத்தம் செய்தனர்; அவர்கள் விலைமதிப்பற்ற உலோகங்களை நிலத்தடியில் இருந்து எடுத்தாலும் கொத்தடிமைக் கூலியைத்தான் பெறுகின்றனர். அவர்கள் முதலாளிகளால் கொடுக்கப்படும் இழிந்த வீட்டுவசதியில் வாழ்கின்றனர். சுரங்கத் தொழிலாளர்கள் தங்கள் ஊதியங்களை மாதம் 800 -1000 டாலர்களுக்கு இருமடங்காக உயர்த்தக் கோரினர். NUM ஆனது பொலிசை அழைக்கும் நடவடிக்கையில் இறங்கியது; வேலைநிறுத்தம் செய்தவர்களை பொலிஸ் படுகொலை செய்ததற்கு ஆதரவு கொடுத்தது, இக்கோரிக்கைகளுக்கான போராட்டத்தை தடுக்க முற்பட்டது; அவற்றை எதிர்க்கவும் செய்தது.

அதற்குப் பின் தொழிலாளர்களின் அடிப்படைக் கோரிக்கைகள், குறைபாடுகள் எவையுமே தீர்க்கப்படவில்லை. “நாங்கள் செய்யும் வேலைக்கு மிகவும் குறைவாக ஊதியம் பெறுகிறோம். நான் டைனமைற் வைக்கும் வேலை செய்கிறேன். சுரங்கங்களுக்குள் தொங்கும் சுவர்கள் உள்ளன. நாங்கள் எந்த நேரமும் இறந்து போக நேரிடலாம். நாங்கள் செய்யும் வேலையில் இருந்து நிறுவனம் ஏராள இலாபம் ஈட்டுகிறது என்பதை நாங்கள் அறிவோம்” என்றார் ஒரு சுரங்கத் தொழிலாளி அயண்டா என்டபெனி.

திங்களன்று ஒரு லொன்மின் குன்றுத் துளைபோடும் தொழிலாளி 27 வயதான லுங்கனி மபுட்யனா, ஆகஸ்ட் 2012 அன்று ANC பாதுகாப்புப் படைகளால் 34 வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்கள் படுகொலைகள் செய்யப்பட்ட இடத்திற்கு அருகே தன்னை தூக்கிலிட்டுக் கொண்டார். மபுட்யனா இந்த ஆண்டு தற்கொலை செய்து கொண்ட ஏழாவது தொழிலாளி ஆவார். டேவிட் வான் விக் என்னும் சுரங்கத்துறை ஆராய்ச்சியாளர் “கடந்த ஆண்டு வன்முறைக் கொடூரத்தின்” விளைவு என வர்ணிக்கிறார்; அது சமூகத்தில் ஏற்படுத்திய பாதிப்பு இது என்றும் கூறுகிறார். மபுட்யனா, பாதுகாப்புப் படையினர் கூட்டத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியபோது அங்கு இருந்தவர் ஆவார்.

“இந்நபர்கள் இன்னும் மாரிக்கான படுகொலைகளில் இருந்து பெரும் மன உளைச்சலைக் கொண்டுள்ளனர்” என்றார் வான் விக். “வன்முறையின் அளவு மிகப் பெரிய நிலையில் இருந்தது; அவர்களால் இன்னமும் அதைப் புரிந்து கொள்ள முடியவில்லை. சமூகம் முழுவதுமே பெரும் அதிர்ச்சியில் உள்ளது.”

தென்னாபிரிக்க முதலாளித்துவம் புதிய வேலைநிறுத்த செயற்பாடு குறித்து பெரும் பீதி கொண்டுள்ளது. ஆபிரிக்க தேசியக் காங்கிரஸ் (ANC) “மிக, மிகத் தீவிரமாக கவலை கொண்டுள்ளது” என்று சுற்றுச்சூழல் மந்திரி எட்னா மொலீவா கூறினார்.

“இது வன்முறையை அதிகரிக்கக் கூடும் என்று நாங்கள் அதிகம் கவலைப்படுகிறோம்” என்று லெஸிபா செஷோகா, NUM உடைய செய்தித் தொடர்பாளர் கூறினார். “இது மாரிக்கானாவில் நடந்ததை விரிவாக்கம் செய்யக்கூடும்.”

நிதியப் பகுப்பாய்வாளர்கள் பலமுறை தன்னெழுச்சியான வேலைநிறுத்தங்கள் தொழிற்சங்கங்கள் தொழிலாளர் போராட்டங்களை தென்னாபிரிக்காவில் வங்கியாளர்களின் இலாபங்களுக்காக அடக்குவதில் போதிய திறன் அற்று உள்ளன என்று கவலைப்படுகின்றனர். “NUM பகிரங்கமாக அமைதி வேண்டும் எனக் குரல் கொடுக்கிறது, ஆனால் உள்ளூர நாங்கள் நினைக்கிறோம் அது தன் நிலையில் இன்னும் அரிப்பு குறித்து பீதி அடைந்துள்ளது என்று. ... இன்னும் உள்ளூர் குழு உறுப்பினர்கள் மீது அதன் கட்டுப்பாடு தெளிவற்றது என” என்றார் சுரங்கத் தொழில் பகுப்பாய்வாளர் பீட்டர் அட்டர்ட் மோன்டல்டோ.

“மெடுப்பி மின்சார நிலையக் கட்டிடத்தில் வேலைநிறுத்தங்கள் தொற்றிப் படர்கின்றன” என்று மோன்டல்டோ தொடர்ந்து கூறினார்: “பரந்த பொருளாதாரத்தில் தொற்று என்பது இப்பொழுது இடராக உள்ளது; கடந்த ஆண்டைவிட; ஏனெனில் ஊதியப் பேச்சுக்கள் சுற்று இப்பொழுது உள்ளது. பொலிசார் மீது நம்பிக்கையற்ற தன்மை மிக உயர்ந்து உள்ளது, ஏனெனில் கடந்த ஆண்டு மாரிக்கான சோகம் குறித்த ஆணையத்தில் இருந்து வரும் சான்றுகள் அதைத்தான் தெரிவிக்கின்றன.... எனவே எங்கள் கருத்தில் இது ஒரு தொடக்கம்தான்.”

தென்னாபிரிக்க முதலாளித்துவம் வர்க்க மோதலை எதிர்பார்த்து, வெற்றுத்தன “ஜனநாயக” வனப்புரையின் கீழ் சுரங்கத் தொழிலாளர்கள் மீது இன்னும் கூடுதலான வன்முறை, ஒடுக்குமுறை அதிகாரங்களை திணிக்க இழிந்த முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது,.

அரச பாதுகாப்பு மந்திரி சியாபோங்கா சிவெலே கூறினார்: “பாதுகாப்பு தொகுப்பு முழுவதும் அதன் திறனை இந்த இழிந்த நிலையின் மீது குவிப்புக் காட்டுகிறது. இப்பொழுது எங்களிடம் ஒரு திட்டம் உள்ளது; ஜனநாயக அரசின் முழுத் திறமையையும் பயன்படுத்தி, எங்கள் உரிமைகள் சட்டத்தை குறைமதிப்புக்கு உட்படுத்துபவர்களை அடையாளம் கண்டு, விரைவில் குற்றச்சாட்டுக்களை சுமத்தி தடுத்து, கைது செய்வோம்—யார் வன்முறைச் செயல்களில் ஈடுபட்டாலும்.”