தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Thousands join protests to support victimised Maruti Suzuki workers இந்தியா: பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்துக் கொண்டனர்By Arun
Kumar use this version to print | Send feedback ஹரியானாவின் மானேசரில் உள்ள கார் ஒருங்கிணைப்பு தொழிற்சாலையில் பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுக்கு ஆதரவாக பிப்ரவரி 5 அன்று இந்தியா முழுவதும் நடத்தப்பட்ட போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் கலந்துக்கொண்டனர். காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஹரியானா மாநில அரசின் முழுமையான ஆதரவுடன் மாநில காவல்துறை மற்றும் தொழிற்சாலை நிர்வாகத்தால் தொழிலாளர்கள் ஒரு காட்டுமிராண்டித்தனமான தேடுதல் வேட்டைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.
டில்லி, மேற்கு வங்காளம், கர்நாடகா, குஜராத், மஹாராஷ்டிரா, தமிழ் நாடு, புதுச்சேரி, ராஜஸ்தான், பஞ்சாப், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம், பீகார் மற்றும் ஹரியானா உள்பட 15 மாநிலங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மானேசர் தொழிற்சாலையில் MSI தொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சுயாதீனமான தொழிற்சங்கம், மாருதி சுஜூகி தொழிலாளர் சங்கத்தினால் (MSWU) விடுக்கப்பட்ட அழைப்பின் பேரில் பிப்ரவரி 5 "அகில இந்திய போராட்ட நாளாக" அனுசரிக்கப்பட்டது. தேர்தெடுக்கப்பட்ட அனைத்து MSWU தலைமை நிர்வாகிகள் உள்ளிட்ட 150 சிறையிலடைக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களுடன் ஜனவரி 24 அன்று கைது செய்யப்பட்ட (பத்திரிகையாளர்களுக்கு விளக்கம் அளிக்க காத்துக் கொண்டிருந்தவர்) இடைக்கால செயற்குழு உறுப்பினர் இமான் கானையும் உடனடியாக விடுதலை செய்ய கோரினார்கள். தொழிலாளர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு தொல்லை கொடுத்தல் மற்றும் காவல்துறை கைதுகள் ஆகியவற்றை ஒரு முடிவுக்கு கொண்டுவரவும் மற்றும் 546 நிரந்தர மற்றும் கடந்த கோடையில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஏறக்குறைய 2,000 ஒப்பந்த தொழிலாளர்களையும் மீண்டும் பணியில் சேர்ப்பதற்கும் அவர்கள் கோரி வருகிறார்கள். ஜூலை 18 அன்று நிர்வாகத்தால் தூண்டிவிடப்பட்ட தொழிலாளர்கள் மற்றும் நிர்வாக பணியாளர்களுக்கு இடையேயான ஒரு மோதல் அவர்களின் அவல நிலை குறித்து பரிவுணர்வு கொண்டவராக தொழிலாளர்களால் கருதப்பட்ட மேலாளரின் மரணம், அது மானேசர் தொழிற்சாலையில் போர்குணமிக்க தொழிலாளர்களுக்கு எதிராக நிர்வாகத்தின் முழுத்தாக்குதலுக்கு பயன்படுத்த தமது கைகளில் எடுக்கப்பட்டுள்ளது. நிர்வாகத்தின் தாக்குதல்களுக்கு ஹரியானா காங்கிரஸ் அரசாங்கத்தின் முழு ஆதரவு உள்ளது. நிர்வாகத்தால் அளிக்கப்பட்ட பட்டியல் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையாக முக்கியமாக ஜூலை கடைசியில் மற்றும் ஆகஸ்டின் ஆரம்பத்தில் 150 தொழிலாளர்களை கைது செய்தது மேலும் அவர்கள் மீது கடுமையான கிரிமினல் குற்றச்சாட்டுக்களை சுமத்தியது. ஜூலை 18 சம்பவத்தில் அவர்களை தொடர்புபடுத்தி ஒப்புதல் வாக்குமூலங்கள் பெறும் நோக்கத்தோடு சிறையிலடைக்கப்பட்ட தொழிலாளர்கள் கொடூரமான சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்படுத்தப்பட்டார்கள். உண்மையில், அவர்களில் பெரும்பாலானோர் அன்றைய தினம் தொழிற்சாலையிலேயே இல்லை. பிப்ரவரி 5 இல் நடைபெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றது, பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் அவல நிலை குறித்து தொழிலாள வர்க்கத்தினரிடையே உள்ள கவலை மற்றும் இந்தியா முழுவதும் மற்றும் மாருதி சுஜூகி இந்தியா (MSI) மற்றும் அதன் துணை நிறுவனங்கள் போன்ற நாடுகடந்த தொழிற்சாலைகளில் நிலவும் அடிமைக்கூலி நிலைமைகளை எதிர்ப்பதற்கு இலக்காக கொள்ளப்பட்டுள்ளோம் என்பதற்கு ஒரு அங்கீகாரமாகும். உலகளாவிய மந்த நிலையின் பாதிப்பினால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைந்து வரும் நிலையில், பெருவணிகம் தொழிலாளர் வர்க்கத்தின் சுரண்டுதலை தீவிரப்படுத்த தீர்மானித்துள்ளது. அது பெருமளவிலான சமூக செலவு குறைப்பு மேற்கொண்டு அரசுதுறை நிறுவனங்களை விற்றுவிடவும், ஆலை மூடல்கள் மற்றும் கதவடைப்பிற்கான தடைகளை அகற்றவும் தள்ளப்படுகிறது. இந்த கோரிக்கைகள் நிதி அமைச்சர் பழனியப்பன் சிதம்பரம், மற்றும் திட்ட ஆணைக்குழு துணைத் தலைவர் மான்டேக் சிங் அலுவாலியா ஆகியோர் வெளியிட்ட சமீபத்திய அறிக்கைகளில் எதிரொலித்தது. அதேசமயத்தில், இந்த நிதி ஆண்டில் பில்லியன் கணக்கில் செலவுகளை குறைக்க சிதம்பரம் சூளுரைத்துள்ளார். அலுவாலியா எரிபொருள், உணவு மற்றும் உரம் ஆகியவற்றுக்கான விலையில் மானியங்களை “சுருக்குவதற்கு” வலியுறுத்துகிறார். மானேசர் தொழிலாளர்களின் தொடர்ச்சியான பாதிப்பு மற்றும் தொந்தரவுகளுக்கு குர்கான்-மானேசர் பகுதியிலிருக்கும் ஹிந்த் மஜ்தூர் சபா (HMS), அனைத்து இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC), இந்திய தொழிற்சங்க மையம் (CITU) ஆகிய தலைமை சங்க கூட்டமைப்புக்களே முதன்மையான காரணமாகின்றன. கடைசி இரண்டு அமைப்புகளும் முறையே இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI), மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (Marxist) அல்லது சிபிஎம் ஆகிய இரண்டு பிரதான ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சிகளின் தொழிற்சங்க அமைப்புகள் ஆகும். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக MSI தொழிலாளர்களின் போர்க்குணமிக்க போராட்டத்தினால், தொழிலாளர்கள் "சமாதானத்தை" ஏற்க அதாவது, நிர்வாகத்தின் நிபந்தனைகளை ஏற்பது மற்றும் பெருவணிக காங்கிரஸ் கட்சி மாநில அரசாங்கத்திடம் அவர்கள் சார்பாக தலையிட முறையிடவும் AITUC மற்றும் CITU இரண்டும் தொடர்ந்து தலையிட்டு வற்புறுத்தி வந்தன. நிர்வாகம் தன்னுடைய தற்போதைய தேடுதல் வேட்டையை தொழிலாளர்களுக்கு எதிராக கடந்த ஜூலையில் ஆரம்பித்த போது, இந்த சங்க கூட்டமைப்புகள் MSI தொழிலாளர்களை பாதுகாக்க எந்த ஒரு தொழிற்சாலை நடவடிக்கையையும் நடத்த மறுத்துவிட்டன. பதிலாக, மாருதி சுஜூகி தொழிலாளர் போராட்டங்களின்போது தொழிற்சங்க நிர்வாகிகள் அவ்வப்போது தம்மை அங்கு காட்டிக்கொண்டதுடன், அங்கு "ஒற்றுமை" பற்றிய வெற்று வாக்குறுதிகளின் வெற்றுப்பேச்சுக்களாகவே இருந்தன. ஸ்ராலினிச தொழிற்சங்கங்களின் காட்டிக்கொடுக்கும் பங்கு அவை இணைந்துள்ள கட்சிகளின் முதலாளித்துவ ஆதரவு அரசியலுடன் பிணைந்துள்ளது. முதலாளித்துவத்தின் புதிய தாராளவாத "சீர்திருத்தங்களை" இரக்கமற்ற முறையில் தொடர்ந்த காங்கிரஸ் கட்சி தலைமையிலான அரசாங்கங்களை டில்லியில் கடந்த இரண்டு தசாப்தங்களின் கால கட்டத்தில், CPI மற்றும் CPM தொடர்ந்து ஆதரித்து வந்துள்ளன. அவர்களின் ஆட்சி நடைபெற்ற மேற்கு வங்காளம், கேரளா மற்றும் திரிபுரா ஆகியவற்றில் அவற்றை நடைமுறைப்படுத்தும்போது "முதலீட்டாளர் ஆதரவு" கொள்கைகளாக அவர்களாகவே விளக்கம் கொடுக்கிறார்கள். மாவோவாத மற்றும் ஏனைய போலி இடது அரசியல் அமைப்புகளுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், தாராளவாத மனித உரிமை அமைப்புகள், மகளிர் குழுக்கள் மற்றும் மாணவர் அமைப்புகள் போன்றவை பிப்ரவரி 5 அன்று நடந்த போராட்டங்களில் பங்கெடுத்துக் கொண்டன. இந்த அமைப்புகளின் அரசியல் நிலைநோக்கு, ஸ்ராலினிச CPI மற்றும் CPM போன்றவற்றிலிருந்து அடிப்படையில் வேறுபட்டதல்ல. கடைசியாக, அதிகாரபூர்வ தொழிற்சங்க அமைப்புகள் மற்றும் இந்திய அரசியல் ஆளும்வர்க்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடன் இன்னும் போர்க்குணமிக்க மற்றும் வாயளவிலான போராட்டங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்கள். அடிமைக் கூலி நிலை மற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறைக்கு எதிராக மற்றும் ஒரு தொழிலாளர்களின் அரசாங்கத்திற்கான தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான தொழிற்துறை மற்றும் அரசியல் அணிதிரளலுக்கான போராட்டத்துடன், பாதிக்கப்பட்ட மாருதி சுஜூகி தொழிலாளர்களின் போராட்டத்தை இணைக்க அனைவரும் எதிர்க்கிறார்கள். டில்லியில் பிப்ரவரி 5ந் தேதி நடைபெற்ற ஆதரவுப் பேரணியில் இன்குலாபி மஜ்தூர் கேந்திராவிலிருந்து (Revolutionary Workers Centre -புரட்சிகர தொழிலாளர்கள் மையம்) ஒரு பேச்சாளர் உரையாற்றும் போது கூறியதாவது தொழிலாளர்கள் போராடவேண்டும், தேவைப்பட்டால் அரசியலமைப்பால் உறுதியளிக்கப்பட்ட உரிமைகளைப் பெற சிறைகளை நிரப்ப வேண்டும். மாவோவாதிகளுடன் இணைந்த பிகுல் மஜ்தூர் தஸ்தாவின் (BMD) மற்றொரு பேச்சாளர் தமது உரையில், மத்திய தொழிற்சங்கங்களைப் பற்றி விமர்சிக்கும் போது தொழிற்சங்கங்களை அவர்களுடன் சேர்ந்துக் கொள்ள நிர்பந்தப்படுத்த நகரத்தின் ஒரு மைய பகுதியில் “'முற்றுகை” (“Occupy”) மாதிரியான போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். பெருவணிக அரசியல்வாதிகளிடம் ஆதரவிற்காக முறையிட MSI தொழிலாளர்களை BMD யும் ஊக்கப்படுத்தியது. பிப்ரவரி 5 போராட்டம் ஒன்றில் BMD பேச்சாளர் சுபாஷ், "நாங்கள் ஹரியானா மாநில முதலமைச்சர் உட்பட அனைத்து 15 மாநில முதலமைச்சர்களிடமும் கோரிக்கை மனு அளித்துள்ளோம்" என தற்பெருமை பேசினார். தென்னிந்திய மாநிலம் தமிழ் நாட்டின் தலைநகரம் சென்னையில், போர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடந்த ஒரு எதிர்ப்பு பேரணியில், WSWS இன் செய்தியாளர்கள் குழு கலந்துகொண்டது. மாவோயிச புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியால் (DWF) போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பேரணியில் சுமார் 50 தொழிலாளர்கள் கலந்துக் கொண்டார்கள். MSWU இன் இடைக்கால செயற் குழுவைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் அவர்களிடையே உரை நிகழ்த்தினார். "மாருதி சுஜூகி மற்றும் இந்திய அதிகார அமைப்புகளால் பாதிக்கப்பட்ட கார் தயாரிப்பு தொழிற்சாலை தொழிலாளர்களை பாதுகாப்போம்" என தலைப்பிடப்பட்ட ஒரு அறிக்கையின் நகல்களை WSWS ஆதரவாளர்கள் விநியோகித்தார்கள். பேரணி குறித்த புகைப்படங்கள் ஏன் எடுக்கப்படுகிறது என ஒரு முன்னணி மாவோயிச அமைப்பாளர் WSWS குழுவிடமிருந்து தெரிந்துக் கொள்ள விரும்பினார். மாருதி சுஜூகி தொழிலாளர்களின் போராட்டங்கள் முழுவதையும் பிரத்யேகமாக பாதுகாத்து மற்றும் கவனம் செலுத்திக்கொண்டிருக்கும் WSWS இற்கு தொல்லைக் கொடுப்பதற்கு பதிலாக எதிர்ப்பு பேரணி முழுவதையும் படம் பிடித்துக் கொண்டிருந்த போலீஸிற்கு ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என கேட்கப்பட்டபோது அவர் பின்வாங்கினார். CPM, CPI மற்றும் மாவோவாதிகளின் செல்வாக்கின் கீழ், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான பலத்தை அணித்திரட்டும் நோக்கம் இல்லாமல், ஆனால் காங்கிரஸ் கட்சி மற்றும் ஹரியானா அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கு ஒரு எதிர்ப்பு பிரச்சாரத்திற்கு MSWU தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது. பிப்ரவரி 5 அன்று நடந்த போராட்டங்கள் குறித்து, அரசியல்வாதிகளிடமிருந்து "நாங்கள் வெற்று வாக்குறுதிகளைத் தான் காண முடிந்தது." என்பதை MSWU அதன் அறிக்கையில் ஒப்புக்கொள்கிறது. அதில், பரந்த அளவிளான போராட்டங்களை தொடர்ந்து "தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் பிரதிநிதிகளிடமும் மற்றும் ஹரியானா மாநில முதலமைச்சர் புபிந்தர் ஹூடாவிடமும் தூதுக்குழுக்கள், நினைவுக்குறிப்புக்கள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டது பற்றி அது பாராட்டிக்கொண்டது." |
|
|