தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் France: Three die in fire at Roma squat பிரான்ஸ்: ரோமாக்கள் வசிப்பிடத்தில் தீ, மூவர் பலி
By Antoine Lerougetel use this version to print | Send feedback மூன்று ரோமாக்கள், இரண்டு பெண்களும் ஒரு 12 வயதான குழந்தையும் மத்திய பிரான்சில் லியோனில் ஒரு கைவிடப்பட்ட ஆலையில் தீவிபத்தில் செவ்வாய்க்கிழமை இறந்துள்ளனர். கிட்டத்தட்ட 300 ரோமாக்கள் கட்டிடத்தின் அலுவலகங்களில் உட்கார்ந்திருந்தனர். தகவல்களின்படி, மேலும் மூன்று அல்லது நான்கு இறப்புக்கள் இருக்கலாம். தப்பிப் பிழைத்தவர்கள் உள்ளூர் உடற்பயிற்சி நிலையம் ஒன்றிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த இறப்புக்கள் சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் கொள்கையான ரோமாக்களை அவர்களுடைய முகாம்களில் இருந்து வேட்டையாடி துரத்துவது என்பதின் நேரடி விளைவாகும்; இது ஆர்வத்துடனும் மிருகத்தனமாகவும் உள்துறை மந்திரி மானுவல் வால்ஸால், நீதித்துறை மந்திரி கிறிஸ்டீன் ரோபிரா ஆகியோரின் உதவியுடன் நடத்தப்படுகிறது. செய்தி ஊடகங்கள் அவ்விடத்தில் இருந்த சில ரோமாக்களை மேற்கோளிட்டு, பயன்படுத்தப்பட்ட ஒரு மெழுகுவர்த்தி தீ விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என்று கூறுகின்றன. ரோமாக்களுக்கு ஆதரவுக் குழுவான ரோம்யூரப்பின் (Romeurope) நிறுவனர் Laurent el-Ghozi ஒரு குற்றச் செயலுக்கான வாய்ப்பையும் ஒதுக்கிவிடவில்லை; “இது ஏன் மீண்டும் நடக்காது என்பதற்கு காரணம் ஏதும் இல்லை” என்றார். அரசாங்கத்தைத்தான் அவர் இறப்புக்களுக்கு குற்றம் சாட்டினார்: “இது அரசாங்கத்தின் முட்டாள்தனமான முடிவற்ற வெளியேற்றல் கொள்கையினால், ரோமாக்கள் வசிக்கும் இடங்களில் இந்த ஆண்டில் மட்டும் ஏற்பட்ட 12வது தீவிபத்தாகும்.” ரோமாக் குழுக்களுள் பல குழந்தைகளும் கர்ப்பணி மகளிரும் உள்ளனர். இது அதிகாரிகளை மின்சாரத்தை வெட்டுதல் போன்றவற்றைச் செய்வதை தடுக்கவில்லை. இதையொட்டி அங்கு வசிப்பவர்கள் மெழுகு வர்த்தியைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். அவர்கள் மிக இழிந்த நிலைக்கு வசிக்கத் தள்ளப்பட்டனர்; ஏனெனில் நீர் வசதியும் வெட்டப்பட்டுவிட்டது; குப்பை சேகரித்தலும் நடைபெறுவதில்லை. Rhône பிராந்திய போலீஸ் தலைமையகம் (préfecture) ரோமாக்கள் கொண்டிருந்த ஆபத்தின் தன்மையை முற்றிலும் அறிந்திருந்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு நபர் கட்டிடத்தின் ஒரு பகுதி விழுந்ததை அடுத்து இறந்துள்ளார். வேய்ஸ் புறநகர்ப்பகுதியில் அவர்கள் முன்பு தங்கியிருந்த இடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டபின்தான் இந்த அலுவலகங்களை அவர்கள் ஆக்கிரமித்தனர். இனவெறி எதிர்ப்புத் தீவிர செயல்பாட்டாளர் ஜோன் பிலிப், Rhône பிராந்திய போலீஸ் தலைமையகத்தை மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளுக்கு குற்றம்சாட்டினார். “மருத்துவ, சமூக, பாதுகாப்பு கண்டுபிடிப்புக்கள் செய்யப்பட வேண்டும் என்னும் விதிகளைக் கொண்ட சுற்றறிக்கையை அது செயல்படுத்த மறுக்கிறது; இதன் ஒரே விடையிறுப்பு அமர்விடங்களில் இருந்தும் முகாம்களிடம் இருந்தும் வெளியேற்றுவதுதான்; ஒவ்வொரு முறையும் நிலைமையை இன்னும் மோசமாக்குகிறது.” வெளியேற்றப்பட்டால், அதிகாரிகள் போதுமான மாற்றீட்டு இடவசதி கொடுக்கப்படவேண்டும் என்று சட்டம் கூறுகிறது. உள்துறை அமைச்சகத்தின் தடைகள் ஏதுமின்றி, இது வாடிக்கையாக புறக்கணிக்கப்படுகிறது. சோகம் நடந்த இடத்தில் வால்ஸ் பாசாங்குத்தனமாக “ஆழ்ந்த வருத்த உணர்வை” வெளிப்படுத்தினார்; ஆனால் ரோமாக்களைத் துன்புறுத்துவது குறித்து அவர் மன உளைச்சலைக் கொள்ளவில்லை. “இப்படி உட்காருபவர்கள், எழுப்பப்படும் முகாம்களில் இருப்பவர்கள், எங்கு இருந்தாலும் கலைக்கப்பட வேண்டும், இங்கும், பிற இடங்களிலும், இது உண்மையான ஆபத்தாகும்” என அவர் அறிவித்தார். முந்தைய வெளியேற்றங்களும் மாற்றீட்டு இடம் கொடுக்கப்படால் நடந்துள்ளதால், இக்குழு ஆலை அலுவலகங்களில் புகலிடம் நாடும் கட்டாயம் ஏற்பட்டது என்பதை நன்கு அறிந்த நீதித்துறை மந்திரி கிறிஸ்டீன் ரோபிரா, “கௌரவமான, திறமையான தீர்வு இதற்குத் தேவை” என்றார். Andatu என அழைக்கப்படும் ஒரு போலித்தனமான ஒருங்கிணைக்கும் திட்டம், தேர்ந்தெடுக்கப்படும் ரோமாக்களுக்கு வீடுகள் கொடுத்து சட்ட உரிமையை அளிப்பது, வீடில்லாதவர்களுக்கு வீடுகள் கண்டுபிடித்துத் தரும் பொறுப்பை préfecture க்கு கொடுக்கிறது; அதையொட்டி சட்டம் செயல்படுத்தப்படவில்லை என்று கூறப்படுவது தவிர்க்கப்படலாம். ஜோன் பிலிப் கூறினார்: “தேர்ந்தெடுக்கப்படுவதற்கான நிபந்தனைகள் என்ன என்று எவருக்கும் தெரியாது. மேலும், இது சட்டத்தை செயல்படுத்த தவிர்ப்பதற்குத்தான் பயன்படுத்தப்படுகிறது.” ரோமாக்களை துன்புறுத்துவது தீவிரமாதல் என்பது பிரான்சில் முன்னாள் கன்சர்வேடிவ் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியால் தொடக்கப்பட்டது. அவருடைய இழிந்த ஜூன் 30, 2010 கிரநோபல் உரை ரோமாக்களை “சந்தேகத்திகுரிய, முறையற்ற சூழலில் வசிக்கும் வெளிநாட்டினர்” என விவரித்தார். அவர், உள்துறை மந்திரியை “அனுமதியற்ற நாடோடி குடியேற்றங்களுக்கு முடிவு கட்டுமாறும், இந்த சட்டமற்ற பகுதிகள், பிரான்சில் பொறுத்துக் கொள்ள இயலாதவை” என்று கேட்டுக் கொண்டார். அந்த நேரத்தில் நீதித்துறை, அடிப்படை உரிமைகள் மற்றும் குடியுரிமைக்கு ஐரோப்பிய ஆணையராக இருந்த விவியன் ரெடிங், சார்க்கோசி அரசாங்கம் “இன, பூர்வீக வழி அடிப்படையில் பாகுபாட்டைக் காட்டுகிறது” என்று குற்றம் சாட்டினார். உட்குறிப்பாக பிரெஞ்சு அரசாங்கத்தின் செயல்களை இரண்டாம் உலகப் போரின் போது நாஜிக்களின் செயல்களோடு ஒப்பிட்டார். பின்னர் அவர் தனது நிலைப்பாட்டில் இருந்து பின்வாங்கியதும் சார்க்கோசி இந்த “இழிவை” தொடர முடிந்தது, ஹாலண்ட் அரசாங்கமும் தொடர்கிறது. தன்னுடைய தேர்தல் சார்க்கோசி ரோமாக்களைத் துன்புறுத்தியது தன்னாலும் தொடரப்படும் என்பதை ஹாலண்ட் தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது தெளிவுபடுத்தியிருந்தார். பெப்ருவரி 12 அன்று Canal Plus தொலைக்காட்சிப் பேட்டியில் அவர் ரோமா ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் பிரான்சில் இருப்பதற்கு ஒரு தீர்வு, “முகாம்களை ஏற்படுத்துவது.... அவர்களுக்கு இருக்க இடம் அளிப்பது... எங்கு வேண்டுமானாலும் அமர்வது என்று இம்மக்கள் செய்வதைத் தவிர்ப்பது, அதையொட்டி இவர்கள் ருமேனியாவிற்கு திரும்பிச் செல்ல முடியும், அதன் பின் பிரான்சிற்கு வரக்கூடாது.” ரோமாக்கள் சுற்றி வளைக்கப்பட்டனர், ஏதோவென ஏற்படுத்தியிருந்த முகாம்கள் உடைக்கப்பட்டன, ருமேனியாவிற்கு அவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். இந்த “இழிவிற்கு” “ஐரோப்பிய விதிகள்” வகுக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். உண்மையில் ரோமாக்களைத் துன்புறுத்துதல் என்பது ஐரோப்பா முழுவதும் பெருகும் ஒரு நிகழ்வாக உள்ளது. மார்ச் 15 அன்று வால்ஸ், “எப்பொழும் இல்லாத அளவிற்கு, முகாம்களை அகற்றுவது தேவை, அது தொடரும்” என அறிவித்தபோது பூசல் ஏற்பட்டது. ரோமாக்களை இழிவுபடுத்தும் வகையில் அவர் “முகாம்களை ஆக்கிரமித்துள்ளவர்கள் நம் நாட்டுடன் பண்பாட்டுக் காரணங்களுக்காக ஒருங்கிணைய விரும்பவில்லை, ஏனெனில் அவர்கள் பிச்சையெடுத்தல், விபச்சாரம் ஆகியவற்றில் ஈடுபடுத்தப்பட கும்பல்களின் கட்டுப்பாட்டில் உள்ளனர். ரோமாக்களின் குரல் (Voix de Roms) என்னும் அமைப்பு இனப் பாகுபாடு காட்டுவது குறித்து குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்படும் என அச்சுறுத்தியது. இத்தகைய அப்பட்டமான இனவெறித்தனம், கண்காணிப்புக் குழுக்களை, ரோமாக்கள் முகாம்களுக்கு எதிராக எதையும் பொருட்படுத்தாமல் நடக்க ஊக்கம் கொடுத்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் 27, கண்காணிப்புக் குழுவினர் சோசலிஸ்ட் கட்சி குழுக்களின் ஆதரவுடன் மார்சேயில் பொலிஸ் கண்முன்பே வெளியேற்றங்களை தொடக்கி நாடுமுழுவதும் விரட்டும் வன்முறை ரோமாக்களுடைய முகாம்கள் மீது படரவிடப்பட்டது. |
|
|