World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் SEP announces candidates for 2013 Australian election 2013 ஆஸ்திரேலிய தேர்தலுக்கு சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை அறிவிக்கிறது
11 May 2013 செப்டம்பர் 14, 2013 ல் நடக்க இருக்கும் தேர்தலில் எங்கள் வேட்பாளார்களை அறிவிப்பதில் சோசலிச சமத்துவக் கட்சி பெருமிதம் கொள்கிறது. ஐந்து மாநிலங்களில் —நியூ சௌத் வேல்ஸ், விக்டோரியா, தெற்கு ஆஸ்திரேலியா, குவீன்ஸ்லாந்து மற்றும் மேற்கு ஆஸ்திரேலியாவில்— மொத்தம் 10 சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் செனட்டிற்காக நிறுத்தி வைக்கப்படுவர். ஒவ்வொரு மாநிலத்திலும் இரண்டு வேட்பாளர்களை நிறுத்தி வைப்பதில் கட்சிக்கு வாக்குத் தாளில் “வரிசைக்கு மேலே” (“above-the-line”) குழு என்ற இடத்தை அனுமதிக்கிறது. இது இந்த மாநிலங்களில் இருக்கும் ஒவ்வொரு வாக்காளருக்கும் நேரடியாக சோசலிச சமத்துவக் கட்சிக்கு வாக்களிக்க உதவும். சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்கள் ஒரு பரந்த, சர்வதேச போர் எதிர்ப்பு இயக்கத்தை தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடையே ஒரு சோசலிச, சர்வதேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கட்டமைப்பதற்கான போராட்டத்திற்கு தலைமை தாங்குவர். ஆஸ்திரேலியாவிலும், ஆசிய-பசிபிக் பகுதி முழுவதும் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சி ஆதரவாளர்களையும், WSWS வாசகர்களையும் இப்பிரச்சாரத்தை பரந்த அளவிற்குக் கொண்டுவர உதவுமாறும், எமது அறிக்கைகளை வினியோகிப்பதிலும், கூட்டங்களை நடத்துவதிலும் நம் வேட்பாளர்களின் பிற கூட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் உதவுமாறும் வலியுறுத்துகிறோம். 65 வயதான நிக் பீம்ஸ், சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய செயலாளர் ஆவார். இதன் முன்னோடி அமைப்பான சோசலிச தொழிலாளர் கழகத்தின் (SLL) நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்தார். மார்க்சிச அரசியல் பொருளாதாரத்தில் முக்கிய தேர்ச்சி பெற்றவர் என நன்கு அறியப்பட்டுள்ள நிக், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவிலும் உறுப்பினர் ஆவார்; அவருடைய பொருளாதாரம், அரசியல், வரலாறு பற்றிய கட்டுரைகள் ஒரு பரந்த சர்வதேச வாசகர்களால் படிக்கப்படுகின்றன. அவர் சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்காக உலகந் தழுவிய உற்பத்தி முறையின் முக்கியத்துவம் குறித்து பெரும் பகுப்பாய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ளார்; அமெரிக்கா, ஐரோப்பா, முன்னாள் சோவியத் ஒன்றியம், ஆசியா இன்னும் ஆஸ்திரேலியா முழுவதும் பயணம் செய்து உரையாற்றியுள்ளார். பிரித்தானியாவில் பிறந்து, டஸ்மானியாவில் வளர்ந்த இவர், சிட்னியில் வசிக்கிறார், இரண்டு வயதிற்கு வந்த குழந்தைகளின் தந்தை ஆவார். 25 வயதான ஜாக் ஹாம்பைட்ஸ் சர்வதேச சமூக சமத்துவத்திற்கான இளைஞர்கள், மாணவர்கள் அமைப்பின் (IYSSE) முக்கிய உறுப்பினர் ஆவார். தென்னாபிரிக்காவில் ஜோஹன்ஸ்பேர்க்கில் இவர் பிறந்தார், இவருடைய குடும்பம் ஆஸ்திரேலியாவிற்கு 2000ம் ஆண்டில் குடியேறியது. ஜாக் 2007ல் SEP உடன் New South Wales பல்கலைக்கழகத்தில் தொடர்பு கொண்டார்; அமெரிக்க தலைமையிலான ஈராக், ஆப்கானிஸ்தானிய படையெடுப்புக்களின் அடித்தளத்தின் காரணங்கள் பற்றிய இதன் பகுப்பாய்வினால் ஈர்க்கப்பட்டார்; அதேபோல் கட்சியின் மார்க்சிச மரபியம் மற்றும் கொள்கைக்கான போராட்டத்தினாலும் ஈர்க்கப்பட்டார். 2008ல் சோசலிச சமத்துவக் கட்சியில் சேர்ந்த இவர் தன்னுடைய படிப்புக்களை New South Wales பல்கலைக்கழகத்தில் தொடர்கிறார். 33 வயதான பாட்ரிக் ஓ’கோனோர் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய குழு உறுப்பினர் ஆவார்; உலக சோசலிச வலைத் தளத்திற்கு சர்வதேச மற்றும் ஆஸ்திரேலிய அரசியல் பிரச்சினைகள் குறித்து வாடிக்கையாக கட்டுரைகளை எழுதி வருகிறார். அயர்லாந்தின் டப்ளினில் பிறந்த பாட்ரிக் தன்னுடைய குடும்பத்துடன் 1989 ஆஸ்திரேலியாவில் குடியேறினார். Perth உயர்நிலைப் பள்ளியில் படித்த இவர், 2002ல் மேற்கு ஆஸ்திரேலிய பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் இளங்கலை (சிறப்பு) பட்டத்தை பெற்றார். 2003ம் ஆண்டு சோசலிச சமத்துவக் கட்சியில் இவர் சேர்ந்தார். 2007, 2010 கூட்டாட்சித் தேர்தல்களில் இவர் கட்சியை பிரதிநிதித்துப்படுத்தினார். 2012ல் மெல்போர்ன் மாநில தொகுதியில் துணைத்தேர்தலிலும் நின்றார். விக்டோரியாவில் கட்சிப் பணிகளில் இவர் முக்கியப் பங்கைக் கொண்டுள்ளார். ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் ஆசிய-பசிபிக்கில் அமெரிக்க, ஆஸ்திரேலிய இராணுவ வாதத்திற்கு எதிராக நிறையப் பேசவும் எழுதவும் செய்துள்ளார். அதேபோல் ஆஸ்திரேலியாவின் பழங்குடி இளைஞர்கள், அகிதகளுக்கு எதிரான விசாரணைகளை எதிர்த்தும் எழுதியுள்ளார், பேசியுள்ளார். தொழில்துறை மற்றும் தொழிலாள வர்க்க சமூகப் போராட்டங்கள் குறித்தும் எழுதியுள்ளார், பேசியுள்ளார். இவருக்கு ஒரு குழந்தை உள்ளது. 41 வயதான டானியா பாப்டிஸ்ட் மெல்போர்னில் பிறந்து வளர்ந்தவர்; சட்ட அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். ஈராக்கியப் போரினால் அரசியலில் ஈடுபாடு கொண்ட டானியா 2004 கூட்டாட்சித் தேர்தலை ஒட்டி உலக சோசலிச வலைத் தளத்தை படிக்கத் தொடங்கினார்; 2006ல் சோசலிச சமத்துவ கட்சியில் சேர்வதற்கு விண்ணப்பித்தார். 2007 கூட்டாட்சி தேர்தலில் டானியா SEP உடைய விக்டோரியா செனட் வேட்பாளர்களில் ஒருவராக நின்றார். 2010ல் அவர் மேல்போர்ன் மேற்கு புறநகர தொகுதியான கெல்லிபிராண்டில் கட்சியை பிரதிநிதித்துப்படுத்தினார். 60 வயதான மைக் ஹெட், சோசலிச சமத்துவ கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆவார்; இவர் WSWS நிருபர் என்பதுடன், மேற்கு சிட்னி பல்கலைக்கழகத்தில் சட்ட விரிவுரையாளராகவும் உள்ளார். இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளன. WSWS க்கு வாடிக்கையாக மைக் ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல் பற்றி, “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் போலிக் காரணத்தைக் காட்டி நடத்தப்படுவது குறித்து எழுதுகிறார்; மேலும் பிற அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகள் குறித்தும் எழுதுகிறார். SLL/SEP வேட்பாளராக பல தேர்தல்களில் அவர் நின்றுள்ளார்; மிகச் சமீபத்தில் 2010 புதிய சௌத் வேல்ஸ் Fowler தொகுதியில் கட்சிக்காக நின்றார். கடந்த பல ஆண்டுகளாக அவர் பிரிஸ்பேன் பகுதியில் முறையாக உழைத்து, சோசலிச சமத்துவக் கட்சியின் செல்வாக்கை அங்கு தொழிலாளர்கள், இளைஞர்களிடையே கட்டமைத்து வருகிறார். 49 வயதான காப்ரியலா ஜபாலா 1997ல் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் உறுப்பினராக இருந்து வருகிறார். 1970ம் ஆண்டு உருகுவேயில் இருந்து ஆஸ்திரேலியவில் குடியேறிய இவர் சிட்னியில் மாக்குவைர் பல்கலைக் கழகத்தில் பயின்றார்; அங்கு ஆங்கிலத்தில் இளங்கலை (சிறப்பு)ப் பட்டத்தைப் பெற்றார் அவருக்கு மூன்று குழந்தைகள் உண்டு: இவர் ஆங்கில இலக்கிய பட்டம் படிக்கும் மாணவர்களுக்கு ஆசிரிய ஆலோசகராக உள்ளார். 2010 தேர்தலில் புதிய சௌத் வேல்ஸில் இருந்து சோசலிச சமத்துவக் கட்சியின் வேட்பாளராக நின்றார். 43 வயதான ஜேம்ஸ் கோகன், சோசலிச சமத்துவக் கட்சியின் உதவி தேசிய செயலாளர் ஆவார். விக்டோரியா பிராந்தியத்தில் வளர்ந்த இவர், SLL ல்1991ல் சேர்ந்தார், ஈராக்கில் முதலில் அமெரிக்க தலைமையிலான போருக்கு எதிர்ப்பினால் உந்துதல் பெற்ற பின்னர் ஹாக்-கீட்டிங் லேபர் அரசாங்கத்தித்திற்கு எதிர்ப்பையும் ஒட்டி, 2003 இருந்து அவர் WSWS ல் எழுதிவருகிறார். ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான படையெடுப்புக்கள் ஆக்கிரமிப்புக்கள் பற்றியும், விக்கிலீக்ஸ் மீது நடத்தப்படும் அவதூறு வழக்குகள் குறித்தும், கில்லார்ட் அரசாங்கத்தின் அமெரிக்காவின் சீனாவிற்கு எதிரான “ஆசியாவில் முன்னிலை”க்காக அமெரிக்க அரசாங்கத்துடன் பிணைந்து நிற்பதின் உட்குறிப்புக்கள் குறித்தும் உரை நிகழ்த்துகிறார். பல தேர்தல் பிரச்சாரங்களில் இவர் சோசலிச சமத்துவக் கட்சியை பிரதிபலித்துள்ளார்; மிகச் சமீபத்தில் 2010ல் சிட்னியில் கிரேண்லர் தொகுதியில் கூட்டாட்சி தொகுதிக்காவும், 2011 புதிய தெற்கு வேல்ஸ் தேர்தலில் மாரிக்வில்லே தொகுதிக்காவும் நின்றார். 54 வயதான பீட்டர் பைம், ஒரு கட்டிடக்கலை வல்லுனர், கார்த் தொழிலாளி ஒருவருடைய மகன், SLL ல் 1983ல் சேர்ந்தார். மூன்று தசாப்தங்களாக அவர் மெல்போர்ன் பகுதியில் ஒரு சோசலிச முன்னோக்கிற்காக போராடி வருகிறார்; இவற்றைத்தவிர வேலைகளை காக்கும் பிரச்சாரங்கள், கார்த்தயாரிப்புத் தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகள் பற்றியும், கட்டிடத் தொழிலாளர்கள், விமான ஓட்டிகள், ஆசிரியர்களுடைய உரிமைகள் குறித்தும் போராடியுள்ளார். 2010 கூட்டாட்சித் தேர்தலில் பீட்டர் கால்வெல் தொகுதியில் சோசலிச சமத்துவக் கட்சி உறுப்பினராக நின்றார். அங்கு போர்டின் பிராட்மெடோஸ் கார் ஆலை உள்ளது. நவம்பர் 2010ல் அவர் விக்டோரியா தேர்தலில் பிராட்மெடோஸ் தொகுதியில் நின்றார்; பின்னர் பெப்ருவரி 2011ல் ஒரு துணைத்தேர்தலிலும் நின்றார். 63 வயதான பீட்டர் சைமண்ட்ஸ் சோசலிச சமத்துவக் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர் ஆவார்; உலக சோசலிச வலைத் தளத்தின் தேசிய ஆசிரியரும், உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழு உறுப்பனரும் ஆவார். பிரித்தானியாவில் பிறந்த இவர், சிட்னியில் வளர்ந்தார்; SLL ல்1984ம் ஆண்டு மெல்போர்னில் ஒரு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியராக இருந்தபோது சேர்ந்தார். 1987ல் அவர் கட்சியின் முன்னாள் செய்தித்தாளான தொழிலாளர் செய்தியின் செய்தியாளராகவும் இருந்தார். 1998ல் WSWS தொடங்கியதில் இருந்து அவர் தளத்தின் ஆசிய, ஆஸ்திரேலிய, தென் பசிபிக் பகுதிகளில் உள்ள அரசியல், சமூக வளர்ச்சிகளைப் பற்றிய பகுப்பாய்வுகளில் முக்கிய பங்கைக் கொண்டுள்ளார். அமெரிக்க இராணுவத்தின் ஆசிய “முன்னிலை” குறித்து விரிவான மதிப்பீடுகளையும் அவர் எழுதியிருப்பதுடன், அதன் பிராந்தியப் பாதிப்புக் குறித்தும் எழுதி, சர்வதேச தொழிலாள வர்க்கத்திற்கு அது காட்டும் ஆபத்துக்களையும் அம்பலப்படுத்தியுள்ளார். 48 வயதான ஜோ லோபெஸ் பெர்த்தில் பிறந்தார், பால்கா/வெஸ்ட்மின்ஸ்டர் புறநகர்த் தொழிலாள வர்க்கப் பகுதியில் வளர்ந்தார். SLL ல்1984ல் சேர்ந்தார், ஹாக்-கீட்டிங் லேபர் அரசாங்கம் தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கை தரங்கள் மீது நடத்தும் தொலை விளைவுகள் உடைய தாக்குதல்களை எதிர்த்தார். ஷேன்டன் பார்க்கில் உள்ள ராயல் பெர்த் மறுசீரமைப்பு மருத்துவமனையில் செவிலிய உதவியாளராகப் பணிபுரிகிறார். மேற்கு ஆஸ்திரேலியாவில் SEP இன் பணிகளில் மையமாக ஈடுபாடு கொண்டுள்ளார். WSWS ல் அவர் சமூக சமத்துவமின்மையின் வளர்ச்சி குறித்தும், தொழிலாள வர்க்கத்தின் வாழ்க்கைத் தரங்கள் மீது மேற்கு ஆஸ்திரேலியாவில் “சுரங்க ஏற்றம்” என அழைக்கப்படும் பகுதியில் நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் எழுதியுள்ளார். 2007 மற்றும் 2010 தேர்தல்களில் ஜோ, சோசலிச சமத்துவக் கட்சியை பெர்த்தில் ஸ்வான் தொகுதியில் பிரதிநிதித்துப்படுத்தியுள்ளார். |
|