தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The political fraud of the Pakistani electionsபாக்கிஸ்தானிய தேர்தல்களில் அரசியல் மோசடி
Sampath Perera use this version to print | Send feedback இன்று பாக்கிஸ்தானிய தேசிய சட்டமன்றத்திற்கும் நான்கு மாநில சட்டமன்றங்களுக்குமான தேர்தல்கள் குறித்த கொண்டாட்டங்கள் ஓர் அரசியல் மோசடியாகும்; பொருளாதார, சமூகச் சரிவிலுள்ள ஒரு சமூகத்தின் மீது ஒரு நவகாலனித்துவ ஆட்சி தலைமை வகிப்பதற்கு “ஜனநாயக” நிறம் கொடுக்கும் தன்மையைக் கொண்டது. ஒபாமா நிர்வாகத்தின் ஆப்கானிய போர் பாக்கிஸ்தானில் விரிவாக்கப்படுவதற்கு அரசாங்கத்தின் ஆதரவால் உருவான நிதிய நெருக்கடி மற்றும் உள்நாட்டுப்போரில் ஆழ்ந்து போகும் நிலையின் மத்தியில் தேர்தல்கள் நடக்கின்றன. ஏப்ரல் மாதத்தில் இருந்து தேர்தல் வேட்பாளர்கள் பலர் உட்பட, 100 க்கு மேற்பட்டோர் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஆப்கானிய தாலிபானுடன் பிணைப்பு கொண்ட சக்திகளால் கொல்லப்பட்டுள்ளனர். இத்தேர்தல் நூறாயிரக்கணக்கான பாதுகாப்புப் படையினரால் மேற்பார்வையிடப்படும்; அவற்றுள் பல்லாயிரக்கணக்கான இராணுவத் துருப்பினரும் அடங்குவர். பஞ்சாப் மாநிலத்தில் மட்டும் 300,000 பாதுகாப்பு பிரிவினர், 30,000 இராணுவத்தினர் உட்பட நிலைப்பாடு கொண்டுள்ளனர். பாக்கிஸ்தானிய தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அளிக்கும் வாக்குகள் அவர்களை பாதிக்கும் முக்கியமான பொருளாதார அல்லது இராணுவ முடிவுகளில் எந்தவித செல்வாக்கையும் கொண்டிருக்கப்போவதில்லை. நாட்டின் கொள்கையிலிருக்கும் அடிப்படை வடிவமைப்பு இராணுவம் மற்றும் அரசியல் உயரடுக்குகளால் ஒப்புக் கொள்ளப்பட்டவை, ஒபாமா நிர்வாகம் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அறிவுரைகளை அடித்தளமாக கொண்டவை. தற்போதைய பாதுகாப்பு அரசாங்கம் ஏற்கனவே சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அவசரகால சிக்கன நடவடிக்கைகள் தொகுப்பின் வடிவமைப்பு தொடர்பாக பேச்சு வார்த்தைகள் நடத்தியுள்ளது. செய்தி ஊடகம் வெளியேறும் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி (PPP) தலைமையிலான அரசாங்கம் அதன் ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்தது குறித்து மகிழ்ச்சி அடைந்துள்ளது, 1947ல் முறையான சுதந்திரத்திற்கு பின்னர் அதன் பாதிக்காலத்தில் அமெரிக்க ஆதரவுடைய இராணுவ சர்வாதிகாரங்கள் ஆட்சி செலுத்திய நிலையில் முதல்தடவையாக ஒரு குடிமக்கள் அரசாங்கம் நாட்டின் வரலாற்றில் ஒரு முழு பதவிக்காலத்தை நிறைவு செய்துள்ளது. ஆனால் PPP அரசாங்கம், வாஷிங்டன் ஆணையிட்டுள்ள பரந்த முறையில் வெறுக்கப்படும் கொள்கைகளை சுமத்த இராணுவத்துடன் இணைந்திருந்த நிலமையில்தான் இது தப்பிப்ழைத்துள்ளது. பல நேரமும் நாட்டின் பாதுகாப்புக் கொள்கையை இராணுவமும் பென்டகனும் இயற்ற இது அனுமதித்துள்ளதுடன், IMF இயற்றியுள்ள சிக்கனக் கொள்கைகளையும் செயல்படுத்தியுள்ளது. PPP என்னும் பாக்கிஸ்தானிய முதலாளித்துவத்தின் மரபார்ந்த “இடது” ஆளும் கட்சி, இராணுவ சர்வாதிகாரி பர்வேஸ் முஷாரப் 2001ல் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க படையெடுப்பு நடத்தியதற்கு கொடுத்த ஆதரவைத் தொடர்ந்தது மட்டும் இல்லாமல், தன் மக்கள் மீதும் ஒரு போரைத் தொடர விரிவாக்கியது. PPP மற்றும் பாக்கிஸ்தான் இராணுவம் இரண்டும் சட்டவிரோத CIA டிரோன் தாக்குதல்களுக்கு ஒப்புக்கொண்டன; அவை நாட்டின் பெரும்பகுதியை அச்சுறுத்தி ஆயிரக்கணக்கானவர்களை கொன்றுள்ளன; இதில் கணக்கிலடங்கா மகளிரும் குழந்தைகளும் அடங்குவர். அவர்கள், தாலிபன் எதிர்ப்பை நசுக்குவதற்கு, ஆப்கானிய எல்லையை ஒட்டி இருக்கும் பாக்கிஸ்தானின் பழங்குடிப் பகுதிகளுக்குள்ளும் துருப்புக்களை அனுப்பினர், இதையொட்டி மில்லியன் கணக்கான பாக்கிஸ்தான் குடிமக்கள் இடம் பெயர நேரிட்டது. இந்தியத் துணைக் கண்டத்தை பிற்போக்குத்தனமாக பிரிவினை செய்து நிறுவியதில் இருந்து, அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு பாக்கிஸ்தானிய ஆளும் உயரடுக்கின் பல தசாப்தங்களாக தாழ்ந்து நிற்றல், புதிய, நச்சுவகையான காலனித்துவ ஆட்சி மறுபடியும் சுமத்தப்படுவதில் உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. 1980 களில் ஜெனரல் ஜியா உல்-ஹக்கின் இராணுவ சர்வாதிகாரம் வாஷிங்டனின் கொள்கையான சோவியத் ஒன்றியத்தை உறுதிகுலைக்க, காபூலில் சோவியத் ஆதரவுடைய ஆட்சிக்கு எதிரான உள்நாட்டுப் போருக்கு உந்துதல் கொடுத்தது. பாக்கிஸ்தானின் ISI இராணுவ உளவுத்துறை அமைப்பின் மூலம் CIA நிதியையும் ஆயுதங்களையும் குறுங்குழுவாத சுன்னி இஸ்லாமியக் குழுக்களுக்கு, அல் குவேடாவின் முன்னோடிகள் உட்பட அனுப்பியது. இப்பிற்போக்குத்தனப் போர், பாக்கிஸ்தானை இஸ்லாமியமயமாக்குதல் என்னும் ஜியாவின் அரசியல் வடிவமைப்பிற்குள் அடங்கியது; இது இனவழிக் குறுங்குழுவாத மோதலுக்கு எரியூட்டி அமெரிக்க ஏகாதிபத்தியம் மத்திய ஆசியாவில் விரிவடைவதற்கு அரங்கு அமைத்தது; அதுதான் இப்பொழுது பாக்கிஸ்தானை வன்முறையில் ஆழ்த்தியுள்ளது. பாக்கிஸ்தானின் நிதிய மையமான கராச்சி, வாடிக்கையாக குறுங்குழுவாத வன்முறையால் அழிவிற்கு உட்படுகிறது; நடைமுறையின் பல பிரிவுகளும் இராணுவ நிலைப்பாடுதான் நகரத்தை நடத்திச் செல்லத் தேவை எனக் கோர வைத்துள்ளது. பாக்கிஸ்தானுடைய முதலாளித்துவத்தின் அனைத்துப் பிரிவுகளும் திவால்தன்மையில் உள்ளன. பொதுமக்களுடைய ஜனநாயக உரிமைகளை அவற்றால் நிறைவு செய்ய முடியவில்லை; மாறாக வகுப்புவாத பாகுப்பாட்டைக் கையாண்டு தொழிலாள வர்க்கத்தையும் ஏழைகளையும் பிரிக்கின்றனன. இது மிகவும் தெளிவாக PPP உடைய பலுசிஸ்தானிலுள்ள வறிய மாநில பிரிவினைவாதக் குழுக்களை குருதியைக் கொட்டி அடக்கியதில் வெளிப்பட்டது; அதில் ஆட்சி முழுச் சமூகத்தையும் அச்சுறுத்தலுக்கு உட்படுத்தியது. PPP, பலூச்சி முதலாளித்துவத்தின் பிற்போக்குத்தன முயற்சிகளான பலூசிஸ்தான் மூலோபாய இடம் மற்றும் பணக்கார வளங்களை சுரண்ட முயன்ற வாஷிங்டனுடன் பாக்கிஸ்தான், ஈரான் ஆகியவற்றிற்கு எதிரான சதியில் ஒரு பகடைக்காயாக இருக்க நினைத்த முயற்சிகளை அடக்க இராணுவத்தை நம்பியது. அவற்றின் தந்திரோபாய வேறுபாடுகள் எப்படியிருந்தபோதிலும், பாக்கிஸ்தானின் முதலாளித்துவக் கட்சிகள் --PPP, தொழில்துறையாளர் நவாஸ் ஷரிப் (PMLN) பாக்கிஸ்தானின் முஸ்லிம் லீக், இம்ரான் கானின் தெஹ்ரீக்-இ-இன்சாப் மற்றும் முட்டஹிடா குவாமி இயக்கம் ஆகியவை-- அனைத்தும் ஏகாதிபத்திய சார்பு கட்சிகளும் நாட்டை இயக்க வாஷிங்டன் அளிக்கும் குருதிக்கறை நிறைந்த பணத்தை நம்பியிருப்பவையுமாகும். எந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றிபெற்றாலும், அது ஒபாமா நிர்வாகம் மற்றும் சர்வதேச நிதிய மூலதனம் ஆணையிடும் கொள்கைகளைத்தான் தொடர்ந்து செயல்படுத்தும்; அவையோ ஏற்கனவே நாட்டைப் பேரழிவிற்கு உட்படுத்திவிட்டன. அமெரிக்க மற்றும் IMF உடைய கோரிக்கைகளான, வெளிநாட்டு முதலீட்டாளர்களின் வணிக நட்பு கொள்கைகளுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்பதைச் செயல்படுத்துவதற்கு PPP மக்களின் பரந்த பிரிவுகளை வறிய நிலைக்குத் தள்ளியது; பாதிக்கும் மேலான மக்கள் 2011ல் உணவுப் பாதுகாப்பின்மையில் அவதியுற்றனர்; இது இரண்டு ஆண்டுகளுக்குள் 10 சதவிகிதப் புள்ளிகள் அதிகரிப்பைக் கண்டது. அமெரிக்கா பாக்கிஸ்தானை மிரட்டுவது அண்டை ஈரானின் எண்ணெய், எரிபொருள் ஆகியவற்றை அது பெறுவதில் இருந்து தடுப்பதிலும் காணப்படலாம்; அந்த ஆதாரங்கள் பாக்கிஸ்தானின் நெடுநாளைய எரிசக்தி பற்றாக்குறையை தீர்க்க தேவைப்படுகின்றன. இடைவிடா மின்வெட்டுக்களும், மின்சாரமற்ற நிலையும் பொருளாதாரத்தை முடக்கி, மில்லியன் கணக்கான வேலைகளையும் பாதித்துள்ளன. பாக்கிஸ்தானில் முதலாளித்துவ ஆட்சி ஒரு வரலாற்றுத் தன்மை வாய்ந்த தோல்வியை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டுக்களுக்கும் சிக்கனங்களுக்கும் எதிராக தொழிலாள வர்க்கத்தின் சமூக மற்றும் தொழில்துறைப் போராட்டங்கள் வெடித்தது தொழிலாளர்கள் எதிர்த்துப் போரிடத் தயார் என்பதைக் காட்டுகிறது. ஆனால். போர் எதிர்ப்பு உணர்வும் பொருளாதாரக் கொள்கைக்கு எதிரான தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பும் தொழிற்சங்கங்களால் நசுக்கப்படுகின்றன; அதற்கு PPP மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சுற்றுவட்டத்தில் செயல்படும் பாக்கிஸ்தானின் போலி இடது கட்சிகளால் உதவி கொடுக்கப்படுகிறது. அவர்கள் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகரப் பணியை நிராகரித்து, அதற்குப் பதிலாக பாக்கிஸ்தானிய முதலாளித்துவம் மற்றும் இராணுவம் “ஜனநாயகமயப்படுத்தப்பட வேண்டும்” என்று இழிந்த முறையில் கோருகின்றன. அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம்— அது “ஆசியாவில் முன்னிலை” என்பதை ஒட்டி அண்டை நாடான சீனாவுடன் போரிடுவதற்கு பாக்கிஸ்தான் மீது பிடியை இறுக்கத் தயாராக உள்ளது— பாக்கிஸ்தானிய மக்களின் சமூக மற்றும் ஜனநாயக அபிலாஷைகளுக்கான போராட்டத்தில் மையப் பிரச்சினை ஆகும். அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் அதன் வாடிக்கை அமைப்பான பாக்கிஸ்தானில் உள்ள முதலாளித்துவத்திற்கும் எதிரான போராட்டம், உழைக்கும் வறிய மக்களின் கூட்டோடு தொழிலாள வர்க்கம் தலைமை தாங்கி வழிநடத்தும் ஒரு சோசலிசப் புரட்சிக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது. பாக்கிஸ்தானின் தொழிலாளர்கள் மற்றும் வறியவர்களுக்கு ஏற்படுத்தியுள்ள பேரழிவுகளை ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் அடிப்படையில் மட்டுமே போராடப்பட முடியும். பொருளாதார அளவில் பின் தங்கிய, முன்னாள் காலனித்துவ நாடுகளில் மிகவும் அழுத்திக்கொண்டிருக்கும் ஜனநாயகப் பணிகளை செயல்படுத்துவதற்கு முதலாளித்துவத்தின் எந்தப் பிரிவாலும் இயலாது அல்லது அதற்கு ஆர்வமும் கிடையாது. பாக்கிஸ்தானின் தொழிலாள வர்க்கம் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தலைமை தாங்கி சோசலிசத்திற்காக போராடுவது என்பது தொழிலாள வர்க்கத்தின் சர்வதேச ஐக்கியத்துக்கான போராட்டத்துடன் பிணைந்துள்ளது –இதில் முழு இந்தியத் துணைக் கண்டம் மற்றும் உலகம் முழுவதிலும் உள்ள தொழிலாள வர்க்கமும் அடங்கும்; ஏகாதிபத்திய மையங்களில் இருக்கும் தொழிலாளர்கள் உட்பட; அவர்கள்தான் காலனித்துவ முறை மற்றும் போருக்கு பெரும் எதிர்ப்பாளர்கள் ஆவர். நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு ஒன்றுதான் இத்தகைய முன்னோக்கை முன்வைத்துள்ளது. பாக்கிஸ்தானிய தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழுவில் இணையுமாறும், தொழிலாள வர்க்கத்தின் ஒரு புதிய புரட்சிகர தலைமையாக ஒரு பாக்கிஸ்தானிய பிரிவைக் கட்டமைக்குமாறும் அழைப்பு விடுக்கின்றோம். |
|
|