தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Pakistani voters trounce parties that waged Washington’s AfPak war, imposed austerity வாஷிங்டனின் ஆஃப்-பாக் போரை நடத்திய, சிக்கனத்தை சுமத்திய கட்சிகளை பாக்கிஸ்தானிய வாக்காளர்கள் பெருந் தோல்விக்கு உட்படுத்துகின்றனர்.
By Keith Jones use this version to print | Send feedback கடந்த ஐந்து ஆண்டு காலமாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வளைந்து கொடுக்கும் கருவியாகச் செயல்பட்டு, ஆஃப்-பாக் போரை வட மேற்கு பாக்கிஸ்தானில் விரிவாக்கி, IMF இன் சிக்கன நடவடிக்கைகளையும் சுமத்திய நாட்டின் வெளியேறும் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சி (PPP) தலைமையிலான அரசாங்கத்தை பாக்கிஸ்தானிய வாக்காளர்கள் உறுதியாக நிராகரித்துள்ளனர். சனிக்கிழமை நடைபெற்ற தேசிய, மற்று நான்கு மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களின் உத்தியோகபூர்வ முடிவுகளுக்கு இன்னும் பல நாட்கள் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் உத்தியோகபூர்வமற்ற பகுதி முடிவுகள், PPP இன் மரபார்ந்த தேர்தல் போட்டிக் கட்சியான பாக்கிஸ்தானிய முஸ்லீம் லீக் (நவாஸ்) அல்லது PML(N) வலுவான அதிக வாக்குகளை, ஒருவேளை பெரும்பான்மை இடங்களைக் கூட தேசிய சட்டமன்றத்தில் பெறும் எனக் குறிப்புகள் காட்டுகின்றன. PML(N), பஞ்சாப் மாநில அரசாங்கத்தின் மீதும் கட்டுப்பாட்டைக் கொள்ளும்; இது பாக்கிஸ்தானில் 180 மில்லியன் மக்களுக்குத் தாயகம் ஆகும். இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்கும் ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயியும் பகிரங்கமாக PML (N) தலைவர் நவாஸ் ஷரிப்பை அவருடைய வெற்றிக்குப் பாராட்டினர். ஒரு வலதுசாரி தொழில்துறையாளரான ஷரிப் முன்னதாக இரண்டு தடவை பாக்கிஸ்தானின் பிரதம மந்திரியாக இருந்துள்ளார்; இராணுவம் அவரை அகற்றிவிட்டது. முன்னாள் கிரிக்கெட் வீர்ர் இம்ரான் கானுடைய பாக்கிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI-Pakistan Movement for Jusatice), நல்ல முடிவுகளைக் கண்டுள்ளது. PTI நீண்ட காலமாக பாக்கிஸ்தானின் அரசியலில் இதுவும் ஓடியது என்ற குதிரையைப் போல் இருந்தது. ஆனால் 2011ல் கான் அமெரிக்க டிரோன் தாக்குதல்களைக் கண்டித்து அணிவகுப்புக்களை நடத்தத் தொடங்கினார்; அத்தாக்குதல்கள் ஆயிரக்கணக்கான குடிமக்களை கொன்றதுடன் பாக்கிஸ்தானின் கூட்டாட்சியால் நிர்வகிக்கப்பட்ட பழங்குடி பகுதிகளையும் (FATA) அச்சுறுத்தியுள்ளது. கான் ஊழலை ஒழிக்க ஒரு “புரட்சிக்கு” தலைமை தாங்குவதாகவும் ஒரு “இஸ்லாமிய நலன்புரி அரசை” தோற்றுவிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். முக்கியமான வணிகர்களையும் PPP மற்றும் PML(N) ல் இருந்து வெளியேறிய தலைவர்களையும் தன் கட்சிக்கு வரவேற்றார். அதே நேரத்தில் பாக்கிஸ்தான், வாஷிங்டனுடன் நெருக்கமான உறவுகளை தக்க வைத்துக்கொள்ள தான் ஆர்வமாய் இருப்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். பாக்கிஸ்தானின் முக்கிய முதலாளித்துவ “இடது” கட்சியான PPP மற்றும் அதன் போலி-இடது நட்பு அமைப்புக்கள் அமெரிக்க ஏகாதிபத்தியத்துடன் பிணைப்புகளை ஆழப்படுத்தியுள்ள நிலையில், கானின் அமெரிக்காவின் சட்ட விரோத டிரோன் தாக்குதல்கள் குறித்த கண்டனங்கள் மக்களுடையே பரந்த ஆதரவைக் கொண்டன, குறிப்பாக நகர்ப்புற இளைஞர்களிடையே. PTI இதுவரை ஒரே ஒரு இடத்தை மட்டும் தேசிய சட்டமன்றத்தில் வெற்றிகொண்டது, PPP ஐ மூன்றாம் இடத்திற்கு தள்ளக்கூடும். இதுதான் கைபர் பஷ்டுங்வா (KP) மாநிலத்தில் மிகப் பெரிய கட்சியாகும்; இது FATA விற்கு அடுத்து உள்ளது. PTI க்கான ஆதரவில் ஏற்றம் இருப்பது குறித்து கவலை கொண்ட ஷரிப், குறைந்தப்பட்சம்தான் டிரோன் தாக்குதல் எதிர்ப்பு அறிக்கைகளை விடுத்துள்ளார்; “துப்பாக்கிகள், தோட்டாக்கள் தவிர பிற “விருப்பங்கள்”.... ஆப்பாக் போரை முடிக்க பரிசீலிக்கப்பட வேண்டும் என்று அறிவித்துள்ளார். இத்தேர்தல்கள் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சிக்கு (PPP) வரலாற்றுத்தன்மை வாய்ந்த தோல்வியை பிரதிபலிக்கின்றன. இது கிராமப்புற சிந்துப் பகுதியில் இருந்து குறைந்த அளவு தேசிய சட்டமன்றத் தொகுதிகளையே வென்றுள்ளது; இதுவோ PPP க்குத் தலைமை தாங்கும் பூட்டோ குடும்பத்தின் வலுவான பகுதியாகும்; இங்கு PPP சிந்தி பிராந்திய உணர்வுகளையும் மரபார்ந்த நிலக்கிழார்-விவசாய உறவுகளையும் பயன்படுத்தி வாக்குகளைப் பெற்றது. “PPP இன் பேரழிவு முடிவுகள் ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி (இவர் மறைந்த பெனாசீர் புட்டோவின் கணவர் ஆவார்) குறித்தும் பெரிய, இருண்ட மேகமூட்டத்தைக் கொடுத்துள்ளது—இரண்டாம் வரைகாலப் பதிவிக்கான செப்டம்பர் தேர்தலில் நிற்பாரா என்பது குறித்து; அதுவும் அவர் பதவியில் இருந்து அவருடைய எதிரிகளால் முன்னதாக வெளியேற்றப்படாமல் இருந்தால்; அவர்கள்தான் இப்பொழுது அரசியலில் ஆதிக்கம் கொண்டுள்ளனர்.” என்று பாக்கிஸ்தானின் The News கூறியுள்ளது. முந்தைய PPP அரசாங்கங்கள் IMF சிக்கன நடிடக்கைகளை சுமத்தி பாக்கிஸ்தானின் வாஷிங்டனுடனான நட்பை போற்றின; அதையொட்டி பாக்கிஸ்தானிய இராணுவம் ஆசியா மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் விசுவாசமான துணை ஆட்சியாளராக இருந்து வருகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில், PPP அப்பட்டமான நவகாலனித்துவமுறை ஆட்சிக்கு தலைமை தாங்குகிற நிலையில், அதன் தரத்தன்மையில் புதிய அளவை அடைந்துள்ளது. அதன் மக்கள் மீது டிரோன் தாக்குதல் நடத்த வாஷிங்டனுக்கு நிபந்தனையற்ற அனுமதியை கொடுத்துள்ளதோடு, பாக்கிஸ்தானுக்கு உள்ளே ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிரான எழுச்சிகளை ஒரு மிருகத்தனமான எதிர்ப்பு நடத்தி முட்டுக்கொடுத்துமுள்ளது. மில்லியன் கணக்கான பாகிஸ்தானியர்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அகதிகளாக மாறியுள்ளனர். PPPயும் அதன் கூட்டணிப் பங்காளிக் கட்சிகளும் –ஆவாமி தேசியக் கட்சி (ANP), முட்டாஹிடா குவாமி இயக்கம் (MQM) — இன்னும் சிக்கனத்தை தவிர வேறு எதையும் கொடுக்கவில்லை; அதே நேரத்தில் நாடு வெள்ளங்களால் பேரழிவிற்கு உட்பட்டது, உள்கட்டுமானம் சரியத் தொடங்கியது, மின்சாரப் பற்றாக்குகளைகள் பெருகின, உணவுப்பொருட்களின் விலைகள் உயர்ந்தன. PPP ஒரு நிழல் பிரச்சாரத்தை தொடக்கும் கட்டாயத்திற்கு உட்பட்டது; இது ஆப்கானிய தாலிபனுடன் பிணைந்துள்ள டெக்ரிக்-இ-தாலிபான் பாக்கிஸ்தான் கட்சியின் அச்சுறுத்தலை ஒட்டி நடந்தது. இது ஒரு சில அணிவகுப்புக்களுக்கு ஏற்பாடு செய்தது, இதன் சமீபத்திய குடும்பவழித் தலைவர் 24 வயது பில்வால் புட்டோ துபாயில் தஞ்சம் அடைந்துள்ளார். கைபர் பஷ்டுங்வா (KP) மாநிலத்தில் ஆட்சி நடத்தும் ஆவாமி தேசியக் கட்சி, சொல்லவேண்டும் என்றால் இன்னும் இழிந்த சரிவைத்தான் கண்டுள்ளது. முழுமை அடையாத முடிவுகள், அது ஒரே ஒரு தேசிய சட்டமன்றத் தொகுதியில் வென்றுள்ளதாகவும், KP யின் 99 மாநிலத் சட்டசபை தொகுதிகளில் அரை டஜன் அல்லது அதற்கும் குறைவான இடத்தைக் கொண்டுள்ளது என்றும் தெரிவிக்கின்றன. முட்டாஹிடா குவாமி இயக்கம் (MQM) –வெளிப்படையாக ஜெனரல் பர்வேஸ் முஷாரப்பின் இராணுவ ஆட்சிக்கு ஆதரவு கொடுத்தது, பின் 2008 தேர்தல்களுக்குப்பின் PPP க்கு ஆதரவு கொடுத்தது, இதன் பங்காளிகளைவிடத் தன் தொகுதிகளை தக்க வைத்துக் கொள்வதில் சற்றே வெற்றி பெற்றுள்ளது. அதன் வகுப்புவாத முறையீடுகளுக்காகவும், அப்பட்டமான குண்டர்தன்மைக்காவும் இழிவு பெற்றுள்ள, இனத் தளமுடைய MQM, பாக்கிஸ்தானின் வணிக நகரான கராச்சியை அதிர்விற்கு உட்படுத்தும் வகுப்புவாதப் போர்களில் பல ஆண்டுகளாக முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதன் எதிரிகள், இது பெரிய அளவு வாக்குகளை தில்லு முல்லு செய்துள்ளதாகவும் சனிக்கிழமை வாக்களிப்பின் போது மிரட்டலைப் பயன்படுத்தியதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் ஆணையமும் செய்தி ஊடகமும், 20 பேருக்கும் மேல் இறந்துவிட்ட தேர்தல் தின வன்முறை இருந்தபோதிலும், கராச்சியில் வாக்குப் போடாமல் தடுப்பதற்கு ஆயுதமேந்திய குண்டர்கள் பயன்படுத்தப்பட்ட போதிலும், பலூசிஸ்தானில் வாக்காளர்களை தாக்க இனவழிப் பிரிவினைவாதிகளின் அச்சங்கள் இருந்தபோதிலும், அதாவது நாடு பெருமளவிற்கு உள்நாட்டுப் போர் நிலையில் உள்ளது என்னும் உண்மை இருந்தபோதிலும், சனிக்கிழமை நடந்த தேர்தல்கள் “நியாயமானவையே” என்று கூறுகின்றன. உண்மை என்னவென்றால், பாக்கிஸ்தானில் நவகாலனித்துவ ஆட்சிக்கு ஒரு மெல்லிய ஜனநாயக முகப்பை அளிக்கத்தான் தேர்தல்கள் நோக்கம் கொண்டிருந்தன. புதிய PML (N) அராங்கத்தின் செயற்பட்டியல், பின்புற வழிவகைகள்படி வாஷிங்டன், IMF, பாக்கிஸ்தானிய இராணுவம் மற்றும் வணிக உயரடுக்கு ஆகியவற்றால் விவாதிக்கப்படுகிறது. பாக்கிஸ்தானின் ஆயுதப்படைகளின் தலைவரான ஜெனரல் கியானி, சமீபத்திய வாரங்களில் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரியை இரு முறை சந்தித்துள்ளார். பென்டகன், அதன் ஆப்கானிய ஆக்கிரமிப்பு படைகளின் எண்ணிக்கை குறைப்பைப் பற்றி விவாதிக்கையிலும், காபூலில் உள்ள அதன் கைப்பாவை அரசாங்கத்தை மறுகட்டமைப்புச் செய்கையிலும், பாக்கிஸ்தான் அமெரிக்காவின் முக்கிய பங்காளி ஆகும். பாக்கிஸ்தானிய முதலாளித்துவ அரசியலின் உண்மையான அதிகாரம் எங்குள்ளது என்பதை குறிப்பிடும் வகையில், கெர்ரி, ஆட்சி அதிகாரிகள் என்று இல்லாமல் கியானியைத்தான் தன்னையும் ஆப்கானிய ஜனாதிபதி கர்சாயியையும் கடந்த மாதம் சந்திக்க அழைத்திருந்தார். பாக்கிஸ்தானின் தேர்தல் காலக் காபந்து அரசாங்கம் ஏற்கனவே அவசரக்கால IMF கடன்குறித்து பேச்சுக்களை நடத்தியுள்ளது; ஏனெனில் பாக்கிஸ்தானிடம் ஒரு சில வார இறக்குமதிகளுக்குத்தான் நாணயப் பரிவர்த்தனை இருப்புக்கள் உள்ளன. இக்கடன், மின்விசை உதவித்தொகைகளை குறைத்தல், சமூகநலச் செலவுகளைக் குறைத்தல், வரிகளை உயர்த்துதல், மற்றும் அரசாங்க நிறுவனங்களை தனியார்மயமாக்குதல், விரைவுபடுத்தப்படுதல் ஆகியவற்றிற்கு உறுதியளிப்பதைப் பொறுத்தே உள்ளது. தன்னுடைய அரசியல் போக்கை அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த இராணுவ சர்வாதிகாரி ஜியா உல் ஹக்கிற்கு விருப்பமானவர் என்று தொடங்கிய ஷரிப் வாஷிங்டன் கூறுவதை PPP உடைய சர்தாரி போலவே செயல்படுத்துவார். ஒபாமா நிர்வாகத்தின் ஆஃப்-பாக் போர்த்திட்டங்களை இயற்றிய அமெரிக்க மூலோபாய வல்லுனர் ப்ரூஸ் ரீடல் வாஷிங்டன் போஸ்ட்டிடம், ஷரிப் “நாம் இணைந்து செயலாற்றப்படத் தக்கவர்தான், முன்பும் அவருடன் இணைந்து செயல்பட்டுள்ளோம்” என்றார். “நான் ஒன்றும் IMF க்கு எதிரானவன் அல்ல” என்று ஷரிப் அறிவித்துள்ளார். பாக்கிஸ்தான் டெஹ்ரீக்-இ-இன்சாப் (PTI-Pakistan Movement for Jusatice) ஐ போலன்றி, PML(N) தன் தொழிலாள வர்க்க விரோதத் திட்டத்தை சற்று விரிவாகவே கூறியுள்ளது. இதன் தேர்தல் அறிக்கை சிறப்புப் பொருளாதாரப் பகுதிகள் நிறுவப்படும் என உறுதியளிக்கின்றன; விலைகளுக்கு உதவிநிதி அளிப்பதற்கு பதிலாக வழிவகைகள் சோதிக்கப்பட்டுள்ள “இலக்கு உடைய உதவித்தொகைகள்” கொடுக்கப்படும், மற்றும் முக்கிய அரசாங்கத்திற்குச் சொந்தமான தொழில்கள், மின் உற்பத்தி, பகிர்வு மற்றும் இரயில்வேக்கள் போன்றவை தனியார்மயமாக்கப்படும் என்று கூறியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஞாயிறன்று தேர்தல் முடிவகளுக்கு தன் பாராட்டுக்களைத் தெரிவிக்கும் வகையில் இழிவாக இது ஜனநாயகத்திற்கு ஒரு வெற்றி என்று அறிவித்தார். “என்னுடைய நிர்வாகம் தேர்தல் முடிவில் வெளிப்படும் பாக்கிஸ்தானிய அரசாங்கத்துடன் சம பங்காளிகளாக செயல்புரிய, நம் ஒத்துழைப்பைத் தொடர்வதற்கு முன்னோக்கியுள்ளது” என்று அவர் கூறினார். கட்டுரையாளர் கீழ்க்கண்டதையும் பரிந்துரைக்கிறார். |
|
|