சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama, Cameron hold Syria war summit in Washington        

ஒபாமா மற்றும் காமெரோன் சிரியப் போர் குறித்து வாஷிங்டனில் உச்சிமாநாட்டை நடத்துகின்றனர்

By Alex Lantier and Chris Marsden 
14 May 2013

use this version to print | Send feedback

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும் பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோனும் நேற்று வாஷிங்டனில் சந்தித்து சிரியப் போருக்கான தங்களுடைய பிரச்சாரத்தை முடுக்கிவிடவும், மத்திய கிழக்கின் பிற பகுதிகளில் தலையீடுகளைச் செய்வது பற்றி விவாதிக்கவும் கூடினர்.

சிரியாவின் ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தின் ஆட்சிக்கு எதிராகப் போரிடும் இஸ்லாமியவத குடிப்படைகளுக்கு ஆயுதங்கள் அளிப்பதை அதிகப்படுத்த அவர்கள் உறுதி கொண்டுள்ளதோடு, அதே நேரத்தில் சிரியா குறித்து, இதுவரை அசாத்தின் பிரதான சர்வதேச ஆதரவளிக்கும் நாடாக உள்ள ஷ்யாவுடன் ஜெனீவாவில் பேச்சுக்கள் நடத்தும் திட்டத்தையும் கொண்டுள்ளனர்.]skdldldTE

கூட்டம் முடிந்தபின் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் ஒபாமா, “நாங்கள் ஒன்றாக எங்கள் முயற்சிகளை அசாத் ஆட்சிக்கு அழுத்தம் கொடுக்க அதிகரிப்போம், நீண்ட காலமாக கஷ்டப்படும் சிரிய மக்களுக்கு மனிதாபிமான உதவியளிப்போம், மிதவாத எதிர்தரப்பினரை வலுப்படுத்துவோம், மற்றும் பஷர் அசாத் இல்லாத ஒரு ஜனநாயக சிரியாவிற்குத் தயாரிப்புக்களையும் நடத்துவோம்என்று அறிவித்தார்.

வாஷிங்டனும் லண்டனும் சிரியாவில் தங்களுடைய குருதி கொட்டும் பினாமிப் போரை பொய்களால் வளர்க்கின்றன. “மனிதாபிமான உதவி” அளித்தல், ஒரு “மிதவாத எதிர்த்தரப்பிற்கு” ஆதரவு கொடுத்தல் என்பதற்கு முற்றிலும் மாறாக, அவர்கள் தீவிர வலதுசாரி இஸ்லாமியவாத போராட்டக்காரர்களுக்கு மத்திய கிழக்கு நட்பு நாடுகளான துருக்கி, சௌதி அரேபியா போன்றவற்றின் உதவியுடன் ஆயுதமும் அளிக்கின்றனர்; இந்த முயற்சிகள் CIA இன் மேற்பார்வையில் நடக்கிறது. சமீப காலத்தில் கூறப்படும் கருத்துக்களில் சிரியாவின் விமானப் படை, வான் பாதுகாப்புக்களை அழிக்கும்பறக்கக் கூடாது பகுதிகளைஏற்படுத்துவதும், அமெரிக்கப் படைகளை அண்டைய ஜோர்டானில் நிலைகொள்ள வைத்து நேரடியாக சிரியா மீது படையெடுக்க பயன்படுத்துவதும் அடங்கியுள்ளன.

சிரியஎதிர்த்தரப்பினருக்கு பல மில்லியன் பவுண்டுகளை கொடுக்க காமெரோன் உறுதியளிப்பது, இந்த உதவியின் இராணுவத் தன்மையை தெளிவாக்குகிறது. அவர் கூறினார்: “பிரித்தானியாவானது ஐரோப்பிய ஆயுதத் தடைகளில் இன்னும் கூடுதல் வளைந்து கொடுக்கும் தன்மைக்கு முயல்கிறது, பேராபத்து இல்லாத உதவியை சிரிய எதிர்த்தரப்பிற்கு இருமடங்காக வரவிருக்கும் ஆண்டுகளில் அளிக்கும். கவச வாகனங்கள், உடற்கவசம், மின்சார ஜெனரேட்டர்கள் ஆகியவை அனுப்பப்பட உள்ளன.”

ஒபாமாவிற்கும் காமெரோனுக்கும் இடையே நடந்த கூட்டம் சிரியாவிற்கு எதிராக ஒருவேளை அமெரிக்கத் தலைமையில் நடத்தப்படக்கூடிய போர்த் தயாரிப்பு குறித்த சர்வதேச பேச்சுக்களுக்கு இடையே நடைபெற்றது. வியாழனன்று, துருக்கிய பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகன் ஒபாமாவை வெள்ளை மாளிகையில் சந்திக்க உள்ளார்; சிரியாதான் பேச்சுக்களில் முதன்மை பெறும். எர்டோகன் பலமுறை சிரியாவுடன் போர் வேண்டும் என அழுத்தம் கொடுத்துள்ளார்; சிரிய அரசாங்கம் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என்றும் கூறியுள்ளார்.

இஸ்ரேலிய பிரதம மந்திரி பெஞ்சமின் நெத்தனியாகு சிரியா குறித்து ஷ் ஜனாதிபதி விளாடிமீர் புட்டினுடன் பேசுவதற்கு இன்று மாஸ்கோவிற்கு வரவிருக்கிறார். பெயரிடப்படாத மூத்த இஸ்ரேலிய அதிகாரிகள் செய்தி ஊடகத்திடம் நெத்தனியாகு ஷ்யாவை நவீன S-300 வான் பாதுகாப்பு கருவியைக் கொடுப்பதை நிறுத்துமாறு கேட்க உள்ளார் எனத் தெரிவித்தனர். அத்தகைய கருவி சிரியாவை தூண்டுதலற்ற வான் தாக்குதல்களை சுட்டு வீழ்த்த உதவும்; ஒரு வாரம் முன்பு சிரியத் தலைநகரான டமாஸ்கஸில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது.

சிரியாவிற்கு எதிராக வாஷிங்டனால் இயக்கப்படும் ராஜதந்திரத் தாக்குதல் முறை அப்பட்டமான ஏகாதிபத்திய நடவடிக்கையாகும். இது அமெரிக்க தாக்குதலில் இருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ளும் திறனை அகற்றி, சிரியாவைத் தனிமைப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டது மற்றும் முடிந்தால் பேச்சுக்கள் மூலம், இல்லாவிடின் வலிமை மூலம் ஒரு நவ காலனித்துவ ஆட்சியை சிரியாவில் ஏற்படுத்தும், அதில் வாஷிங்டனின் வலதுசாரி இஸ்லாமியவாத கைக்கூலிப் படைகளும் அசாத் ஆட்சியில் இருந்து விலகிய கூறுபாடுகளும் இருக்கும்.

வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் போருக்குத் தயாரிப்புக்களை நடத்துகையில், அவை ஜெனீவாவில் நடக்க இருக்கும் பேச்சுக்களில், சிரியா மீது அமெரிக்கத் தலைமையிலான தாக்குதல்கள் இன்னும் வரும் என்னும் அச்சுறுத்தலை ஒட்டி ஒரு போலித்தன சட்டபூர்வமாக அசாத்தை அகற்ற ஷ் ஆட்சி ஒப்புக்கொள்ளும் என்று தொடர்ந்து நம்புகின்றன.

ஆட்சியாளர்கள் மற்றும் எதிர்த்தரப்பின் பிரதிநிதிகளை ஜெனீவாவிற்கு வரவிருக்கும் வாரங்களில் ஒன்றாக அழைத்துவந்து, அசாத்திடமிருந்து ஆளுவதற்கான அமைப்பு ஒன்றிற்கு அதிகாரத்தை மாற்றுவற்கு அனுமதிக்கும் இடைக்கால அமைப்பு பற்றி ஒப்புக்கொள்ள வைக்க முடியும் என்றுஒபாமா திட்டத்தை முன்வைத்துள்ளார். இதற்கிடையில்நாம் தொடர்ந்து சிரியாவில் இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்த உண்மைகளை நிறுவ உழைப்போம், அந்த உண்மைகள் நம் அடுத்த நடவடிக்கைகளை வழிநடத்த உதவும்.”

வாஷிங்டன் இன்னும்உண்மைகளை நிறுவுதலைஇரசாயன ஆயுதங்களைப் பற்றி தேவை கொண்டிருக்கிறது என்று கூறுவது, முந்தைய அமெரிக்க கூற்றுக்கள் அசாத் நச்சு வாயுவை பயன்படுத்தினார், அதையொட்டி ஒருசிவப்புக் கோட்டைகடந்துவிட்டார் என்பது அமெரிக்கத் தாக்குதலை நியாயப்படுத்துகிறதுஎன்பவை தயாரிக்கப்பட்ட கதைகளை அடித்தளமாகக் கொண்டவை என்பதை உட்குறிப்பாக ஒப்புக்கொள்வதாகும்.

அசாத்திற்குக் கொடுக்கும் ஆதரவை வெட்டிவிட ஷ்யா உடன்படுமா எனக் கேட்கப்பட்டதற்கு காமேரோன் தான் புட்டினுடன் சிரியா பற்றி வெள்ளியன்று ஷ் நகரம் சோச்சியில் நடத்திய விவாதங்களைப் பாராட்டினார். “நாம் அனைவரும் இந்த முக்கிய ராஜதந்திர முயற்சியில் ஒன்றாகச் செயல்பட்டு, மேசைக்கு அனைவரையும் கொண்டுவந்து சிரியாவில் உயர்மட்டத்தில் ஒரு மாற்றத்தைச் சாதிக்க வேண்டும், அதையொட்டி நாட்டிற்குத் தேவையான மாற்றத்தை நாம் கொண்டுவரமுடியும்என்றார் அவர்.

ஐரோப்பிய ஏகாதிபத்தியம் மற்றும் சிரியாவிலுள்ள அல் கைதாவுடன் தொடர்பு கொண்ட சுன்னி குறும்குழுவாதிகளுடன் ஆட்சி மாற்றம் என்னும் செயற்திட்டத்தை இரக்கமின்றித் தொடர்கையில், ஒபாமா நிர்வாகம் அப்பிராந்தியத்தையும் உலகம் முழுவதையும் போர் மற்றும் பேரழிவுகளில் தள்ளக்கூடிய அச்சுறுத்தும் சக்திகளை இயக்க வைத்துள்ளார்.

மாஸ்கோவுடன் பேச்சுக்கள் பற்றிய திட்டத்தைப் பற்றிக் கூறுகையில், ஒபாமா கூறினார்: “அது வெற்றிகரமாக இருக்கும் என என்னால் உறுதியளிக்க முடியாது. வெளிப்படையாக, சில நேரம் இதுபோன்ற சிரியாவில் நாம் காணும் நிலைமையில் சீற்றங்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டால், மீண்டும் விஷயங்களை பழைய நிலைக்குக் கொண்டு வருவது மிகவும் கடினம். ஷ்யா பங்குபற்றிக் கொண்டாலும் ஒரு நம்பகத்தன்மையான வழிவகைக்கு பெரும் சவால்கள் இருக்கும்.”

ஆளும் வட்டங்களில் சிரியப் போர் விரிவாக்கம் குறித்த விளைவுகள் பற்றிக் கணிசமான கவலைகள் உள்ளன. நேற்றைய தலையங்கம் ஒன்றில்சிரியாவிலிருந்து வெளியே இருப்பது ஒபாமாவிற்கு தைரியமான நிலைப்பாடுஎன்னும் தலைப்பில் பைனான்சியல் டைம்ஸ் விமர்சகர் ராஷ்மன் எழுதினார்: “நாம் எழுச்சியாளர்களுக்கு ஆயுதங்கள் கொடுத்தால், அது இன்னும் குருதி கொட்டுதலுக்கு வழிவகை செய்யாது என்று நமக்கு எப்படித் தெரியும்..... சமீபத்திய ஆப்கானிய, ஈராக்கியப் போர்களில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தாங்கள் தலையீடு செய்யும் சமூகங்களைப் பற்றிய தங்கள் அறிவைப் பரந்த முறையில் மிகையான மதிப்பீட்டைத்தான் கொண்டிருந்தன.”

முன்னாள் பாதுகாப்பு மந்திரியாக ஜோர்ஜ் டபுள்யூ புஷ் மற்றும் ஒபாமா இருவரிடமும் இருந்த ரோபர்ட் கேட்ஸ், “Face the nation” என்னும் பேட்டி நிகழ்ச்சியில் ஞாயிறன்று தோன்றி, சிரியாவில் அமெரிக்க இராணுவ நடவடிக்கைஒரு தவறாகிவிடும்என்றார். லிபியாவில் அமெரிக்கத் தலையீடும் ஒரு தவறு என்று தான் நினைத்ததாக கூறிய அவர், “குறிப்பாக அமெரிக்க இராணுவத் தொடர்பை ஒட்டி குழுக்களுக்கு ஆயுதங்களை அளிப்பது, எச்சரிக்கையுடன் இருப்பது, அவசியம் ஆகும்என்றார்.

ஒபாமாவும் காமெரோனும் ஆப்கானிஸ்தானில் தொடர்ச்சியான நேட்டோ ஆக்கிரமிப்புத் துருப்பு நிலைகொள்ளல்கள் குறித்தும் விவாதம் நடத்தினர் என்று கூறப்படுகிறது; தவிரவும், ஈரான் பற்றிய அதன் அணுசக்தித் திட்டம் குறித்தும் பேச்சுக்களுக்கான திட்டம் உள்ளது.

சிரியாவில் நடக்கும் போர், மத்திய கிழக்கில் ஒரு பரந்த ஏகாதிபத்திய நிகழ்ச்சி நிரலின் ஒரு பாகம் என்பதைத்தான் உயர்த்திக் காட்டுகிறது. இச்செயற்பட்டியலில் எண்ணெய் வளமுடைய ஈரானுக்கு அதன் எஞ்சியிருக்கும் அரபு நட்பை இழக்கச் செய்யும் திட்டம்தான் உள்ளதுஅதாவது சிரியாவை. இது ஈரானுடனான போர் வாய்ப்பிற்கு தயாரிப்பாகவும் இருக்கலாம்; கட்டாயமாக ஷ்யாவின் செல்வாக்கை ஓரம் கட்டுதல்; மற்றும் இன்னும் பொதுவாக வாஷிங்டன் மற்றும் அதனுடைய நட்பு நாடுகளின் மூலோபாய மேலாதிக்கத்தை மத்திய கிழக்கில் ஏற்படுத்துதல்.

ஒபாமா-காமெரோனின் போர் பற்றிய உச்சிமாநாடு சர்வதேச சோசலிச அமைப்பு போன்ற போலி இடதுகளின் சிரியப் போர் ஆதரவானது, இவைகள் ஏகாதிபத்திய அரச அமைப்புக்கள் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. (See, “The International Socialist Organization and the imperialist onslaught against Syria”)

ஜெனீவா பேச்சுக்களில் இருந்து வெளிப்படக்கூடிய எத்தகைய புதிய சிரிய ஆட்சியும் அமெரிக்க நேட்டோப் போர் 2011ல் லிபியப் போருக்குப் பின் போட்டியிட்ட குடிப்படைக் குழுக்கள் நடத்திய ஆட்சியை போன்றதுஒரு வலதுசாரி அமெரிக்கக் கைப்பாவை அரசாங்கமாகத்தான் இருக்கும்; இது சுன்னி குறுங்குழுவாத படைகளைத் தளமாகக் கொண்டிருக்கும், கட்டுப்பாடுகள் நிறைந்த இஸ்லாமியவாத சட்டங்களை சுமத்த முற்படும், கணிசமான மக்கள் ஆதரவு ஏதும் அதற்கு இருக்காது.

லிபியாவில் அதிகாரத்தை எடுத்துக் கொண்ட அமெரிக்க கைக்கூலிப் படைகள், விரைவில் தங்களை செல்வாக்கற்றவையாகச் செய்து கொண்டன. முக்கிய சர்வதேச வங்கிகளை பில்லியன் கணக்கான லிபிய எண்ணெய் பணத்தை வைத்துக் கொள்ள அவை அனுமதித்தன; போர் தொடங்கியதும் அவை முடக்கப்பட்டன; லிபியாவில் போட்டி இஸ்லாமியவாதப் போராட்டக்காரர்களுக்கு இடையே வன்முறை பெருகியபோது இது நடைபெற்றது.

நேற்று பெங்காசியில் ஒரு மருத்துவமனைக்கு வெளியே கார்க் குண்டுத் தாக்குதல் ஒன்று நடைபெற்றபோது, குறைந்தப்பட்சம் மூன்று பேராவது கொல்லப்பட்டதோடு 17 பேர் காயப்பட்டனர். இதையொட்டி உள்ளூர் இஸ்லாமியவாதப் போராட்டக்காரர்களுக்கு எதிராக எதிர்ப்புக்கள் வெடித்தன; அவர்கள் நகரத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும் எனக் கோரப்பட்டது. ராய்ட்டர்ஸிடம் ஒரு சாட்சி கூறினார்: “இது எங்களுடைய மகன்களின் சதை; இதைத்தான் குடிப்படைகள் எங்களுக்குக் கொடுத்துள்ளனர்.”

அல் கைய்டாவின் கறுப்புக் கொடியின் கீழ் சிரிய நகரம் தீவிரவாதக் குண்டர்களால் ஆளப்படுகிறதுஎன்ற தலைப்பில் ஒரு சமீபத்திய கட்டுரை, டெய்லி டெலிகிராப்பில் வந்துள்ளது, சிரியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ரக்கா நகர வாழ்வை விவரிக்கிறது; இது தற்பொழுது அல் கைய்டாவுடன் தொடர்புடைய அல் நுஸ்ரா முன்னணியின் வசம் உள்ளது. நகரத்தின் கிறிஸ்துவ தேவாலயங்கள் மூடப்பட்டுவிட்டன, இஸ்லாமியவாத நீதிமன்றங்கள் தலை மறைப்பு இல்லாத பெண்களைக் கைது செய்கின்றன, அல் நுஸ்ரா பல பேக்கரிகளையும் பணியிடங்களையும் கைப்பற்றிவிட்டது. நூற்றுக்கணக்கான நகரவாசிகள் அல் நுஸ்ரா ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் சேர்ந்துள்ளனர்.

உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திடம் அத்தகைய போருக்கு பரந்த எதிர்ப்பு உள்ளது என்றாலும்கூட வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் போருக்குத் தயாரிப்பு செய்வதுடன் சிரியாவில் ஆட்சி மாற்றத்தையும் விரும்புகின்றன. கிட்டத்தட்ட அமெரிக்கர்களில் 62 சதவிகிதத்தினரும், துருக்கியர்கள் மற்றும் லெபனானியர்களில் இன்னும் அதிக சதவிகிதத்தினரும் சிரியாவில் போர் விரிவாக்கத்தை எதிர்க்கின்றனர்.