சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Australia Defence White Paper and the US “pivot” to Asia

ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு குறித்த வெள்ளை அறிக்கையும் அமெரிக்காவின் ஆசிய “முன்னிலையும்”

James Cogan
10 May 2013

use this version to print | Send feedback

ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் மூலோபாய இராணுவ நிலையமைவை வரையறுக்கும் 2013 பாதுகாப்பு வெள்ளை அறிக்கை, அதன் ஒபாமா நிர்வாகத்தின் ஆசியாவில்முன்னிலைஎன்பதற்கு நிபந்தனையற்ற ஆதரவின் தொகுப்பாக உள்ளது. இந்த ஆவணம், “அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே உள்ள உறவு எதிர்வரும் தசாப்தங்களில் நம் பிராந்தியத்தின் எதிர்கால நிலையை நிர்ணயிக்கும்என்று வலியுறுத்துகிறது. மேலும் ஆஸ்திரேலியா முழுஇந்திய-பசிபிக்பகுதியிலும் அமெரிக்காவின் மேலாதிக்க முயற்சிக்க இராணுவ துணையாகவும், இயல்பான அடித்தளமாக உதவும் என்றும் முற்குறிப்பாக தெரிவிக்கிறது. அமெரிக்காவுடன் ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துவதுடன், இந்திய பசிபிக் பெருங்கடல்களுக்கு இடையே உள்ள முக்கிய கப்பல் பாதைகளைக் கட்டுப்படுத்துவதில் இந்தியா போன்ற நாடுகளுடன் ஒத்துழைப்பையும் வலியுறுத்துகிறது.

அமெரிக்க மற்றும் ஆஸ்திரேலிய கொள்கையின் வெளிப்படையாக கூறப்படாத நோக்கம் தைவானின் அந்தஸ்த்தில் ஆரம்பித்து தென் சீன மற்றும் கிழக்குச் சீனக் கடல்களில் நில-நீர்ப்பிரிவுகள் குறித்த மோதல்கள் வரை சீனாவை பல பிரச்சினைகளை ஒட்டி ஒரு பொருளாதார, இராணுவ முற்றுகைக்கு அச்சுறுத்துவது ஆகும். வரலாற்றுரீதியாக ஒரு பொருளாதார வீழ்ச்சியினுள் சென்றுகொண்டிருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஆசியாவில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மேலாதிக்க சக்தியாக வாஷிங்டனுக்கு பதிலாக பெய்ஜிங் வரக்கூடும் என்பதால் சீனாவின் பொருளாதார, மற்றும் இராணுவ விரிவாக்கத்தை தடுக்க உறுதி கொண்டுள்ளது.

இத்தகைய மதிப்பீட்டை முரண்பாட்டிற்கு உட்படுத்துவது போல் தோன்றும் விதத்தில் ஆஸ்திரேலிய வெள்ளை அறிக்கை அரசாங்கம் சீனாவை ஒரு எதிரி போல் அணுகவில்லைஎன்றும் வலியுறுத்துகிறது. ஆஸ்திரேலியாசீனாவின் எழுச்சியை வரவேற்கிறது”, “எதிர்காலத்தில் அநேகமாக ஏற்படக்கூடியதுவாஷிங்டனும் பெய்ஜிங்கும் ஆக்கபூர்வ உறவைத் தக்க வைத்துக் கொள்வது என்பதுதான்என்றும் அறிவிக்கிறது.

நடைமுறைச் செய்தி ஊடகத்தின் வர்ணனையின் பெரும்பகுதி இத்தகைய வார்த்தைப் பிரயோகங்களில்தான் கவனத்தைக் காட்டியுள்ளது. இது சுருக்கமாக தலையங்கங்களில் ஆஸ்திரேலியாவின் சீனா குறித்த நிலைப்பாட்டை பாதுகாப்பு அறிக்கை மிருதுவாக்குகிறதுபோன்றதில் வெளிப்படுகிறது. இதைவிட நம்பிக்கை குறைவான மதிப்பீடுதான் முந்தைய 2009 வெள்ளை அறிக்கையில் இருந்தது. உலக நிதிய நெருக்கடியிலிருந்து பொருளாதார வீழ்ச்சிக்கு நடுவே இயற்றப்பட்ட அந்த ஆவணம் வெளிப்படையாக ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தின் அச்சங்களான சீனாவின் எழுச்சி போராபத்தை ஏற்படுத்துகிறது எனக் கூறியிருந்தது.

2030 அளவில் சீனா உலகின் மிகப் பெரிய பொருளாதாரமாக வெளிப்படும் என்பது மட்டுமின்றிஆசியாவின் வலுவான இராணுவ சக்தியாகவும் இருக்கும்என்று 2009 அறிக்கை வலியுறுத்தியிருந்தது. அமெரிக்க செல்வாக்கின் குறைப்பால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை நிரப்ப முயன்ற சீனா, ரஷ்யா, இந்தியா, ஜப்பான் மற்றும் அமெரிக்கா இவற்றிற்கிடையேஒரு சிறிய ஆனால் பெருகும் மோதல் குறித்த கவலை இருந்தது. ஆழ்ந்த தீவிரம் கொண்ட போர்கள் பெரிய சக்திகளுக்கு இடையே ஏற்படலாம்என்று அது எச்சரித்து, சீனாவின் இராணுவ விரிவாக்கம்கவலைக்கான சாத்தியப்பாடுகளை கொண்டுள்ளதுஎன்றும் முத்திரையிட்டது. இந்தக் கருத்து சீனாவை ஒரு அச்சுறுத்தல் என வரையறுத்ததால் சீன ஆட்சியில் இருந்து எதிர்ப்புக்களைத் தூண்டியது.

2009ம் ஆண்டு ஆவணம் அப்பொழுதிருந்த பிரதம மந்திரி கெவின் ரூட்டின் வெளியுறவு நிலைப்பாட்டை பிரதிபலித்தது. ரூட் சர்வதேசரீதியாக சில மூலோபாய வட்டங்களால் பகிர்ந்து கொண்ட கருத்தான, வாஷிங்டன் சீனாவின் எழுச்சியை கட்டுப்படுத்த முடியாது என்பதால் மோதலைத் தவிர்ப்பதற்கு தன் முனைவுகளை ஏற்புடையதாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்பதற்கு உருவாக்கம் கொடுத்தார். ஆஸ்திரேலிய மற்றும் அமெரிக்க உளவுத்துறை நிறுவனங்களின் ஆலோசனைகளுக்கு எதிராக வெள்ளை அறிக்கையில் சேர்க்கப்பட்ட போருக்கான சாத்தியப்பாடு உள்ளது என்னும் உறுதியான சிந்தனை, அமெரிக்க சீன அழுத்தங்களை மத்தியஸ்தம் செய்து, சமரசப்படுத்தும்ஆசிய பசிபிக் சமூகம்பற்றிய விவாதங்கள் தேவை என்னும் ரூட்டின் அழைப்புக்களை அடித்தளமாக கொண்டுருந்தது. ஜூன் 2008ல் அவருடைய அத்தகைய அரங்கிற்கான திட்டம் ஏற்கனவே அமெரிக்கா மற்றும் பிற பிராந்திய நாடுகளால் நிராகரிக்கப்பட்டுவிட்டது.

ரூட்டின் நிலைப்பாடு ஆஸ்திரேலிய ஆளும் வர்க்கத்தை எதிர்கொண்ட அடிப்படைச் சங்கடத்தைத்தான் உருவகமாகக் கொண்டிருந்தது. இரண்டாம் உலகப் போருக்குப் பின் ஆஸ்திரேலியா தென் பசிபிக், தென்கிழக்கு ஆசியா மற்றும் உலக அரங்கில் தன் மூலோபாய நலன்களை உறுதிப்படுத்த அமெரிக்காவுடனான அதன் நட்பைத்தான் முற்றிலும் நம்பியிருந்தது. கடந்த தசாப்தத்தில் இந்த மூலோபாய உடன்பாடு சீனா இப்பிராந்தியத்தில் தன் செல்வாக்கை வளர்க்கும் முயற்சிகளுக்கு எதிராக கான்பெராவால் முயற்களை மேற்கொள்ள உந்துதல் கொடுத்தது. ஆனால், அதே நேரத்தில், சீனா ஆஸ்திரேலியாவின் மிகப் பெரிய ஏற்றுமதிச் சந்தை, மற்றும் வணிகப் பங்காளியாகி முதலீட்டிற்கு பெரும் மூலாதாரமாகவும் போய்விட்டது.

2008 உலக நிதிய நெருக்கடியின் பின்னர், சீனாவின் மூலப்பொருட்களுக்கான தேவைகள்தான் ஆஸ்திரேலியப் பொருளாதாரச் செயற்பாடுகள் அதிகரிக்க முக்கிய காரணியாக இருந்தன. ரூட்டின்ஆசிய-பசிபிக் சமூகம்திட்டம் பெருநிறுவன உயரடுக்கு மற்றும் அரசியல் ஆளும்தட்டின் கணிசமாக பிரிவுகளுடைய கவலைகளை வெளிப்படுத்தியது. அதாவது உறவுகளில் தடை ஏதேனும் ஏற்பட்டால், அவை சீனாவிற்கு எதிராக தங்கள் அமெரிக்க நட்பு நாட்டிற்குத்தான் ஆதரவு கொடுக்கும் கட்டாயத்தை ஏற்படுத்தும். இது அந்நாட்டின் பொருளாதார, நிதிய நலன்களுக்குப் பேரழிவைத் தரக்கூடும்.

புதிய 2013 வெள்ளை அறிக்கை ஆசிய-பசிபிக்கில் அரசியல் சக்திகளின் மறுஅணிதிரளலின் விளைவு ஆகும். இது ஒபாமாவின்முன்னிலைஎன்பதால் ஊக்கம் பெறுகிறது. பிராந்தியம் முழுவதும் வாஷிங்டன் பல தந்திர நடவடிக்கைகளால் ஒவ்வொரு நாட்டையும் கிட்டத்தட்ட சீனாவுடன் போருக்குத் தயாரிப்பு என்பதில் ஈடுபடுத்தியுள்ளது. முழு நிகழ்வுப்போக்கும் இப்பிராந்தியத்தில் இருக்கும் மக்களுக்கு தெரியாது மறைக்கப்பட்டு நடக்கிறது. இது குறித்து, இதன் பேரழிவுகரமான தாக்கங்களின் சாத்தியப்பாடு குறித்த பகிரங்க விவாதங்கள் ஏதும் அநேகமாக இல்லை.

2010ல் இந்தச் சதிப்பேச்சுக்கள் ஆஸ்திரேலிய ஆளும்பிரிவினுள் கூடுதலான  அமெரிக்க சார்புடைய பிரிவுகளின் நடவடிக்கைகளால் ரூட்டிற்கு குழிபறித்து அவரைப் பிரதமர் பதவியில் இருந்து அகற்றுதல் என்னும் வடிவத்தில் வெளிப்பட்டன. வாஷிங்டன் சீனவிற்கு எதிரான அதன் முக்கிய நிலைப்பாட்டுத் தளமாக ஆஸ்திரேலியாவை கண்டதுடன் எந்தவொரு ஆஸ்திரேலியா அரசாங்கத்தையும் இந்த நிகழ்ச்சி நிரல் செயல்படுத்தப்படுத்த அனுமதிக்கத் தயாராக இல்லை. ஜூன் 23-24, 2010ல் பின்னர் விக்கிலீக்ஸால் அமெரிக்கத் தூதரகத்தின்பாதுகாப்பிற்கு உட்பட்ட தகவல் வழங்குனர்என அம்பலப்படுத்தப்பட்ட தொழிற் கட்சியிலும்  தொழிற்சங்கங்களிலும் இருந்த ஆளுமையை செலுத்துபவர்கள் ஒரு அரசியல் ஆட்சிசதியை நடத்தினர். ஒரே இரவில், ரூட் அவருடைய உதவியாளர் ஜூலியா கில்லர்டினால் அகற்றப்பட்டார். ரூட்டின் பாதுகாப்பு மந்திரி ஜோன் பாக்னர் சில நாட்களுக்குள் இராஜிநாமா செய்தார்.

இதை அடுத்த மூன்று ஆண்டுகளில் கில்லர்டின் தொழிற் கட்சி அரசாங்கம் பசுமைவாதிகள் உட்பட எதிர்தரப்புக் கட்சிகள் அனைத்தினதும் முழு ஆதரவுடன் அமெரிக்கக் கொள்கைகளுக்கு நிபந்தனையற்ற ஆதரவை கொடுத்துள்ளது. நவம்பர் 2011ல் ஒபாமா தன் ஆஸ்திரேலியப் பயணத்தை இந்த முன்னிலை கொள்கையை முறையாக அறிவிக்கப் பயன்படுத்திக் கொண்டார். இதில் அமெரிக்க மரைன்கள் படையணி டார்வினில் இருத்துவது மற்றும் பிற தளங்களைப் பற்றிய திட்டங்கள் இருந்தன.

2013 வெள்ளை அறிக்கை ஆஸ்திரேலிய ஏகாதிபத்தியம் செல்படுத்தும் ஆபத்தான சமப்படுத்தும் செயலைக் கொண்டுள்ளது. வேறு மாற்றீடு இல்லாத நிலையில், கில்லார்ட் அரசாங்கம் ஆர்வத்துடன் சீனாவுடனான வணிக உறவுகளை விரிவாக்க முற்படுகிறது. மார்ச் மாதம் ஆஸ்திரேலிய, சீன நாணயங்கள் மாற்றுவிகிதம் என்பதற்கான உடன்பாடு அதில் இருந்தது. ஆனால், இதன் வெளிநாட்டு மற்றும் மூலோபாயக் கொள்கைகள் வாஷிங்டன் வலியுறுத்தும் அமெரிக்க ஆணையானபிராந்தியப் பாதுகாப்பு ஒழுங்கைசீனா ஏற்க வேண்டும் என்பதுடன் எத்தகைய விரோதப் போக்குகளும் கருத்திலெடுக்கப்படவில்லை என்று பகிரங்கமாக உத்தரவாதங்கள் கூறப்பட்டபோதிலும் எந்த மோதலிலும் அமெரிக்கா பக்கம் போரிடத்தயார் என்பதை முகவுரையாகவும் கொண்டுள்ளது. சீனாவிற்கு எதிரான அமெரிக்கப் போர்த்தயாரிப்புக்களுடன் முற்றிலும் இணைந்திருந்த இராணுவ ஈடுபாடு, ஆயுதங்கள் வாங்குதல், படைத்தளங்களின் ஒழுங்கமைப்பு மாற்றல்களுடன் இன்னும் அதிக இராஜதந்திர நிலைப்பாடு பெய்ஜிங்கினை நோக்கி காட்டப்பட்டது.

முழு ஆஸ்திரேலிய அரசியல் மற்றும் செய்தி ஊடக கட்டமைப்பு பொய்கள், இராஜதந்திர இரட்டைப் பேச்சு என்னும் இந்தச் சதியுடன் ஒத்துழைக்கின்றன. இது ஆஸ்திரேலிய, அமெரிக்க மற்றும் பிராந்தியத்தில் இருக்கும் மக்களை அவர்கள் பேரழிவுகரமான தாக்கங்கள் கொண்ட போருக்கான உந்துதலுக்குள் தள்ளப்படுகின்றனர் என்ற உண்மை குறித்து மறைத்துவைக்கின்றன.

இச்சதியை அம்பலப்படுத்தவும் தொழிலாள வர்க்கத்திற்கு உண்மையைக் கூறவும் 2013 ஆஸ்திரேலியத் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்துகிறது. சோசலிச சமத்துவக் கட்சியின் 2013 தேர்தல் பிரச்சாரமானது, முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவு மனித குலத்தைப் போர் என்னும் பெரும் பள்ளத்தில் அணுவாயுதம் தரித்த நாடுகள் தள்ளாமல் தடுப்பதையும் நோக்கமாக கொண்ட உலகெங்கிலுமுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே ஒரு பரந்த போர் எதிர்ப்பு இயக்கத்திற்காக உலக ட்ரொட்ஸ்கிச இயக்கமான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் போராட்டத்தின் ஒரு பகுதியாகும். அத்தகைய ஒரு இயக்கம் போருக்குப் பொறுப்பான முதலாளித்துவத்தை தூக்கிவீசி உலக சோசலிசத்தை நிறுவுவதை நோக்கமாக கொண்ட சோசலிச, சர்வதேசிய முன்னோக்கை அடித்தளமாக கொண்டிருக்கவேண்டும். ஆஸ்திரேலியா மற்றும் சர்வதேசரீதியாக தொழிலாளர்களும் இளைஞர்களும் இப்பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுத்து அதில் பங்கு பெற வேண்டும்.