சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : சிரியா

US shrugs off Syrian opposition’s chemical weapons use, presses for war

சிரிய எதிர்த்தரப்பின் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்துதலை அமெரிக்கா புறந்தள்ளிவிட்டு, போருக்கு அழுத்தம் கொடுக்கிறது

By Thomas Gaist
8 May 2013

use this version to print | Send feedback

ஐக்கிய நாடுகள் சபையின் பரிசோதகர் Carla del Ponte இன் அறிக்கையானது சிரிய ஜனாதிபதி பஷர் அல் அசாத்தின் ஆட்சி அல்ல, மேற்கத்தைய ஆதரவுடைய எதிர்தரப்பு சக்திகள்தான் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது எனக் கூறப்பட்டதை புறந்தள்ளிவிட்டு நேற்று சிரியாவிற்கு எதிரான போருக்கு அமெரிக்க அதிகாரிகள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்தனர். Del Ponte இன் கருத்தானது ஐ.நா. அதிகாரிகளின்

பரந்த சோதனைகளை உள்ளடக்கிய பேட்டிகளை அடித்தளமாகக் கொண்டது, வாஷிங்டன் தன் போருக்கான உந்துதலை நியாயப்படுத்த கூறிவரும் பொய்யை அது அம்பலப்படுத்தியுள்ளதுஅதாவது, சிரியாவை தாக்குவது என்பது அசாத் பயன்படுத்தும் இரசாயன ஆயுதங்களில் இருந்து மக்களைக் காப்பாற்றுதல் என்பதே அது. (See also: “UN says US-backed opposition, not Syrian regime, used poison gas”).

வெள்ளை மாளிகையின் செய்தி ஊடகச் செயலாளரான ஜே கார்னே என்பவர் Carla del Ponte யின் அறிக்கையை ஒரு சிறு சான்றுகூட அளிக்காமல் நிராகரித்தார். “எதிர்த்தரப்பு இராசயன ஆயுதங்களைப் பயன்படுத்தியது எனப்படும் எத்தகைய கருத்துக்கள் குறித்தும் நாங்கள் முற்றிலும் அவநம்பிக்கை கொண்டுள்ளோம். சிரியாவில் நடைபெற்றுள்ள இரசாயன ஆயுதப் பயன்பாடு எதுவும் அசாத் ஆட்சியினால்தான் என்பதை நாங்கள் அதிகம் நம்புகிறோம். அதுதான் எங்கள் நிலைப்பாடு” என்று கார்னே கூறினார்.

உண்மையில் எதிர்த்தரப்பு இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என்று நம்புவதற்குக் காரணம் உள்ளது. டிசம்பர் மாத CNN தகவலின்படி, அமெரிக்கா ஒப்பந்தக்காரர்களையும், கைக்கூலிகளையும் எதிர்த்தரப்பினருக்கு “[இரசாயன] ஆயுதங்கள் சேமிப்புக் கிடங்குகளை பாதுகாக்கவும் கையாளவும்பயிற்சி அளிப்பதற்கு அனுப்பி வைத்தது.

எதிர்த்தரப்புப் படைகள், பல கப்பல் வழியாக ஆயுதங்களையும் கருவிகளையும் அமெரிக்கா மற்றும் நட்பு ஆட்சிகளான கட்டார், துருக்கி, சௌதி அரேபியா ஆகியவற்றின் மேற்பார்வையில் பெற்றுள்ளது. கடந்த டிசம்பர் மாதம், எதிர்தரப்பு போராட்டக்காரர்கள் YouTube இல் ஒரு வீடியோ காட்சியை வெளியிட்டனர்; அதில் அவர்கள் இரசாயன ஆயுதங்களைச் சோதிப்பது, அதை அவர்கள் பயன்படுத்தத் தயாராக இருப்பது ஆகியவை உள்ளன.

கார்னேயிடமிருந்து தங்கள் வழிவகையை எடுத்துக் கொண்டுள்ள அமெரிக்க சட்டமியற்றுவோர், சிரியா மீது முழு அளவுத் தாக்குதலுக்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர். செனட் வெளியுறவுகள் குழுத் தலைவர் ரோபர்ட் மெனென்டெஸ் (ஜனநாயகக் கட்சி, நியூ ஜேர்சி) ஒரு சட்டத்தை அளித்துள்ளார்: இது உத்தியோகபூர்வமாக “எதிர்த்தரப்பினர்” எனக்கூறப்படுவோருக்கு ஆயுதம் வழங்க ஒபாமா நிர்வாகத்திற்கு ஒப்புதல் கொடுக்கும்.

“அசாத் ஆட்சி சிவப்புக் கோட்டைத் தாண்டிவிட்டது, அது எங்களை அனைத்து விருப்பங்களையும் பரிசீலிக்க வைக்கும் கட்டாயத்தைக் கொடுத்துள்ளது” என்று மெனென்டெஸ் ஒரு எழுத்து மூல அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்: அதாவது சிரிய ஆட்சி, எதிர்த்தரப்பிற்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது என்ற del Ponte இனால் மறுக்கப்பட்ட, முற்றிலும் ஆதாரமற்ற கூற்றை உண்மை என்று எடுத்துக் கொண்டு குறிப்பிட்டுள்ளார்.

வார இறுதியில் செனட்டர் ஜோன் மக்கெயின் (அரிசோனா, குடியரசுக் கட்சி) ஒபாமாவின் “சிவப்புக் கோடு” இரசாயன ஆயுதங்கள் பயன்பாடு குறித்து கடக்கப்பட்டுவிட்டன, சிரியாவிற்கு எதிரான போரின் விரிவாக்கத்தை “மாற்றுவதற்கான நேரம்” வந்து விட்டது என்றார்.

செனட்டர் பாப் கேசி (பென்சில்வானியா, ஜனநாயகக் கட்சி) அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகள் சிரியாவிற்குள் ஒரு “பாதுகாப்புப் பகுதியைத்” தோற்றுவிப்பதற்கு பரந்த ஆதரவு உள்ளது என்று வலியுறுத்தினார். இதில் பெரிய அளவு சிரியாவின் விமானப் பாதுகாப்புக்களுக்கு எதிரான விமானத் தாக்குதல்கள் இருக்கும், மற்றும் சிரியப் பகுதியின் கணிசமான பகுதியை ஏகாதிபத்திய சக்திகளின் கட்டுப்பாட்டின் கீழ் வரவேண்டிய நிலையும் இருக்கும்.

செனட்டர் ரோபர்ட் கோர்க்கர் (டெனெசி, குடியரசுக் கட்சி) வெளியுறவுக் குழுவில் ஒரு மூத்த உறுப்பினர், செவ்வாயன்று கூறினார்: “நாம் விரைவில் எதிர்தரப்பிற்கு ஆயுதம் அளிப்போம் என நான் நினைக்கவில்லை.”  “நாம் சமநிலையை மாற்ற வேண்டும்.... நிதானமான எதிர்தரப்புக் குழுக்கள், நாம் ஆதரவு கொடுப்பவை, போரிடுவதில் வல்லமை பெற்றிருக்கவில்லை” என்று அவர் சேர்த்துக் கொண்டார்.

போருக்கான செனட்டர்களின் அழைப்புக்கள் சிரியாவில் முடுக்கிவிடப்பட்டுள்ள இராணுவத் திட்டத்தின் நடுவே வந்துள்ளன. திங்களன்று நியூ யோர்க் டைம்ஸானது அமெரிக்கா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகியவை இரகசியமாக ஒருங்கிணைந்த விமானத் தாக்குதல்கள் குறித்து விவாதித்தன என்றும் அதன் நோக்கம் சிரியாவில் பறக்கக்கூடாது பகுதி ஒன்றை நிறுவுதல் என்றும் தகவல் கொடுத்துள்ளது. செய்தித்தாளானது, அமெரிக்க இராணுவம், பல மாதங்களாக சிரியா மீது தாக்குதல் நடத்தும் திட்டங்களை இயற்றிக் கொண்டிருப்பது, ஒபாமா நிர்வாகத்தால் அதன் திட்டத்தை முடுக்கிவிட்டு அதை முக்கிய அமெரிக்க நட்பு நாடுகளுடன் ஒருங்கிணைக்குமாறு கூறப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கிறது.

காங்கிரஸ் மற்றும் செய்தி ஊடகங்களில் இருந்து போருக்கான கடும் தொனி சிரியா மீது இஸ்ரேலிய வான் தாக்குதல்கள் கடந்த வியாழன், ஞாயிறு தினங்களில் நடந்தவற்றை தொடர்ந்து வந்துள்ளன. 42 சிரிய சிப்பாய்கள் இஸ்ரேலிய தாக்குதல்களால் டமாஸ்கஸிற்கு அருகே கொல்லப்பட்டதாக தகவல்கள் கொடுத்துள்ளன.

ஒரு ஹெஸ்புல்லா பிரதிநிதி, இஸ்ரேலிய தாக்குதல்கள் எதிர்தரப்புக்களுக்கு ஆதரவாக தொடங்கின என்றார். “இக்குண்டுவீச்சு பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதிகளுக்கு (தப்கீர்களுக்கு) உளரீதியான ஏற்றம் கொடுக்கும் ஒரு முயற்சி, சிரியாவை உள்ளிருந்து அழிக்கப் போரிடுவோருக்கு ஊக்கம் அளிப்பதுஎன்று அவர் கூறினார்.

அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா ஆகியவற்றின் பாரிய வான் தாக்குதல்களுக்கான தயாரிப்புக்களுக்கு நடுவில், இஸ்ரேலிய தாக்குதல்களின் நோக்கம், சிரியாவின் வான் பாதுகாப்புத் திறன்களை பரிசோதித்தல் ஆகும். மூலோபாயத்திற்கான சர்வதேச கற்கை மையத்தின் (Centre for Strategic and International Studies) ஆன்டனி கோர்ட்ஸ்மன் கருத்துப்படி, “இஸ்ரேலின் வெற்றி ஒருவகை பறக்கக்கூடாது பகுதியை அல்லது நகரக்கூடாது பகுதியை செயல்படுத்துவதில் முற்றிலும் இராணுவ இடர்கள் இப்பொழுது சிரியாவுடன் போர் தொடங்கியதோடு ஒப்பிடும்போது மிகவும் குறைந்து விட்டது என்பதை குறிக்கிறது.”

“பறக்கக் கூடாது” பகுதி என்பதைச் சுமத்துவது பெரிய அளவு போரை ஏற்படுத்தக்கூடும் என்று கோர்ட்ஸ்மன் தெளிவாக்கியுள்ளார்: “இதற்கு பாரிய அமெரிக்க விமான, க்ரூஸ் ஏவுகணைத் தாக்குதல் வேண்டும்... அத்தகைய போரைத் தொடர்ந்து நீடிப்பது என்பது இரு ஏவுகணைத் தாங்கிக் குழுக்களுக்குக்கூட கடினமாகும்.”

வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலின் மே 7ம் திகதித் தலையங்கம் கூறுகிறது: “தலையீடு இல்லாத போர், சிரியாவிற்கு எதிரான பெரிய போருக்கு காரணத்தைக் கொடுக்கிறது. அப்படியும்கூட ஒபாமாவிற்கு விருப்பம் இருந்தால் அமெரிக்கா இந்த மோதலை நல்ல முடிவிற்கு கொண்டுவரமுடியும். இக்கட்டத்தில், இதற்கு சில எதிர்ப்பாளர்களுக்கு ஆயுதம் அளிப்பதை விட அதிகம் தேவைப்படுகிறது. இதன் பொருள் பறக்கக்கூடாது பகுதிகளை சுமத்துவது, அசாத்தின் படைகளுக்கு எதிராக வான் தாக்குதல்களை நடத்துவது என்பதாகும். அமெரிக்கா அல்லது பிற தரைப்படைத் துருப்புக்கள் இரசாயன ஆயுதங்களை கைப்பற்றுதல் என்பதையும் கருத்திற்கொள்ள வேண்டும்.

“உடனடியான இலக்கு பேரழிவு ஆயுதங்கள் பரவுதலைக் குறைத்தல் என்பதாகும்; ஆனால் மிக முக்கியமான மூலோபாய இலக்கு அப்பிராந்தியத்தில் நம் முக்கிய எதிரியான ஈரானைத் தோற்கடித்தல் என்பதாகும். குறைந்தப்பட்சம் ஒரு குறுகிய காலத்திற்கேனும் டமாஸ்கஸில் ஒரு ஜிகாத்தியவாத வெற்றி என்பது உண்மையாகும், ஆனால் இவை துருக்கி மற்றும் இஸ்ரேலினால் அடக்கப்பட்டுவிடக் கூடியவை.”

2003ல் ஈராக்கின் மீது படையெடுப்பு அளவைப் போன்ற மற்றொரு ஏகாதிபத்திய போருக்கு அமெரிக்கா தயாரிப்புக்களைக் கொண்டுள்ளது. இழிந்த முறையில் அமெரிக்க மக்களுக்கு அல் கெய்டாவிற்கு எதிரான “பயங்கரவாதத்திற்கு எதிரான போர்” என்று விளம்பரப்படுத்தப்பட்டாலும், அத்தகைய போரின் இலக்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுப்பாடு முழு மத்திய கிழக்கின் மீதும் ஒருங்கிணைக்கப்படவும், அதன் பரந்த எரிசக்தி இருப்புக்களைக் கட்டுப்படுத்துவது என்பதும்தான். அமெரிக்காவின் ஆளும் உயரடுக்கு “பயங்கரவாதிகளை” தோற்கடிப்பது குறித்து அக்கறை கொள்ளவில்லை, உண்மையில் அவர்கள் அதன் நட்பு அமைப்புக்கள்தான்.

அல் கெய்டா பிணைப்புடைய எதிர்தரப்புப் படைகள் இரசாயன ஆயுதத் தாக்குதலை நடத்தியதை ஒபாமா நிர்வாகம் எளிதாக உதறித்தள்ளியது குறிப்பிடத்தக்க வகையில் முக்கியத்துவம் உடையது; அதிலும் சிறப்பாக அல் கெய்டா பேரழிவு ஆயுதங்களைக் கொண்டிருக்கிறது என்பது ஈராக் மீது படையெடுக்க முக்கிய போலிக் காரணமாக இருந்த நிலையில். இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கும் மிகப் பிற்போக்குத்தன இஸ்லாமியவாத சக்திகளுக்கும் இடையே நீண்டகாலமாகத் தொடரும் இணைப்பைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

1970களில் தொடங்கி, 1980கள் முழுவதும் சோவியத்-ஆப்கானிய போர்க்காலம் முழுவதும் அமெரிக்க உளவுத்துறை இஸ்லாமியவாத சக்திகளுக்கு, ஒசாமா பின் லேடன் உட்பட ஆயுதங்கள் கொடுப்பதை மேற்பார்வையிட்டது; மேலும் அவர்கள் பால்கன்களிலும் காகசசிலும் அமெரிக்கா ஆதரவுடைய போர்களில் அதிர்ச்சித் துருப்புக்களாக போரிட்டார்கள். அல் கெய்டாவின் சில கூறுபாடுகள் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு பின்னர் அமெரிக்காவில் இலக்கு வைக்கப்பட்டபோதிலும்கூட, வாஷிங்டனின் இச்சக்திகளுடனான அரசியல் தொடர்புகள் 2000 ம் முழுவதும் தக்க வைக்கப்பட்டிருந்தன.

தன்னுடைய 2011லிபியப் போர் மற்றும் இப்பொழுது சிரியப் போருக்கு அமெரிக்கா அல் கெய்டா பிணைப்பு உடைய லிபிய இஸ்லாமியவாத போராளிக் குழுவைத் திரட்டியது, சிரியாவில் அல்-நுஸ்ரா முன்னணியைத் திரட்டியது.

வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி செவ்வாயன்று மாஸ்கோவிற்குப் பயணித்து சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான அமெரிக்க முயற்சிக்கு ரஷ்ய ஆதரவைப் பெற முயன்றார். சீனாவுடன் சேர்ந்து ரஷ்யா மூன்று தனித்தனி ஐ.நா. தீர்மானங்களுக்கு எதிராகத் தடுப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தியது: அவை அமெரிக்க ஆதரவுடைய “எதிர்த்தரப்பு” குழுக்களை அசாத்தின் அரசாங்கம் நசுக்குவதைக் கண்டித்திருந்தன.

“அமெரிக்காவானது சிரியாவைப் பொறுத்தவரை நாம் முக்கியமான பொது நலன்களை பகிர்ந்து கொள்ளுகிறோம் என நம்புகிறது—பிராந்தியத்தில் உறுதித்தன்மை, பிராந்தியத்திலும் பிற இடங்களிலும் பிரச்சினைகளைத் தோற்றுவிக்கும் தீவிரவாதிகள் இல்லாத நிலை என” என்று கெர்ரி அறிவித்தார்.

அமெரிக்காவும் ரஷியாவும் போர் குறித்து ஒரு மாநாட்டிற்கு ஏற்பாடு செய்ய ஒப்புக் கொண்டுள்ளன; அசாத் ஆட்சியும் எதிர்த்தரப்பும் அதில் கலந்து கொள்ளும்.

ஆயினும்கூட, கெர்ரி புட்டினிடமிருந்து உறையவைக்கும் வரவேற்பைத்தான் பெற்றார்: பல மணிநேரம் கெர்ரி காக்க வைக்கப்பட்டு, கெர்ரி பேசும்பொழுது தன் பேனாவுடன் திசைதிருப்பும் வகையில் சுழற்றிக் கொண்டிருந்தார். ரஷ்ய வெளியுறவு அமைச்சரகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, அமெரிக்கக் கொள்கை குறித்து உட்குறிப்பாக குறைகூறியது. “இன்னும் ஆயுத மோதல் விரிவாக்கம் என்பது தீவிரமாக புதிய அழுத்தங்கள் கொண்ட பகுதிகளை தோற்றுவிக்கும் இடரைக் கொண்டுள்ளது; அதேபோல் ஒப்பீட்டளவில் இதுவரை அமைதியாக இருந்த சூழ்நிலையை உறுதி குலைக்கும் வகையில் லெபனிய-இஸ்ரேலிய எல்லைகளிலும் நடைபெறுகிறது.”