சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Trial of neo-Nazi terrorist group begins in Munich

நவ நாஜி பயங்கரவாதக் குழுவின் மீது வழக்கு மூனிச்சில் ஆரம்பமாகின்றது

By Peter Schwarz 
8 May 2013

use this version to print | Send feedback

NSU என அழைக்கப்படும் விசாரணை பிராந்திய உயர் நீதிமன்றத்தில் (OLG) திங்களன்று மூனிச் நகரில் ஆரம்பமாகியது. முக்கிய குற்றச்சாட்டிற்கு உட்பட்டுள்ள 38 வயது  Beate Zschape என்பவர் Uwe Bohnnhardt, Uwe Mundlos  ஆகியோருடன் இணைந்து தேசிய சோசலிஸ்ட் மறைமுக அமைப்பை(NSU) நிறுவியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.  Beate Zschape 10 கொலைகளில் உடந்தையாக இருந்தமை மற்றும் குறிப்பாக ஆபத்து விளைவுக்கும் தீ வைத்தல், கொலை முயற்சி போன்ற குற்றச்சாட்டையும் எதிர்கொள்ளுகிறார்.

ஜேர்மனியப் பாதுகாப்புப் பிரிவுகள் கண்காணிப்பின் கீழ் 13 ஆண்டுகளாக போலி அடையாளங்களுடன் வசித்து வந்தவர்கள் இவர்கள் 10  கொலைகள், இரண்டு குண்டுத் தாக்குதல்கள் மற்றும் கணக்கிலடங்கா வங்கிகளைக் கொள்ளைகளில் ஈடுபட்டவர்கள் என நம்பப்படுகின்றனர். ஒரு பெண் பொலிஸ் அதிகாரியைத் தவிர கொலைசெய்யப்பட்டவர்கள் அனைவரும்  இனவெறி நோக்கத்திலான தாக்குதல்களின் விளைவாகக் கொல்லப்பட்ட குடியேறியவர்களாவர்.

Zschäpe எவ்வித கொலைச்சூட்டு தாக்குதல்களுக்கும் குற்றம்சாட்டப்படவில்லை. ஆனால் அவர் அனைத்து NSU  குற்றங்களுக்கும் பொறுப்பை அவர் அமைப்பில் உறுப்பினராக இருப்பதால் பகிர்ந்து கொள்ளுகிறார் எனக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. Böhnhardt, Mundlos இருவரின் இறப்பைத்தொடர்ந்து (பொலிஸ் கண்டுபிடித்தபின் அவர்கள் தற்கொலை செய்து கொண்டுவிட்டனர் என்று நம்பப்படுகிறது)  மூன்று பேரும் வசித்த அடுக்கு வீட்டிற்குத் இவர் தீ வைத்ததால் அண்டை வீட்டுக்காரர் ஒருவருடைய உயிர் ஆபத்திற்கு உட்பட்டுவிட்டது.

Zschäpe  உடன் நான்கு ஆண்களும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

நவ நாஜியும், நீண்டகாலமாக துருன்ஜியா தேசிய ஜனநாயகக் கட்சியில் (NPD-  தீவிர வலதுசாரிக்கட்சி) செயலராகிருக்கும் Ralf Wohlleben கொலைக்கு உதவி செய்து துணைசெய்த்தாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இவர் NSU  விற்கு அது தலைமறைவான பின் உதவியதாகவும், பெரும்பாலான கொலைகளில் பயன்படுத்தப்பட்ட ஆயுதத்தை வாங்கித் தந்ததாகவும் கூறப்படுகிறது. Zschäpe ஐப் போல் Wohlleben உம் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Carsten S. உம் கொலை ஆயுதத்தை மூன்று பேருக்கும் அனுப்பி வைத்துள்ளதில் உடந்தை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த 33 வயது நபர் நவநாஜி இயக்கத்தில் இருந்து  ஒருவருடத்திற்கு முன் நீங்கியதாகக் கூறப்படுகிறது. சம்பவங்களில் தன் பங்கைப் பற்றி அவர் பொதுவான ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.

André E ஒரு கொள்ளை மற்றும் குண்டுத்தாக்குதலுக்கு உடந்தையாக இருந்ததற்கு பொறுப்பாவார். அவரும் அவருடைய மனைவி Susanne உம் NSA   ன் மூன்று பேருடனும் அவர்கள் கண்டுபிடிக்கப்படும் வரை நெருக்கமான நண்பர்கள் என்று கூறப்படுகிறது.

Holger G NSU விற்கு அடையாள ஆவணங்கள் பெறவும் இன்னொரு ஆயுதத்தைப் பெறவும் உதவியதாக நம்பப்படுகிறது. Carsten S ப் போலவே இவரும் ஒரு விரிவான ஒப்புதல் வாக்கமூலத்தைக் கொடுத்துள்ளார்.

மத்திய அரசாங்க வழக்குதொடுனரைத்  தவிர, கொலைசெய்யப்பட்டவர்களின் அல்லது அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களின் சார்பாக கிட்டத்தட்ட 80 பிரதிவாதிகள் NSU வழக்கில் ஈடுபட்டுள்ளனர். இவர்களின் சார்பில் 7வக்கீல்கள் மூனிச்சில் கடந்த ஞாயிறன்று ஒரு செய்தியாளர் கூட்டத்தில் பங்கு பெற்றனர். நடவடிக்கைகள் NSU  உடைய பின்னணி, அதன் செயற்பாடுகள் குறித்து அனைத்தையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்ப்பதாகத் தெளிவுபடுத்தினர். வக்கீல்களின் கூட்டு றிக்கைப்படி, NSA இந்த மூன்று ஆபத்தான தீவிர வலதுசாரியினரைத்தான் கொண்டிருந்தது என்பதைக் கற்பனை செய்தல் கடினம் ஆகும்.

“எங்கள் நோக்கம் ஒன்றும் மிகவும் குறுகிய காலத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு அதிகப்பட்ச தண்டனை வாங்கித்தருவது என்று இல்லை. நாங்கள் அதிக ஆர்வம் கொண்டிருப்பது பரந்த முறையில் எப்படி இக்குற்றங்கள் நடத்தப்பட்டன என்பதற்கான தெளிவுபடுத்துவதுதான்” என்று  2005 ஜூன் 15 ல் மூனிச்சில் கொலை செய்யப்பட்ட Theodore Boulgarides இன் விதவை மனைவியின் வக்கீல் Angelika Lex தெரிவித்தார்.

தன்னுடைய கட்சிக்காரர் எப்படித் தன் கணவர் தேர்ந்தெடுக்கப்பட்டு, உளவுபார்க்கப்பட்டு, அவர் ஏன் NSU வின் ஒரு இலக்கானார் என்பதை அறிய விரும்புகிறார் என்று Lex வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் கொலைகாரர்களுடன் தொடர்பு கொண்ட எந்த வலைப்பின்னல்கள் அவர்களுக்கு உதவி புரிய முடிந்தது, கொலையைப் பற்றி அரசஅதிகாரிகளுக்கு என்ன தெரியும் என்பதையும் அறிய விரும்பினார்.

டோர்ட்முண்ட் நகரில் கொலையுண்ட Mehmet Kubasik இன் மகளின் வக்கீலான Sebastian Scharmer பின்வருமாறு கூறினார்: “ஐந்து குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் தண்டனையை விரைவில் வாங்கித்தருவது குறித்து நாங்கள் கவலை கொள்ளவில்லை. இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட விடயங்களில் அரசாங்கம் ஏன் தோல்வியற்றது என்பது பற்றி நாங்கள் தெளிவாக்க விரும்புகிறோம்.”

Scharmer NSU வில் 100க்கும் அதிகமானவர்கள் உள்ளனர் என்பதில் உறுதியாக நம்புகின்றார். அவர்களில் பலர் இரகசியப் பொலிஸ் பிரிவின் மறைமுக முகவர்கள் ஆவர். அரசஅதிகாரிகளால் நன்கு அறியப்பட்ட NSU  வின் மூன்று உறுப்பினர்கள் ஏன்  1998ல் கைது செய்யப்படவில்லை, எவர் NSU  விற்கு நிதியளிக்கின்றனர், மறைமுக முகவர்கள் இக்கும்பலின் குற்றங்களில் எத்தகையபங்கு கொண்டிருந்தனர் என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்று அவர் விரும்புகிறார்.

“விசாரணை நடத்தும் அதிகாரிகளோ அல்லது பாராளுமன்ற விசாரணைக் குழுக்களில் எதுவுமோ இக்குற்றங்களைச் சூழ்ந்துள்ள நிலைமைகள் பற்றி முழு விளக்கம தர முடியவில்லை என்பதால் நாங்கள் இப்பொழுது இப்பணியைத் தொடர விரும்புகிறோம்” என்றார் Scharmer. மத்திய ழக்குதொடுனர் அரசாங்க விசாரணைப் பிரிவுகள் தோல்வியுற்றது குறித் குற்றச்சாட்டுகள் பற்றி எதுவும் கூறாமல் இருப்பதற்காக அவரை இவர் குறைகூறியுள்ளார்.

ஏப்ரல் 6, 2006ல் கொலை செய்யப்பட்ட Halit Yozgat ன் குடும்பத்தின் சார்பில் வாதிடும் வக்கீல் Alexander Kienzle, taz செய்தித்தாளுக்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் குடும்பம்அரசாங்க அதிகாரிகளின் தொடர்பு, அவர்கள் அறிந்துள்ள தகவல்கள் பற்றிய வெளிப்படையான அரசியலமைப்பு நடவடிக்கைகள் வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும், அவை தெளிவுபடுத்தப்பட வேண்டும் என எதிர்பார்ப்பதாகவும்” கூறினார்.

கொலை செய்யப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் கொலை நடந்ததற்குப்பின் உடனடியாக விசாரணைக்கு உட்பட்டு, தங்கள் வாழ்க்கையின் மிக தனிப்பட்ட விடயங்களிலும் வெளிப்படைத்தன்மையை விசாரணை செய்யும் அதிகாரிகளுக்குக் காட்ட வேண்டும் எனக்கோரப்பட்டனர். “இப்பொழுது அவர்கள் இதேபோன்ற வெளிப்படைத்தன்மையை உளவுத்துறை அமைப்புக்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளுக் காட்டவேண்டும் என எதிர்பார்க்கின்னர்” என்று Kienzle மேலும் கூறினார்.

மூனிச் மாநில உயர் நீதிமன்றமும்  மத்திய அரசாங்க ழங்குதொடுனர்  அலுவலகமும் வழக்குத் தொடுத்தவர்களின் எதிர்ப்பார்ப்புக்களான வழக்கு பற்றிய ஒரு விரிவான தெளிவுவடுத்தலை நிறைவு செய்ய விரும்பவில்லை என்பதைத் தெளிவு படுத்தியுள்ளனர். அவர்கள் நடவடிக்கைகளை சம்பவங்களைச் சூழ்ந்த உடனடி நிலைமைகளை விசாரிப்பர் என்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீதுதான் முழுக் கவனமும் இருக்கும் என்றும் கூறினர்.

நீதிமன்றத் தலைவர் Karl Huber நீதிமன்றம் மற்றொரு விசாரணைக் குழு போல் இயங்காது என்றார். இது ஒரு மேல் முறையீட்டு மன்றத்தில் சவாலுக்கு உட்படாத வகையில் “மத்தியப் பணியில்” கவனத்தைக் காட்டும். அதாவது “முறையான குற்றவியல் நடவடிக்கைகளை நடத்தும், குற்றவியல் சட்டத்தின்படி குற்றம் சாட்டப்பட்டவர்கள் குற்றவாளிகள்தான் என முடிவெடுக்கும்.” என்றார்.

விசாரணைகளுக்கு முன்னதாக தலைமை நீதிபதி Manfred Götzl குறிப்பாகத் பாதிக்கப்பட்டவரிகளின் கவலை குறித்தும் மற்றும்  விசாரணை குறித்து பொதுமக்களின் ஆர்வத்தையும் பற்றிய தனது அதிருப்தியை தெரிவித்தார். முன்னர் 50 செய்தி ஊடகப் பிரதிநிதிகள்தான் மிகச் சிறிய நீதிமன்ற அறைக்குள் அனுமதிக்கப்படுவர் என்றும் மற்றும் கொலை செய்யப்பட்ட 10 பேரில் 8 பேர் துருக்கி நாட்டில் இருந்து வந்தவர்கள் என்றாலும்கூட இவற்றில் துருக்கிய மொழி செய்தி ஊடகத்தில் இருந்து ஒரு உறுப்பினர் கூட அதில் ருக்கவில்லை.

பின்னர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்குப்பின்தான் மூனிச் நகர மாநில உயர் நீதிமன்றம்    செய்திஊடகத்தினருக்கு மீண்டும் இருக்கைகள் கொடுத்தது. இம்முறை முக்கி தேசியச் செய்தி அமைப்புக்களை ஒரு சீட்டுக்குலுக்கல் முறை மூலம் ஒதுக்கிது. அவை சட்டம்பற்றி பயிற்சி பெற்ற செய்தியாளர்களை அனுப்பியிருக்கக்கூடும்.

மத்திய ழக்குதொடுனர் ஒரு மிகப்பெரிய இரண்டு ஆண்டு நீடிக்கும் விசாரணைக்குத் திட்டமிட்டுள்ளார். 600 தொகுப்புக்கள், 280,000 பக்கங்கள் விசாரணைக் கோப்புக்களை தயாரித்துள்ள இவர் அலுலகம் 600 சாட்சிகளை அழைக்கும். குற்றச்சாட்டுக்கள் மட்டும் 488 பக்கங்களுக்கு இருக்கும். ஆனால் இந்த விவரங்களின் பெரும்பகுதி கொலையைப்பற்றிய மதிப்பீட்டிற்கு அதிகம் பொருத்தமற்ற Zschäpe பயன்படுத்திய ஷாம்பு என்ன போன்றவை அடங்கியுள்ளன. ஆனால் குற்றங்களின் பின்னணி வெளிச்சத்திற்கு வராமல் உள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் இணை பிரதிவாதிகளின் வக்கீல்கள் மத்திய ழக்குதொடுனர் மற்றும் நீதிமன்றத்தின் தடுப்பு நிலைப்பாட்டை ஊடுருவ முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.

குற்றச்சாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதைவிட அதிகம் கண்டுபிடிப்பதில் தாங்கள் ஆர்வத்துடன் இருப்பதாக வக்கீல் Scharmer விளக்கினார். NSU  உடைய பின்னணியை விசாரணையின் முக்கிய விடயமாக்கவும் முயலவிரும்பினார். “இப்பிரச்சினைகள் ஒடுக்கப்பட முடியாதவை. நாம் அவற்றை பற்றிக் கேட்போம்என்றார் அவர்.

நூரெம்பேர்க் நகரில் கொலையுண்ட Enver Simsek ன் பிள்ளைகளுடை வக்கீலான Stephen Lucas வழக்குத் தொடுத்தவர்கள் தங்கள் குடும்ப உறுப்பினரின் கொலையினால் மட்டும் பாதிக்கப்படவில்லை. அவர்கள் தவறாக நடத்தப்பட்ட உத்தியோகப்பூர்வ விசாரணைகளினாலும் பாதிக்கப்பட்டனர். அவற்றில் “புறக்கணிப்பு அல்லது வேறுநோக்கமும் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம்.” என்று சேர்த்துக் கொண்டார்.