World Socialist Web Site www.wsws.org |
The social crisis in Americaஅமெரிக்காவில் சமூக நெருக்கடி
Andre Damon வெள்ளியன்று அமெரிக்க பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்று புதிய சாதனையை அடைந்தன; வோல் ஸ்ட்ரீட் வணிகர்கள் ஒரு வெற்றுத்தன வேலை அறிக்கையை பற்றி எடுத்து புதிய ஊகக் களியாட்டத்தில் ஈடுபட்டனர்.ஒபாமா நிர்வாகத்தால் விளம்பரப்படுத்தப்பட்ட உத்தியோகபூர்வ நிலைப்பாடு, விரைவாக ஏற்பட்டுக்கொண்டிருக்கும் பொருளாதார மீட்பின் நடுவே அமெரிக்கா உள்ளது என்பதாகும். அமெரிக்காவை நடத்தும் பெருநிறுவன, நிதிய உயரடுக்கு மற்றும் அதன் மேலங்கிகளுக்குபின் அலையும் மத்தியதர வகுப்பின் உயரடுக்கு ஆகியவற்றிற்கு, உயரும் பங்குச் சந்தை என்பதுதான் பொருளாதார ஆரோக்கியத்தை வரையறை செய்வதாகும். ஆனால் பெரும்பாலான மக்களுக்கு 2008ல் ஏற்பட்ட வோல் ஸ்ட்ரீட் சரிவு என்பது அன்றாடம் வரவு செலவுகளைச் சமாளிப்பதே பெரும் போராட்டம் என்று ஆகிவிட்டது.வறுமை, வேலையின்மை, கடன்பட்டுள்ள தன்மை, சரியும் ஊதியங்கள் பற்றிய உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் இந்த சமூக உண்மையை பற்றிய ஒரு பார்வையைக் கொடுக்கின்றன; ஆனால் வெகுஜனச் செய்தி ஊடகங்களோ இவற்றை மறைப்பதற்கு இயன்றதைச் செய்கின்றன.வியாழன் அன்று வெளிப்பட்ட ஒரு நிதானம் தரும் புள்ளிவிவரம், வோல் ஸ்ட்ரீட் பற்றிய பெருமிதத்தின் அடித்தளத்தில் இருக்கும் சமூக உண்மையைச் சுட்டிக்காட்டுகிறது. Centers for Disease Control and Prevention உடைய கருத்துப்படி, கடந்த தசாப்தத்தில் அமெரிக்காவில் தற்கொலை விகிதம் தீவிரமாக அதிகரித்துள்ளது.35 வயதில் இருந்து 64 வயது வரை உள்ளவர்களில், தற்கொலைகள் கிட்டத்தட்ட 30% 1999க்கும் 2010க்கும் இடையே அதிகரித்தன. இப்பொழுது அமெரிக்காவில் கார் விபத்துக்களில் இறப்பவர்கள் எண்ணிக்கையைவிட தற்கொலை எண்ணிக்கைதான் அதிகமாகிவிட்டது. இதன் அடிப்படைக் காரணம் ஒன்றும் ஒரு புதிர் அல்ல. பொருளாதார நெருக்கடி, அதையொட்டி பெருகியுள்ள வேலையின்மை, வறுமை, ஊட்டச்சத்து இன்மை, நோய்கள், வீடுகளற்ற நிலை, மற்றும் இப்பெரும் இழிவுகளுடன் செல்லும் சொந்த, குடும்பப் பிரச்சினைகள்தான் இவற்றிற்குக் காரணம் ஆகும்.சமூக நெருக்கடி இளைஞர், முதியவர், வேலையில் உள்ளவர், அற்றோர் என அனைத்து இனத்தைச் சார்ந்தவர்கள், இரு பாலரும் மற்றும் பல பண்பாடு, மொழியைச் சேர்ந்தோர் என தொழிலாள வர்க்கத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பாதித்துள்ளது.மில்லியன் கணக்கான முதிர்ந்த தொழிலாளர்களுக்கு, பொருளாதாரப் பாதுகாப்பு மற்றும் கௌரவமான ஓய்வு என்பதின் வாய்ப்பு தொலைவில் போய்விட்டது; ஏனெனில் முதியோர் தங்கள் சேமிப்புக்களில் கைவைக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர் உயிர்வாழ மேலும் அதிக கடன்களை நம்பியுள்ளனர். அமெரிக்கர்களில் 65 முதல் 74 வயது வரை இருப்பவர்களின் கடன்கள் வேறு எந்த வயதுக்குழுவையும்விட விரைவில் உயர்கிறது என்று பெடரல் ரிசேர்வ் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. 65 அல்லது அதற்கும் அதிக வயதானவரின் தலைமையில் இருக்கும் சராசரி இல்லத்தில், வீட்டுக் கடன் 2000த்தில் இருந்து 2011 வரை 50 சதவீதம் உயர்ந்துவிட்டது.சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்பு, கூட்டாட்சி ஓய்வு மற்றும் சுகாதாரப் பாதுகாப்புத் திட்டங்கள் அளிக்கும் ஏற்கனவே போதாத நலன்கள், இப்பொழுது இன்னும் குறைக்கப்பட உள்ளன. மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான ஓய்வூதியம் பெறுவோருக்குத்தான் உத்தரவாதமான ஓய்வூதியத் தொகை கிடைக்கிறது. கிடைப்பவர்களுள் பலரும் தங்கள் ஓய்வூதியங்களுக்கு எதிராக கடன் வாங்கத் தொடங்கிவிட்டனர்; மேலும் இரக்கமற்ற கடன் கொடுப்போரிடம் மிக அதிக கந்துவட்டியைக் கொடுக்கின்றனர்.கடந்த வாரம், நியூ யோர்க் டைம்ஸ், ஓய்வூதியத்திற்கு முன்பணம் கொடுக்கும் நிறுவனங்கள் வட்டி வாங்குவதாகத் தெரிவிக்கிறது; கடன் வழங்க பெறப்படும் கட்டணம் இது 27 முதல் 106% வரை உள்ளது. பழைய வீடுகளில் உள்ளவர்கள் தங்கள் வருமானங்களில் 7.1% ஐ கடன்களைக் கொடுக்க 2010ல் செலவுசெய்துள்ளனர்; இது மூன்று ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட 4.5 % கூடுதல் ஆகும் என்று Employee Benefit Research Institute கொடுக்கும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.இம்மாதம் முன்னதாக, Wells Fargo, தங்கள் 401(k) ஓய்வூதியக் கணக்கில் இருந்து கடன் வாங்கும் வயதான தொழிலாளர்களின் எண்ணிக்கை—அதையொட்டி அபராதமும் செலுத்துகின்றனர்— 2011ல் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 2012 முடிவிற்குள் 28 வீதம் உயர்ந்துள்ளது என தெரிவிக்கிறது.வயதுக் கணக்கில் மறு முனையில் இருப்போருடைய நிலைமை ஒன்றும் இதைவிடச் சிறந்ததாக இல்லை. கிட்டத்தட்ட 16 மில்லியன் அமெரிக்க குழந்தைகள் அல்லது 22 வீதத்தினர், கூட்டாட்சி நிர்ணயித்துள்ள வறுமைக் கோட்டிற்குக் கீழே வருமானம் உடைய குடும்பங்களில் உள்ளனர் என்று National Center for Children in Poverty கூறுகிறது. கடந்த மாதம் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் நிதியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டது; அதில் வளர்ச்சியுற்ற நாடுகளில் அமெரிக்கா, பட்டியிலில் உள்ள 29 நாடுகளில் 26வது இடத்தில் உள்ளது. கிரேக்கத்திற்கும், லித்துவேனியா, லாட்வியா மற்றும் ருமேனியாவை விட சற்றே உயர்ந்த நிலையில்—இது குழந்தைகள் விகிதம் வறுமையில் எப்படி என்பதைக் கூறுவதாகும்.ஒவ்வொரு ஆண்டும் 1.3 மில்லியன் மாணவர்கள் அமெரிக்காவில் உயர்நிலைப் பள்ளியை தொடரமுடியாமல் நீங்கி விடுகின்றனர். National Center for Education Statistics கருத்துப்படி, அதிக வருமானம் உடைய இளைஞர்களுடன் ஒப்பிடுகையில், குறைவூதியக் குடும்ப மாணவர்கள், பயிற்சியை முடிக்க முடியாமல் தோல்வி அடையும் எண்ணிக்கை ஆறு மடங்கு அதிகமாகிறது.கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், பெருகிய முறையில் மாணவர் கடன் (student loans) சுமையை தாங்குகின்றனர்; இதை அவர்கள் தீர்க்கவே முடியாது. 2003க்கும் 2012க்கும் இடையே 25 வயதுக்காரர்களில் மாணவர்கள் கடன் வாங்கியுள்ள விகிதம் 25ல் இருந்து 43%க்கு உயர்ந்துவிட்டது.வேலையின்மை மற்றும் சரியும் ஊதியங்களுக்கு இடையே, திருமணம் மற்றும் சொந்தவீடு ஆகியவை பலருக்கும் மிகவும் விலை உயர்ந்ததாக ஆகிவிட்டது. வீட்டு உரிமையாளர் விகிதங்கள், கடந்த 18 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் குறைந்த தன்மையில் உள்ளன, திருமண உறவிற்கு அப்பால் பிறக்கும் குழந்தைகளின் விகிதம் 2005ல் 31 என்பதில் இருந்து 2011ல் 36 சதவிகிதம் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுலகத்தால் இந்த வாரம் வெளியிட்டுள்ள குறிப்புக்கள் தெரிவிக்கின்றன.மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை கூறுவது: “திருமணமாகாத பெற்றோர்களுக்கு பிறக்கும் குழந்தைகள் வறுமையில் வாழும் நிலை அதிகம் உண்டு; அதேபோல் மிகவும் குறைந்த வளர்ச்சி விகிதங்களையும் எதிர்கொள்கிறது”. 2010ல் ஒற்றைத் தாயார் தலைமையில், குழந்தைகளை கொண்ட குடும்பங்களில் 42.3 வீதத்தினர் வறுமையில்தான் வாழ்கின்றன என்று Demos திட்டம் தெரிவிக்கிறது.மொத்தத்தில் தற்போதைய அமெரிக்க வறுமை விகிதம், 16.1 வீதம் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது 1965ல் இருந்து மிக அதிகமாகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு செயலகத்தின் வறுமை துணையளிப்பு நடவடிக்கையின்படி, அதிர்ச்சி தரும் வகையில் 49.7 மில்லியன் மக்கள் அமெரிக்காவில் வறுமையில் உள்ளனர். 48 வீதத்துக்கும் மேலான மக்கள் வறிய அல்லது “வறுமைக்கு அருகே” உள்ள நிலைமையில், அதாவது உத்தியோகபூர்வ வறுமை விகிதத்தைவிட இரு மடங்கு மோசமான நிலையில் உள்ளனர்.வறுமை என்பது வேலையற்றோரோடு நின்றுவிடவில்லை. கடந்த மாதம் அமெரிக்க மக்கள் தொகைக் கணக்கீட்டு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி, “வேலை பார்த்தும் வறிய நிலையில்” உள்ள அமெரிக்க மக்களின் சதிகிதம் வியத்தகு அளவில் 2006ல் 5.1% என்பதில் இருந்து 2011 ல் 7% என உயர்ந்துவிட்டது. வறுமையில் இருக்கும் அனைவருடைய எண்ணிக்கையில் கால்வாசிப்பேர் —கிட்டத்தட்ட 10.4 மில்லியன் மக்கள்— வேலையில் உள்ளனர்.புதிய வேலைகளில் பெரும்பகுதி, குறைவூதிய பணித்துறைகளில்தான் உள்ளன; உற்பத்தித் தொழிலில் இருக்கும் தொழிலாளர்கள்கூட பெருகிய முறையில் மிகவும் குறைந்த ஊதியமான 10 டாலர்களைத்தான் ஒரு மணி நேரத்திற்கு பெறுகின்றனர், நான்கு பேர் உள்ள குடும்பத்திற்கு இது வறுமை ஊதியம் ஆகும்.வறுமையின் விளைவுகள் பலவகையானவையாக உள்ளன. ஒரு சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, அமெரிக்காவில் 80 மில்லியன் வயதிற்கு வந்தவர்கள், மொத்த மக்கட்தொகையில் 43 வீதத்தினர், 2012ல் குறிப்பிட்ட காலம் மருத்துவப் பாதுகாப்பை பெறவில்லை, ஏனெனில் அது அவர்களுடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருந்தது. இது 2003ல் இருந்து அதிர்ச்சி தரும் வகையில் 17 மில்லியன் என்று உயர்ந்துள்ளது.வளர்ந்துவரும் வறுமையும் சமூகத் துயரமும் அடிப்படையில் வெகுஜன செய்தி ஊடகங்களால் பிரச்சினைகள் இல்லை என்பது போல் கருதப்படுகின்றன. Pew Research center ஆல் நடத்திய சமீபத்திய ஆய்வில் கண்டுள்ளபடி, அமெரிக்க செய்தி ஊடகத்தில் வறுமைத் தலைப்பு பற்றிய செய்தித் தொகுப்பு ஒரு சதவிகிதத்தில் ஐந்தில் ஒருபகுதிதான் என்று தெரிகிறது. “எந்த ஆண்டிலும் வறுமையைப் பற்றிய செய்தித்தகவல்கள் செய்தி அளிக்கும் முறையில் மிகவும் குறைவான 1 சதவிகிதம்தான் என்று இருந்தது இல்லை.” எனத் திட்டத்தின் துணை இயக்குனர் மார்க் ஜுர்கோவிட்ஸ் ஹார்வர்ட் நீமன் அறக்கட்டளையிடம் தெரிவித்தார்.முந்தைய ஒரு காலத்தில் சமூக துயரங்கள் பற்றிய இத்தகைய குறியீடுகள், தேசிய இழிவு எனக் கருதப்பட்டிருக்கும். இன்று, இந்த சமூக நெருக்கடியை தீர்க்க நடவடிக்கைகளை முன்வைப்பதற்கு பதிலாக, ஒபாமா நிர்வாகத்தின் தலைமையின் கீழ், குடியரசுக் கட்சியினரும், ஜனநாயகக் கட்சியினரும் எப்படி சமூகப் பாதுகாப்பு, மருத்துவப் பாதுகாப்பு மற்றும் முக்கிய சமூகநலத் திட்டங்களை வெட்டலாம் என்று ஒன்றோடொன்று போட்டியிட்டு செயல்படுகின்றன.முழு சமூக அமைப்பு முறைக்கும் எதிராக ஆழமான மற்றும் வளர்ச்சியடைந்துவரும் கோபம் உள்ளது, ஆளும் உயரடுக்கு பரந்த மக்களின் வறுமையில் இருந்து செல்வக்கொழிப்பை பெறுகிறது. இந்த உணர்வு, இருக்கும் அரசியல் அமைப்பின் கட்டமைப்பிற்குள் எத்தகைய வெளிப்பாட்டையும் காணவில்லை.பொருளாதார ஒடுக்குமுறைக்கு எதிராக வரவிருக்கும் வெகுஜனப் போராட்டங்களில் முக்கியமான கேள்வி, முழு நனவுடன் கூடிய சோசலிச மற்றும் புரட்சிகர வேலைத்திட்டத்தை கொண்ட ஒரு புரட்சிகரத் தலைமையை கட்டமைத்தல் ஆகும். இதன் பொருள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் அதன் இளைஞர் இயக்கமான, சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர்கள் மாணவர்கள் அமைப்பை கட்டமைப்பதாகும். |
|