சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Global corporations and the Bangladesh building collapse

பங்களதேஷ் கட்டிடச் சரிவும் உலகப் பெருநிறுவனங்களும்

Peter Symonds
8 May 2013

use this version to print | Send feedback

ராணா பிளாசா கட்டிடச் சரிவின் இரண்டு வாரங்களுக்கு பின்னர் உலக சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்கள், பங்களாதேசத்தில் தங்கள் ஆடைகள் ஆதாரத்தைக் கொண்ட வால்மார்ட், பிரைமார்க், பெனிட்டன் இன்னும் பிற நிறுனங்கள் இழிந்தவகையிலான மக்கள் தொடர்பு முறையைக் கையாண்டு பெரும் துன்பியலில் இருந்து தங்களை ஒதுக்கி வைத்துக்கொள்ள முற்படுவதுடன், தங்களின் வர்த்தக தோற்றத்தையும் இலாபங்களையும் தக்க வைத்துக் கொள்ளவும் முயல்கின்றன.

நேற்றுவரை, உத்தியோகபூர்வ இறப்பு எண்ணிக்கை 705 ஐ எட்டிவிட்டது; இன்னும் நூற்றுக்கணக்கானவர்கள் காயமுற்ற நிலையில், இக் கட்டிடப் பொறிவு நாட்டின் வரலாற்றில் மிக மோசமான தொழிற்துறை பேரழிவு என்பதுடன் உலகிலேயே மோசமானதில் ஒன்று எனவும் ஆகிவிட்டது. ராணா பிளாசா ஆயிரக்கணக்கான நெறியற்ற முறையில் கட்டப்பட்டுள்ள பங்களாதேச அடிமை உழைப்பு நிலையங்களின் ஒரு மாதிரியாகும், இங்கு தொழிலாளர்கள் மாதம் 38 டாலருக்கு உலகின் மிகப் பெரிய நிறுவனங்களுக்கான தேவைகளை நிறைவு செய்து வந்தனர்.

ஏப்ரல் 24 பேரழிவுச் செய்தி வெளிவந்தவுடன் நன்கு ஒத்திகை பார்க்கப்பட்ட செய்தி ஊடக நடவடிக்கை செயலுக்கு வந்தது. நல்ல ஆதாரமுடைய பெருநிறுவனங்களின் பொதுத்துறைகள், நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்புடையவை, உடனே அறிக்கைகளை வெளியிட்டு, உயிரிழப்புக்கள் பற்றிய தங்கள் “அதிர்ச்சியை”யும் “வருத்தத்தையும்” தெரிவித்தன. கட்டிடத்தில் இருந்த ஐந்து ஆடை ஆலைகளுடன் தங்கள் தொடர்பு எதையும் மறுக்க பெரும்பாலானவை முற்பட்டன. இது நல்ல வளமுடைய சட்டத்துறைகளின் ஆலோசனையின்பேரிலேயே நடந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. ஒரு சில நிறுவனங்கள ராணா பிளாசா அளிக்கும் ஆலைகளுடன் தங்கள் தொடர்பை ஒப்புக் கொண்டன.

முதலைக் கண்ணீரும், “அதிர்ச்சி” அறிக்கைகளும் முற்றிலும் பாசாங்குத்தனமானவை. சில நன்கு அறியப்பட்ட சர்வதேச வியாபார இலச்சினை கொண்ட நிறுவனங்கள் தங்கள் பொருட்களை பங்களாதேசத்தில் வாங்குகின்றன என்பதற்குக் காரணம் அங்கு மிகக் குறைந்த செலவுகள் என்பதோடு, ஊதியங்களில் மட்டுமின்றி, கட்டுப்பாடு ஏதும் இல்லாததால் மொத்தச் செலவுகளே பொதுவாகக் குறைந்து இருக்கும் என்பதால்தான். ஊழலுக்கும் இலஞ்சத்திற்கும் பெயர் போன ஒரு நாட்டில், நாட்டின் நெறிகளை செயல்படுத்த அரசாங்கம் மிகவும் குறைவான ஆய்வாளர்களைத்தான் நியமித்துள்ள நிலையில், பாதுகாப்பு மற்றும் கட்டிடத் தரங்கள் பெரும்பாலும் வெறும் தாளில்தான் உள்ளன.

பல பெருநிறுவனங்கள் ஓர் அக்கறை முகப்பைக் காட்டுவதற்காக தங்களுக்கு பொருட்களை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழிகாட்டு நெறிகளை நிர்ணயித்து, தரங்களின் நிலை சரியாக உள்ளனவா எனப் பார்ப்பதற்கும் அவற்றைச் செயல்படுத்தவும் “கண்காணிப்பு முறை” ஒன்றையும் கொண்டுள்ளன. இதில் அரசாங்கம் சாரா அமைப்புக்கள் கொண்டுள்ள பாதுகாப்பு மற்றும் பணிநிலைமைகள் குறித்த கண்காணிப்பு என்பதே ஒரு தொழிற்துறையாகிவிட்டது. வழிகாட்டி நெறிகள் புறக்கணிக்கப்படுகின்றன, பெறப்படும் ஆர்டர்கள் பொதுவாக சிறிய அடிமையுழைப்பு நிலைய ஒப்பந்தக்காரர்களுக்கு அளிக்கப்படுகின்றன. உற்பத்தியாளர்கள் குறிப்பிட்ட நிர்ணயிக்கப்பட்ட விலைக்குப் பொருட்களை அளிக்க வேண்டும் என வரும்போது கண்காணிப்புகள் எப்பொழுதாவது வரும் தொந்திரவுகள்தான்.

Business Social Compliance Initiative  என்னும் பிரஸ்ஸல்ஸைத் தளம் கொண்டுள்ள கண்காணிப்புக் குழு அதன் கண்காணிப்பாளர்கள் ராணா பிளாசாவிற்குள் இரு ஆடை ஆலைகளுக்கு ஒப்புதலை தங்கள் வாடிக்கையாளர்கள் சார்பாகக் கொடுத்துள்ளனர் என்று தெரிவிக்கிறது. கட்டிடத்தின் கட்டுமானத் தன்மையின் உறுதிப்பாடு அவர்களுடைய சரிபார்க்கும் பட்டியலில் இல்லை.

ராணா பிளாசா பேரழிவின் அளவு, உலகெங்கிலும் உள்ள மக்களை திகிலடைய வைத்துள்ளது, சில்லறை விற்பனைப் பெருநிறுவனங்களை தங்கள் வணிகத்தை வேறு இடங்களுக்கு மாற்றுவது குறித்துப் பரிசீலிக்க வைத்துள்ளது. நியூ யோர்க் டைம்ஸ், கடந்த வாரம், உலகின் மிகப் பெரிய உரிமம் பெற்ற, ஆண்டு விற்பனை கிட்டத்தட்ட 40 பில்லியன் டாலர்களைக் கொண்ட நிறுவனமான வால்ட் டிஸ்னி, மார்ச் மாதம் ஒரு இயக்கநெறியை வெளியிட்டு பங்களாதேசத்திலும் இன்னும் சில நாடுகளிலும் வியாபார இலச்சினை பொருட்கள் உற்பத்திக்கு முடிவு வேண்டும் எனக் கோரியதை எடுத்துக்காட்டியுள்ளது. டிஸ்னி இலச்சினை பதித்த பொருட்கள் கடந்த நவம்பர் மாதம் 112 தொழிலாளர்களை கொன்ற Tazreen அலங்கார ஆடை ஆலையின் அழிவுகளில் காணப்பட்டிருந்தன.

அந்த நேரம் வரை அந்தத் தீ விபத்துதான் நாட்டின் மோசமான தொழில்துறை பேரழிவாக இருந்தது. ஆனால் டிஸ்னி பொருட்களை வாங்குவதை நிறுத்துவது என்பது முற்றிலும் ஒரு வணிக முடிவாகும். அதன் பெருநிறுவனத் தோற்றத்திற்கான செலவு, ஒப்புமையில் அதிக பாதிப்பற்ற அதன் இலாபங்களைக் காட்டிலும் அதிகமாக போயிற்று; ஏனெனில் அதன் பொருட்களில் மிகச்  சிறிய அளவுதான் பங்களாதேசத்தில் உற்பத்தியாயின. அதன் அறிக்கையில் டிஸ்னி ஓராண்டில் படிப்படியாக உற்பத்தி அங்கிருந்து அகற்றப்பட்டுவிடும் எனக் கூறியது. உலக வங்கியுடன் தொடர்பு கொண்ட சர்வதேசத் தொழிலாளர் அமைப்பும் (ILO)  சர்வதேச நிதிய அமைப்பும் கூட்டாக நடத்தும் திட்டத்திற்கு ஒத்துழைக்கத் தொடங்கினால் ஆலைகள் மீண்டும் அங்கு திரும்பலாம்.

நிதிய அளவில் திரும்ப இயலாத பெருநிறுவனங்கள், சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு, தொழிற்சங்கங்கள் மற்றும் பல அரசாங்கம் சாரா நிறுவனங்களின் சேவைகளை, பங்களாதேச அரசாங்கம் மற்றும் உற்பத்தியாளர்கள் மேல்பூச்சு மாற்றங்களையேனும் பாதுகாப்பு, கட்டிடத் தரங்களில் கொண்டுவரப்படுவதற்கு நாடியுள்ளன. கடந்த வாரம் பங்களாதேச ஆடை உற்பத்தியாளர்கள் & ஏற்றுமதியாளர்கள் சங்கம் (BGMEA) தன் உலகளாவிய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும் பெரும் முயற்சியில் ஈடுபட்டு 40 வாங்குவோரின் பிரதிநிதிகளை—H&M, JC Penny, Gap, Nike, Li, Fung, Tesco ஆகிய நிறுவனங்கள் உட்படச் சந்தித்தது. அதன் உறுப்பினர்களின் கட்டிட ஆய்வுகள் அனைத்தையும் நடத்துவதாகவும் அது உறுதியளித்துள்ளது.

பிரைமார்க் போன்ற சில பெருநிறுவனங்கள் கிட்டத்தட்ட 1,200 டாலர்களை ராணா பிளாசா பேரழிவில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அளிக்க உறுதியளித்துள்ளன. Tazreen அலங்காரப் பேரழிவில் நேரடியாகத் தொடர்புபடுத்தப்பட்ட வால்மார்ட், வெளியே செய்தி வராமல் இருப்பதற்கான பணத்தைக் கொடுக்கமறுத்து, 1.6 மில்லியன் டாலர்களை பெயரளவு நெருப்புப் பாதுகாப்பு பயிற்சித் திட்டம் பங்களாதேசத்தில் நடத்துவதற்குக் கொடுத்துள்ளது. இந்தத் தொகைகள் அற்பமானவை, ஐயத்திற்கு இடமின்றி செலவு-நன்மை பகுப்பாய்வு வழிமுறைகள் மூலம் அடையப்பட்டவை, அதையொட்டி டிஸ்னி தன் முடிவை எடுத்திருக்க வேண்டும்.

ஐரோப்பிய சில்லறை வியாபாரிகளின் சார்பில் செயல்படும் ஐரோப்பிய ஒன்றியம் கடந்த வாரம் அறிக்கை ஒன்றை வெளியிட்டு, பங்களாதேசம் ஐரோப்பிய சந்தைகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வணிகம் செய்வதற்குத் தடை விதிக்க இருப்பதாக அச்சுறுத்தியது. வெளியுறவுக் கொள்கை தலைவர் காத்திரின் ஆஷ்டன் மற்றும் வணிக ஆணையர் கரேல் டு குக்ட் ஆகியோர் ஐரோப்பிய ஒன்றியம் “உரியநடவடிக்கையை” “பொறுப்புள்ள நிர்வாகத்திற்கு ஊக்கம் தரும் வகையில் வழங்கும் சங்கிலித் தொடர்களுக்கு, வளர்ச்சியடையும் நாடுகளையும் தொடர்புபடுத்தி” எடுக்க இருப்பதாக அறிவித்தார். கிட்டத்தட்ட 60% பங்களாதேச ஆடை ஏற்றுமதிகள் ஐரோப்பாவிற்கு செல்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் இப்படிக் காட்டிக் கொள்வது பங்களாதேச தொழிலாளர்களின் நிலையை முன்னேற்றுவிப்பதுடன் எத்தொடர்பையும் கொண்டிருக்கவில்லை. ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரிகள் பைனான்சியல் டைம்ஸிடம் வணிக விருப்பங்கள் திரும்பப் பெறப்படல் என்பது “தீவிரமான நடவடிக்கையாக இருக்கும்” அது அநேகமாக நடைபெறாது என்றார். ஒரு ஐரோப்பிய ஆணையர் செய்தித்தாளிடம் கூறியபடி, இந்த அறிக்கை பங்களாதேச அதிகாரிகளை நோக்கி இயக்கப்பட்டது, “சற்று  நெருப்பை அவர்கள் காலின் கீழ் இருத்தும் நோக்கத்துடன்” என உள்ளது.

வணிக முன்னுரிமைகள் திரும்பப் பெறப்பட்டால், அல்லது முக்கிய நிறுவனங்கள் டிஸ்னியின் உதாரணத்தைப் பின்பற்றினால், பங்களாதேசப் பொருளாதாரத்தின் மீதான பாதிப்பு பேரழிவைத் தரும். நாட்டின் ஏற்றுமதிகளில், 80 வீதம், 3 மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலானோர் நேரடியாக ஆடைகள் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். பலரும் வேலைகளை இழப்பர், ஏற்கனவே பங்களாதேச மக்களைப் பாதித்துள்ள பரந்த வறுமையை இது அதிகரிக்கும்.

மேலும் பங்களாதேசத்தில் இருந்து எத்தகைய பெருநிறுவன வெளியேற்றமும், மற்றொரு குறைவூதிய அரங்கிற்கு என்றுதான் இருக்கும், சாத்தியமானால் இதையும் விடக் குறைந்த செலவுகள் உடையதாகவே இருக்கும் . பர்மா (மயன்மர்) ஒரு சாத்தியமான மாற்றீடு எனப் பேசப்படுகிறது; அங்கு இராணுவ ஆதிக்கத்திற்குட்பட்ட ஆட்சி, பணிவான தொழிலாளர் தொகுப்பைக் கொடுத்து சில பாதுகாப்புக் கட்டுப்பாடுகளையும் நிறுவும். புதிய தேவையைப் பூர்த்தி செய்வதற்கான பரபரப்பு கட்டிடங்கள் இதேபோல் ஆபத்தான, முறையற்ற வஎகையில் கட்டப்படும் என்பதுதான். வேறு சில வாய்ப்புக்களின்படி பாக்கிஸ்தானும் கருதப்படுகிறது; அங்கு கிட்டத்தட்ட 300 தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் மாதம் கராச்சியில் ஆடை ஆலைத் தீவிபத்தில் உயிரிழந்தனர். அல்லது இலங்கை, கம்போடியா மற்றும் ஹைட்டி போன்ற நாடுகளின் அடிமை உழைப்பு நிலையங்களும் கருத்தில் உள்ளன.

முதலாளித்துவத்தின் உலகளவிய ரீதியான நிலைமுறிவின் மத்தியில், பாதுகாப்புத் தரங்கள், பணி நிலைமைகளை முன்னேற்றுவிப்பதற்கு முற்றிலும் மாறாக, பெருநிறுவனங்கள் ஈவிரக்கமற்ற போட்டியைத்தான் தங்களுக்கு விநியோகம் செய்யும் நிறுவனங்களிடையே ஏற்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இலாபங்களுக்கான இடையறா உந்துதல் சுகாதார, பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைத் தரங்களில், வளர்ச்சி பெறும் நாடுகளில் இருக்கும் தொழிலாளர்களிடையே மட்டும் பாதிப்பைக் கொடுக்காமல், பொருளாதார அளவில் முன்னேறிய நாடுகளிலும் கொடுக்கிறது. ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா, உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்கள் ஐக்கியப்பட்டு காலம் கடந்துவிட்ட முதலாளித்துவ முறைக்கு முற்றுப்புள்ள வைத்து, பகுத்தறிவார்ந்த முறையில் திட்டமிட்ட உலக சோசலிசப் பொருளாதாரத்தை நிறுவி, மனித குலத்தின் முக்கிய தேவைகளை பூர்த்தி செய்ய ஒன்றுபடுவதுதான் பெரும் துன்பியலான முறையில் உயிர்களும், உறுப்புக்களும் இழக்கப்படுவதை நிறுத்தும்.