World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The failure of capitalism

முதலாளித்துவத்தின் தோல்வி 

Nick Beams
3 May 2013

Back to screen version

கடந்த வாரம் ஐரோப்பியப் பொருளாதாரம் குறித்து வெளியிடப்பட்ட புள்ளி விவரங்கள் ஒரு தீவிர பொருளாதார, சமூக நெருக்கடியின் வெளிப்பாடு மட்டுமல்ல. அவை முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கமைப்பின் திவால்தன்மையை சுட்டிக்காட்டும் ஒரு ஆழ்ந்த வரலாற்று அர்த்தத்தை கொண்டுள்ளன.

அதன் சமீபத்திய பொருளாதார முன்கணிப்பில் சர்வதேச நாணய நிதியம் (IMF) யூரோப்பகுதி முழுவதுமே இந்த ஆண்டு 0.3%சுருக்கம் அடையும் எனவும் இத்தாலியுடனும் ஸ்பெயினுடனும் பிரான்சும் இணைந்து மூன்று பெரிய பொருளாதாரங்களும் மந்தநிலையை அடையும் என்று கூறுகிறது. இந்த சுருக்கமே முக்கியத்துவமானது, ஆனால் நிதிய நெருக்கடி ஆரம்பித்து கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளுக்கு பின்னரும் இது நிகழ்வதென்பது அதை உருவாக்கியதற்கு அடித்தளத்திலுள்ள நிகழ்ச்சிப்போக்கினை சுட்டிக் காட்டுகிறது. ஐரோப்பிய பொருளாதாரம் ஆழ்ந்த கீழ்நோக்கு சரிவில் அகப்பட்டுக் கொண்டுள்ளது.

ஸ்பெயின் இப்பொழுது மந்தநிலை தர வேலையின்மை விகிதமாக 27 வீதத்தை அடைந்துள்ளது. இளைஞர் வேலையின்மை 56% என உள்ளது. 6 மில்லியனுக்கும் மேலாக ஸ்பெயினின் தொழிலாளர்கள் வேலையின்மையில் உள்ளனர். பிரான்சில் முந்தைய மாதம் வேலையில் இல்லாதவர்கள் வேலைதேடும் மொத்த எண்ணிக்கை மிக அதிக பட்சமான 3.2 மில்லியன் என உயர்ந்துவிட்டது. ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் 26 மில்லியன் மக்கள், கிட்டத்தட்ட தொழிலாளர் பிரிவினரில் 12% ஆனோர் வேலையின்றி உள்ளனர்.

பிரித்தானியாவில் கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 0.3%தான் இருந்தது. இது உத்தியோகபூர்வ வட்டங்களில் ஒரு நிம்மதிப் பெருமூச்சைக் கொடுத்தது, ஏனெனில் பிரித்தானியாஒரு மூன்று முறை மந்தநிலையில்இருந்து தப்பிவிட்டது என்றாலும், பிரித்தானியப் பொருளாதாரம் நெருக்கடி ஆரம்பித்தபோது இருந்த நிலையை விட இன்னும் 2.6 சதவிகிதம் குறைவாகத்தான் உள்ளது என்னும் உண்மை தொடர்கிறது.

பிரித்தானியா அதன் ஆழ்ந்த, மிக நீடித்த மொத்த உள்நாட்டு உற்பத்திச் சரிவை ஒரு நூற்றாண்டுக்காலத்தில் அனுபவித்துள்ளது. ஒப்புமையில், பெருமந்த நிலைக்குப் பின் இதே அரங்கில், நெருக்கடி ஏற்பட்டு 51 மாதங்களுக்குப்பின் பொருளாதாரம் 1970களின் சரிவு மற்றும் 1990களின் மந்த நிலை இருந்த போதிலும் கூட மீட்சியடையத்தொடங்கியது.

மேலும் குறிப்பிட வேண்டியது, ஐரோப்பியப் பொருளாதார எதிர்காலம் மோசமாகித்தான் வருகிறது என்பதாகும். கடந்த வாரம் நிகழ்த்திய உரை ஒன்றில் சர்வதேச நாணய நிதியத்தின் துணை நிர்வாக இயக்குனர் டேவிட் லிப்டன் ஐரோப்பாஒரு தேக்க நிலைஇடரை முகங்கொடுக்கிறது என்று எச்சரித்தார். “முதலீடுகள் குறைந்துவருகிறது, வேலையின்மை தொடர்ந்து அதிகரிக்கிறது, நிதியச் சந்தைகள் இன்னும் சிதைந்துதான் உள்ளன.”என்றார்.

ஆனால் ஐரோப்பிய நிலைமை உலக முதலாளித்துவம் முழுவதும் உள்ள நிலையின் கூர்மையான வெளிப்பாடுதான். அமெரிக்கப் பொருளாதாரத்தின் வளர்ச்சி இரத்த சோகை போல் 2.5% என்று உள்ளது. வறிய நிலை மற்றும் பெருகும் சமூக சமத்துவமின்மைக்கு இடையே வேலையின்மை உயர்வு கிட்டத்தட்ட மந்தநிலைத் தரங்களில்தான் உள்ளது. மத்திய வங்கிக் கட்டமைப்பு நிதியச் சந்தைகளில் பணத்தைப் பொழிந்து, பெருநிறுவன இலாபங்களுக்கு ஏற்றம் அளிக்கையில், பெரும்பாலான மக்களுடைய உண்மை வருமானம் தொடர்ந்து வீழ்ச்சியடைகின்றது.

முதலாளித்துவ செய்தி ஊடகத்திற்கும் அதன் சார்பில் பேசும் தலைமைகளுக்கும் பண்டிதர்களுக்கும் எப்பொழுதும் மோசமாகிவிரும் பரந்த மக்கட்தொகையின் நிலைபுதிய இயல்புஎன்பதின் மற்றொரு வெளிப்பாடுதான். அவர்கள் அதுவும் வரலாற்றிலேயே மிகப்பெரிய விஞ்ஞான, தொழில்துறை முன்னேற்றங்கள் இருக்கையில், மக்களின் பெரும்பகுதியினர் வறுமையில் வாடுவது இவ்வாறு ஏன் நிகழ்கிறது என்பதை விளக்கும் தேவையை கூட உணரவில்லை.

ஆனால் அத்தகைய வளர்ச்சியின் முக்கியத்துவம் கார்ல் மார்க்சினால் 160 ஆண்டுகளுக்கு முன்பே விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இத்தகைய நிகழ்வுமுதலாளித்துவம் இந்த சமூகத்தில் ஆளும் வர்க்கமாக இருக்கும் தகுதி அற்றது என்பதையும் மற்றும் சமூகத்தில் தனது இருப்பிற்கான நிபந்தனையை முன்னுரிமை வாய்ந்த சட்டமாக நிர்ப்பந்திக்கும் தகுதி அதற்கு இல்லை என்பதையும் காட்டுகிறதுஎன்றார்.

சமீபத்தில் லண்டனில் நடந்த அரங்கு ஒன்றில், பாங்க் ஆப் இங்கிலாந்து ஏற்பாடு செய்ததில், சர்வதேச நாணய நிதியத்தின் தலைமைப் பொருளாதார வல்லுனர் ஒலிவியே புளோஞ்சார்ட் நெருக்கடியில் இருந்து படிப்பினைகள் என்று அவர் கூறியதைக் கோடிட்டுக் காட்டினார். இது புத்திஜீவித தன்மை மற்றும் அரசியல் ஆகியவற்றின் திவால்தன்மையை ஒப்புக் கொண்ட வகையில்தான் உள்ளது.

2008 நிதிய நெருக்கடியின் வெடிப்பினால் முற்றிலும் பார்வையிழந்த தன்மை ஏற்பட்டது என்று புளோஞ்சார்ட் ஒப்புக் கொண்டார். இத்தகைய நிகழ்வுகள் இனி நடக்காது என நம்பப்பட்டதாகவும் கூறினார். நிதிய அமைப்புமுறைஒருங்கிணைக்கப்பட்டமைகுறித்து புரிந்துகொள்ள அவர் தோற்றுவிட்டதுடன், உலகப் பொருளாதாரத்தின் இடைத் தொடர்புகளைக் கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. இதுதான் 2009 உலக வணிகச் சரிவுக்கு இட்டுச்சென்றது.

மேலும், “மரபார்ந்த நாணய, நிதியக் கருவிகள் நிதிய அமைப்புமுறையின் மிக விஷேடமான பிரச்சினைகளை சமாளிக்கப் போதுமானவையாக இல்லைஎன்பதை ஒப்புக் கொண்டபின், அவர் மிகப்பெரிய நிதானப்படுத்தும் கருவிகள் என அழைக்கப்படுபவை நிதிய முறையை ஒழுங்குபடுத்துவதற்கு உண்மையில் செயல்படுமா என்பது குறித்து தனக்கு உறுதியாகத் தெரியவில்லை என்றார்.

புளோஞ்சார்ட் மட்டும் இந்நிலைப்பாட்டை தனியே கொண்டவரல்ல. அதிகளவு பணத்தை அச்சடித்துவிடும் முறையை விரிவாக்கும் அமெரிக்க மத்திய வங்கிக்கூட்டமைப்பின் முடிவை அடுத்து, மத்திய பகிரங்க சந்தைக் குழுவின் உறுப்பினரான ரிச்சார்ட் பிஷ்ஷர்எவருக்கும் உண்மையில் பொருளாதாரத்தை மீண்டும் அதன் இயல்பான போக்கில் கொண்டுவர என்ன செய்யவேண்டும் என்பது தெரிவில்லை”, எந்த மத்திய வங்கியும் நாம் இப்பொழுது உள்ள நிலையில் இருந்து தமது சொந்த நிலைக்குத் திரும்ப வெற்றிகரமாக என்ன செய்யவேண்டும் என்பது குறித்த அனுபவத்தைக் கொண்டிருக்கவில்லை.” என்றார்.

இதே பெரும் திகைப்புத்தான் சர்வதேச நாணய நிதியத்தின் கடந்த மாத அதன் உயர்மட்ட பொருளாதார வல்லுனர்களின் வசந்தக்காலக் கூட்டத்திலும் நிலவியது. நோபல் பரசு பெற்ற ஜோர்ஜ் அகெர்லோப் பொருளாதார நெருக்கடியை ஒரு மரத்தின்மீது ஏறிவிட்ட பூனை எப்படி இறங்குவது எனத் தெரியாமல் தவிப்பதுடன் கீழே விழுந்துவிடும் நிலையில் இருப்பது போல் உள்ளது என்றார். மற்றொரு பொருளாதார வல்லுனர் இதில் சேர்ந்து கொண்டு, ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு பூனையை மரத்தில் இருந்து இறக்குவதற்கான நேரம் இது என்றார். நோபல் பரிசு பெற்ற ஜோசப் ஸ்ரேக்லிட்ஸ், “இன்னும் ஏன் மரத்தில்தான் பூனை உள்ளது என்பது பற்றி விளக்கும் நல்ல பொருளாதாரக் கோட்பாடு ஏதும் இல்லைஎன விளக்கினார்.

மத்தியகால அறிவுக்கூடத்தின் திவால்தன்மை மற்றும் நிலப்பிரபுத்துவ அமைப்புமுறை சமூக ஒழுங்கின் திவால்தன்மை ஆகியவைதான் ஒரு குண்டூசி முனையில் எத்தனை தேவதைகள் நடனம் ஆட முடியும் என்பது போன்ற விவாதங்களில் வெளிப்பட்டது.

முதலாளித்துவத்தின் தற்கால போதகர்களும் அவர்களுடைய மரத்தின் மீதான பூனை பற்றிய விவாதங்களும் இதேபோன்ற கேலிக்கூத்தாகத்தான் உள்ளன என்றால், அது அவர்களுடைய தனிப்பட்ட தோல்வியினால் அல்ல. இறுதிப் பகுப்பாய்வில், 75 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடிக்கு அவர்களால் எத்தகைய விளக்கத்தையும் கொடுக்க முடியவில்லை. இதற்குக் காரணம், அவர்கள் பாதுகாக்க விரும்பும் சமூகப் பொருளாதார ஒழுங்கமைப்பு, மேலதிக வரலாற்று முன்னேற்றத்திற்கு ஒரு  விரோதமுள்ளதாக மாறிவிட்டது.

ஆளும் வர்க்கத்தின் சிந்தனையாளர்கள் சோவியத் ஒன்றியத்தின் சரிவை பயன்படுத்தி, அது சோசலிசத்தின் முடிவைக் காட்டுகிறது என்று அறிவித்தனர். பொருளாதார வல்லுனர்களும், செய்தி ஊடகப் பண்டிதர்களும் முதலாளித்துவத்தின் தோல்வி குறித்து ஏதும் கூறவில்லை.

ஆனால், இவர்களுடைய பெருந்திகைப்பின் கீழ் இப்பொருளாதாரச் சரிவு பெரும் சமூக, வர்க்கப் போராட்டங்களை தோற்றுவிக்கலாம் என்ற பெருகும் அச்சம் உள்ளது. சமீபத்தில் டைம் இதழில் ஒரு முக்கிய கட்டுரை மார்க்ஸ்உலகின் செல்வம் பேராசை மிகுந்த ஒரு சிலரின் கைகளில் குவிந்து பொருளாதார நெருக்கடியை தோற்றுவிக்கையில் முதலாளித்துவ அமைப்புமுறை தவிர்க்க முடியாமல் உலகின் பெரும்பாலானவர்களை வறிய நிலைக்குத் தள்ளும்... என்றார். சான்றுகளின் அதிகரிக்கும் ஒரு தொகுப்புக்களைக் காணும்போது அவர் சரியாக இருந்திருக்கலாம் என்பதுதான் தெரிகிறதுஎனக் குறிப்பிட்டுள்ளது.

ஐரோப்பா இன்னும் பிற இடங்களில் இருந்து வெளிவரும் ஏராளமான புள்ளி விவரங்கள் புரட்சிகர பின்விளைவுகள் உள்ள ஒரு மரண நெருக்கடியில் முதலாளித்துவம் நுழைந்துள்ளது என்பதைத்தான் காட்டுகின்றன.

முதலாளித்துவ ஒழுங்கமைப்பின் பாதுகாவலர்களின் புத்திஜீவித சீரழிவு, சோசலிச சர்வதேசியம் என்ற வேலைத்திட்டத்தின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் முழு நனவான அரசியல் போராட்டம், இலாப அமைப்பு முறையின் நிலைமுறிவை குறிக்கும் சமூக இழிசரிவில் இருந்து சமூகத்தை மீட்கும் பாதைக்கு வழிதிறக்கும் என்பதை காட்டுகின்றது.