தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் Amid jobs collapse, French President Hollande backs austerity in Europe வேலைகள் சரிவின் மத்தியில் பிரெஞ்சு ஜனாதிபதி ஹாலண்ட் ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவு கொடுக்கிறார் By Alex Lantier வேலையற்றோர் எண்ணிக்கை ஸ்பெயினிலும் பிரான்சிலும் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு மிக உயர்ந்த நிலையில் இருக்கும்போது, பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் (PS) தான் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதிலும் சிக்கனக் கொள்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுக்க இருப்பதாக அடையாளம் காட்டியுள்ளார். 26 மில்லியன் ஐரோப்பியத் தொழிலாளர்கள் வேலையின்மையில் வாடுகின்றனர்; இதில் ஸ்பெயினில் 6 மில்லியன் தொழிலாளிகளும், பிரான்சில் 3 மில்லியன் தொழிலாளர்களும் அடங்குவர். ஐரோப்பிய பொருளாதாரத்தின் பெரும் பிரிவுகள் தடையற்றிச் சரியும் நிலையிலும், ஹாலண்ட் குறித்த கருத்துக் கணிப்புக்களும் 26% எனச் சரிகையிலும் ஆளும் வர்க்கம், தான் சிக்கனக் கொள்கைகளுக்கு உறுதிபூண்டுள்ளது என்பதையும் மக்கள் எதிர்ப்பை பொருட்படுத்தவில்லை என்பதையும் நிரூபிக்கிறது. சனிக்கிழமை அன்று பெயரிட விரும்பாத ஹாலண்டின் உதவியாளர்கள் பிரான்சின் வணிக ஏடான Les Echos இடம் கூறினர்: “நாம் அனைத்தையும் நிறுத்த வேண்டும் என்று கூறுபவர்கள், வரவு-செலவுத் திட்ட முயற்சியை நிறுத்தட்டும், ஒரு குறுகிய அரசியல் வெற்றியை தவிர வேறு எதையும் அவர்கள் முன்வைக்கவில்லை. நாம் ஒன்றும் இருப்பதை அப்படியே மாற்றப்போவது இல்லை. இது அதைவிடச் சூட்சுமமானது, நாம் மாற்றியமைக்க வேண்டிய தடைகள் உள்ளன. இதுதான் மறுநோக்குநிலைப்படுத்தல் ஆகும்; நம் பொருளாதார மாதிரியை அது மாற்றவில்லை.” இந்த “மாதிரி” ஒரு பொருளாதாரக் கரைப்பை தோற்றுவித்துள்ளது; இது வரலாற்றளவில் பெருமந்த நிலை என்று இரண்டாம் உலகப் போருக்கு வழிவகுத்த முந்தைய மிகப் பெரிய முதலாளித்துவ முறைத் தோல்விக்குப்பின் முன்னோடி இல்லாததாகும். கிரேக்கம், போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் பொருளாதாரம் 2008ல் இருந்து முறையே 20%, 7% மற்றும் 6% எனச் சுருங்கிவிட்டது, இளைஞர்களின் வேலையின்மை விகிதம் 59%, 38% மற்றும் 57% என உயர்ந்துவிட்டது. இத்தாலியில், சமீபத்திய மத்திய வங்கி அறிக்கையின்படி, செலவழிப்பு வருமானம் 2007ல் இருந்து 9.5% குறைந்து விட்டது. தொழிற்துறை உற்பத்தி 25% குறைந்துவிட்டது. ஆயினும் கூட உதவியாளர்கள், ஜேர்மனியின் தலைமையின் கீழ் தெற்கு ஐரோப்பிய நாடுகளின் மீது ஐரோப்பிய ஒன்றியம் சுமத்தும் சிக்கனக் கொள்கைகளுக்கு ஹாலண்ட் தொடர்ந்து ஆதரவு கொடுப்பார் என வலியுறுத்தியுள்ளனர். அவர்கள் கூறியது: “ஐரோப்பிய ஒருங்கிணைப்பில் பிரான்ஸ் இரு பங்குகளை விருப்புரிமையாகக் கொண்டுள்ளது: ஜேர்மனியின் ஆக்கபூர்வ நட்பு நாடாக இருப்பது, அல்லது தெற்கு நாடுகளின் தூதராக இருப்பது. இரண்டாவது பங்கு நமக்கு எவ்வகையிலும் பயனளிக்கவில்லை.” பேர்லினில் இருந்து இயக்கப்படும் ஐரோப்பிய ஒன்றிய சிக்கனக் கொள்கைகளுக்கு பிரான்ஸ் மற்றும் பிற ஐரோப்பிய முதலாளித்துவங்கள் கொடுக்கும் ஆதரவு, தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல் என்ற அவர்களுடைய உந்துதலுடன் இணைந்துள்ளது. வரவு-செலவுத் திட்ட குறைப்புக்கள் தொடரும் என்று ஹாலண்ட் அடையாளம் காட்டுகையில், சோசலிஸ்ட் கட்சி, செலவுகளில் ஒரு பங்கிற்கு வணிகம் அளிப்பு கொடுக்க வேண்டும் என்னும் முயற்சி எதையும் எதிர்க்கும்—இதையொட்டி நெருக்கடியின் முழு நிதியச் சுமையும் தொழிலாள வர்க்கத்தின் முதுகுகளில் ஏற்றப்படும். நேற்று ஹாலண்ட் அரசாங்கம் முதலீட்டு ஆதாய வரிகளைப் பெரிதும் குறைக்க உள்ளதாக அறிவித்துள்ளது; இது, கடந்த ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தின் 30 பில்லியன் யூரோக்கள் பற்றாக்குறைப் பொதியின் பகுதியை இட்டு நிரப்ப அதிகரிக்கப்பட்டதை அகற்றிவிடும். சிறு வணிகத் துறை மந்திரி Fleur Pellerinsaid கூறினார்: “பிரான்ஸ் முதலீடு செய்ய நல்ல இடம் என்று ஒரு வலுவான பெரிய சித்திரத்தை காட்டுவதாகும், நாம் வணிகங்களுக்கு நட்புக் கொண்டுள்ளோம் என்பதாகும்”. இப்படி முதலாளித்துவ “இடது” அரசாங்கங்களின் வெளிப்படையான வணிகசார்பு நிலைப்பாடு ஐரோப்பிய, உலக முதலாளித்துவத்தை அதிரவைத்திருக்கும் நெருக்கடியின் புரட்சிக உட்குறிப்புக்களின் தீவிர வெளிப்பாடு ஆகும். நிதிய நலன்களின் கொள்ளை முறையுடன் இணைந்துள்ள இந்த அரசாங்கங்களும் அவற்றின் தொழிற்சங்க அதிகாரத்துவம், குட்டி முதலாளித்துவ போலி இடது அமைப்புக்களில் இருக்கும் ஆதரவாளர்களும் திமிர்த்தனத்துடன் தோற்றுவிட்ட ஐரோப்பிய ஒன்றியக் கொள்கைகளை பாதுகாக்கின்றனர்; அவை முற்றிலும் ஒட்டுண்ணித்தன நிதிய உயரடுக்குகளைச் செல்வக் கொழிப்பு ஆக்கும் வடிவமைப்பைத்தான் கொண்டுள்ளன. முழு அரசியல் நடைமுறைக்கும் எதிராக, வெளிப்புறத்தில் இருந்துதான் சக்திவாய்ந்த எதிர்ப்பு வெளிப்படும் என்பதை குறிக்கிறது. ஐரோப்பிய செய்தி ஊடகங்களின் சில பிரிவுகளில், ஐரோப்பிய நிலைமைக்கும் எகிப்தில் 2011ல் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கை கவிழ்த்த வெகுஜன புரட்சிகரப் போராட்டங்களின் வெடிப்பிற்கு முன் இருந்த நிலைமைகள் குறித்தும் வெளிப்படையாக ஒப்புவமைகள் கூறப்படுகின்றன. தெற்கு ஐரோப்பிய வேலையின்மை குறித்து Süddeutsche Zeitung உடன் ஒரு பேட்டியில் விவாதிக்கையில், சமூகவியலாளர் Gunter Voss கருத்துத் தெரிவித்தார்: “நிலைமை ஆபத்தாகிவிடும் இந்த அளவிற்கு மேல் போனால் என்ற குறிப்பிட்ட தரம் உறுதியாக இல்லை. ஒரு சமூகம் சர்வாதிகார கட்டுமானங்களுடன்கூட நீண்ட காலம் மிகத்தீவிர சமூக சமத்துவமின்மையுடன் தொடர்ந்து இருக்கலாம். அதன் பின், திடீரென ஒரு பேரொலி கேட்கும், ஏதோ நடக்கத் தொடங்கிவிடும். அப்படித்தான் சமீபத்தில் வட ஆபிரிக்காவில் ஏற்பட்டது.” புரட்சிகர தொழிலாள வர்க்கப் போராட்டங்கள் ஐரோப்பா முழுவதும் வெடிப்பது என்பது, அரச அதிகாரத்தை இறுதியில் எடுத்துக் கொண்டு பொருளாதார வாழ்வின் கட்டுபாட்டை நிதியப் பிரபுத்துவத்தின் கைகளில் இருந்து பறித்து எடுத்துக் கொள்வதற்கு என்பது ஒன்றுதான் தொழிலாள வர்க்கத்தின் முன்னேற்றகர நடைமுறைப் பாதையாகும். இப்போராட்டங்கள் ஹாலண்ட் அரசாங்கம் மற்றும் அதன் ஆதரவாளர்கள் போலி இடது அமைப்புக்களில் இருப்பவரைகளை எதிர்த்து இயக்கப்பட வேண்டும். ஸ்ராலினிச பிரெஞ்சு கம்யூனிஸ்ட் கட்சி (PCF), மற்றும் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியின் (NPA) பிளவுற்ற அமைப்புக்களுடன் கூட்டுக் கொண்ட இடது கட்சி (PSன் ஒரு பிளவுற்ற அமைப்பு) இன் தலைவர் ஜோன் லூக் மெலோன்சோன் ஏற்கனவே தன் விரோதப் போக்கை அத்தகைய போராட்டங்களுக்கு எதிராக அறிவித்துள்ளார். பேர்லினில் இருக்கும் சிக்கனத்திற்காக வாதிடுபவர்களுடன் “சமாதான சக்திகளுடன் உறவு” வேண்டும் என்று அழைப்பு விடுத்த மெலோன்சோன் “நியாயமான மக்களுக்கு இடையே மோதல் ஏற்படாது என்று நான் அஞ்சுகிறேன், ஆனால் அது கீழிருந்து வெளிப்படலாம், அப்பொழுது அனைத்தும் இழக்கப்படும்.” மெலோன்சோன், பிற்போக்கு குட்டிமுதலாளித்துவ போலி இடதின் உண்மையான பிரதிநிதியைப்போல் பேசுகிறார்: அது தொழிலாளர்களின் பரந்த அரசியல் இயக்க சுயாதீன முன்முயற்சி எதையும் அச்சம், பெரும் கவலை ஆகியவற்றிற்கான காரணம் என்று கருதுகிறது. மாறாக இச்சக்திகள், அரசியல் வாழ்வு, “நியாயமானவர்கள்” எனக் கூறப்படுவோரின் பிடியில், முதலாளித்துவ “இடது” மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தில் இருப்பவர்களின் பிடியில் இருக்கவேண்டும் என்று வலியுறுத்துகின்றன. அவைதான் பிரான்சிலும் ஐரோப்பா முழுவதும் பொருளாதாரத்தை அழித்துக் கொண்டிருக்கும் சிக்கனக் கொள்கைகள் குறித்துப் பேச்சுக்கள் நடத்தியவை. கருத்துக் கணிப்புக்களில் ஏற்பட்டுள்ள சரிவை நிறுத்தும் முயற்சியில், ஹாலண்ட் தன் அரசாங்கத்தை மாற்றியமைக்க முடிவெடுத்தால் பிரதம மந்திரிப் பொறுப்பை ஏற்கத் தயார் என்று மெலோன்சோன் தெரிவித்துள்ளார். இது முதலாளித்துவ சிக்கன ஆட்சியைப் பாதுகாக்க கடைசி வரி பணியாற்றும் அவருடைய பங்கைப் பற்றி அவர் புரிந்து கொண்டார் என்பதற்குச் சான்றாகும். இதேவேளையில், கருத்துக் கணிப்புக்களில் கட்சி தொடர்ந்து சரிந்து வருவதால் PS இன் சிக்கனப் பிரச்சினை குறித்து போரிடும் பிளவுகளுக்குள் வெடிப்பை ஏற்படுத்தியுள்ளது. PS உடைய சில பிரிவுகள் கட்சியின் தொழிலாள வர்க்க எதிர்ப்புக் கொள்கைகளை பேரினவாத பிரச்சாரத்தின் பின்னால் மறைக்க முற்படும் வகையில் ஜேர்மனியை சிக்கனக் கொள்கைகளுக்காக குறைகூறுகின்றன. அவை ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெலின் பெரும் செல்வாக்கற்ற தன்மையில் தங்கியுள்ளன. மற்ற PS அதிகாரிகள் வெளிப்படையாகவே சிக்கன நடவடிக்கைகளை ஆதரிக்கின்றனர். கடந்த வாரக் கடைசியில், ஐரோப்பிய கொள்கை பற்றி தயாரிக்கப்பட்ட PS ஆவணம் ஒன்று கசியவிடப்பட்டபோது ஒரு மோதல் வெடித்தது. அது மேர்க்கலை “சிக்கன சான்ஸ்லர்” என்று கூறி, “தற்பெருமை கொள்ளும் பிடிவாதத் தன்மையால்” நிமிர்ந்து நிற்கிறார் என்று கண்டித்து. தேசிய பாராளுமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சி குழுத் தலைவரான Claude Bartolone, ஒரு பரந்த பேட்டியை Le Monde க்கு கொடுத்து ஜேர்மனியுடன் “முரண்பாடு” ஒன்று தேவை என்றார். வரவிருக்கும் நகராட்சி மற்றும் ஐரோப்பிய தேர்தல்களில் PS படுதோல்வி அடையும் வாய்ப்பு இடரைச் சுட்டிக்காட்டிய அவர், “இப்பொழுது நாம், அரச வரவு-செலவுத் திட்டத்தை குலைக்காமல் எப்படி வாங்குசக்தியை அதிகரிக்க முடியும் என்று கூறவேண்டும்” என்றார். இது ஒரு சதுரத்தை வட்டமாக்கும் முயற்சியைப் போன்றது; அதுவும் ஹாலண்ட், வரவு-செலவுத் திட்டத்தில் சமச்சீர்த்தன்மையைக் கொண்டுவர செலவுகளைக் குறைத்து, பெரும் செல்வந்தர்களின் செல்வத்தைக் காக்கப் புறப்பட்டிருக்கையில். உள்துறை மந்திரி மானுவல் வால்ஸ், தொழில்துறை மந்திரி மிஷேல் சப்பான் ஆகியோர் சடுதியில் குறிக்கிட்டு ஹாலண்ட் மேர்க்கெலுடன் கொண்டுள்ள கொள்கைப் பிணைப்பிற்கு ஆதரவு கொடுத்தனர். வால்ஸ், Bartolone இன் கருத்துக்கள் “வாய்வீச்சானதும், தீமை பயக்கவும்தான் உதவும்” என்கையில், சப்பான் ஜேர்மனிய அரசாங்கத்துடனான உடன்பாடு தேவை, அதுதான் “ஐரோப்பா முழுவதும் வளர்ச்சிக்குத் திரும்பவும், நிதிகளை ஒழுங்குபடுத்தவும் உதவும்” என்றார் |
|
|