தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக் Kevin Rudd reinstalled as Australian prime minister கெவின் ரூட் மீண்டும் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக்கப் படுகின்றார்By Patrick O’Connor use this version to print | Send feedback தொழிற் கட்சியின் 122 ஆண்டு வரலாற்றில் மிக மோசமான அரசியல் நெருக்கடி ஒன்றை தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு முன் பதவியில் இருந்து ஒரு உட்-கட்சி சதி மூலம் அகற்றப்பட்ட பின்னர் இன்று கெவின் ரூட் ஆஸ்திரேலிய பிரதம மந்திரியாக்கப்பட்டார். நேற்று இரவு 57 க்கு 45 வாக்குகள் என்ற கணக்கில் தொழிற் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ரூட்டை தொழிற் கட்சி தலைமையில் இருத்தியதை அடுத்து முழு ஆளும் வர்க்கமும் இம் முடிவிற்குப் பின் அணிதிரண்டுகொண்டன. ஆளுனர் ஜெனரல் க்வென்டின் பிரைஸ் அவசர அவசரமாக இன்று காலை ரூட்டிற்குப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அவரும் அவருடைய சட்ட ஆலோசகர்களும் பாராளுமன்றத்தில் ஒரு பெரும்பான்மை பெற முடியும் என நிருபிக்கும் திறனைக் காட்டமுன் ரூட்டை ஒரு சிறுபான்மை அரசாங்கத்தின் தலைவராக நியமிப்பதில் உள்ள அரசியலமைப்பின் சட்டபூர்வதன்மை பற்றி எழுப்பப்பட்ட வினாக்களை உதறித்தள்ளினர். கடந்த மூன்று ஆண்டுகளாக கில்லார்டுக்கு ஆதரவு கொடுத்த, இரண்டு நாட்டுப்புற பாராளுமன்ற உறுப்பினர்கள் ரோப் ஓக்சோட் மற்றும் டோனி வின்ட்சர் ஆகியோர், முன்னதாக ரூட்டிற்கு ஆதரவு கொடுப்பரா என்பது பற்றி சந்தேகமிருந்தது. ஆனால் ஆளும் வட்டங்களுக்குள் உள்ள ஆழ்ந்த அரசியல் கொந்தளிப்புக்கு ஒரு அரசியலமைப்பு நெருக்கடியையும் சேர்க்கும் விருப்பம் இருக்கவில்லை; எனவே ரூட் மீண்டும் பதவியில் இருப்பதற்கு பாதுகாப்பான பாதை வழங்கப்பட்டது. நேற்று இரவு வெகு நேரத்திற்கு பின் எதிர் கட்சி தலைவர் டோனி ஆப்போட் புதிய பிரதம மந்திரிக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப் போவதிவல்லை என்றும் “பாராளுமன்ற விளையாட்டுக்களில்” அவருக்கு ஆர்வம் இல்லை எனவும் அறிவித்துவிட்டார். ஆளும் வட்டங்களில் ரூட்டை மீண்டும் பதவியில் இருத்தும் முடிவிற்குப் பின்னால் இருந்த பெரும் உந்துதல், மூன்று ஆண்டுகளுக்கு முன்னால் ரூட்டிற்கு எதிரான ஆட்சிமாற்றத்தில் கில்லார்ட் கொண்டிருந்த பங்கினால் அவரின் செல்வாக்கற்ற தன்மை ஆழ்ந்தும் பரந்தும் விட்டது என்னும் அச்சமாகும். செப்டம்பர் 14ல் வரவிருக்கும் மத்திய தேர்தலில், தொழிற் கட்சி பெரும் இழப்பை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. சமீபத்திய கருத்துக் கணிப்புக்கள் கில்லார்டின் தலைமையில் தொழிற் கட்சி 150 பேர் கொண்ட பிரதிநிதிகள் மன்றத்தில் 30க்கும் குறைவான இடங்களைத்தான் பெறக்கூடும் எனக் காட்டியுள்ளன. தொழிற் கட்சிக்கு, ரூட்டினால் வாக்குகளின் அதிகரிப்பை பெற்றுத்தர முடியும் எனத் தோன்றினால், அதற்குக் காரணம் அவர் தொடர்ந்தும் ஓரளவு பொது அனுதாபத்தை கொண்டிருப்பதாலாகும். இவர் கில்லார்டினாலும் மற்றும் தொழிற் கட்சியில் ஆதரவுப் பிரிவாளர்களாலும் ஜனநாயக விரோத அரசியலின் பாதிப்பாளர் என்றவகையில் செய்தி ஊடகத்தால் பிரபல்யமானவரின் “செல்வாக்கு” என தவறாக காட்டப்பட்டது. கிட்டத்தட்ட தேர்தல்களுக்கு சற்று முன்னர் தொழிற் கட்சியின் தேர்தல் நலன்களை மீட்கும் இத்தகைய கடைசி நிமிட முயற்சிகள் என்பது, ஆளும் வட்டங்களில் இதன் சரிவு பாராளுமன்ற ஆட்சியின் உறுதிப்பாட்டினையே ஆபத்திற்குள்ளாக்கலாம் என்னும் ஆழ்ந்த கவலைகளைத்தான் பிரதிபலிக்கிறது. இம்மாதம் முன்னதாக தலைமை பற்றிய ஊகம் அதிகரிக்கையில், பாப் ஹாக்கின் முந்தைய தொழிற் கட்சி அரசாங்கத்தில் மந்திரியாக இருந்த பாரி கோஹன், தேர்தல் அழிவைத் தவிர்க்க ஒரு மாற்றம் தேவை என எச்சரித்தார். “ஒரு சிலர் கணிப்பதுபோல் நிலைமை மோசமாக இருக்குமானால் ஆஸ்திரேலிய தொழிற் கட்சி இருக்க முடியாது, அல்லது தற்பொழுதுள்ள அதன் வடிவத்தில் இருக்க முடியாது.” என்றார். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு பொருளாதார, அரசியல் நெருக்கடிச் சூழ்நிலையில், தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ அரசின் ஆணைகளுக்கு அடிபணியவைக்க ஒரு நூற்றாண்டிற்கும் மேலாக அது கொண்டிருந்த பங்கின்காரணமாக, தொழிற் கட்சி சிதைந்து போகக்கூடும் என்னும் அச்சுறுத்தல், பாராளுமன்ற அரங்கிற்கும் அப்பால் செல்லும் அளவிற்கு நீண்டகால விளைவுகளை கொண்டுள்ளது. ஏற்கனவே கில்லார்டினால் ஆரம்பிக்கப்பட்டுவிட்ட சிக்கன நடவடிக்கைகளுடன் இணைந்த வகையில், தாதுப் பொருட்கள் ஏற்றுமதியின் சரிவு, பொருளாதாரம் முழுவதும் நடைபெறும் பெரும் வேலை வெட்டுக்கள், ஐரோப்பா, துருக்கி, மற்றும் இப்பொழுது பிரேசிலில் வெடிப்புத் தன்மையுடைய சமூக போராட்டங்களுக்கு வழிவகுத்தவை ஆஸ்திரேலியாவிலும் தாம் வந்துவிட்டது என்பதைத்தான் அறிவித்துள்ளன. இந்நிகழ்வுகள் குறித்து ஆளும் வட்டங்களில் உள்ள பதட்டத்தை பிரதிபலிக்கும் வகையிலும், பாராளுமன்ற முறையில் இருந்து இளைஞர்களின் ஒரு முழு தலைமுறை ஒதுக்கி வைக்கப்பட்ட நிலையிலும், ரூட் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் அவருடைய முதல் கருத்துக்களில் நேரடியாக இளைஞர்களுக்கு அழைப்புவிட்டார். நம் அரசியல் அமைப்புமுறை, மற்றும் பாராளுமன்றம் சமீபத்திய ஆண்டுகளில் உங்களில் பலர், சொல்லப்போனால் மிக அதிகாமானவர்களுக்கு நல்ல பார்வையில் இல்லை என்பது தெளிவு; உங்களுக்குப் பிடிக்கவும் இல்லை, நீங்கள் மரியாதை தரவும் இல்லை... நீங்கள் ஏன் எல்லாவற்றையும் மூடிவிட்டீர்கள் என்பதை நான் விளங்கிக்கொள்கின்றேன். இது வியப்பல்ல; ஆனால் தயவு செய்து மீண்டும் வாருங்கள், புதிதாகக் கேளுங்கள் – நீங்கள் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்பது உண்மையில் முக்கியம். அதற்கு நாங்கள் துணை நிற்போம்.” 2007 தேர்தலில் ரூட் இளைஞர்களிடையே கணிசமான ஆதரவைப் பெற்றார்; அவர்கள் முந்தைய ஹோவர்ட் அரசாங்கத்தின் கொள்கைகள் குறித்து விரோதப் போக்கு கொண்டிருந்தனர்—அதில் ஈராக் போர், சுற்றுச்சூழல் மாறுதல், ஜனநாயக உரிமைகள், அகதிகள் பிரச்சினை ஆகியவை அடங்கி இருந்தன. ஆனால் அந்த ஆதரவு விரைவில் மறைந்துவிட்டது; 2013ல் ரூட்டின் குரல் ஆறாண்டுகளுக்கு முன் இருந்ததைவிட இன்னும் கந்தலாக உள்ளது. “ஈடுபாடு கொள்ள வேண்டும்” என்னும் ரூட்டின் அழைப்பு, தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரின் சமூக அந்தஸ்தில் புதிய தலையீடுகள் வேண்டும் என்பதை அவர் தெளிவுபடுத்துகையில் வந்துள்ளது. ஆஸ்திரேலிய முதலாளித்துவத்தை எதிர்கொண்டிருக்கும் மோசமான நிலைமையை சுட்டிக்காட்டி அவர் எச்சரித்தார்: “இப்பொழுது பல மோசமானவை நடக்கின்றன. உலகப் பொருளாதாரம் மிக மெதுவான மீட்பைத்தான் கொண்டுள்ளது. சீனாவின் வளங்களின் செழிப்பு முடிந்துவிட்டது.” உள்வீட்டு சதிகள், சூழ்ச்சித்தந்திரங்கள் என இந்த மூன்று ஆண்டுகளில் ஒரு தொழிற் கட்சி பிரதம மந்திரி அகற்றப்படுவது இது இரண்டாம் தடவையாகும். இதே அரசியல் சக்திகள்தான் இரண்டு ஜனநாயக விரோத நிகழ்வுகளிலும் பங்கு கொண்டிருந்தன என்பதில் சந்தேகம் இல்லை. ரூட் அகற்றப்பட்டதில் உள்ள முக்கிய காரணி, ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கு வளர்ச்சியடைவதை அமெரிக்கா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற ரூட்டின் முயற்சிகளுக்கு ஒபாமா நிர்வாகத்திற்குள் இருந்த எதிர்ப்பாகும். ஆசியாவில் சீனாவை கட்டுப்படுத்துவதற்கு ஒபாமாவின் ஆக்கிரோஷத் தலையீடு இக்கொள்கைக்கு மாறாக இருந்தது, ரூட் வெளியேற்றப்பட்டது, அமெரிக்க தூதரகம் “பாதுகாப்பான ஆதாரங்கள்” என விளக்கிய தொழிற் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களின் ஒரு குழுவின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரூட் அகற்றப்பட்டதை தொடர்ந்து, ஒபாமா இரு முறை தாமதிக்கப்பட்ட ஆஸ்திரேலிய பயணத்தை மேற்கொண்டு, ஆசியாவில் முன்னிலை என்னும் கொள்கையை அறிவித்தார்; அதைத்தவிர டார்வினில் அமெரிக்க மரைன் படைகள் நிறுத்தி வைக்கப்பட்டதும் 2011ல் ஆஸ்திரேலிய பாராளுமன்றத்தில் அவருடைய உரையும் அடங்கும். நேற்று கில்லார்டின் அழிவின் முக்கிய காரணி 2010 ஆட்சி மாற்றத்தில் முக்கிய சதிகாரர்களில் ஒருவரான பில் ஷார்ட்டனுடைய முடிவாகும்; இவர் கில்லார்டின் “பிரிட்டோரிய பாதுகாப்பின்” தலைவர்—கட்சி மாறும் முடிவை எடுத்தார். விக்கிலீக்ஸால் வெளியிடப்பட்ட அமெரிக்க தூதரகத் தந்தி ஒன்றில், ஷார்ட்டன் “ஒரு பேராவல் கொண்ட இளம் பாராளுமன்ற உறுப்பினர்... அவருடைய அமெரிக்க சார்பு நன்கு அறியப்பட்டது” என விளக்கப்பட்டுள்ளது. தன்னுடைய தலைகீழ் மாற்றத்தைச் செய்யுமுன் அமெரிக்கத் தொடர்புகளுடன் ஷார்ட்டன் உறுதியாக கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். இன்று ஆஸ்திரேலியன் நாளேடு, ஒரு அமெரிக்க அரச செயலக அதிகாரி, ரூட் பிரதம மந்திரியாக மீண்டும் வந்திருப்பதை வரவேற்றார் எனத் தகவல் கொடுத்துள்ளது: “எந்த வருங்கால ஆஸ்திரேலிய அரசாங்கத்துடனும் நாம் மிக நெருக்கமான உறவுகளை தொடர்வோம் என்ற நம்பிக்கை உள்ளது” என்றார்அவர். தேர்தலுக்கு முன் ஒரு குறுகிய கால காபாந்து பிரதமரான ரூட்டுடன் செயல்படுவதில் வாஷங்டனுக்கு எதிர்ப்பு ஏதும் இல்லை. மற்றொரு பதவிக்காலத்தை அவர் வென்றால், கடைசியாக அவர் பதவியில் இருந்த காலத்தில் இருந்த “தள நிலைமைகளுக்கு” முற்றிலும் மாறானவற்றை எதிர்கொள்வார். மற்றொரு முனையில் நிலைமையைச் சீர்திருத்த ரூட் பெருமுயற்சிகளை மேற்கொண்டுள்ளார். பெரு வணிகத்தின் ஆதரவைப் பெற முயல்கையில், “நம் பொருளாதாரத்தின் வருங்காலம் குறித்த கடினமாக முடிவுகள் வரவுள்ளன” என்றார்; “நம் பொருளாதார பகுதியின் அதிகரிக்கும் அளவையும் அது எப்படிப் பகிர்ந்து கொள்ளப்படுகிறது என்பதும் பார்க்கப்படவேண்டும்” என்றார். அவர் மேலும் கூறினார்: “ஆஸ்திரேலிய வணிகத்திற்கு இதைக் கூறுவேன். உங்களோடு நெருக்கமாக உழைக்க விரும்புகிறேன். கடந்த காலத்தில் உங்களோடு நெருக்கமாக உழைத்துள்ளேன்.... கான்பெர்ராவில் நான் பார்க்க விரும்புவது, வணிகமும் தொழிற் கட்சியும் ஒன்றாக உழைப்பதைத்தான். வணிகத்தையும் தொழிற் கட்சியும் பிரிக்கும் விஷயங்களை நான் காணவிரும்பவில்லை. கடந்த காலத்தில் நாம் இயல்பான பங்காளிகள், மீண்டும் வருங்காலத்திலும் அப்படித்தான் இருப்போம்.” அவர் கருத்துக்கள், நிதிய மற்றும் முர்டோக்கின் செய்தி ஊடகத்தில் இருந்து தகுதிவாய்ந்த ஆதரவை பெற்றன. சந்தைகள், கில்லார்ட் அகற்றப்பட்டதை ஆதரித்தன. சிறுபான்மை அரசாங்கத்திற்கு முடிவு கட்டி நேரடிப் பெரும்பான்மை இருக்கும் அரசாங்கத்தை இருத்துவதற்கு வணிகக் குழுக்கள் தேர்தல் தேதிக்கு அழுத்தம் கொடுத்தன. அதுதான் திறமையுடன் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்களை முடுக்கிவிடும்— அதைத்தான் அவை கோருகின்றன.
கட்டுரையாசிரியர் கீழ்க்கண்டவற்றையும் பரிந்துரைக்கிறார்: |
|
|