:Tamil : செய்திகள்
ஆய்வுகள் : மத்திய
கிழக்கு : துருக்கி
Turkish unions, business groups back crackdown on Taksim Square protest
துருக்கிய தொழிற்சங்கங்கள் மற்றும் வணிகக் குழுக்கள் தக்சிம் சதுக்க எதிர்ப்பை நசுக்க ஆதரவு கொடுக்கின்றன
by
Thomas Gaist and Alex Lantier
20 June 2013
use this version to print | Send
feedback
துருக்கிய
ஆளும் உயரடுக்கு எதிர்ப்புக்களை நசுக்குவது குறித்த தன்னுடைய வேறுபாடுகளை களைந்து
பிரதம மந்திரி ரெசெப் தயிப் எர்டோகனுடன் நெருக்கமாகிறது.
மக்களுக்கு எதிராக இராணுவத்தை
அனுப்பும் அச்சுறுத்தலைக் கொடுத்த எர்டோகன்,
பொலிஸ் கலகப் பிரிவினரை தக்சிம்
சதுக்கத்தை வன்முறையைப் பயன்படுத்திக் காலி செய்ய அனுப்பி,
செவ்வாயன்று நூற்றுக்கணக்கான
எதிர்ப்பாளர்களைக் கைது செய்தார்.
20
வணிகக் குழுக்களும்
தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களும் துருக்கியின் பிரதான தேசிய செய்தித்தாள்களில்
முழுப்பக்க விளம்பரம் கொடுத்துள்ளாதாக துருக்கியிலிருக்கும் உலக சோசலிச வலைத் தள
நிருபர்கள் தகவல் தெரிவித்தார்கள்.
இந்த விளம்பரம் தக்சிம் சதுக்க
ஆர்ப்பாட்டக்காரர்களை வீட்டிற்கு செல்லுமாறு அழைப்பு விடுத்துள்ளது.
இதில் கையெழுத்திட்டவர்களில்
துருக்கிய வணிக மற்றும் பண்டப் பரிமாற்ற தொழிற்சங்கம்
(TOBB),
துருக்கிய தொழிலாளர் கூட்டமைப்புச்
சங்கங்கள் (TURI-IS),
துருக்கிய வணிகர்கள்,
கைவினைஞர்கள் கூட்டமைப்பு
(TESK)
மற்றும் துருக்கிய வங்கிகள் சங்கம்
(TBB)
ஆகியவைகள் உள்ளன.
இந்த
அறிக்கையானது,
எதிர்ப்புக்களை துருக்கியின் நலன்களை
சேதப்படுத்துகின்றன எனத் தாக்கி எழுதியிருப்பதாவது:
“எதிர்ப்புக்கள் அவற்றின்
உண்மையான நோக்கத்திற்கு அப்பால் சென்று விட்டன,
குறும் குழுக்கள் இதை நாட்டில்
அமைதியின்மையை தோற்றுவிக்கவும்,
மக்களிடையே மோதலைத்
தூண்டிவிடவும்,
நம் நாட்டிற்கு எதிரான மோசமான
நோக்கங்களுக்கு பயன்படுத்தத் தளமாகவும் பயன்படுத்தியுள்ளன.
நம் குடிமக்களை அவர்களுடைய
அன்றாட வாழ்விற்குத் திரும்புமாறு கேட்டுக் கொள்கிறோம்;
அதையொட்டி பிரச்சினையில்
முன்னேற்றம் தொடரும்.”
பல
எதிர்ப்பாளர்களைக் கொன்றும்,
5,000 பேரைக்
காயப்படுத்தியுமுள்ள கலகப் பிரிவுப் பொலிசார் வன்முறையின் பெரும்பாலானவற்றிற்கு
பொறுப்பு என்றாலும்,
அறிக்கையானது எதிர்ப்பாளர்களை,
வன்முறையில் ஈடுபடுபவர்கள் எனக்
குற்றம் சாட்டி,
அவர்களுக்கு
“பிறருடைய
சொத்துக்களை உடைத்தல்,
எரித்தல் மற்றும் மற்றவர்களை
அவமதிப்பிற்கு உட்படுத்துதல் என்பவைகள் உரிமைகளைப் பயன்படுத்துதல் என்று எந்தச்
சட்டமுறையிலும் விளக்கப்பட முடியாதவை”
என உபதேசமும் செய்துள்ளது.
துருக்கிய
ஆளும் வர்க்கம்,
வாஷிங்டன் மற்றும் ஐரோப்பியத்
தலைநகரங்களின் ஆதரவுடன்,
எதிர்ப்புக்களை நசுக்க
முற்படுகிறது;
இது,
கடந்த மாதம் எர்டோகனுடைய
திட்டமான தக்சிம் சதுக்கத்திற்கு அருகேயுள்ள கெஜிப் பூங்காவை மாற்றுவதில் தொடங்கின.
எதிர்ப்புக்கள் பெருகி,
நகர்ப்புற இளைஞர்கள்,
சமூக சமத்துவமின்மைக்கும்
எர்டோகனுடைய இஸ்லாமியவாதக் கொள்கைகளுக்கும் விரோதம் காட்டும் பரந்த அடுக்குகளிடையே
அணிதிரண்டது;
இதில் அவருடைய சிரியாவில் அமெரிக்கத்
தலைமையில் நடக்கும் போரில் பங்கு பெறுவதும்,
மதுபான விற்பனைத் தடை என்னும்
ஜனநாயக விரோத நடவடிக்கையும் அடங்கும்.
எர்டோகனுடைய
மிருகத்தன வன்முறையானது துருக்கிய சமூகத்தில் பரந்த அடுக்குகளை விரோதமாக்கியுள்ளது.
கருத்துக் கணிப்புக்கள்,
அவருடைய நீதி மற்றும்
வளர்ச்சிக் கட்சி (AKP)
குறித்து
50 சதவிகிதத்திற்கும் மேலாகச்
சரிந்து 35
சதவிகிதமாக வந்துள்ளன.
ஒரு துருக்கிய அரசியல்
பகுப்பாய்வளரான செங்கிஸ் காண்டர்,
மக்கள் எதிர்ப்பை
முகங்கொடுக்கையில், AKP
அதனுடைய நிலைகளில் சிறியதாக
வந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்:
“அவருடைய கட்சி உறுப்பினர்கள்
எதையும் விவாதிக்கும் நிலையில் இப்பொழுது இல்லை.
அவர்கள் ஒரு போர்
நிலைப்பாட்டில் உள்ளனர்.”
பொலிசுக்கும்
ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் புதன் அதிகாலை மோதல்கள் ஏற்பட்டன.
ஆயிரக்கணக்கான
ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்காரா,
மற்றும் எஸ்கிசெஹிர் ஆகிய
இடங்களில் ஆர்ப்பாட்டம் செய்தனர்,
பொலிஸ் பிரிவினர் கண்ணீர்ப்புகை
குண்டுகள்,
நீர் பீய்ச்சுதல் ஆகியவற்றின் மூலம்
அவர்களைக் கலைத்தனர்.
இச்சூழலில்,
எதிர்ப்பு இன்னும் பரந்த சமூக
அடுக்குகளை இழுக்கும் முன்,
எர்டோகன் அரசாங்கம்
எதிர்ப்புக்களை விரைவில் முடித்துவிடப் பெரும் நம்பிக்கையற்று உள்ளது
—
எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள
வர்க்கத்தை;
அதுதான்
2011ல் அமெரிக்காவின் ஆதரவைக்
கொண்ட சர்வாதிகாரங்களை எகிப்து,
துனிசியாவில் அகற்றியது.
இங்கே நேட்டோ சக்திகளின் முழு
ஆதரவு எர்டோகன் ஆட்சிக்கு உள்ளது.
எர்டோகனுடைய
ஆட்சி நேட்டோ ஆதரவைப் பெற்றுள்ளது;
இதற்குக் காரணம் அதன் மத்திய
பங்கு சிரியாவில் இருக்கும் அமெரிக்கத் தலைமையிலான பினாமிப் போரில் அது இஸ்லாமியவாத
எதிர்ப்பு சக்திகளுக்கு அளிக்கும் உதவியின் முக்கியமான பங்காகும்.
துருக்கியானது சிரிய ஜனாதிபதி
பஷர் அல்-அசாத்தின்
ஆட்சியுடன் போராடும் அமெரிக்க ஆதரவு பெற்ற சுன்னி இஸ்லாமிய ஆட்சிகளின் பிராந்தியக்
கூட்டில் முக்கிய நாடாக வெளிப்பட்டுவருகிறது;
இப்போரின் இறுதி நோக்கமானது
அமெரிக்கத் தலைமையில் ஈரானில் ஆட்சி மாற்றத்தைக் காண்பது என்னும் பாதையைக்
கொண்டதும்;
மேலும் மத்திய கிழக்கு முழுவதும்
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மேலாதிக்கத்தை அடைவது என்பதும் உள்ளது.
பிரஸ்ஸல்ஸிலுள்ள
சர்வதேச அமைதிக்கான கார்னெஜி
அறக்கட்டளையைச் (Carnegie
Endowment for International Peace)
சேர்ந்த
Sinan Ülgen,
ஜேர்மனியின் பொது சர்வதேச ஒளிபரப்புச்
சேவையான Deutsche Welle
யிடம்,
“இறுதியில் துருக்கி ஒரு நேட்டோ
உறுப்பு நாடு,
நேட்டோ உடன்பாட்டின் ஒரு பகுதி அது.
விஷயங்கள் முற்றிலும் வேறுபட்ட
ஜனநாயக தவறு என்னும் பரிமாணத்தை பெற்றால் அல்லது அடைந்தால் ஒழிய,
அதுவரைக்கும மேற்கு தொடர்ந்து
துருக்கியுடன் பணிபுரியும்.”
Deutsche Welle
கருத்துக் கூறியது: “துருக்கியப்
பிரதம மந்திரி,
சிரியாவில் முக்கியமாக தலையிடுபவர்,
உள்நாட்டில் வலுவிழந்துள்ளார்.
ஆனால் கார்னெஜியின்
Ülgen கருத்துப்படி எர்டோகன்
கணிசமான உள்நாட்டு எதிர்ப்பை சந்தித்தாலும்,
சிரியாவில் மேற்கத்தைய
நாடுகளின் “தவிர்க்க
முடியாத பங்காளியாக”
இருப்பார்.
எர்டோகன்
அரசாங்கத்திற்கும் அதன் போர் சார்புக் கொள்கைக்கும் தொழிலாள வர்க்க எதிர்ப்பின்
வளர்ச்சிக்கு முக்கிய தடையாக இருப்பது தொழிற்சங்கங்களின் பிற்போக்குத்தன பங்கு,
துருக்கிய முதலாளித்துவம்
மற்றும் குட்டி முதலாளித்துவ
“இடதின்”
பிற்போக்குத்தனம் ஆகும்.
இவை எர்டோகன் அரசாங்கம் மற்றும்
நேட்டோ சக்திகளுக்கு எதிரான எந்தப் போராட்டத்திற்கும் விரோதப் போக்கைக் காட்டுகிறது.
துருக்கிய
தொழிற்சங்கங்கள் —துருக்கிய
புரட்சிகர தொழிற் சங்கங்கள்
(DISK) மற்றும் பொதுத்துறைத்
தொழிலாளர்கள் சங்கக் கூட்டமைப்பு
(KESK)— முக்கிய பங்கைக்
கொண்டுள்ளன;
திங்களன்று ஒரு பொது
வேலைநிறுத்தத்திற்கு அழைப்புவிடுத்து
5,000 தொழிலாளர்களை அணிதிரட்டின.
இது தொழிற்சங்க
அதிகாரத்துவத்திற்கும் எர்டோகன் அரசாங்கத்திற்கும்,
எதிர்ப்புக்கள் மீது ஆட்சி
வன்முறையை தொடர்ந்தால் பரந்த தொழிலாள வர்க்க எழுச்சி என்னும் தவிர்க்க முடியாத
இடருக்கு வாய்ப்பு இல்லை என்னும் நம்பிக்கையைக் கொடுத்துள்ளது.
இன்னும்
பரந்த முறையில் பல முதலாளித்துவ
“இடது”
மற்றும் போலி இடது கட்சிகள்,
தக்சிம் ஒற்றுமை அரங்கில்
தீவிரமாக இருப்பவை,
எர்டோகனுடன் பேச்சுவார்த்தைகள்
வேண்டும் எனக் கோரியுள்ளன,
மிகவும் குறைந்த
கோரிக்கைகளைத்தான் முன்வைத்தன,
கெஜிப் பூங்கா மறு கட்டமைப்பு
குறித்து குவிப்புக் காட்டின.
இது தொழிலாள வர்க்கத்திடையே
இருக்கும் போராட்டமானது போர் மற்றும் சமூக சமத்துவமின்மைக்கு ஆழ்ந்த
எதிர்ப்பையொட்டி அணிதிரள்வு ஏற்படும் என்பதைத் தடுத்துவிட்டது.
இச்சூழலில்,
எர்டோகன் ஆட்சி வன்முறையைத்
தொடர்கிறது.
டஜன் கணக்கான துருக்கிய
எதிர்ப்பாளர்கள் அரசாங்கத்தால் புதனன்று காவலில் வைக்கப்பட்டனர்;
இது நாடு முழுவதும்
ஆர்ப்பாட்டங்களுக்கு பொறுப்பு எனக் கருதப்பட்ட குழுக்களில் நடத்தப்பட்ட
சோதனைகளுக்குப் பின் வந்துள்ளன.
ஒடுக்கப்பட்டுள்ளவர்களின்
சோசலிஸ்ட் கட்சி (ESP),
மார்க்சிச லெனினிச கம்யூனிஸ்ட்
கட்சி (MLKP)
ஆகியவற்றின் உறுப்பினர்களும் அடங்குவர்.
Hurriyet Daily
News
கருத்துப்படி,
காவலில் உள்ளவர்கள் அடுத்த
நான்கு நாட்களில் விசாரணைகளை எதிர்கொள்வர்,
பலரும்
“வன்முறை
எதிர்ப்புக்களை அமைத்தது,
மக்களை சட்டவிரோத
ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்தது”
என்னும் குற்றச்சாட்டுக்களை
எதிர்கொள்வர்.”
சோதனையில் கைது செய்யப்பட்ட
தனிநபர்களின் எண்ணிக்கை 200
இல் இருந்து
500 வரை இருக்கலாம் என
மதிப்பிடப்பட்டுள்ளது,
எண்ணிக்கை உண்மையில் அதிகமாக
இருக்கலாம்.
எர்டோகனுடைய
ஆட்சி,
இணைய தளத்தில் வெளிவரும்
எதிர்ப்புக்களையும் நெரிக்க முற்படுகிறது.
துணைப் பிரதம மந்திரி புலென்ட்
அரிங்க் சட்டவகை “தடுப்புக்கள்”
சமூகச் செய்தி ஊடகத்தை
பயன்படுத்துபவர்களை “குற்றங்களைத்
தூண்டுதல் பொய்களைப் பரப்புதல்,
தவறான தகவல்களை அளித்தல்”
இவற்றில் இருந்து தடுக்கத் தேவை
என்றார்.
ஒரு
புதுவகை ஒத்துழையாமையாக, “நிற்கும்
மனிதர்”
எதிர்ப்பு எனக் கூறப்படுவது,
இந்த வாரம் ஆட்சியால்
தொடங்கப்பட்ட மிருகத்தன வன்முறைக்குப் பின்,
துருக்கி முழுவதும்
படர்ந்துள்ளது.
எதிர்ப்புக்களில் நூற்றுக்கணக்காண
ஆர்ப்பாட்டக்காரர்கள்,
அசைவின்றி மௌனமாக பொது
இடங்களில் நிற்கின்றனர்.
“நிற்கும்
மனிதர்”
எதிர்ப்புக்கள் பரந்த முறையில்
முதலாளித்துவ செய்தி ஊடகத்தில் வெளியிடப்படுகின்றன;
ஏனெனில் அத்தகைய மௌனமாக தனிநபர்
எதிர்ப்புக்கள் எர்டோகன் ஆட்சிக்கு அச்சுறுத்தல் கொடுக்கவில்லை;
அமெரிக்காவின் மத்திய கிழக்கு
போர் உந்துதலுக்கோ,
முதலாளித்துவ ஒழுங்கிற்கோ அச்சுறுத்தல்
கொடுக்கவில்லை.
இக்காரணத்தையொட்டி,
எதிர்ப்புக்கள் முதலாளித்துவ
ஊடகத்தில் ஆதரவைப் பெறுகின்றன,
தக்சிம் ஒற்றுமை அரங்கின்
ட்வீட்டர் கருத்துக்களிலும் ஆதரவைக் கொண்டுள்ளன.
எர்டோகன்
ஆட்சி அதன் ஒப்புதல் முத்திரையை
“நிற்கும்
மனிதர்”
எதிர்ப்புக்களுக்கு கொடுத்துள்ளது.
துணைப் பிரதம மந்திரி அரிங்க்
இவை “நாகரிகமானவை”,
“கண்ணிற்கு இனியவை”
என்றார்.
“சட்டத்திற்குட்பட்ட
இத்தகைய எதிர்ப்புக்களுக்கு நாம் ஊக்கம் அளிக்க வேண்டும் என்று அவர் சேர்த்துக்
கொண்டார். |