சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Obama in Berlin

பேர்லினில் ஒபாமா

Barry Grey
20 June 2013

use this version to print | Send feedback

ஜனாதிபதி பாரக் ஒபாமா புதன் அன்று பேர்லினில் நிகழ்த்திய உரையில், ஒரு காலத்தில் ஸ்ராலினிசவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த கிழக்கு பேர்லினில் உள்ள பிராண்டன்பேர்க் நுழைவாயிலின் கிழக்குப்பக்கத்தில் இருந்து உரையாற்றும் முதல் அமெரிக்க ஜனாதிபதி தான் என்பதை முக்கியத்துவப்படுத்திக் காட்டினார். “ஒடுக்கும் அரசியல் அமைப்புமுறைகளுக்கு எதிராக தனிநபர்களின் சுயாதீனத்தை பாதிக்காத வெளிப்படையான சமூகங்களின்” வெற்றிக்கு அடையாளமாக உள்ளது என்றும் கூறினார்.

ஆனால் முன்னாள் ஸ்ராசி இரகசியப் பொலிஸ் கருவியின் ஒற்றாடல்களை மிகச் சிறியவை ஆக்கிவிட்ட தன்னால் உருவாக்கப்பட்டு அம்பலப்படுத்தப்பட்டுள்ள பாரிய சட்டவிரோத கண்காணிப்பு வலைப்பின்னலை வெளிப்படையாக ஆதரித்துப் பேசுவதை அதனுடன் சேர்த்துக் கொள்ளும் கட்டாயத்தில் அவர் இருந்தார்.

ஒபாமா மீண்டும் அப்பட்டமான பொய்களைக் கூறி, அனைத்து அமெரிக்கர்க்களின் தொலைப்பேசிப் பதிவுகளையும் மற்றும் உலகம் முழுவதும் இருக்கும் மக்களின் மின்னஞ்சல் தொடர்புகளை கைப்பற்றும் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (NSA) திட்டங்கள் “சட்டத்தின் ஆட்சிக்கு உட்பட்டவை”, “சாதாரண மக்களின் தொடர்புகளை இலக்கு கொள்ளவில்லை” என்றார்.

இது, வெற்றுத்தனங்களும் பொய்களும் நிறைந்த உரையில் மிக அப்பட்டமான முரண்பாடுகளில் ஒன்றாகும். “சமாதானம்”, “சகிப்புத்தனம்” போன்ற உயர்சிந்தனைகளை கூறிய ஒபாமா, சிரியாவில் குறுங்குழுவாத கொடுமைகளை செய்யும் இஸ்லாமிய ஆயுதக்குழுக்களுக்கு நேரடியாக ஆயுதம் கொடுக்கின்றார். “நீதி பற்றி கூறிய அவர், அடுத்த மூச்சிலேயே  ஆளில்லா விமானத்தினால் கொலை செய்யும் தனது திட்டத்தைப் பற்றியும் கூறினார். 

கிரேக்கத்திலும் இன்னும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பாரிய வேலையின்மை மற்றும் வறுமையை சுமத்துவதில் தலைமை தாங்கும் ஜேர்மனியின் சான்ஸ்லர் மேர்க்கெலுக்கு அருகே நின்ற ஒபாமா, “பரந்து விரியும் அவமதிப்பான சமூக சமத்துவமின்மையை” கண்டித்து, “இளைஞர்களின் வேலையற்ற தன்மை எவ்வளவு வேதனையைத் தருகிறது” என்றும் கண்டித்தார். அதே நேரத்தில் இவருடைய நிர்வாகமும் அமெரிக்காவில் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரங்களை தாக்குதலுக்குள்ளாக்குகின்றது.

ந்த பாசாங்குத்தனம், சற்று காலத்திற்கு முன்பு “நம்பிக்கை”, “மாற்றம்” என்னும் ஒபாமாவின் பிரச்சார கோஷங்களாலும் அவருடைய ஜனாதிபதி வேட்புத் தன்மையாலும் ஈர்க்கப்பட்டிருந்த ஜேர்மனி மற்றும் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு புரியாமல் போய்விடவில்லை.  அப்பொழுது முதல் நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக புஷ் நிர்வாகத்தின் வலதுசாரிக் கொள்கைகளை தொடர்வதும் தீவிரமடைய செய்யும் போர், வங்கிப் பிணையெடுப்புக்கள், சமூகநலச் செலவு வெட்டுக்கள், ஜனநாயக உரிமைகள் மீதான இடைவிடா தாக்குதல்கள் ஆகியவை ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இருந்த பரந்த நப்பாசைகளை பிசுபிசுக்க வைத்து விட்டன.

புதன் அன்று தேர்ந்தெடுக்கப்பட்ட 4,000 பார்வையாளர்களுக்கு முன்  ஒபாமா உரையாற்றினார். தோட்டாக்கள் துளைக்க முடியாத கண்ணாடிக்குப் பின், பேர்லினில் பல பகுதிகள் கிட்டத்தட்ட மூடப்பட்ட நிலையில் பேசினார். ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வேட்பாளராக ஒபாமா பேர்லினில் பேசுகையில், 200,000 பேர், பெரும்பாலான இளைஞர்கள், ரியர்கார்ட்டனில் “ஒபாமாவாதம்” என்றழைக்கப்பட்ட போலியான ஏமாற இருக்கும் ஆர்வத்துடன் கூடியிருந்தனர்.

அப்போது ஐரோப்பாவில் வேட்பாளர் ஒபாமாவிற்குக் கொடுக்கப்பட்ட நல்வரவு ஒரு பரந்த நிகழ்வின் ஒரு பகுதியாகும். பலர், அமெரிக்காவிலும் உலகெங்கிலும் குறிப்பாக இளைஞர்கள்,  கிட்டத்தட்ட அதிகம் அறியப்படாத செனட்டரை விற்கும் சந்தைப் பிரச்சாரத்தினால் ஈர்க்கப்பட்டிருந்தனர்.

ஐந்து ஆண்டுகளுக்குப் பின், ஒபாமா மீதான போலி நப்பாசைகளை அகற்றியிருப்பது போதவில்லை. தீவிர அரசியல் படிப்பினைகள் இதில் இருந்து எடுக்கப்பட வேண்டும். இதிலிருந்து தொழிலாளர்களும் இளைஞர்களும் அரசியல்ரீதியாக எதிர்கால நிகழ்வுகளுக்கு தயாராக இருக்க முடியும்.

ஒபாமா நிகழ்வுப்போக்கு என்பது, செய்தி ஊடகத் திரித்தல், அரசியல் அனுபவமின்மை, தன்னையே ஏமாற்றிக் கொள்ளுதல் ஆகியவற்றின் விளைவு ஆகும். மேலும் ஒபாமாவின் ஆபிரிக்க அமெரிக்க இனப்பின்னணி அவரை தொழிலாள வர்க்கத்தின் நிலைக்கு மேலும் பரிவுணர்வுகாட்ட வைக்கும் மற்றும் அவர் முற்போக்கான கொள்கையை தொடர்வார் என்ற போலிக் கருத்தைத் தூண்டியது.

ஒபாமா ஒரு ஆபிரிக்கத் தந்தையை கொண்டுள்ளார் என்பதால் அவருடைய தேர்தல் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் தன்மையை மாற்றும் என்ற ஒரு கருதுகோளும் இருந்தது.

அடையாள அரசியலின் இருப்புக்களில் உள்ள இத்தகைய திவால்தன்மை கருத்துக்கள் எல்லாவற்றிற்கும் மேலாக பல போலி இடது அமைப்புக்களால் முன்னெடுக்கப்பட்டன. அவ்வமைப்புகள் தொழிலாள வர்க்கத்தின் சார்பாக பேசவில்லை மாறாக மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற அடுக்குகளின் சார்பாகவே பேசுகின்றன. அமெரிக்க, உலக முதலாளித்துவம் 1930 களில் இருந்து காணப்படாத மிகப் பெரிய நெருக்கடிக்கு நடுவே, ஒபாமா ஜனநாயகக் கட்சியில்இடதுபுறம் என்பதற்கு சேவை செய்பவராக அனைவராலும் உரியவராகக் கருதப்பட்டார். சர்வதேச சோசலிஸ்ட் அமைப்பு ஒபாமாவின் தேர்தலைஒரு உருமாற்ற நிகழ்வுஎன அழைத்து ஒருபுதிய உடன்பாடுவரவுள்ளது என்றும் முற்கூறியது.

இத்தகைய நப்பாசைகளை வளர்த்தமையானது, ஆளும் வர்க்கத்தின் கைகளை பலப்படுத்தி, தொழிலாள வர்க்கத்தின் சமூக நிலைமைகள் மீது முன்னோடியில்லாத தாக்குதலுக்கு தயாரிப்புக்களை செய்யவும் மற்றும் மத்திய கிழக்கிலும் அதற்கு இன்னும் அப்பாலும் இராணுவ வன்முறையை விரிவாக்குவதற்கான கால அவகாசத்தை பெற்றுக்கொள்ள உதவிசெய்யவும் பயன்படுத்தப்பட்டது. ஒபாமா பதவியில் இருத்தப்பட்டது அமெரிக்காவில் இன்னும் கூடுதலாக இராணுவ/உளவுத்துறை அமைப்பு கட்டுப்பாட்டை பெற்றுக்கொள்வதை ஸ்திரப்படுத்தியது.

ஒபாமாவின் பேர்லின் ஜூன் 2008 உரை, போலி இடது அமைப்புக்கள் உட்பட செய்தி ஊடகத்தால் பரந்த அளவில் பாராட்டப்பட்டது. உண்மையில், அந்த உரை பிரச்சார வார்த்தை ஜாலங்களாக எவ்வகையிலும் இருந்தாலும் புஷ் ஆட்சியின் ஆண்டுகளின் பிற்போக்குத்தன வெளிநாட்டு, உள்நாட்டுக் கொள்கைகள் ஒபாமாவின் ஜனாதிபதி காலத்தில் தொடரப்படும் என்பதைத்தான் அடையாளம் காட்டியது.

உலக சோசலிச வலைத் தளம் அப்போது பின்வருமாறு எழுதியது: “கிட்டத்தட்ட 200,000 மக்களின் முன் பேர்லினில் நிகழ்தப்பட்ட பராக் ஒபாமாவின் உரை, பனிப்போர்கால கம்யூனிச எதிர்ப்பின் ஒரு பிற்போக்குத்தனமாக உறுதிப்படுத்தலாகவும் மற்றும் பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதன் கீழ் அமெரிக்க ஏகாதிபத்திய இராணுவவாதம் மற்றும் ஆக்கிரப்பிற்கான ஒரு புதிய கட்டமைப்பையும் முன்னெடுப்பதற்கான ஒரு முயற்சியாகவும் இருந்தது.

போருக்குப் பிந்தைய ஐரோப்பிய உறவுகளின் வரலாற்றுப் பின்னணியில், ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் இரு கண்டங்களுக்கும் இடையே சர்வதேச பயங்கரவாதம் என்னும்புதிய ஆபத்திற்குஎதிரான போராட்டத்தில் நெருக்கமான ஒத்துழைப்பிற்கு முறையிட்டு, ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆப்கானிஸ்தானில் அவற்றின் துருப்புக்களின் அளவையும் அதிகரிக்க வேண்டும் எனக் கோரினார்.” (பார்க்கவும்: “Obama demands Europe send more troops to Afghanistan”).

இன்று மாபெரும் போராட்டங்களில் நுழைய இருக்கும் தங்கள் வாழ்க்கைத் தரங்களிலும் ஜனநாயக உரிமைகளிலும் முன்னோடியில்லாத தாக்குதல்களை எதிர்கொள்ளும் தொழிலாளர்களும் இளைஞர்களும், WSWS உடைய அணுகுமுறையில் எது, நடைமுறைச் செய்தி ஊடகம் மற்றும் போலி இடது அமைப்புக்களை வளர்த்த குருட்டுத்தன உணர்வுத் தன்மையை எதிர்க்கவும் மற்றும் ஒபாமாவின் அரசியல் குணத்தையும் போக்கையும் சரியாக மதிப்பீடு செய்ய உதவியது என்பதைப் பற்றி கேட்டுக் கொள்ள வேண்டும்.

இதற்கான பதில், ஸ்ராலினிசம், சமூக ஜனநாயகம் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் காட்டிக் கொடுப்புக்களுக்கு எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் போராட்டம் மூலமும், வரலாற்று விதிகள் குறித்த ஒரு தத்துவார்த்த புரிதலின் அடிப்படையிலான மார்க்சி உணர்வுடைய சர்வதேசத் தொழிலாள வர்க்கத்தின் வரலாற்று அனுபவங்களை அடித்தளமாக கொண்ட அரசியல் என்பதாலாகும்.

இத்தகைய அணுகுமுறை இனமோ, பாலியல் சார்போ அல்லாது சமூகங்களுக்கிடையிலான வர்க்க அரசியல் தான் உந்து சக்தி என்பதை வெளிப்படுத்துகிறது. பிற அரசியல் வாதிகளைப் போலவே, ஒபாமா ஒன்றும் சுயாதீனமான நபர் அல்ல, அவருடைய கொள்கைகள் தனிப்பட்ட குணங்களை ஒட்டி அல்லது தனிப்பட்ட உளவியல் கருத்துக்களால் நிர்ணயிக்கப்படுவதல்ல. ஆனால் அவர் ஆளும் வர்க்கத்தின் பிரதிநிதியாவார். பெரும் நெருக்கடியில் இருக்கும் அந்த வர்க்கம் தன் செல்வத்தையும் அதிகாரத்தையும் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகப் பாதுகாக்க எதையும் செய்யும்.

ஒபாமாவின் அனுபவத்தில் இருந்து பெறப்படும் அடிப்படைப் பாடம் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் நிகழ்வுகள் குறித்து ஒரு விஞ்ஞான ரீதியான மதிப்பீட்டின் தேவையும் மற்றும் ஒரு புரட்சிகர முன்னோக்கும்  அத்தகைய ஆய்வை அடித்தளமாக்க கொண்ட தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்திற்கான ஒரு வேலைத்திட்டமும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அப்பணிதான் ஒவ்வொரு நாளும் முழுமையாக உலக சோசலிச வலைத் தளத்தாலும் சோசலிச சமத்துவக் கட்சியினாலும் செயல்படுத்தப்படுகிறது.