தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி German Socialist Equality Party (PSG) presents its candidates for the 2013 elections ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சி (PSG) 2013 தேர்தல்களில் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது14 June 2013 use this version to print | Send feedback சோசலிச சமத்துவக் கட்சி (Partei fur Soziale Glechheit, PSG) செப்டம்பர் 22, 2013ல் நடக்கவுள்ள பாராளுமன்றத் தேர்தல்களிலும் ஹெஸ்ஸ மாநிலத் தேர்தலிலும் தனது வேட்பாளர்களை நிறுத்துகிறது. PSG தேர்தல் பிரச்சாரத்தின் நோக்கம் ஜேர்மனியிலும் ஐரோப்பாவிலும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் சமூகநலச் செலவு வெட்டுக்கள், வேலையின்மை, இராணுவவாதம் இவற்றிற்கு எதிராகவும், ஜனநாயக உரிமைகளுக்கு ஆதரவாகவும் போராடுவதற்காகும். புரட்சிகர சோசலிச தொழிலாளர்கள் கட்சியை கட்டுவதற்கான நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் உலகளாவிய ஆரம்ப முயற்சியின் ஒரு பகுதிதான் இப்பிரச்சாரமாகும். அது. பேர்லின், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மற்றும் ஹெஸ்ஸவில் மொத்தம் ஒன்பது வேட்பாளர்களை PSG நிறுத்துகிறது. தற்பொழுது கட்சி உறுப்பினர்களும் ஆதரவாளர்களும் ஜேர்மனியத் தேர்தல் சட்டத்தின்படி தேவைப்படும் வாக்குச் சீட்டுப் பதிவிற்காக ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களைச் சேகரிக்கின்றனர். இக்கையெழுத்துக்களின் படிவங்கள் நேரடியாக PSG வலைத் தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட முடியும், தபால் மூலமும் அனுப்பி வைக்கப்படும். பேர்லின்
PSG இன் பிரதான வேட்பாளர் பேர்லினில் உல்ரிச் ரிப்பேர்ட் (62) PSG இன் தலைவர் ஆவார். ரிப்பேர்ட் PSG இற்கு முன்னோடியான சோசலிச தொழிலாளர் கழகத்தின் –BSA- நிறுவன உறுப்பினராவார். 40 ஆண்டுகளுக்கும் மேலாக ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் போராடி வருவதுடன், இவர் உலக சோசலிச வலைத் தளத்தின் சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினர் ஆவார். பல முந்தைய பாராளுமன்ற, ஐரோப்பிய தேர்தல்களில் வேட்பாளராக இருந்துள்ளார். இரு பெண்களின் தந்தையான இவர் பேர்லினில் வசிக்கிறார். பாராளுமன்றத் தேர்தல்களில் பேர்லின் நகர கட்சிப் பட்டியலில் அவர் ஒரு வேட்பாளர் ஆவார்.
கிறிஸ்டோப் வாண்ட்ரையர் (32) PSG இன் உதவித் தலைவரும் மற்றும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவிலும் பணியாற்றுகிறார். கிழக்கு, தென்கிழக்கு ஐரோப்பாவின் அரசியல் நிகழ்வுகளில் இவர் கவனம் செலுத்துகின்றார். இவர் சிறு வயதிலேயே ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்ததுடன், சிலகாலம் ஜேர்மனியில் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச இளைஞர் மற்றும் மாணவர்கள் (IYSSE) இயக்கத்தின் பணிகளுக்கு தலைமை தாங்கினார். இவர் பேர்லினில் வசிக்கின்றார். பல ஆண்டுகள் உளவியல் ஆய்வாளராகப் பணிபுரிந்துள்ளதுடன், போதை மருந்துகளுக்கு அடிமையானோர்களின் பிரச்சனைகளுக்கு உதவியுள்ளார். இவர் பாராளுமன்ற தேர்தல்களில் பேர்லின் கட்சிப் பட்டியலில் ஒரு வேட்பாளராக உள்ளார்.
சுசான சலமா (55) ஒரு நிர்வாக உதவியாளராகப் பணியாற்றுகிறார். PSG இன் நிர்வாகக் குழு உறுப்பினராவார். இவர் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 2000 ம் ஆண்டில் சேர்ந்தார், பேர்லின் மாநில PSG பிரிவில் முக்கிய பங்கை வகிக்கின்றார். உலக சோசலிச வ்லைத் தளத்திற்கு பேர்லின் நகர அரசியல் தொடர்புடைய கட்டுரைகளை வாடிக்கையாக எழுதுகிறார். இவர் இரு பெண்களுக்கு தாயாவார், பேர்லினில் வசிக்கிறார். பாராளுமன்றத் தேர்தல்களில் அவர் பேர்லின் பட்டியலில் வேட்பாளராக உள்ளார்.
என்ட்ரிக் பஸ்டியான் (49) ஒரு செவலியர் ஆவார். இவர் PSG நிர்வாகக் குழுவில் உறுப்பினராக உள்ளார். இவர் கிழக்கு ஜேர்மனியில் வளர்ந்து ஜேர்மன் ஜனநாயகக் குடியரசின் (GDR) வீழ்ச்சிக்கு பின் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இணைந்தார். பாஸ்டியன் இப்பொழுது PSG யின் பேர்லின் மாநில பிரிவின் பணிக்குத் தலைமை தாங்குகிறார். இவர் பல கூட்டாட்சித் தேர்தல்களில் வேட்பாளராக கட்சியின் பிரதிநிதியாக இருந்துள்ளார். பாராளுமன்றத் தேர்தல்களில் பேர்லினில் கட்சிப் பட்டியலில் இவர் ஒரு வேட்பாளராக உள்ளார். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா
டீட்மார் கைசென்கெர்ஸ்டிங் (46) PSG தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர் ஆவார். வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் கட்சியின் வேலைகளுக்கு தலைமை தாங்கி நடத்துகிறார். 1989ல் ஸ்ராலினிச சரிவு, பேர்லின் சுவர் சரிவு காலத்தில் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் இவர் சேர்ந்தார். இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு வாடிக்கையாக எழுதுகிறார், PSG வேட்பாளராக பல ஐரோப்பிய, தேசிய தேர்தல்களில் நின்றுள்ளார். கைசென்கெர்ஸ்டிங் ரூர் பிராந்தியத்தில் வளர்ந்து வாழ்பவர், இரண்டு மகன்களுக்கு தந்தை ஆவார். இவர் டுயிஸ்பேர்க்கில் ஆசிரியராகப் பணி புரிகிறார். பாராளுமன்றத் தேர்தல்களில் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் கட்சிப் பட்டியலில் ஒரு வேட்பாளராக உள்ளார்.
56 வயதான எலிசபெத் சிம்மர்மான்-மோட்லர் PSG தேசிய நிர்வாகக் குழுவின் உறுப்பினர். 1975 ல் இருந்து ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் உறுப்பினராவார். இளமையாக இருக்கையில் வியட்நாம் போர், 1973 வலதுசாரி சிலி இராணுவ ஆட்சிசதி போன்ற நிகழ்வுகளால் அரசியலில் ஈடுபாடு கொண்டார். இவர் உலக சோசலிச வலைத் தளத்திற்கு தொழில்துறை வளர்ச்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் வேஹ்ர்மாட்டின் குற்றங்கள், அகதிகள் கொள்கை பற்றி வாடிக்கையாக எழுதுபவர். PSG சார்பில் பாராளுமன்ற மற்றும் ஐரோப்பியத் தேர்தல்களில் அவர் வேட்பாளராக பலமுறை கலந்துகொண்டுள்ளார். சிம்மர்மாமன்-மோட்லர் எழுத்தராகப் பணிபுரிகிறார். டியூஸ்பேர்க்கில் வசிக்கும் இவர் வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலப் பட்டியலில் பாராளுமன்றத் தேர்தல்களில் வேட்பாளராக உள்ளார்.
ஹெஸ்ஸ
மரியான ஆரென்ஸ் (61) தொழில்நுட்ப விளக்குனராக பிராங்பேர்ட் நகரில் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார். இவர் 1973ல் ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் சேர்ந்த்துடன், இத்தாலி நிகழ்வுகள் பற்றி வாடிக்கையாக உலக சோசலிச வலைத் தளத்தில் எழுதுகிறார். ஸ்விட்சர்லாந்து பேர்னில் பிறந்த இவர் ஹெஸ்ஸ மாநிலத்தில் 35 ஆண்டுகளாக வசிக்கிறார். ஆரென்ஸ் க்கு வயதிற்கு வந்த மகன் உண்டு. இவர் பாராளுமன்றத் தேர்தலில் ஹெஸ்ஸ மாநிலப் பட்டியலில் வேட்பாளராக உள்ளார். ஹெஸ்ஸ மாநிலத் தேர்தலில் தேர்தல் தொகுதியான ஒவ்வெபன்பார்க் நகரத்தில் (தொகுதி 43) நேரடி வேட்பாளராகவும் நிற்கிறார்.
59 வயதான அக்கிம் ஹெப்டிங் ஒரு சமூக சேவை தொழிலாளி. ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரமாக செயற்படுபவர். ஒரு லேத் இயக்குபவரின் மகனான ஹெப்டிங், கார்த் தொழிற்துறை குறித்து உலக சோசலிச வலைத் தளத்தில் கவனம் செலுத்துகின்றார். இவர் ஹெஸ்ஸ மாநிலத் தேர்தல்களில் PSG ஐ பலமுறை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார், ஐரோப்பியத் தேர்தல்களிலும் PSG வேட்பாளராக இருந்துள்ளார். ஹெப்டிங், ஆபன்பாக் நகரத்தில் வசிக்கிறார், உழைத்து வருகிறார். இவர் ஹெஸ்ஸ பாராளுமன்றத் தேர்தல்களில் கட்சிப் பட்டியலில் வேட்பாளராக உள்ளார்; தேசியப் பட்டியலிலும் உள்ளார். ஹெஸ்ஸ மாநிலத் தேர்தலில் ஒவ்வென்பார்க் நகர (தொகுதி 43) மேலதிக வேட்பாளாராக உள்ளார்.
ஹெல்முட் ஆரென்ஸ் (64) Hoechst AG நிறுவனத்தில் 35 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரிந்துள்ளார். இப்பொழுது ஓய்வு பெற்றுள்ள இவருக்கு வயதிற்கு வந்த மகன் ஒருவர் உள்ளார். ட்ரொட்ஸ்கிச இயக்கத்தில் அங்கத்தவரான இவர் PSG உடைய நிர்வாக உறுப்பினராகவும் அதன் முன்னோடி அமைப்பான BSA இலும் 40 ஆண்டுகள் அங்கத்தவராக இருந்துள்ளார். பல பாராளுமன்ற, ஐரோப்பிய தேர்தல்களிலும், 2003, 2008ல் ஹெஸ்ஸ மாநிலத் தேர்தல்களிலும் ஆரென்ஸ் PSG இனை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளார். இவர் ஹெஸ்ஸ தேர்தலில் கட்சிப் பட்டியலில் ஒரு வேட்பாளராக உள்ளார். |
|
|