சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Democratic rights are at stake in fight to defend Edward Snowden

எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்கும் போராட்டத்தில் ஜனநாயக உரிமைகள் ஆபத்தில் உள்ளன

Barry Grey
24 June 2013

use this version to print | Send feedback

அமெரிக்காவினதும் உலகத்தினதும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கு எதிரான ஒரு பாரிய அரசியல் சதியை அம்பலப்படுத்தியதற்காக, பழிவாங்கும் அரசாங்கத்திடம் இருந்து தப்புவதற்கு ஓர் இளைஞன் மறைந்து ஓடுவதை பார்ப்பது மிகவும் ஆழ்ந்த வேதனையை தருகிறது.

எட்வார்ட் ஸ்னோவ்டென் உளவுபார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன், அமெரிக்க அரசியல்வாதிகளாலும் செய்தி ஊடக விமர்சகர்களாலும் விரோதிக்கு ஒற்றுவேலை பார்க்கும் தேசத்துரோகி என்றும் கண்டிக்கப்பட்டுள்ளார். ஆனால் அவர் யாருக்கு இத்தகவலை கொடுத்துள்ளார்?. அமெரிக்க மக்களுக்காகும். ஸ்னோவ்டென் மீது குற்றம் சாட்டுபவர்கள் பார்வையில் அமெரிக்க மக்கள்தான் விரோதிகள்.

ஒவ்வொரு தொலைப்பேசி அழைப்பும் பதிவு செய்யப்படுவதையும், ஒவ்வொரு மின்னஞ்சலும் கண்காணிப்பிற்கு உட்படுவதையும் ஒவ்வொரு ஸ்கைப் உரையாடலும் கேட்கப்படுகிறது என்று அறியும் உரிமை மக்களுக்கு உள்ளது. ஒவ்வொரு தொலைத்தொடர்பும், இணைய தள தரவிறக்கமும், கடன் அட்டையில் வாங்கப்பட்டது குறித்த தகவலும் சேகரிக்கப்பட்டு ஒரு பரந்த தேசியப்பாதுகாப்பு நிறுவனத்தின் (NSA) தகவல்தொகுப்புக்களில் பதியப்பட்டுள்ளது. உடனடியாக பதிவு செய்யப்படாத, ஒற்றுக் கேட்கப்படாத அந்தரங்க தொலைத்தொடர்புகள் பின்னர் ஒற்றுக்கேட்க பயன்படுத்தப்படும்.

முழுத்தகவல்என்றழைக்கப்படும் தொலைபேசி மற்றும் மின்னஞ்சல் தொடர்பு குறித்த சான்றுகளின் பதிவு, நாட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண்கள், பெண்களைப் பற்றியும் அவர்கள் யாருடன் தொடர்பு கொள்கிறார்கள், என்ன படிக்கிறார்கள், என்ன வாங்குகிறார்கள், நேரத்தை எப்படிச் செலவு செய்கிறார்கள் என்ற ஏராளமான தகவல்களை இராணுவ மற்றும் உளவுத்துறை அமைப்புக்களுக்கு கொடுக்கிறது.

இந்த பரந்த அரச ஒற்றுக்கேட்டல் செயல்களை உதறித் தள்ளுபவர்களும் மற்றும் எதையும் மறைக்க வேண்டும் என்ற அச்சம் இல்லாதவர்கள், எதற்கும் அஞ்ச வேண்டாம் என்று கூறுபவர்கள், ஜனநாயக உரிமைகள் பிரச்சினை குறித்துத் தங்கள் அறியாமையையும் அக்கறையற்ற தன்மையையும்தான் வெளிப்படுத்துகின்றனர். அவர்களைப் பொறுத்தவரை அரசியலமைப்பு தேவையற்றது.

ஸ்னோவ்டெனை அரசியல்வாதிகளும் செய்திஊடக விமர்சகர்களும் முடிவில்லாமல் கண்டிப்பது தொடர்ந்து நடக்கிறது. முதலில் இது பொதுக் கருத்தை திசைதிருப்பும் முயற்சியும் அவர் அம்பலப்படுத்தியுள்ள அமெரிக்க ஒற்றுத் திட்டங்களில் இருந்து கவனத்தை திசைதிருப்பும் முயற்சியுமாகும். இரண்டாவதாக அரச குற்றங்களை அம்பலப்படுத்த முயற்சிக்கும் ஏனையோரை அச்சுறுத்துவதற்காக ஸ்னோவ்டெனை உதாரணமாக்குவதாகும்.

ஞாயிறு நேர்காணல் நிகழ்ச்சிகளில், இரு கட்சிகளிடம் இருந்து அரசியல்வாதிகள் வரிசையில் நின்று ஸ்னோவ்டெனை ஒரு குற்றவாளி எனக் கண்டித்து, சட்டவிரோத கண்காணிப்பு நடவடிக்கைகளை ஆதரித்தனர். “Face the Nation” இல் உரையாற்றிய செனட் உளவுத்துறைக்குழுவின் தலைவரான ஜனநாயகக் கட்சியின் டயான பைன்ஸ்ரைன், “இந்த அமைப்புகள் தவறாக நடந்து கொள்வதைத்தான் காணவில்லை என்றும்நன்கு செயல்படும் திட்டங்களை, பயங்கரவாதிகள் சதித்திட்டங்களை குழப்பும் திட்டங்களை சேதப்படுத்துகிறார்எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

அவரைப் பிடித்து விசாரணைக்கு கொண்டுவருவதை நான் காண விரும்புகிறேன்.... தேடல் தொடர்கிறதுஎன்றார் அவர். மேலும் ஸ்னோவ்டெனுக்குஉதவுதல், உடந்தையாக இருத்தல்ஆகியவற்றிற்காக விக்கிலீக்ஸ் குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும் கூறினார்.

குடியரசுக் கட்சியின் செனட்டரான போப் கோர்க்கெர் தான் ஸ்னோவ்டெனைஒரு குற்றவாளி”, “தேசிய சட்டங்களை முறிப்பவர், குடிமக்களுடைய பாதுகாப்பை ஆபத்திற்கு உட்படுத்தியுள்ளவர்எனக் காண்பதாகத் தெரிவித்தார்.

செய்தி ஊடகத்தை சந்திக்கவும்நிகழ்ச்சியில் குடியரசுக் கட்சியின் உளவுத்துறைக்குழுத் தலைவர் மைக் ரோஜர்ஸ் ஸ்னோவ்டென் ஷ்யாவிற்கு உளவுபார்க்கிறார் என்று கருத்துத் தெரிவித்துதங்கள் நாட்டைக் காட்டிக் கொடுப்பவர்களில் ஒருவர்என்று அவரைக் கண்டித்தார். “ஞாயிறு பாக்ஸ் செய்தியில் குடியரசுக் கட்சியின் செனட்டர் லிண்சே கிரகாம், “உலகில் எங்கு இருந்தாலும் அவரை விரட்டிப் பிடிக்க வேண்டும், நீதிக்கு முன் நிறுத்த வேண்டும், இந்த நபருக்கு ஆதரவு கொடுத்தால் அதற்கான விளைவுகள் உண்டு என்பதை ஷ்யர்களுக்கு அறியப்படுத்த வேண்டும்என்றார்.

இப்படி இருகட்சிக்காரர்களும் இரகசிய ஒற்றுச் செயல்களை ஆதரித்து, ஸ்னோவ்டெனை தீயவர் எனக் கூறுவதும், காங்கிரசில்இயக்கமற்ற நிலைஎனப்படுவது இருப்பதாக கூறப்படுகையில், அரசியலமைப்பு நடவடிக்கைகள் அப்பட்டமாக மீறப்படுவதை பாதுகாத்தல் என வரும்போது, இரு பெரு வணிகக் கட்சிகளுக்கும் இடையே முழு இணக்கம் இருப்பது தெரியவருகின்றது.

இது குற்றத்தை குற்றச்செயலாக்க முயற்சி எடுக்காமல், அதை அம்பலப்படுத்துவதை குற்றம் ஆக்கும் நிலைப்பாடுதான் இது.

மேலும் இக்கூற்றின்படி, பரந்த பொலிஸ் அரச செயற்பாடு பயங்கரவாதிகளுக்கு எதிரான போருடன் தொடர்பு கொண்டுள்ளது என்று கூறுவது மக்களுடைய அறிவிற்கு ஒரு அவமதிப்பு ஆகும். ஆளும் உயரடுக்கு அதன் போர்க் கொள்கை, சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக சமூக எதிர்ப்பு வளர்வது குறித்துப் பீதி அடைந்துள்ளது. இது மக்கள்மீது சமூக மற்றும் அரசியல் கட்டுப்பாட்டை நிறுவ முற்படுகிறது, ஒரு சர்வாதிகார வழிவகை, கட்டமைப்பு ஆகியவற்றை உருவாக்க முயல்கிறது.

ஒரு பொலிஸ் அரச உள்கட்டமைப்பு ஏற்கெனவே நன்கு நிறுவப்பட்டுள்ளது. ஒரு நிலையிழந்த தனிநபரின் வன்முறைச்செயல், சிலவேளை அரச அமைப்புகளின் பிரிவினரால் உதவிசெய்யப்படுவது, சர்வாதிகார ஆட்சி வகையை பகிரங்கமாக சுமத்தும் முயற்சிக்கு போலிக்காரணம் ஆகலாம்.

வெளிப்படையாக காரணமற்ற சோதனைகள், கைப்பற்றுதல் போன்றவற்றை  தடை செய்யும் அரசியலமைப்பு மற்றும் உரிமைகள் பற்றிய சட்டம் பராக் ஒபாமாவின் கீழ் மீறப்படும் அளவு, 39 ஆண்டுகளுக்கு முன்பு ரிச்சார்ட் நிக்சன் செய்தவற்றிற்கு எதிரான பதவிவிலக்கல் விசாரணைக்கு வழிவகுத்த செயல்களுக்கும் அப்பால் சென்றுவிட்டது. ஆயினும் இன்று ஒரு முக்கிய அரசியல்வாதி அல்லது செய்தி ஊடக விமர்சகர்கூட அமெரிக்கக் குடிமக்களும் உள்ளடங்கலாக ஆயிரக்கணக்கான மக்கள் நீதித்துறைக்கு புறத்தே படுகொலை செய்யப்பட உத்திரவிட்டுள்ள ஒபாமாவிற்கு எதிராக பதவிவிலக்கல் விசாரணைக்குக் குரல் கொடுக்கவில்லை. இதேபோல் NSA,FBI, CIA பென்டகன் அதிகாரிகள் மீது குற்றச்சாட்டுக்கள் வேண்டும் என்றும் கூறவில்லை.

பெயரளவிற்கு NSA மேற்பார்வையிடும் பிரிவான தேசிய உளவுத்துறைப் பிரிவின் இயக்குனரான ஜேம்ஸ் கிளாப்பர், காங்கிரசில் சத்தியப் பிரமாணத்தின் கீழ் கூறும்போது பொய்சொல்கிறார் எனப் பிடிபட்டார். ஆனால் அவரை குற்றச்சாட்டிற்கு உட்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எங்கிருந்தும் எழவில்லை

ஜனநாயகம் பற்றிய உணர்மை, எந்த அளவிற்கு ஆளும் உயரடுக்கு, அரசாங்கம் மற்றும் செய்தி ஊடகத்தின் மத்தியில் வீழ்ச்சியடைந்துவிட்டது என்பதை இது எடுத்துக்காட்டுவதுடன் ஒரு சர்வாதிகார, ஏன் பாசிச தன்மைக் கருத்துக்கள் படர்ந்து நிற்கின்றன என்பதையும் இது காட்டுகிறது.

அமெரிக்க ஜனநாயகம், இந்த அதிர்ச்சி தரும் முன்னோடியில்லாத அளவு சமூக சமத்துவமின்மையின் கீழும் மற்றும் சமூகத்தை பொதுவாக இராணுவமயமாக்குவதன் பாரத்தின் கீழும் சிதைந்து கொண்டிருக்கிறது. செல்வமும் அதிகாரமும் உயர்மட்டத்தில் ஒரு சிறு குழுவிடம் குவிந்திருப்பதுடன் ஜனநாயக வழிவகைகள் இயைந்துபோக முடியாது. அதே போல் அவை மக்கள் எதிர்ப்பை மீறி நடத்தப்படும் போர்கள் நடக்கும் நிலைமையின் கீழும் மற்றும் இராணுவம் பொது, அரசியல் விவகாரங்களில் கூடுதல் பங்கை எடுத்துக்கொண்டிருக்கும் நிலைமையின் கீழும் தப்பியிருக்க முடியாது.

52 ஆண்டுகளுக்கு முன்பு தன் விடைபெறும் உரையில், ஜனாதிபதி ட்வைட் ஐசனோவர் அவர்இராணுவம்-தொழில்துறை கூட்டு என்றழைத்ததில்  இணைந்திருக்கும் ஆபத்தின் அதிகரிப்பு குறித்து எச்சரித்தார்.

 “பாரிய இராணுவ அமைப்புமுறையும் அதிக ஆயுதங்கள் உற்பத்தி செய்யும் தொழில்துறையும் இணைவது ஒரு புதிய அமெரிக்க அனுபவம் ஆகும்என்றார் அவர். “பொருளாதார, அரசியல், ஏன் ஆன்மிக மட்டத்தில்கூட இதன் மொத்த ஆதிக்கமும் ஒவ்வொரு நகரம், அரசாங்கத்துறை, கூட்டாட்சி அரசாங்கம் ஆகியவற்றில் உணரப்படும்... இதன் ஆபத்து மிகுந்த தாக்கங்களை நாம் புரிந்து கொள்வதில் தோல்வி அடையக்கூடாது... அரசாங்க ஆலோசனைக் குழுக்களில் தேவையற்ற செல்வாக்கு படர்வதற்கு எதிராக நாம் கவனத்துடன் இருக்கவேண்டும், அது இராணுவ தொழிற்துறைக் கூட்டு விரும்பியோ, விரும்பாமலோ செல்வாக்காகவும் இருக்கலாம். பேரழிவு தரும் தவறான அதிகாரம் எழும் சாத்தியம் உள்ளது, இது தொடரும்.”

 “நம் சுதந்திரங்களுக்குஒரே பாதுகாப்புவிழிப்புடனும், அறிவுடனும் இருக்கும் குடிமக்கள்தான்என்று ஐசனோவர் அறிவித்தார்.

ஐம்பது ஆண்டுகளுக்குப் பின், ஐசனோவரின் எச்சரிக்கைகள் நடைமுறைக்கு வந்துவிட்டன. ஸ்னோவ்டென் இராணுவத்திற்கும் உளவுத்துறை அமைப்பிற்கும், பெரும் தொலைத்தொடர்பு, இணைய தள நிறுவனங்களுக்கும் இடையே உள்ள பிணைப்பின் ஆபத்தை மக்களுக்கு எச்சரிக்க முயல்கிறார். இதற்காக அவர் வேட்டையாடப்படுகிறார்.

ஸ்னோவ்டெனை பாதுகாத்தல், மற்றும் ஜூலியன் அசாஞ்ச், இராணுவப் படையினரான பிராட்லி மானிங்கை பாதுகாத்தல் என்பது அமெரிக்காவிலும், உலகிலும் உள்ள உழைக்கும் மக்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களினது கடமையாகும். இது அரசியல் அமைப்புமுறையின் எந்தப் பிரிவில் இருந்தும் வராது என்பது தெளிவு.

பணியிடங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழிலாள வர்க்க குடியிருப்புக்கள் ஆகிய இடங்களில் ஆதரவு கட்டிமைக்கப்பட வேண்டும். ஸ்னோவ்டெனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் கைவிடப்பட வேண்டும், அரச கண்காணிப்பு குறித்த ஆவணங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் எனக் கோரப்பட வேண்டும்.

அதன் குற்றங்களை வெளிப்படுத்துவதற்காக அமெரிக்க ஏகாதிபத்தியம் இலக்கு கொள்பவர்களை பாதுகாப்பது என்பது ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கான ஆரம்பகட்டமாக இருக்க வேண்டும். இந்த இயக்கம் முழு நனவுடன் போர், சமூக சமத்துவமின்மை, சர்வாதிகார அச்சுறுத்தல் ஆகியவற்றிற்கான மூலகாரணமான முதலாளித்துவத்திற்கு எதிராக அமெரிக்க, சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் அரசியல் இயக்கத்தின் ஒரு பகுதியாக வளர்க்கப்பட வேண்டும்.

உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவக் கட்சியும் எட்வார்ட் ஸ்னோவ்டெனை பாதுகாக்கும் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ளன. இன்னும் அதிக தகவலுக்கும், ஈடுபாட்டிற்கும் இங்கு அழுத்தவும்.