சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Share selloff points to new crisis

பங்குகள் விற்பனை ஒரு புதிய நெருக்கடியை சுட்டிக்காட்டுகிறது

Nick Beams
25 June 2013

use this version to print | Send feedback

ஆசியச் சந்தைகளில் முக்கிய சரிவுகளையும் மற்றும் நேற்று வோல் ஸ்ட்ரீட்டில் 1 சதவிகிதச் சரிவை கண்ணுற்ற உலக நிதியச் சந்தைகளில் புதுப்பிக்கப்பட்டுள்ள கொந்தளிப்பு, 2008 நிதியகரைப்பில் இருந்து எழுந்த பிரச்சினைகள் எதுவும் தீர்க்கப்படவில்லை என்பதைத்தான் எடுத்துக்காட்டுகிறது. மாறாக, சமீபத்திய குழப்பங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய வங்கிகளால் உருவாக்கப்பட்ட கொள்கைகளாலேயே விளைந்த ஒரு புதிய நெருக்கடி உருவாகி வருகிறது என்பதன் உறுதியான அடையாளமாகும்

இந்த விற்பனைக்கான ஆரம்பத் தூண்டுதல் மத்திய வங்கிக் கூட்டமைப்பு தலைவர் பென் பெர்னன்கே அமெரிக்காவில் பொருளாதாரச் சூழ்நிலை முன்னேற்றம் அடையுமானால், மத்திய வங்கிக்கூட்டமைப்புதாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் கொள்கையின் கீழ் அதன் பத்திரங்களை வாங்கும் நிலைப்பாடு நிறுத்தப்படலாம் என்பதைப் பரிசீலிக்கும் என்று கூறியதாகும். இந்த அறிக்கைக்கு சந்தைகளின் பீதியடைந்த எதிர்கொள்ளல் சீனாவில் கடன் நெருக்கடி பற்றிய அச்சங்களால் அதிகமானது. சீனாவில் நிதிய அதிகாரிகளின் நிதிக் கொள்கை கடுமையாக்கப்பட்டுள்ளதை அடுத்து நெருக்கடி வந்துள்ளது.

மூன்றாம் சுற்று தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் (QE3) கொள்கை செப்டம்பர் மாதம் அறிவிக்கப்பட்டபின், மத்திய வங்கிக் கூட்டமைப்பு மாதம் ஒன்றிற்கு 85 பில்லியன் டாலரை கருவூலப் பத்திரங்களையும் அடைமான ஆதரவுடைய பாதுகாப்புப் பத்திரங்களையும் வாங்குவதற்கு செலவழிக்கிறது. அதன் இருப்பு நிலைக் குறிப்பு ஆண்டு ஒன்றிற்கு 1 ட்ரில்லியன் டாலர்கள் வீதம் விரிவடைகின்றது.

கடந்த புதன் அன்று நடத்திய செய்தியாளர் கூட்டத்தில், பெர்னன்கே நிதியச் சந்தைகளுக்கு மத்திய வங்கிக் கூட்டமைப்பு நிதியக் கொள்கையை இறுக்கவில்லை என்றும் வேகமாகச் செல்ல வைக்கும் கருவியின்மீது அழுத்தத்தை தளர்த்துவதாகவும், பொருளாதார நிலைமைகள் மோசமானால், இன்னும் தேவையான நிதிய தளர்த்தல் நடத்தப்படும் என்றும் பலமுறை உத்தரவாதம் அளித்தார்.

ஆனால் இது மத்திய வங்கிக் கூட்டமைப்பில் இருந்து மிக மலிந்த பணம் தொடர்ந்து உட்செலுத்தப்படுவதில் தங்கியுள்ள நிதிய மூலதனத்தில் அதீதமாக தங்கியிருப்பதால் எதிர்கால நிதிய பாய்ச்சலில் ஒரு குறைப்பு இருக்கலாம் என்ற மத்திய வங்கிக் கூட்டமைப்பின் சிறிய குறிப்புகூட சந்தைகளில் உடனடிப் பேரதிர்வை ஏற்படுத்திவிடுகின்றது. பத்திரங்களில் விலை குறைந்தன, பத்திர வருமானங்களில் (வட்டி விகிதங்களில்) ஏற்றம் ஏற்பட்டது. வோல் ஸ்ட்ரீட்டில், டௌ சரிந்து, கிட்டத்தட்ட 200 புள்ளிகள் பெர்னன்கேயின் செய்தி ஊடக மாநாடு நடந்த நாளன்றும், அடுத்த நாளும் 350 புள்ளிகள் சரிந்த நிலைக்கும் இடையே, வெள்ளியன்று சற்றே மீட்பு ஏற்பட்டது.

விற்பனை உலகம் முழுவதும் முக்கிய பாதிப்பை ஏற்படுத்தியது. குறிப்பாக உருவாகிவரும் சந்தைகள் என்றழைக்கப்படுபவற்றின் நாணயங்கள், டாலருக்கு எதிராக ஏற்றம் பெற்றவை, கணிசமான வீழ்ச்சி அடைந்தன. துருக்கிய லிரா மற்றும் இந்திய ரூபாய் இரண்டும் கடந்த வாரம் மிக மோசமாக குறைப்பைக் கண்டன.

நிதிய மேலாளர்கள் கடன் நிதிகளில் இருந்து பெரும் பணம் திரும்பப் பெறப்பட்டதாக தகவல் கொடுத்துள்ளனர். இது இந்நாடுகளில் பல அமெரிக்காவின் தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் திட்டத்தின்கீழ் வரும் பணப்பாய்வில் அதிகம் தங்கியுள்ளதுடன், பணப்பாய்வு பின்னோக்கி சென்றால் அங்கு தீவிர பொருளாதார பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். துருக்கியும் இந்தியாவும் பாதிப்பிற்கு உட்பட்டவை என்பது தெரியவந்துள்ளது, ஏனெனில் அவற்றின் நடப்புக்கணக்குகள் பற்றாக்குறையில் உள்ளன.

ஆனால் இப்பிராந்தியங்களின் பொருளாதார சிக்கல்கள் உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மையத்தில் ஆழமடைந்திருக்கும் நெருக்கடியை பிரதிபலிக்கும் ஒரு வெளிப்பாடுதான்.

2008ல் நெருக்கடி வெடித்ததை தொடர்ந்து, அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பு வழிகாட்ட உலகம் முழுவதும் இருக்கும் மத்திய வங்கிகள், குறைந்தப்பட்சம் 10 டிரில்லியன் டாலர்களை நிதியச் சந்தைகளில் உட்செலுத்தியுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆரம்ப உதவிகள் பிணையெடுத்தல் என்ற வடிவத்தில் கிடைத்தன. இப்பொழுது தாராளமாக பணத்தை அச்சடித்துவிடுதல் என்ற பெயரில் அவை கொடுக்கப்படுகின்றன. உலகம் முழுவதும் மத்திய வங்கி பத்திரங்கள் வாங்குவதின் மூலம் மிக எளிதான விகிதங்களில் வங்கிகளுக்கும் நிதிய நிலையங்களுக்கும் நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் வழங்கப்படுகின்றன.

இக்கொள்கைக்கு உத்தியோகபூர்வமாக கூறப்படும் நியாயம், பத்திரங்களை வாங்குவது, மிகப் பாதுகாப்பான நிதியச் சொத்துக்களுக்கு வட்டியை குறைப்பது அதிக ஆபத்தான முதலீடுகளை செய்ய முதலீட்டாளர்களுக்கு ஊக்கம் கொடுக்கும் என்பதுதான். இதில் உண்மைப் பொருளாதாரத்தில் நிதி உட்செலுத்தப்படுவதும் அடங்கும்.

ஆனால் அது நடைபெறவில்லை. மாறாக, தாராளமாக பணத்தை அச்சடித்துவிடும் திட்டம் என்பது முன்னோடியில்லாத வகையில் நிதிய ஊகத்தை வளர்த்துள்ளது.  இது பங்குச் சந்தைகள் தீவிரமாக உயர்ந்துள்ள நிலைமையை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் உண்மைப் பொருளாதாரம் மிகமிக மெதுவாக வளர்கின்றது அல்லது தேக்கம் அடைந்துள்ளது அல்லது சுருக்கம் அடைந்துள்ளது.

சமீபத்திய பங்கு விற்பனைக்கு முன்னரே, நிதியக் கொந்தளிப்பின் ஒரு புதிய கட்டம் ஆரம்பமாகிவிட்டது என்பது தெளிவாயிற்று. பெர்னன்கே மே 22 தெரிவித்த கருத்துக்களான மத்திய வங்கிக்கூட்டமைப்பு தாராளமாக பணத்தை அச்சடித்துவிடுவதில் சற்றேகுறைப்பை பரிசீலிக்கலாம் என்பதை அடுத்து வந்த உறுதியற்றதன்மையின் அடையாளங்கள் அதிகரித்த  நிலையில்இது பத்திர விலைகளில் வீழ்ச்சி என்னும் அச்சங்களையும் அதையொட்டி வட்டிவிகிதிங்கள் ஏற்றம் என்பதையும் ஏற்படுத்தியது.

இம்மாதம் முன்னதாக பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்றிடம் பேசிய பாங்க் ஆப் இங்கிலாந்தின் நிதிய உறுதிப்பாட்டு இயக்குனர், ஆண்டி ஹால்டனே, ஒரு புதிய நெருக்கடியின் சாத்தியப்பாட்டை சுட்டிக் காட்டினார். “இது குறித்து நாம் தெளிவாக இருக்க வேண்டும். வரலாற்றில் மிகப் பெரிய அரசாங்க பங்குப்பத்திர குமிழியை நாம் வேண்டுமென்றே வெடிக்கச் செய்துவிட்டோம்.” நிதிய முறையின் மிகப் பெரிய அபாயம்ஒழுங்கற்ற மீண்டும் திரும்பும்நிலை”, அதாவது பத்திரச் சந்தையில் விரைவான சரிவு ஏற்படும்.

தற்போதைய முதலாளித்துவ பொருளாதார ஒழுங்கமைப்பின் முழுத் திவால் தன்மையை இதைவிட தெளிவாக ஒப்புக் கொள்ள முடியாது.

உலகம் முழுவதும் ஆளும் வர்க்கங்களின் சார்பில் அரசாங்கங்களும் நிதிய அதிகாரிகளும் இயற்றிய அதே கொள்கைகள் ஏற்கனவே 2008 கரைப்பில் இருந்து தோன்றிய சமூக, பொருளாதார பேரழிவைத்தவிர இப்பொழுது ஒரு புதிய பொருளாதாரப் பேரழிவின் வளர்ச்சிக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்திவிட்டன.

சமீபத்திய சுற்றுக் கொந்தளிப்பின் வடிவமைப்பு வெளிப்பட்டுள்ள நிலை, நெருக்கடி முதலாளித்துவ இலாப அமைப்புமுறையின் மையத்தில் உள்ள தீய தன்மையில் வேர்களைக் கொண்டுள்ளது என்பதைக் குறிப்பிடுகிறது.

QE திட்டம்  உண்மையான பொருளாதார நிலைமையில் முன்னேற்றம் இருந்தால்தான் திரும்பப் பெறப்படும் என்றுதான் பெர்னான்கே அறிவித்தார். ஆனால் சந்தைகளில் இதற்கான விடையிறுப்பு அது உண்மையில் செயல்படுத்தப்பட்டால் முழு அளவுச் சரிவு இருக்கும் என்பதைக் காட்டுகிறது. வேறுவிதமாகக் கூறினால், ஒருகாலத்தில்இயல்பானசூழ்நிலை என்று கருதப்பட்ட நிலைமையின்கீழ் நிதியச் சந்தைகள் இனித் தப்பிவாழ முடியாது என்பதைத்தான் காட்டுகிறது.

இதுதான் முதலாளித்துவ உற்பத்தி முறையிலேயே ஆழ்ந்த சிதைவின் வெளிப்பாடு ஆகும். “இயல்பானசூழநிலை எனப்படுவதில், நிதி என்பது உற்பத்திக்காக முதலீடு செய்யப்பட்டு, பொருட்களை உற்பத்தி செய்வதற்கு தொழிலாளர்களுக்கு வேலை கொடுத்து; இவை பின்னர் ஒரு இலாபத்தை தோற்றுவிக்க விற்கப்படுகின்றன. இந்த இலாபத்தில் ஒரு பகுதியாவது மீண்டும் முதலீட்டிற்கு நிதியளிக்கப் பயன்படுத்தப்படும், இது இன்னும் உற்பத்தியையும், பொருளாதார வளர்ச்சியையும் தோற்றுவிக்கும்.

ஆனால் இந்த நிகழ்ச்சிப்போக்கு உடைந்துவிட்டது. இலாபங்கள் திரட்டப்படுகின்றன. ஆனால் பெருகிய முறையில் அவை முழுப்பொருளாதாரத்தினதும் விரிவாக்கம் என்னும் வடிவமைப்பில் இருந்து விளையவில்லை. மாறாக செலவுக் குறைப்பு, அமெரிக்க கார்த் தயாரிப்புத்துறை போல் ஊதிய வெட்டுக்கள், அல்லது போட்டியாளர்களை சந்தையில் இருந்து விரட்டும் புதிய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி ஆகியவற்றால் ஏற்படுகின்றன.

பொருளாதாரத் தேக்கமும் சுருங்கும் சந்தைகளும் இலாபங்கள் மறுமுதலீடு செய்யப்படவில்லை என்று அர்த்தப்படுகின்றன. மாறாக நிறைய ரொக்க இருப்புக்கள் பெருநிறுவனக் கணக்குப் புத்தகங்களில் உள்ளன. இது அமெரிக்கப் பொருளாதாரத்தில் 2 ட்ரில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவை பின் நிதியச் சந்தைகளில் ஊகச் செயற்பாடுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

தாராளமாக பணத்தை அச்சடித்துவிடுவது என்பது குறைக்கப்படலாம் என்பதற்கு ஏற்பட்ட வன்முறையான பிரதிபலிப்பு முதலாளித்துவ பொருளாதாரம் இத்தகைய பொருளாதார ஒட்டுண்ணித்தனத்தில் அதிகமாக தங்கியிருப்பதை காட்டுகிறது.

உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தில் அடுத்த கட்ட முறிவு எப்படி இருக்கும் என்பதை முன்கணிக்க இயலாது. ஆனால் சந்தைக் குழப்பங்களின் வக்கிரமான தர்க்கம் நன்கு புலனாகியுள்ளது.

ஓரளவு பின்வாங்குதல் கூட முன்பு இருந்தஇயல்பான பொருளாதாரச் சூழ்நிலை ஓரளவு ஏற்படும் என்ற கருத்துக்கு ஏற்பட்ட பீதியான பிரதிபலிப்பு, நிதியச் சந்தைகளின்ஆரோக்கியம்தொழிலாள வர்க்கத்தையும் மக்களின் பெரும்பாலானவர்களையும் தொடர்ந்து வறிய நிலையில் தள்ளி வைத்திருப்பதைத்தான் நம்பியிருக்கும் என்பதைக் குறிக்கிறது.

தொழிலாள வர்க்கம் இந்நிலைமையை கவனத்திற்கெடுத்து அதன்படி செயல்பட வேண்டும். தொடரும் தாக்குதல்களுக்கு அதன் விடையிறுப்பு தன்னுடைய கைகளிலேயே அதிகாரத்தை எடுத்துக் கொள்வதற்கான அரசியல் போராட்டத்தை அபிவிருத்தி செய்வது என்பதாக இருக்க வேண்டும்; அதுதான் உலகப் பொருளாதாரத்தை சோசலிச அஸ்திவாரங்களில் மறுகட்டமைக்க முக்கியமான முன்னிபந்தனை ஆகும்.