World Socialist Web Site www.wsws.org |
”Truth is coming and it cannot be stopped” NSA whistleblower Snowden issues defiant response to government threats and media lies “உண்மை வெளிவருகிறது, அது நிறுத்தப்பட முடியாதது.” NSA தகவல் தெரிவிப்பவரான ஸ்னோவ்டென் அரசாங்க அச்சுறுத்தல்களுக்கும் செய்தி ஊடகப் பொய்களுக்கும் எதிர்ப்புமிக்க பிரதிபலிப்பை காட்டுகிறார்By Eric London
தகவல் தெரிவிப்பவரான எட்வார்ட் ஸ்னோவ்டென் நேற்று இந்தவாரம் முதல் தடவையாக பகிரங்கமாக பேசி, அவருடைய நடவடிக்கைகளுக்கு பெருநிறுவனக் கட்டுப்பாட்டின் கீழ் அமெரிக்காவில் இருக்கும் இரண்டு கட்சிகளின் கண்டனங்களுக்கும் எதிர்ப்புமிக்க பிரதிபலிப்பை காட்டினார். “இப்பொழுது நான் கூறக்கூடியதெல்லாம், அமெரிக்க அரசாங்கம் என்னைக் கொல்வதாலோ, சிறையில் அடைப்பதாலோ இதை மூடிமறைக்க இயலாது. உண்மை வெளிவருகிறது, அது நிறுத்தப்பட முடியாதது” என்று அவர் அறிவித்தார். அமெரிக்கர்கள், அமெரிக்கர்கள் அல்லாதவர் அனைவரையும் இலக்கு கொண்ட இரகசிய ஒற்றுக்கேட்டல் திட்ட ஆவணங்களை அம்பலப்படுத்தியதில் இருந்து, ஸ்னோவ்டென் பெருகிய முறையில் செய்தி ஊடகத்தினதும் அரசாங்க அதிகாரிகளினதும் தீய பிரச்சாரத்திற்கு இலக்காகி உள்ளார். ஒபாமா நிர்வாகம் குற்றச்சாட்டுக்களை தயாரித்துவருகிறது; ஜனநாயகக் கட்சினரும் குடியரசுக் கட்சியினரும் அவரைத் “தேசத்துரோகி” என கண்டித்துள்ளனர். இதற்கிடையில் கருத்துக்கணிப்புக்கள் இந்த 29 வயது முன்னாள் NSA ஒப்பந்தக்காருக்கு பரந்த அளவில் பொதுமக்களுடைய ஆதரவு உள்ளதைக் காட்டுகிறது. திங்களன்று பிரித்தானிய கார்டியன் செய்தித்தாளின் வலைத் தளத்தில் வெளியிடப்பட்ட கருத்துக்களில், ஸ்னோவ்டென் அரசியல் நடைமுறையில் அவதூறுப் பிரச்சாரத்தாலோ, அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளால் படுகொலை இலக்கு வைக்கப்படலாம் என்பதாலோ தன்னை தடுக்கமுடியாது எனக் கூறியுள்ளார். முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி மற்றும் பிறர் அவரை “தேசத் துரோகி” எனக் குற்றம் சாட்டியிருப்பதற்கு ஸ்னோவ்டென் கடும் எதிர்ப்பைக் காட்டியுள்ளார். அவர் கூறுவது: “முன்னாள் துணை ஜனாதிபதி டிக் ஷென்னி போன்றோரால் நான் தேசத் துரோகி என அழைக்கப்படுகிறேன் என்பதை மனதில் கொள்ள வேண்டும். இந்த நபர்தான் 4,400 பேரைக் கொன்று கிட்டத்தட்ட 32,000 அமெரிக்கர்களை அங்கங்களை இழக்க வைத்து, மேலும் 100,000 ஈராக்கியர்களை இறக்க வைத்த ஒரு மோதலை வஞ்சகமாக உருவாக்குவதற்கு ஒரு அட்டூழியம்மிக்க தயாரிப்பாக இருந்த அனுமதி ஆணை இல்லாத தொலைபேசி ஒற்றுக்கேட்டல் திட்டத்தை நமக்குக் கொடுத்தவராவார். “டிக் ஷென்னியினால் தேசத்துரோகி அன அழைக்கப்படுவது ஓர் அமெரிக்கருக்கு ஒருவர் வழங்கும் மிகப் பெரிய கௌரவம் மட்டுமல்லாது இவரைப் போன்றவர்களிடம் இருந்து அதிக பயம்மிக்க பேச்சுக்களை கேட்கும்போது [ஜனநாயகக் கட்சி செனட்டர் டயான] பீன்ஸ்டின், [குடியரசுக் கட்சி மன்றப் பிரதிநிதி பீட்டர்] கிங் போன்றோரிடம் இருந்து, நமக்கு நல்லதுதான். ஒரு வகுப்பில் டிக் ஷென்னி எந்த வகையான குடிமக்கள் பற்றிக் கவலைப்படுகிறார் என்பதை அவர் கற்பித்திருந்தால், நான் உயர் கல்லூரிப்படிப்பை முடித்திருப்பேன்.” செய்தி ஊடகத்தின் பங்கைக் கண்டிக்கையில், ஸ்னோவ்டென் “முக்கிய செய்தி ஊடகங்கள் இப்பொழுது, 17 வயதில் என்ன கூறினேன், அல்லது என்னுடைய பெண் நண்பர் எப்படி இருக்கிறார் என்பதில் அதிக அக்கறை கொண்டுள்ளனவே ஒழிய, மாறாக மனித வரலாற்றிலேயே சந்தேகத்திற்கு இடமில்லாமல் நடத்தப்படும் மிகப் பெரிய கண்காணிப்புத் திட்டம் பற்றி அல்ல.” ஆய்வாளர்கள் அழைப்புக்களின் உள்ளடக்கத்தை அனுமதி ஆணை இன்றிக் கேட்கமுடியுமா என வினவப்பட்டதற்கு, ஸ்னோவ்டென் நிர்வாகம் மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் பொய்கூறும் மறுப்புக்களை நிராகரித்து, இதற்கு மாறாக அவரிடம் நிரூபணம் உள்ளது என்றார். “எப்படி NSA நேரடியாக தகவல்களை அணுகுகிறது என்பது குறித்த அதிக விவரங்கள் வந்துகொண்டிருக்கின்றன. ஆனால் பொதுவாக உண்மை இதுதான்: “NSA, FBI, CIA, DIA போன்றவற்றின் ஆய்வாளர் புது SIGINT தகவல் தளங்களை வினவ அணுகமுடியும் என்றால் அவர்கள் உள்ளே நுழைந்து, விரும்பும் தகவல்களைப் பெறலாம். தொலைப்பேசி எண், மின்னஞ்சல், பயனாளி அடையாளம், கைபேசி எண் (IMEI) என. இதெல்லாம் ஒன்றுதான்... “உண்மை என்னவென்றால், FISA திருத்தச்சட்டம் மற்றும் அதன் 702 பிரிவின் அதிகாரிகளால், ஒரு அனுமதி ஆணை தேவையில்லாது அன்றாடம் ஆய்வாளரின் உறுதிப்படுத்தலின்படி அமெரிக்கர்களுடைய தகவல்கள் சேகரிக்கப்படுகின்றன, பார்க்கப்படுகின்றன. அவர்கள் இதை “தற்செயல் நிகழ்வு” எனக் கூறுகின்றனர். ஆனால் நாள் இறுதியில், NSAஇல் எவரிடமோ உங்கள் தொலைத்தொடர்புகள் குறித்த உள்ளடக்கம் இருக்கும்.” அவர் மேலும் கூறினார்: “அனுமதி ஆணையிருக்கும் இடையீட்டில்கூட, உளவுத்துறைச் சமூகம் பொலிஸ் துறை வத்திருக்க வேண்டிய உண்மை ஆணையைக் கருத்திற்கொள்ளாது. இந்த “அனுமதி ஆணை” வடிவமைப்பில் நம்பிக்கையான நீதிபதிக்கு நிரப்பி அனுப்பினால், அவர் ரப்பர் முத்திரை போல் கையெழுத்திடும் வகையில் இருக்கும்.” ஒற்று நடவடிக்கைகளில் இருக்கும் ஆழ்ந்த சட்டவிரோதத் தன்மையை அரசாங்கம் குறைமதிப்பிடும் முயற்சிகளை ஸ்னோவ்டென் நிராகரிக்க முற்பட்டார். நேற்று ஜனாதிபதி ஒபாமா பொது ஒளிபரப்பு முறையின் சார்லி ரோஸுக்குக் கொடுத்த நேர்காணலில் இருப்பதைப்போன்ற கருத்துக்களை. உளவுத்துறை ஒரு தொலேபேசியை ஒற்றுக் கேட்க விரும்பினால், அவர்கள் “ஒரு FISA நீதிமன்றத்திற்கு தேவையான காரணத்துடன் சென்று ஆணை பெற வேண்டும்” என்று கூறினார். இத்திட்டம் முற்றிலும் “வெளிப்படையானது” என முட்டாள்த்தனமாக அவர் குறிப்பிட்டார். ஏனெனில் “நாங்கள் FISA நீதிமன்றங்களை நிறுவியுள்ளோம்”. கடந்த ஆண்டு அரசாங்கம் அனுமதியளித்த ஒவ்வொரு கண்காணிப்பு வேண்டுகோளுக்கும் ஒப்புதல் கொடுத்தது இந்த நீதிமன்றம். ஒபாமாவின் நேர்மையற்ற, வெற்றுச் சொற்கள் ஸ்னோவ்டெனின் தைரியமான, சக்தி வாய்ந்த அறிக்கைகளின் முக்கியத்துவத்தை குறைக்க முடியாது. ஸ்னோவ்டென் வெளிப்படுத்தியுள்ள ஒற்றுக்கேட்டல், செயல்கள் அளவில் உலகம் தழுவியவை. நூற்றுக்கணக்கான மில்லியன் மக்கள் ஒரு சர்வதேச வலையில் தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு பிற உளவுத்துறை நிறுவனங்களின் உடந்தையும் உள்ளது. ஸ்னோவ்டென் சுட்டிக்காட்டியுள்ளது போல், இந்த திட்டங்கள் அமெரிக்கர்கள் அல்லாதவர்களை மட்டுமே இலக்கு கொள்ளும் என்னும் கூற்று —தவறான உறுதிப்பாடு— “இந்த அமைப்புமுறையின் சக்தியையும் ஆபத்தையும் திசை திருப்புவது ஆகும்”. அவர் மேலும் கூறினார்: “சந்தேகத்திற்கு இடமில்லாத கண்காணிப்பு செய்யப்பட அனுமதி கொடுக்கப்பட்டது ஏனெனில் உலகின் 100% இற்கு பதிலாக 95% மட்டும் பலியாவதால். நம்முடைய அரசியலமைப்பு நிறுவனர்கள் உறுதியாக “அனைத்து அமெரிக்கர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்பதால் இந்த உண்மைகள் சுயமாகவே தெளிவானவை என நாங்கள் கொள்கிறோம்.” அவருக்கு எதிராக கண்டனப் பிரச்சாரங்கள் நடக்கையில், அமெரிக்க அரசாங்கம் “உடனடியாக, முன்கூட்டி கணிக்கத் தக்க வகையில், உள்நாட்டில் நியாயமான விசாரணைக்கான வாய்ப்பை அழித்து, வெளிப்படையாக நான் தேசத் துரோகக் குற்றவாளி என அறிவித்துள்ளது. மற்றும் இரகசிய, குற்றம் சார்ந்த, அரசியலமைப்பிற்கு எதிரான செயல்களை வெளியிடுவது கூட மன்னிக்க முடியாத குற்றம் என்று அறிவித்துள்ளது.” இக்கசிவுகள் “பயங்கரவாதத்தின் மீதான போரை” குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டது என்னும் கூற்று குறித்து, ஸ்னோவ்டென் விடையளித்தார்: “குளிக்கும் தொட்டி கீழே விழுகிறது, பொலிஸ் அதிகாரிகள் பயங்கரவாதத்தினால் கொல்லப்பட்டதை விட அதிக அமெரிக்கர்களை கொல்கின்றனர். ... ஆயினும்கூட அதன் பாதிப்பிற்கு உட்படக்கூடாது என்பதற்காக நம் மிகப் புனித உரிமைகளைத் தியாகம் செய்யக் கேட்டுக் கொள்ளப்படுகிறோம்.” தகவலை வெளிவிடும் நேரம் குறித்த ஒரு வலைத்தள கேள்விக்கு முகங்கொடுக்கையில், தான் தகவலை வெளியிட அவர் காத்திருந்ததற்கான காரணம் “ஒபாமாவின் பிரச்சார உறுதிமொழிகள் மற்றும் தேர்தல் எனக்கு ஒரு நம்பிக்கையை, அவர் வாக்குகளை வாங்குவதற்காக எடுத்துக்காட்டியிருந்த பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையில் செல்வார் என்பதைக் கொடுத்திருந்தது.” என்றார் ஸ்னோவ்டென். அவர் தொடர்ந்தார்: “பல அமெரிக்கர்களும் இதே போல்தான் உணர்ந்தனர். துரதிருஷ்டவசமாக, அதிகாரத்தைக் கைப்பற்றிய சில காலத்திலேயே அவர் சட்டம் திட்டமிட்டு மீறப்படுதல் குறித்த விசாரணைகளின் கதவை மூடிவிட்டார், பல தவறான திட்டங்களை ஆழப்படுத்தி, விரிவுபடுத்தினார். குவான்டநாமோவில் நாம் இன்னும் பார்ப்பதுபோல் அங்கு மனிதர்கள் இன்னும் குற்றச்சாட்டு இன்றிக் காவலில் உள்ளது போன்ற மனித உரிமைகள் மீறப்படுவதை நிறுத்த அரசியல் மூலதனத்தை பயன்படுத்த மறுத்துவிட்டார்.” கடந்த இரு வாரங்களாக ஆளும் வர்க்கத்தின் வெறித்தனப் பொய்கள் ஒரு முழு இளம் தலைமுறை இதே போன்ற அரசியல் முடிவுகளை வைத்திருப்பது குறித்த பெருகும் அதன் பதட்டத்தைத்தான் பிரதிபலிக்கின்றன. எட்வார்ட் ஸ்னோவ்டென் பெருநிறுவன செய்தி ஊடகங்கள் பல தசாப்தங்கள் 24மணி நேரச்சேவை என்னும் செய்தி வட்டங்களில் கூறியவற்றைவிட அதிக உண்மையை முன்வைத்துள்ளார். அவருடைய செயல்களும் சொற்களும், சகதியின் ஊற்று, முடிவிலாப் பொய்கள் மற்றும் முழு அரசியல், செய்தி ஊடகக் அமைப்பின் வெற்றுத்தனம் ஆகியவற்றை சக்தி வாய்ந்த வகையில் நிராகரிக்கின்றன. |
|